#அழகு_எங்கே..?? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil #அழகு_எங்கே..?? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 12 மே, 2019

#அழகு_எங்கே..??

#அழகு_எங்கே..??

ஒரு அழகான பெண். பார்க்கிறதுக்கு தேவதை மாதிரி இருக்கிறவங்க! ஒரு விமானத்தில் ஏறினாங்க. ஏறி, தனது சீட்டை தேடினாங்க. அங்க போய் பார்த்தா, அவங்க சீட்க்கும் பக்கத்து சீட்ல ரெண்டு கையையும் இழந்த ஒருத்தர் உக்கார்ந்திருந்தார்.

இவங்களுக்கு அவரை பார்த்ததும் ஒரு மாதிரி வெறுப்பா இருந்திச்சு, இந்தாளு பக்கத்தில நாம எப்படி உக்காரது...அப்டின்னு யோசிச்சு, விமான பணிப்பெண்ணை கூப்பிட்டு, "எனக்கு வேற இடத்தில சீட் அரேன்ஜ் பண்ணுங்க.."ன்னு கேட்டாங்க.. அதுக்கு விமான பணிப்பெண், "ஏன் என்னாச்சு உங்க சீட்டுக்கு..?"ன்னு கேட்டதுக்கு, எனக்கு அவர் பக்கத்தில உக்கார்ந்திட்டு வர அருவருப்பா இருக்கு, அதான்... அப்டின்னதும், விமான பணிப்பெண்ணுக்கு தூக்கி வாரிபோட்ருச்சு..

பார்க்க இவ்ளோ டீசென்ட்டா இருக்காங்க... ஆனா நாகரீகம் இல்லாம பேசுறாங்களேன்னு சங்கடப்பட்டாலும், ஏதும் பண்ண முடியாதே... ஏன்னா அவங்க பயணியாச்சே.... வேற வழி....!? 

இருங்க மேடம் நான் பாக்குறேன்ன்னு சொல்லிட்டு செக் பண்ணி பாக்குறாங்க,  எங்கயும் சீட் காலி இல்லை. அந்த பெண்கிட்ட திரும்பவும், மேடம்... எந்த சீட்டும் காலி இல்லை,  கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க... நான் கேப்டன் கிட்ட பேசிட்டு உங்களுக்கு வேற ஏதாவது மாற்று ஏற்பாடு பண்ண முடியுமான்னு கேட்டு வரேன். அதுவரை பொறுத்திருங்க... ப்ளீஸ்...ன்னு சொல்லிட்டு கேப்டன் ரூம்க்கு போனாங்க..

கொஞ்ச நேரத்தில திரும்பி வந்து, மேடம்...நீங்க எடுத்திருக்கிற டிக்கெட் எக்கானமி கிளாஸ்... ஆனா எக்கானமி க்ளாஸ்ல உங்களுக்கு  ஒதுக்குறதுக்கு வேற சீட் இல்லை.  முதல்வகுப்பு பிரிவில் மட்டும் தான் ஒரு சீட் காலியா இருக்கு... ஆனாலும் நீங்க எங்களோட மதிப்பு வாய்ந்த பிரயாணி..! 

உங்களோட கோரிக்கையையும் பரிசீலிக்காம இருக்க முடியாதே.. அதனால, எங்கள் பயண வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு எக்கானமி கிளாஸ் பயணி ஒருத்தருக்கு முதல் வகுப்பு சீட்டை ஒதுக்க போறோம்.... கொஞ்சம் பொறுங்க, அப்டின்னு சொன்னதும் அந்த பெண்மணிக்கு சந்தோசம் தாங்கல... 

விமானப்பணிப்பெண்ணின் பதிலுக்கு கூட காத்திருக்காம, முதல்வகுப்புக்கு போக தயாரானாங்க...

ஆனா அங்க நடந்து என்னன்னா...  விமான பணிப்பெண் நேரா அந்த இரண்டு கைகளையும் இழந்தவர்கிட்ட போய், சார்.... தயவுசெய்து மன்னிச்சிடுங்க., உங்க லக்கேஜ் எல்லாம் நான் எடுத்திட்டு வரேன்.... நீங்க முதல் வகுப்புக்கு வாங்க சார்., உங்க பக்கத்தில இவங்களை போல ஒருத்தரை உக்காரவைக்க எங்களுக்கு மனமில்லை..!  அப்டின்னு பணிவா சொன்னதும் விமானத்தில் இருந்த எல்லாரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்து அந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்தாங்க...
.
அந்த அழகான பெண்ணுக்கு ரொம்ப அவமானமா போச்சு... சங்கடத்தோட நெளிஞ்சுக்கிட்டே நின்னாங்க.

அப்போ அந்த கைகளை இழந்த அந்த நபர் எழுந்து, நான் ஒரு #ரிட்டயர்டு_மிலிட்டரி_மேன்...  போரில் என்னோட இரண்டு கைகளையும் இழந்திட்டேன்... முதல்முறையா இந்த பெண் சொன்னதை கேட்டதும், இவங்கள மாதிரி ஆட்களுக்காகவா நாம அவ்ளோ கஷ்டப்பட்டு போரில் ஈடுபட்டோம்னு ரொம்ப வருத்தமா இருந்திச்சு... ஆனா இப்போ நீங்க எல்லாரும் கை தட்டி ஆராவாரம் செய்றதை கேட்டதும் மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது... உங்களை போன்ற இவ்ளோ நல்ல குடிமக்களுக்காக நான் கைகளை இழந்ததிற்காக சந்தோசப்படுறேன்!  அப்டின்னு சொல்லிகிட்டே முதல்வகுப்பை நோக்கி மெதுவா நடக்க ஆரம்பிச்சார்...

அந்த பெண்மணியோ அவமானத்தின் உச்சத்தில் இருந்தாங்க... யாரையும் பார்க்கும் தைரியமின்றி தலையை குனிஞ்சு உட்கார்ந்துட்டாங்க.
அழகு என்பது நாம பாக்குற வெளித்தோற்றத்தில் இல்லை... அது மனசு சம்பந்தப்பட்ட விசயம்.... 

#அழகு_நம்ம_நடத்தையில் தான் வெளிப்படும்... அதை உணர்ந்து நடந்துக்க முயற்சி செய்வோம்!

Popular Posts

Facebook

Blog Archive