HTML Tutorial 3-HTML என்பது என்ன? HTML ஆவணம் உருவாக்க என்ன தேவை?
![]() |
HTML Tutorial 3 |
நாம்
எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள என்னும் தொடர் பதிவின் மூலம் இரண்டு
பதிவுகளை கடந்து வந்திருக்கிறோம். கற்றுக்கொண்டிருக்கிறோம். இப்பதிவில்
HTML ஆவணத்தில் டேக்(Tag) என்று ஆங்கிலத்தில் அழைக்ககூடிய
குறிஒட்டுகளையும், HTML ஆவணம் உருவாக்க என்ன தேவை என்பதைப் பற்றியும்
பார்க்கப்போகிறோம்.
கவனிக்க:
tag: குறிஒட்டு.
அதாவது <>இவ்வாறு இரு குறீயீடுகளும் சேர்ந்ததை ஆங்கிலத்தில் டேக் என்றும், தமிழில் குறிஒட்டு என்றும் அழைக்கப்படுகிறது.
எந்த
ஒரு விஷயமானாலும் அ முதல் ஃ வரை தெளிவாகப் புரிந்துகொண்டால்தான்
முழுவதுமாக கற்றுத் தேற முடியும். அந்த வகையில் எளிய தமிழில் HTML
கற்றுக்கொள்ள பாடமும்.
இதற்கு முன்னரே இரண்டு பதிவுகள்
1. எளிய தமிழில் HTML கற்க,
2. HTML அடிப்படை விளக்கம்
என்ற
பதிவுகளைப் பார்த்திருக்கிறோம். பதிவைத் தவறவிட்டர்வகள் இப்பதிவுகளைப்
பார்த்துவிட்டு தொடரலாம். படித்தவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்.
HTML
என்பது என்ன? என்பதற்குரிய விளக்கம் முந்தையப் பதிவிலேயே
சொல்லியிருக்கிறேன் என்றாலும் ஒரு சில விளக்கங்களை சுருக்கமாகத்
தெரிந்துகொள்வோமே..!!
HTML என்பதன் விரிவாக்கம் Hyper Text Markup Language என்பதன் குறுக்கம்.
வலையுலவியின் மூலம் இணையப்பக்கத்தைப் பார்க்க HTML பயன்படுகிறது.
வலைப்பக்கத்தின் பொருளடக்கத்தை HTML ஆனது குறி ஒட்டுக்களின் (Tags) மூலம் விளக்குகிறது.
குறி ஒட்டுகள்<> என்னும் குறியீடு மூலம் வரையறுக்கப்படுகின்றன.
இந்தக் குறிஒட்டு (<>) தொடக்கக் குறி என அழைக்கப்படுகிறது. (ஆங்கிலத்தில் சொல்வதெனில் Starting tag , ending tag)
குறியீட்டுக்கிடையில் குறுக்கு சாய்வுக்கோடு / சேர்த்து முடிவுக் குறிஒட்டு </>வரையறுக்கப்படுகிறது.
ஒரு
முழு HTML ஆவணம் என்னும் தொடக்கக் குறி ஒட்டுடன் தொடங்கி, என்னும்
முடிவுக் குறி ஒட்டுடன் முடிவடைய வேண்டும்.(அதாவது ஒபனிங் டேக் தொடங்கி
என்ற End Tag கொண்டு முடியவேண்டும்.)
ஹெச்.டி.எம்.எல் ஆவணமானது .html அல்லது .htm என்னும் விரிவைக்கொண்டிருக்கும்.
HTML ஆவணம் (document) உருவாக்க என்ன தேவை?
HTML
ஆவணம் உருவாக்க சிறப்புச் சாதனம் அல்லது சிறப்பு மென்பொருள் எதுவும்
தேவையில்லை. HTML ஆவணத்தை மிக எளிதாக உருவாக்க முடியும். HTML குறிமுறை
உருவாக்குவதற்கு கீழ்க்கண்ட இரண்டு கருவிகள்(Tools) மட்டுமே போதுமானது.
சொற்செயலி(a simple - text editor) அதாவது நம் கணினியில் உள்ள note pad அல்லது வேர்ட் பேட்(word pad).
வலை உலவி ( a web browser) .
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் , Firefox, Google chrome, opera, epic போன்ற வலைஉலவிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதுமானது.
வழக்கமாக கணினியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வலைஉலவி கணினியில் நிறுவப்பட்டு இருக்கும்.
உங்கள்
கணிப்பொறியிலேயே உங்களால் வலைப்பக்கங்களை(web pages) உருவாக்க முடியும்.
வலைப்பக்கம் உருவாக்குவதைப் பற்றி தனி ஒரு பாடத்தில் பார்க்கப்போகிறோம்.
இனி
அடுத்தப் பாடத்தில் HTML -ஆவணத்தின் அடிப்படைகள் சிலவற்றைத்
தெரிந்துகொள்வோம். பிறகு HTML பாடங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
அடிப்படைகளைக் கற்றுக்கொண்டால் பிறகு வரும் பாடங்கள் எளிமையாக புரியும்.
நினைவில் நிற்கும். நான் சொல்வது சரிதானே..?
நன்றி :தங்கம்பழனி