இடஒதுக்கீடு... ரிசர்வேஷன்.. | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil இடஒதுக்கீடு... ரிசர்வேஷன்.. ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 27 மார்ச், 2016

இடஒதுக்கீடு... ரிசர்வேஷன்..

இடஒதுக்கீடு... ரிசர்வேஷன்.. இந்த வார்த்தையை யார் எங்கு கேட்டாலும் அது என்னவோ SC/ST மக்களுக்கானது, அதை நீக்க வேண்டும், தூக்கவேண்டும், ஒழிக்கவேண்டும் என்ற தவறான கண்ணோட்டம் சமூகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது...

SC/ST மட்டும்தான் இங்கே இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனரா.. இல்லை...
மொத்தமுள்ள 100% இடங்களில், தமிழ்நாட்டில்..
 
BC - 30%
MBC - 20%
SC - 18%
ST - 1%
மீதி - 31% பொது போட்டி (எல்லா சமூகத்துக்கும் பொதுவானது)

மத்திய அரசில்,
OBC (BC+MBC) - 27%
SC - 15%
ST - 7.5%
மீதி - 50.5% பொது போட்டி (எல்லா சமூகத்துக்கும் பொதுவானது)

ஆக, இடஒதுக்கீட்டிற்கு எதிராக யார் எங்கே பேசினாலும் முதலில் அதற்கு எதிர் குரல் கொடுக்க வேண்டியவர்கள் இடஒதுகீட்டில் பெரும்பகுதியை அனுபவிக்கும், சுமார் 50% இடங்களை பெரும் பிற்படுத்தப்பட்ட/ மிக பிற்படுத்தப்பட்ட  மக்கள் தான்.... 

ஆனால், இந்த சமூகத்தில் இடஒதுக்கீடு என்பதை ஏதோ SC/ST மக்கள் மட்டுமே அனுபவித்து, சுக போக வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஒரு மாய தோற்றம் உருவாக்கப்பட்டுவிட்டது.

SC/ST மக்கள் பெறுவது என்னவோ வெறும் 19% இடங்கள் தான். 

நமக்கு தெரிந்தோ தெரியாமலோ தீண்டாமை கொடுமையை செய்துகொண்டுதான் இருக்கின்றோம்... சாதி பெயரில் கற்பழிக்கபட்டதும், கொல்லப்பட்டதும் தலித் என்றால் ஏனொ சகஜமாக எடுத்து கொள்கிறோம். இந்த தலைமுறையிலாவது சாதி ஒழிக்க ஒன்றிணைவோம்...
இன்னும் எத்தனை ரோகித் வெமுலாவை கொல்ல போகிறோம்..சாதி மத பேதமின்றி நல்ல உள்ளத்துடன் பகிர்வோம்..

நன்றி- பார்த்தசாரதி.(இளம் வழக்கறிஞர்)Partha Sarathi A

Popular Posts

Facebook

Blog Archive