விவசாய கேள்வி - பதில்கள்...! | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil விவசாய கேள்வி - பதில்கள்...! ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

விவசாய கேள்வி - பதில்கள்...!


விவசாய கேள்வி - பதில்கள்...!

❓ பலா மரத்தில் அதிக மகசு+லைப் பெருவதற்கான வழிகள் யாவை ?

🍁 அரப்பு மோர் கரைசலைப் பு+ப்பிடிக்கும் பருவத்தில் தௌpப்பதால் பயிரின் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பு+க்கள் பு+க்கும். ஆண்டிற்கு ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும்.

❓ முருங்கை மரத்தில் அதிகம் காய்கள் பிடிக்க வேண்டும். அதற்கு என்ன இயற்கை மருந்து தௌpக்கலாம் ?

🍁 இரண்டு முறை நுனியைக் கிள்ளி விடுவதன் மூலம் அதிக துளிர் விட்டு அதிக கிளைகளைப் பெற்று காய்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

🍁 மண்புழு உரம், மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல், உயிர் உரங்கள் இவற்றைத் தொடர்ந்து வேரில் இடுவதால் திரட்சியான மற்றும் எடை அதிகமான காய்களைப் பெறலாம்.

🍁 மீன் அமினோ அமிலத்தை இலைகள் மீது தௌpப்பதாலும், வேரில் இடுவதாலும் கரும்பச்சை நிற இலைகளைப் பெறலாம் மற்றும் அதிக வளர்ச்சியும் இருக்கும்.

❓ கொத்தமல்லியில் வண்டுகள் அதிகமாக உள்ளது. அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன ?

🍁 கீரைத் தோட்டத்தினைச் சுற்றிலும் சாமந்திப்பு+ செடிகளை நடவு செய்யலாம். சாமந்திப்பு+ பு+ச்சிகளையும், வண்டுகளையும் அதிகம் கவரும். அதனால் கீரைகளை அதிகம் தாக்காது.

🍁 அதையும் தாண்டி சில பு+ச்சிகள் கீரைகளைத் தாக்கினால், இயற்கை பு+ச்சி விரட்டி மூலம் விரட்டி விடலாம். பச்சை மிளகாய், இஞ்சி, பு+ண்டு கரைசலைத் தௌpக்கலாம்.

❓ கன்று குட்டிக்கு கழிச்சல் அதிகமாக உள்ளது. அதைத் தடுக்க என்ன செய்யலாம் ?

🍁 வசம்பு இலை 2 அல்லது சிறிதளவு, கொய்யா கொழுந்து 200 கிராம், சுக்கு 50 கிராம் சேர்த்து அரைத்துக் கொடுத்தால் கன்று குட்டிகளுக்கு கழிச்சல் நின்று விடும்.

❓ கரும்புத்தோட்டத்தில் எலிகளைக் கட்டுப்படுத்த என்ன இயற்கையான வழி ?

🍁 புதினா செடிகளை வரப்புகளில் நடுவதன் மூலம் எலிகள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

🍁 மீன் எண்ணெயை வயலைச் சுற்றிலும் தௌpப்பதன் மூலம் எலி வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

🍁 நொச்சி செடியை வயலைச் சுற்றிலும் வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

❓ கொய்யா மரத்திற்கு என்ன உரம் இடலாம் ?

🍁 ஜீவாமிர்த கரைசல், மீன் அமினோ அமிலம் ஆகியவற்றை மக்கிய தொழுவுரத்துடன் கலந்து வேரில் இடுவதால் மரம் நன்கு வளரும். கற்பு+ரகரைசலைத் தௌpப்பதன் மூலம் பு+ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

நித்ராவின் விவசாய ஆலோசகர்
வு.நித்யா டீ.ளுஉ.இ(யுபசiஉரடவரசந)

5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் !

இது போன்று மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ள கீழ்கண்ட லிங்க் ஐ கிளிக் செய்யவும்!

https://goo.gl/9AZRL7

Popular Posts

Facebook

Blog Archive