இசைப்பிரியர்களுக்கான இலவச மென்பொருள் - Media Monkey | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil இசைப்பிரியர்களுக்கான இலவச மென்பொருள் - Media Monkey ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 24 ஜனவரி, 2015

இசைப்பிரியர்களுக்கான இலவச மென்பொருள் - Media Monkey


மனிதகுலம் தோன்றியதிலிருந்து இன்று வரை எம்மிடமிருந்து பிரிக்க முடியாமலிருக்கின்ற விடயங்களில் இசை முதலிடத்தை பிடித்திருக்கின்றது என்று சொல்லலாம். அந்தளவுக்கு மொழி, இன, மத பேதமின்றி அனைவரையும் ஆட்கொண்டது இசை. அதிலும் தொழில்நுட்ப வளர்ச்சி இசைக்கு ஒரு மறுபிறப்பு என்று சொல்லுமளவுக்கு இசையினது வளர்ச்சியில் தொழில்நுட்பம் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கிறது, செலுத்துகின்றது. அன்றிருந்த நிலையும் இன்றிருக்கின்ற நிலையும் இசையை பிரசவிக்கின்ற இசைக் கருவிகள் தொடங்கி அதனை அனுபவிக்கின்ற சாதனங்கள் வரை ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. எளிமையான உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நூறு பேர் உட்கார்ந்து மீட்டுகின்ற இசைக்கு ஒரு கணினி பிரதியீடாகியிருக்கிறது, பாடல் கேட்க என்ற சாக்கில் எமது வீட்டின் பாரிய பரப்பை பிடித்திருந்த Gramophone காலம் கடந்து, உள்ளங்கைக்கும் ஓராயிரம் ஓசைகளை சுமக்க முடிகின்ற iPod கள் தோன்றியிருக்கின்றன. இதனால் எத்தனையோ பாடல்களை, இசைக் கோர்ப்புக்களை சுலபமாக சேமிக்க முடிவதுடன் காலம் கடந்து அவற்றைவாழ வைக்கவும் முடிகிறது.

இசை மனிதனுக்கு பொதுவான ரசனையானாலும் ஒரு சிலருக்கு இசையின் மீது தனிக் காதலே ஏற்படும், தமிழ் சினிமாவின் அன்று தொட்டு இன்று வரையான அனைத்து பாடல்களையும் சேர்த்து வைத்திருப்பார்கள், விடாமல் வாய் ஏதாவது பாடலை முணுமுணுத்துக் கொண்டேயிருக்கும் அதுமட்டுமல்லாது பாடல்கள் பற்றிய விபரங்கள் அதாவது இசையமைப்பாளர், பாடியவர், திரைப்படம், பாடல் வெளியான ஆண்டு என்று எல்லாமே அவர்கள் விரல் நுனியில் இருக்கும். அந்தளவுக்கு இசையின் தீவிர ரசிகர்களாக இருப்பர். பொதுவாக இப்படிப்பட்டவர்களின் கணினி வன்தட்டுக்கள், கைபேசிகள், ஏனைய பொழுது போக்கு சாதனங்களை இசைக் கோப்புக்களே (music files) பெரிதும் ஆக்கிரமித்திருக்கும். நீங்களும் இப்படியான ஒரு இசைப் பைத்தியம் என்றால் இந்தப் பதிவுஉங்களுக்காகவே.. என்ன

நீங்கள் அப்படியில்லையா?? உடனே வேறொரு பதிவை தேடுங்கள்...
வரம்பின்றி தரவுகளை சேமித்து வைக்க அதிலும் குறிப்பாக இசைக் கோப்புக்களை சேகரித்து வைக்க கணினியே சிறந்த சாதனமென்ற அடிப்படையிலும் அதுவே இலகு என்றகாரணத்தாலும் கையில்படுகின்ற எல்லா இசைக் கோப்புக்களையும் அடுக்கிவைத்திருப்போம். ஆனாலும் இது ஒரு எல்லையை தாண்டுகின்ற போது அவற்றை நிர்வகிப்பது சிரமமாவதுடன், பாடல்களை தேடியெடுப்பது பெரும் தலையிடியாகிவிடும். உங்களிடம் இருக்கின்ற பாடல்கள் உங்களுக்கே மறந்துவிடும். ஆகவே இப்படிப்பட்ட தொல்லைகளால் கஷ்டப்படுகிற உங்களுக்கு உதவுகின்ற இலவச

மென்பொருள்தான் Media Monkey.

முதலில் கீழுள்ள இணைப்பில் இருந்து தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் இதனை திறந்து கொள்ளுங்கள் முதல் படிமுறையாக உங்கள் Music Database இனை இதற்க்குள் உட்செலுத்த (Import) வேண்டும். அதாவது உங்கள் இசைக் கோப்புகளுக்கான பிரதான் Folderஇனை தெரிவு செய்து Import செய்யுங்கள். பின் Music என்ற பகுதியில் உங்கள் பாடல்கள் Album, Artist, Title என்ற வகைகளில் காட்சிப்படுத்தப்படும்.


#‎இதிலிருந்தே‬ பாடலை தெளிவான தரத்தில் கேட்க முடியும். அத்தோடு மேம்படுத்தப்பட்ட Equalizer காணப்படுகிறது.‪#‎பாடலின்‬ Properties இலகுவாக மாற்ற முடியும்.
‪#‎Playback‬ இன் போது Cross fade வசதி.
‪#‎Audio‬ CDகளை இதிலிருந்தே RIP செய்து Libraryயில் Add செய்யலாம்.
‪#‎Playlist‬ இனை தானாகவே உருவாக்கின்ற வசதி.
‪#‎DJ‬ Mode போன்ற இசைப்பிரியர்களுக்கு பயன் தருகின்ற பல வசதிகள்.
Media Monkey மென்பொருள் Ventis Media நிறுவனத்தினால் வினியோகிக்கப்படுவதுடன் இது Gold version மற்றும் Free versionஎன்ற இரண்டு வகையான பதிப்புகளில் காணப்படுகிறது. இரண்டு பதிப்புக்களுக்கும் இடையே பாரிய வேறுபாடுகளில்லை. சாதாரணமாக Free version மட்டுமே சாதாரணபயன்பாட்டுக்கு போதுமானது. அதற்கான இணைப்பை தந்திருக்கின்றேன். மற்றைய பதிப்பு பணம் செலுத்தி பெற வேண்டும்.
அனுபவங்களை பி்ன்னூட்டங்களாக பகிருங்கள்...

தரவிறக்க சுட்டி :-
http://www.mediamonkey.com/trialpay
நன்றி,

நட்புடன்,
ஸ்ரீபரன்

Popular Posts

Facebook

Blog Archive