கழுவி சுத்தம் செய்யக்கூடிய விசைப்பலகை ( KEYBOARD ) பற்றி அறிவீர்களா?
"LOGITECH K310" என்ற விசைப்பலகையினை நீரில் கழுவிச் சுத்தம் செய்யலாம்.
என்பது ஆச்சரியமானதொன்றே,
என்பது ஆச்சரியமானதொன்றே,
பொதுவாக, கணனி விசைப்பலகைகள் நீர் பட்டால் பழுதடைந்துவிடும்.
எனவே, அவற்றினை சுத்தம் செய்வதற்கு சுத்தப்படுத்தும் தூரிகைகளையும்
அவற்றுக்கென்று பிரத்தியேகமாக இருக்கும் நுரை வடிவ அழுக்கு நீக்கிகளையும்
பயன்படுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் 'LOGITECH' நிறுவனம் வெளியீடான LOGITECH K310 என்ற கணனி விசைப்பலகையானது, அறை வெப்பநிலையிலுள்ள நீரில் கழுவிச்சுத்தம் செய்யக்கூடியது. அதிகபட்சமாக 50 பாகை செல்சியஸ் வெப்பநிலையிலுள்ள நீரைப் பயன்படுத்த இயலும். நீர் உள்ளே புகுந்து பாகங்களை சேதப்படுத்திவிடாதவாறு அதன் கட்டமைப்பு இலகுவாக உள்ளது.
அதனுடைய USB இணைப்பை அதற்கென இருக்கும் சிறிய மூடியினால் மூடி விட்டு நீரில் கழுவலாம். 5 நிமிடங்கள் சாதாரணமாக காற்றில் உலரவைத்தபின் பயன்படுத்தலாம்.
அதிகமாகக் கணனியில் செலவிடுபவர்கள் அவ்வப்போது தேநீரையோ அல்லது மென்பானங்களையோ விசைப்பலகையில் கொட்டிவிடுவது வழமை. அவற்றைச் சுத்தம் செய்வது பெரும் பிரயத்தனமாக இருக்கும். ஆனால், "LOGITECH K310" என்றால் நீரில் சுத்தம் செய்வது சுலபமானது.
இதனால், வேலை சுலபமாக முடிந்துவிடம். அந்தவகையில் LOGITECK K310 விசைப்பலகையானது, ஓர் அருமையான அறிமுகம் என்பது உண்மை, 2013 காலப்பகுதியில் இந்த விசைப்பலகை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு தளங்களிலும் மாறுபட்ட விலை கொடுக்கப்பட்டுள்ளது, எனினும் 3000/= ரூபாய் தொடக்கம் விற்பனை செய்யப்படுகிறது.
இப்பதிவை அனைவருக்கும்பகிருங்கள்.
நட்புடன்
ஸ்ரீபரன்,