புகைப்பிடிப்பதால் ஞாபக சக்தியை இழக்க நேரிடும். நீங்கள் ஏதாவது ஒரு
சந்தர்ப்பத்தில், ஏதோ ஒரு பொழுதுபோக்காக, விளையாட்டாக புகைப்பிடித்தலை
ஆரம்பித்திருக்கலாம்.
 |
புகைப்பிடிப்பது உங்களுக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் கொள்ளி..! |
மனக் கவலையைப் போக்க.. நண்பர்களின் பிடிவாதத்தால் “ஒன்றே ஒன்று
மட்டும்.. எனக்காக ப்ளீஸ்.. ” என்று நண்பர்களின் வேண்டுகோளை தட்டமுடியாமல்,
“அப்பா சிகரெட் பிடிக்கிறாரே.. நாமும் பிடித்துப்பார்த்தால் என்ன?” என்று திருட்டு தனமாக..
“வாய்வழியாக புகையை இழுத்து மூக்கின் வழியாக எப்படி வருகிறது? நாமும்தான் விட்டுப் பார்ப்போமே?” என்று சிறுபிள்ளைத்தனமாக..
 |
சாம்பலாவது சிகரெட் மட்டுமல்ல.. விரைவில் நீங்களும்தான் ! |
“நம்முடைய ஹீரோ எவ்வளவு ஸ்டைலாக புகைப்பிடிக்கிறார். அதுபோல நாமும் செய்தாலென்ன என்ன” என்று…
 |
புகைபிடிப்பது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் அருகில் இருப்பவர்களையும் பாதிப்பை ஏற்படுத்தும் |
இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் புகைப்பழக்கத்தை ஆரம்பித்து இருப்பீர்கள்..
தொடர்ந்து அதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அதுவே தொடர்
பழக்கமாகியிருக்கும். பிறகு அது ஒரு போதையாகவே மாறிப்போயிருக்கும். சிகரெட்
புகையை இழுத்து ஊதித்தள்ளுவதில் ஒரு அலாதி சுகமாக மாறிபோயிருக்கும்.
எத்தனைப் பேர் சொன்னாலும் இனி மாறப்போவதில்லை என்ற நிலைக்கு நீங்கள்
தள்ளப்பட்டிருப்பீர்கள்.
 |
புகையிலைப் பொருளான சிகரெட்டை ஒதுக்குவோம். |
சிகரெட், பீடி இதுபோன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்த பழகிவிட்ட பிறகு அதை விடுவது என்பது இயலாததாகியிருக்கும்.
நான் சொல்வது சரியா? ஆனால் நிச்சயம் இந்த பழக்கத்தை விட முடியும். நாம் நினைத்தால் எதுவுமே சாத்தியமே..!
மனது வைக்க வேண்டும்.. அப்போதுதான் இதிலிருந்து விடுபடமுடியும்.
புகைப்பிடிப்பதால் உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் குழந்தைகளையும்
அது பாதிக்கும். சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் உங்கள்
மனதில் ஆழப் பதிந்துவிட்டாலே நீங்கள் கிட்டதட்ட சிகரெட்டை
நிறுத்திவிட்டீர்கள் என்று அர்த்தம்.
அதற்கு முன்பு இதன் விளைவால் என்னென்ன தீமைகள் என்று நாம்
அறிந்துகொண்டாலே கிட்டதட்ட அடுத்த நொடியே இந்த பழகத்தை வெறுக்க
ஆரம்பித்துவிடுவீர்கள்..
இந்தப் படத்தில் பாருங்கள் சிகரெட் பிடிப்பதால் தோல்சுருங்கிய முகம்.
முதலில் இந்த பழக்கதைத் கைவிடுவதால் நம் அறிவுசார்ந்த செயல்பாடுகள்
இன்னும் செம்மைப்படும். ஞாபகச் சக்தி அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள்
கூறியிருக்கிறார்கள்.
புகைப்பிடித்ததின் விளைவு.. தோல் அதன் இயல்புதன்மை மாறியிருக்கிறது
புகைப்பழக்கத்தின் பாதிப்புகள் குறித்து இங்கிலாந்தின் நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில்(
Northumbria University, England)
ஞாபகசக்தி குறித்த ஒரு செயல்முறை தேர்வு நடத்தப்பட்டது. இதில், சராசரியாக
இரண்டரை வருடங்களுக்கு முன்பு புகைப்பழகத்தை கைவிட்டவர்கள்,
புகைப்பவர்களைவிட 25 சதவிகிதம் நன்றாகவும், புகைப்பழக்கமே இல்லாதவர்கள் 37
சதவிகிதம் நன்றாகவும், செயல்பட்டது தெரியவந்தது.
 |
Northumbria University, England |
இதற்கு முந்தைய ஆய்வுகளில் புகைப்பழக்கத்தை கைவிடுவதால் ‘பின்னோக்கிய ஞாபக சக்தி’ மேம்படுகிறது என்று தெரியவந்தது.
பின்னோக்கிய ஞாபக சக்தியா? அப்படின்னா என்ன? என்று கேட்கிறீர்களா?
அதாவது, ஒரு விடயத்தை படித்து பின்னர் தேவைப்படும்போது அதை நினைவுகூரும் திறனைதான் இப்படி சொல்கிறோம்.
 |
புகைப்பிடித்ததின் விளைவு.. நுரையீரல் சிற்றறைகளில் பாதிப்பு.. |
ஆனால் இந்த புதிய ஆய்வின் நோக்கம் தொலைநோக்கு ஞாபக சக்தி’யை அதாவது (ஒரு
குறிப்பிட்ட செயலை ஞாபகம் வைத்துக் கொண்டு எதிர்காலத்தில்ஒரு குறிப்பிட்ட
நேரத்தில் செயல்படுத்தும் திறன்) கணக்கிடுவதாகும். உதாரணமாக ஒரு
குறிப்பிட்ட மாத்திரையை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ள
தொலைநோக்கு ஞாபக சக்தி அவசியம்.
நீண்க கால புகைப்பழக்கத்தால் மூளையின் சில திசுக்கள் சிதைந்து போவது
அல்லது மூளையின் சில பாகங்களில் திசுத்திறன் இழப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு
இருப்பதாக முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. மேலும் ஆய்வாளர்களின்
யூகப்படி, புகைப்பபழக்கமானது முளையின் ப்ரீப்ரான்டல் கார்டெக்ஸ்,
ஹிப்போகேம்ப்பஸ் அல்லது தலாமஸ் ஆகிய பல பகுதிகளை சேதப்படுத்தக்கூடும் என்று
தெரிகிறது. இவை அனைத்தும் தொலைநோக்கு ஞாபக சக்தியுடன் தொடர்புடையவை என்பது
குறிப்பிடத்தக்கது.
 |
இரத்தத்தில் நிகோடின் படிவுகள்-Nicotine in the blood |
இதிலிருந்து, புகைப்பதால் கிக்கு மட்டும் ஏறவில்லை. நமக்குத்
தெரியாமலேயே நம்முடைய தொலைநோக்கு ஞாபக சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாக
குறைகிறது என்பது தெளிவாகிறது.
புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள்:
- முடி நிறமாற்றம் அடைகிறது.(hair color change)
- மூளையானது புகைத்தலுக்கு அடிமையாகிறது. எப்போதும் புகைக்கவேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கும் நிலைக்கு மாறுவது.
- காண்பார்வை குறைபாடுகளை. காட்ராக்ட் (cataracts) போன்றவை..
- மூக்குக்கூட பாதிப்புத்தான்.. மன நுகர்ச்சித்தன்மை குறைதல்.
- தோல் சுருங்கிப்போகும்(Wrinkle). இளவயதிலேயே வயதான தோற்றத்தை அடைதல்.
- பற்களின் நிறமாற்றம், பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி(Gingivitis) போன்றவை.
- வாய் மற்றும் தொண்டை பாதிப்புகள். உதாரணமாக உதடுகளின் வடு உண்டாவது,
உணவுப் பாதை மற்றும் தொண்டை புற்றுநோய், சுவை நுகர்ச்சி குறைதல்,
துர்நாற்றம் (கெட்ட வாசனை.)
- ரத்த ஓட்டம் குறைவதால் கைகால்கள் செயலிழக்கும் தன்மை. இரத்தத்தில் நிகோடின் படிவுகள் சேர்தல்.
- நுரையீரல் தொற்று நோய்கள், சுவாசப்பை புற்று நோய். நாட்பட்ட சுவாச
அடைப்பு நோய் (COPD), சுவாசப்பைத் தொற்று (Pneumonia) ஆஸ்துமா போன்றவை
- மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு.(Heart attack)
- ஈரில் புற்று நோய் வரலாம்.
- இப்பழக்கம் வயிற்றை விட்டுவைப்பதில். நாளடைவில் அல்சர், குடல்,
இரப்பை, சதை புற்றுநோய், நாடி வெடிப்பு (Aneurysm) போன்றவையும் ஏற்படும்.
- சிறுநீரகப் புற்று நோய்(Kidney cancer), சிறு நீர்ப் பை புற்று நோய்.
- எலும்பின் உறுதி குறைந்து வலுவிழத்தல். இதனால் எலும்பு முறிவு(Fracture) ஏற்படும் அபாயம்.
- இனப்பெருக்கத் தொகுதி பாதிக்கப்படுதல், உதாரணமாக விந்தணுக்களின்
வீரியம் குறைதல், ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல்,
குழந்தையின்மை(Childlessness) போன்றவை.
- இரத்தத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், இரத்தப்புற்று நோய்(Blood Cancer), இதனால் விரைவில் நோய்வாய்ப்படும் தன்மை உண்டாகுதல்.
- கால்கள் வலுவிழந்து, உறுதிச் சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் காயம் ஏற்படல்.
எனவே புகைப்பதை நிறுத்துவோம். ஞாபகசக்தியை வலுப்படுத்துவோம்.
மேலும் சில படங்கள்..
 |
தோல்பாதிப்பு |
 |
இரத்தத்தில் நிகோடின் கலப்பு |
 |
புகைப்பிடித்ததால் ஒட்டி, ஒடுங்கிப்போன முகம் |
 |
தோல் காயங்கள் |
 |
கண்பார்வை கோளாறு |
 |
முடிகொட்டுதல் |
 |
விரலிடுக்கில் பாதிப்பு |
 |
நிகோடின் கறைபடிந்த பாதிப்புக்குள்ளான பற்கள் |
இப்பதிவைப் படித்து யாராவது ஒருவர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டாலே எனக்கு கிடைத்த வெற்றிதான்..
நன்றி நண்பர்களே..!! பதிவைப் பலரும் படித்து பயன்பெற திரட்டிகளில் ஓட்டுப் போடவும். சமூகதளங்களிலும் பகிரவும். நன்றி நண்பர்களே..!!