மாடித்தோட்டம் என்ற பெயரில் விசத்தை விதைக்கும் ........ | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil மாடித்தோட்டம் என்ற பெயரில் விசத்தை விதைக்கும் ........ ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 28 ஜனவரி, 2016

மாடித்தோட்டம் என்ற பெயரில் விசத்தை விதைக்கும் ........


உஷார்.... உஷார்...உஷார்..
மாடித்தோட்டம்  என்ற பெயரில் விசத்தை விதைக்கும் பன்னாட்டு விதைகளை மக்களை ஏமாற்றி வழங்குவதன் நோக்கம்..
அதிர்ச்சி அளிக்கிறது 

படித்ததில் பிடித்தது.பிடித்ததால் சுட்டது..
நன்றி அந்த முகம் தெரியாத நண்பருக்கு.

நம் கண் முன்னாலேயே ஒரு மிகப் பெரிய அக்கிரமம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் வீரியம் புரியாமல் நாம் பேசாமல் இருக்கிறோம்.. தோழர் ஶ்ரீஜா வெங்கடேஷின் பதிவைப் படித்ததும்தான் எனக்குள் இந்த கேள்வியே எழுந்தது...

முதலில் தோழரின் பதிவு..
***** 
நேற்றும் முந்தைய தினமும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையினர் சுமார் 50,000 மாடித்தோட்ட பொருட்களை சென்னை முழுவதும் சலுகை விலையில் அளித்திருக்கிறார்கள். நான் சென்று கேட்டபோது தீர்ந்து விட்டது. இனி சென்னையின் அனைத்து வீட்டு மொட்டை மாடிகளிலும் கத்திரி, வெண்டை என்று காய்கள் விளையப் போகின்றன என்று மகிழ்ந்தேன். என் சந்தோஷம் என் தம்பி வீட்டுப் போனதும் மறைந்து போனது. அவர் இந்தப் பொருட்களை வாங்கி வைத்திருந்தார். ஆர்வ மிகுதியால் விதைகளைப் பார்த்தேன்.


 சரியான அதிர்ச்சி. அனைத்து விதைகளுமே உயிரியல் முறையில் உருவாக்கப்பட்டவை. அதோடு அதனைத் தயாரித்த கம்பெனியின் பெயர் இந்தோ அமெரிக்கா என்றிருந்தது. கீரை, கத்திரி வெண்டை விதைகளைக் கூடவா அமெரிக்கக் கம்பெனியின் தொழில் நுட்பத்தோடு உருவாக்க வேண்டும்? அத்தனையும் ஹைப்பிரிட் விதைகள். அதாவது அந்த விதையை உபயோகித்து நாம் வெண்டைக்காய் வளர்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து வரும் காய்கள் உண்ணத் தகுந்தவை தான் என்று சொல்கிறார்கள். ஆனால் மறு சுழற்சி முறையில் விளைந்த வெண்டையிலிருந்து நம்மால் விதைகளை எடுக்க முடியாது. இயற்கை விவசாயம், பாரம்பரிய விவசாயம் என்று நாம் அனைவரும் பேசி வரும் நேரத்தில் தோட்டக்கலைத்துறையினரே இப்படிப்பட்ட செயற்கை முறை விதைகளை மக்களுக்கு அளிக்கலாமா? அத்தனையும் சாயமூட்டப்பட்ட விதைகள் வேறு. அது மட்டுமல்ல இயற்கை உரத்தை அளிக்கும் அவர்கள் அடியுரமாக கெமிக்கல்களையும் விநியோகிக்கிறார்கள். இவற்றை கொள்முதல் செய்வது யார்? அந்த இந்தோ அமெரிக்கன் கம்பெனி எங்கிருக்கிறது? என்று யோசித்தால் தலை சுற்றுகிறது. விதை மற்றும் அடியுரங்கள் கொள்முதலில் என்னன்ன முறை கேடுகளோ? கடவுளே! காப்பாற்று!
****** 
இப்போது நமது சந்தேகங்கள்..

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை மொட்டைமாடி தோட்டம் போடுவதற்காக சலுகை விலையில் தோட்டப் பொருட்களை தருகிறார்கள் என்ற விளம்பரம் தொடர்ந்து என் கண்ணில் பட்டபடியே இருந்தது.. ஓர் அரசுத்துறை இவ்வளவு தூரம் பொது மக்கள் மீது அக்கறையோடு செயல்படுவது என்னை ஆச்சரியப்படுத்தியது..

இந்தப் பதிவைப் படித்தபிறகுதான் இதில் இப்படியொரு கோணம் இருப்பதே எனக்குப் புரிந்தது. மொட்டைமாடிப் பயிரிடலுக்காக அரசு கொடுத்திருக்கும் விதைகள் எல்லாம் வெளிநாட்டு விதைகளாம்.. அனைத்தும் உயிரியல் மாற்று செய்யப்பட்டவை என்று அதிலிருக்கும் லேபிள்களே சொல்கின்றன.. அதாவது மரபணு மாற்றப் பயிர்களாக (Genetically Modified foods) அவை இருப்பதற்கான வாய்ப்புதான் அதிகம் என நினைக்கிறேன்..

நேரடியாக இந்தியாவுக்குள் இது போன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இறக்குமதி செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.. அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுடன் அரசு அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து நம் மொட்டை மாடி வழியாக இந்தப் பயிர்களை இந்தியாவுக்குள், குறிப்பாக தமிழகத்துக்குள் ஊடுருவ வைக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.

அப்படி இருந்தால் இது இந்தியப் பயிரிடல் முறைக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.. மொட்டை மாடியில் சிறு அளவில்தானே வளர்க்கிறார்கள் என்று நாம் இதை ஒதுக்கிவிட முடியவே முடியாது.. ஐம்பதாயிரம் வீடுகளின் மொட்டை மாடிகள் என்பது மிகப் பெரிய பரப்பளவு.. அங்கிருந்து தேனீக்களின் மூலம் இந்த கொலைகார பயிர்களின் மகரந்தங்கள் எப்படி எப்படி எல்லாம் பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்று நினைத்தாலே பகீர் என்கிறது...

மொட்டை மாடித் தோட்டங்களின் மீது அவ்வளவு அக்கறை கொண்டவர்கள் தோட்டக்கலைத் துறையின் விதைகளையே வழங்கி இருக்கலாமே.. இப்படி அமெரிக்க விதைகளை எதற்காக வழங்க வேண்டும்..? இதிலேயே இதன் பின்னணியில் இருக்கும் துரோகம் நமக்குப் புரியவில்லையா..?
அரசியல்வாதிகள் கார்ப்பரேட் கம்பெனிகளுடன் கூட்டுச் சேர்ந்து நாட்டைக் காட்டிக் கொடுப்பது ஒரு பக்கம் என்றால் இது போல அரசு அதிகாரிகள் தனி வியூகமாக நம் மண்ணையும் பயிர்களையும் மலடாக்கி சாகடிக்க கிளம்பியிருப்பது ஆற்ற முடியாத துயரையும் அச்சத்தையும் நமக்குள் ஏற்படுத்துகிறது..

நண்பர்கள் பத்திரிக்கையாளர்கள் இதற்குள் புகுந்து உண்மை நிலையை வெளிக் கொண்டு வந்தால் நன்று.. சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய பிரச்சினை இது என்றே நான் நினைக்கிறேன்..
மிக மிக அவசரம்...
(Sources Facebook) kindly validate this info

Popular Posts

Facebook

Blog Archive