Jobs | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Jobs

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Jobs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Jobs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 மார்ச், 2016

இடஒதுக்கீடு... ரிசர்வேஷன்..

இடஒதுக்கீடு... ரிசர்வேஷன்.. இந்த வார்த்தையை யார் எங்கு கேட்டாலும் அது என்னவோ SC/ST மக்களுக்கானது, அதை நீக்க வேண்டும், தூக்கவேண்டும், ஒழிக்கவேண்டும் என்ற தவறான கண்ணோட்டம் சமூகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது...

SC/ST மட்டும்தான் இங்கே இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனரா.. இல்லை...
மொத்தமுள்ள 100% இடங்களில், தமிழ்நாட்டில்..
 
BC - 30%
MBC - 20%
SC - 18%
ST - 1%
மீதி - 31% பொது போட்டி (எல்லா சமூகத்துக்கும் பொதுவானது)

மத்திய அரசில்,
OBC (BC+MBC) - 27%
SC - 15%
ST - 7.5%
மீதி - 50.5% பொது போட்டி (எல்லா சமூகத்துக்கும் பொதுவானது)

ஆக, இடஒதுக்கீட்டிற்கு எதிராக யார் எங்கே பேசினாலும் முதலில் அதற்கு எதிர் குரல் கொடுக்க வேண்டியவர்கள் இடஒதுகீட்டில் பெரும்பகுதியை அனுபவிக்கும், சுமார் 50% இடங்களை பெரும் பிற்படுத்தப்பட்ட/ மிக பிற்படுத்தப்பட்ட  மக்கள் தான்.... 

ஆனால், இந்த சமூகத்தில் இடஒதுக்கீடு என்பதை ஏதோ SC/ST மக்கள் மட்டுமே அனுபவித்து, சுக போக வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஒரு மாய தோற்றம் உருவாக்கப்பட்டுவிட்டது.

SC/ST மக்கள் பெறுவது என்னவோ வெறும் 19% இடங்கள் தான். 

நமக்கு தெரிந்தோ தெரியாமலோ தீண்டாமை கொடுமையை செய்துகொண்டுதான் இருக்கின்றோம்... சாதி பெயரில் கற்பழிக்கபட்டதும், கொல்லப்பட்டதும் தலித் என்றால் ஏனொ சகஜமாக எடுத்து கொள்கிறோம். இந்த தலைமுறையிலாவது சாதி ஒழிக்க ஒன்றிணைவோம்...
இன்னும் எத்தனை ரோகித் வெமுலாவை கொல்ல போகிறோம்..சாதி மத பேதமின்றி நல்ல உள்ளத்துடன் பகிர்வோம்..

நன்றி- பார்த்தசாரதி.(இளம் வழக்கறிஞர்)Partha Sarathi A

திங்கள், 15 ஜூன், 2015

பட்டதாரிகளுக்கு ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளார் பணி

(Job Alert From Net Bird Browsing

பட்டதாரிகளுக்கு ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளார் பணி

======================================

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தொழிற்துறை வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 500 உதவி மேலாளர் பணியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 3/2015-16

பணி: Assistant Manager Grade-A

காலியிடங்கள்: 500

சம்பளம்: மாதம் ரூ.14,400 - 40,900

வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பெங்களூரில் உள்ள Manipal School of Banking கல்லூரியில் ஒரு வருட டிப்ளமோ படிப்பிற்கு அனுமதிக்கப்படுவர். படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் பணிக்கு செய்யப்படுவார்கள்.

படிப்பின் பெயர்: Post Graduate Diploma in Banking & Finance (PGDBF)

பயிற்சி காலம்: ஒரு வருடம்

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 02.08.2015

தமிழ்நாட்டில் ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்:

சென்னை

மதுரை

கோவை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. SC, ST,PH பிரிவினருக்கு ரூ.150. இதனை ஐடிபிஐ வங்கியின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி: 24.06.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய 
http://www.idbi.com/pdf/careers/Detailed_Advertisment_MGES_2015_process_IBPS_May_27.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வடக்கு ரயில்வேயில் சுகாதாரம் & மலேரியா ஆய்வாளர் பணி

(Job Alert From .

வடக்கு ரயில்வேயில் சுகாதாரம் & மலேரியா ஆய்வாளர் பணி

=============================================

வடக்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள  16 சுகாதாரம் & மலேரியா ஆய்வாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சுகாதாரம் & மலேரியா ஆய்வாளர் பணி

காலியிடங்கள்: 16

தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் மற்றும் சுகாதாரத்துறையில் ஒரு வருட டிப்ளமே முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 33க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,570

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.nr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Sr.Divisional Personnel Officer,

Divisional Railway Managers Office

Northern Railway, Lucknow-226001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.06.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nr.indianrailways.gov.in/nr/recruitment/1433747854840_Para%20Medical.pdf

வடகிழக்கு ரயில்வேயில் டிரெய்னி பணி

(Job Alert From
வடகிழக்கு ரயில்வேயில் டிரெய்னி பணி

===========================================

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடகிழக்கு ரயில்வேயில் அளிக்கப்படும் துறைவாரியான டிரெய்னிக்கு  தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி மற்றும் காலியிடங்கள் விவரம்:

Izatnagar Mechanical Worshop - 60

1. Fitter - 13

2. Welder - 11

3. Carpenter - 12

4. Electrician - 09

5. Mechanic - 08

6. Painter  - 07

Gorakhpur Mechanical Worshop - 133

1. Fitter - 46

2. Welder - 21

3. Carpenter - 30

4. Electrician - 03

5. Mechanic - 05

6. Painter  - 28

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: Izatnagar Mechanical Worshopக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 - 22க்குள் இருக்க வேண்டும்.

Gorakhpur Mechanical Worshopக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 - 24க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
www.ner.indianrailways.gov.in

என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களி்ன் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Cheif Workshop Manager (P),

Mechanical Workshop, Izatnagar,

Bareli, Pin Code - 243122

 

Cheif Workshop Manager (P),

Mechanical Workshop, N.E.Railway,

Gorakhpur.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ner.indianrailways.gov.in/uploads/files/1433232504545-IZN.pdf
http://www.ner.indianrailways.gov.in/uploads/files/1433232473483-GKP%20ENG.pdf 
என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் உதவியாளர், இரவு காவலர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

(Job Alert From Net Bird Browsing center

=====================================================================

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் உதவியாளர், இரவு காவலர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

=====================================================

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள ஒரு உதவியாளர் மற்றும் 2 இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இது குறிóத்து ஆட்சியர் வே.ராஜாராமன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: இதில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு முன்னுரிமைப்படுத்தப்பட்ட பொதுப்பிரிவினராக இருக்க வேண்டும். அதோடு,  8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராகவும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்திருக்க வேண்டும்.

    இரவு காவலர்: இப்பணியிடத்திற்கு முன்னுரிமைப்படுத்தப்பட்ட பொதுபிரிவு மற்றும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட எஸ்.சி.அருந்ததியர் (கைவிடப்பட்ட பெண்) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் தலா ஒரு பணியிடம் ஒதுக்கப்பட உள்ளன. இப்பணிக்கு கட்டாயம் எழுதப்படிக்க தெரிந்தவாரக இருக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட அனைத்து பணியிடங்களுக்கும் 1.7.2015 அன்றைய நாளில் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 30 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் ஆகியோருக்கு அதிகபட்சம் 32 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

     எனவே மேற்குறிப்பிட்ட தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகிற 29-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனி விண்ணப்பங்களாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

Popular Posts

Facebook

Blog Archive