பல தேசிய இனங்களின் வரிப்பணத்தில் உலக இந்தி மாநாட்டை இந்திய அரசு நடத்துகிறது !!

இந்தியாவில் பல தேசிய இனங்களும் மொழிகளும் இருக்க நடுவண் அரசு மக்கள் வரிப்பணத்தில் வரும் செப்டம்பர் மாதம் இந்திக்கு உலக அளவில் மாநாடு நடத்த உள்ளது. இது கடுமையான கண்டனத்திற்கு உரியது. வரலாறும் வளமும் இல்லாத இந்தி மொழியை உலக அளவில் கொண்டு சேர்க்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் வளமான வரலாறு கொண்ட தமிழ் மொழிக்கு இந்திய அரசு எந்த ஊக்குவிப்பும் கொடுப்பதில்லை.
இந்தியை மட்டுமே இந்திய அரசு ஆட்சி மொழியாக வைத்து அனைத்து தேசிய இனங்களின் மீதும் இந்தியை திணித்து வரும் நிலையில் எதற்கு இந்திக்கு ஒரு மாநாடு தேவைப்படுகிறது? இதற்கு மேல் இந்தி மொழிக்கு வேறு என்ன பரப்புரை மற்றும் ஊக்குவிப்பு தேவைப்படுகிறது? இந்தியால் அழிந்து கொண்டிருக்கும் பண்டைய மொழிகளுக்கு அல்லவா மாநாடு நடத்தப்பட வேண்டும்?
இந்தி அரசின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிக்க வேண்டும். சமூக , பண்பாட்டு, மொழி அமைப்புகள் இந்திய அரசை கண்டித்து அறிக்கை வெளியிட வேண்டும். இந்திக்கு மட்டுமே மக்கள் வரிப்பணத்தில் மாநாடு நடத்தி மற்ற மொழிகளை எல்லாம் குழிதோண்டி புதைக்கும் நடுவண் அரசின் இந்தி வெறியை கட்டாயம் இந்திய மக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும். இந்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் இந்திக்கு மட்டுமே மாநாடு நடத்துவதை நாம் அனுமதிக்க முடியாது.

தூய தமிழ்ச்சொற்கள்