விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் உதவியாளர், இரவு காவலர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் உதவியாளர், இரவு காவலர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

திங்கள், 15 ஜூன், 2015

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் உதவியாளர், இரவு காவலர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

(Job Alert From Net Bird Browsing center

=====================================================================

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் உதவியாளர், இரவு காவலர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

=====================================================

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள ஒரு உதவியாளர் மற்றும் 2 இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இது குறிóத்து ஆட்சியர் வே.ராஜாராமன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: இதில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு முன்னுரிமைப்படுத்தப்பட்ட பொதுப்பிரிவினராக இருக்க வேண்டும். அதோடு,  8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராகவும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்திருக்க வேண்டும்.

    இரவு காவலர்: இப்பணியிடத்திற்கு முன்னுரிமைப்படுத்தப்பட்ட பொதுபிரிவு மற்றும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட எஸ்.சி.அருந்ததியர் (கைவிடப்பட்ட பெண்) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் தலா ஒரு பணியிடம் ஒதுக்கப்பட உள்ளன. இப்பணிக்கு கட்டாயம் எழுதப்படிக்க தெரிந்தவாரக இருக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட அனைத்து பணியிடங்களுக்கும் 1.7.2015 அன்றைய நாளில் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 30 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் ஆகியோருக்கு அதிகபட்சம் 32 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

     எனவே மேற்குறிப்பிட்ட தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகிற 29-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனி விண்ணப்பங்களாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

Popular Posts

Facebook

Blog Archive