வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது:

வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் சேவை இந்தியாவில்
அறிமுகப்படுத்தப்பட்டது:
ஏற்கனவே குறிப்பிட்டதை அடுத்து வாட்ஸ்ஆப் நிறுவனம் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு வாய்கால் சேவையை வழங்கியது. இந்த புதிய சேவை இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் நேற்று முதல் கிடைக்க ஆரம்பித்துள்ளது.
இது குறித்து வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்ஆப் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள 'வாட்ஸ் அப்' வலைதளம் சென்று, .apk என்ற ஃபைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்தாலும், பிறருடன் பேச முடியாது.
மறு தரப்பில் பேசுபவரிடமும், .apk பைல் இருந்தால் மட்டும் தான் பேச முடியும். இல்லை என்றால், நண்பருக்கும் அதே பைலை அனுப்பி, அதன் மூலமாகவும் பேச முடியும்.
கடந்த மாதம் வெப் வாட்ஸ்ஆப் நீட்டிப்பும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தை பேஸ்புக் கைப்பற்றியதை அடுத்து இது போன்ற சேவைகள் வெளியாகி வரும் நிலையில் இது போன்று பல சேவைகளை அதன் பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.
Source: one india