இந்த காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கக்கூடாது - These vegetables should not be kept in the fridge - Tamil Awareness | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil இந்த காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கக்கூடாது - These vegetables should not be kept in the fridge - Tamil Awareness ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 9 மார்ச், 2022

இந்த காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கக்கூடாது - These vegetables should not be kept in the fridge - Tamil Awareness

 இந்த காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கக்கூடாது.... 💚❤️These vegetables should not be kept in the fridge

காய்கறிகள், பழங்கள், உணவு பதார்த்தங்களை பாதுகாக்கும் சமையல் தோழனாக குளிர்சாதன பெட்டி அமைந்திருக்கிறது. உணவு பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகளில் தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும் தன்மையும் அதில் இருக்கிறது. பொதுவாக பிரிட்ஜை 30 முதல் 38 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் வைத்து பராமரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அந்த வெப்பநிலை உணவு பொருட்கள் கெட்டுப்போவதை தடுக்க உதவும். எனினும் எல்லா வகையான உணவு பொருட்களையும் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கக்கூடாது. தக்காளி,வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, பப்பாளி, கத்திரிக்காய் போன்ற உணவு பொருட்களை பிரிட்ஜில் வைப்பது நல்லதல்ல என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

தக்காளி: இதனை பிரிட்ஜில் சேமித்து வைத்தால் அதன் தரமும், ருசியும் குறைந்துபோய்விடும். குளிர்ந்த வெப்பநிலை தக்காளியின் உள் அடுக்குகளின் தன்மையை மாற்றிவிடும். பிரிட்ஜுக்குள் அதிக நாட்கள் தக்காளியை வைத்திருந்தால் அதன் மென்மைத்தன்மை நீங்கிவிடும். வெளிப்புற தோல் சுருங்கிப்போய் சுவையற்றதாக மாறிவிடும். தக்காளியை அறையின் வெப்பநிலையில் காற்றோட்டமாக வைத்திருப்பதே நல்லது.

கத்திரிக்காய்: இது வெப்பநிலை உணர் திறன் கொண்ட காய்கறியாகும். 50 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழேதான் பிரிட்ஜின் வெப்பநிலை இருக்கும் என்பதால் அந்த வெப்பநிலை கத்தரிக்காய்க்கு ஒத்துக்கொள்ளாது. அதன் சுவையை குறைத்துவிடும். அறையின் வெப்பநிலைதான் கத்திரிக்காய்க்கு உகந்தது. அதுபோல் பிற காய்கறிகள் பழங்களுடன் கத்திரிக்காயை சேர்த்து வைக்கக்கூடாது. தனியாக வைத்திருப்பதுதான் நல்லது.

பிரெட்: பொதுவாகவே பிரிட்ஜில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலை சில பொருட்களை எளிதில் உலரவைத்துவிடக்கூடும். பிரெட்டும் குளிர்ந்த வெப்பநிலையில் சட்டென்று உலர்ந்துபோய்விடக்கூடியது. குளிர்ந்த சூழலில் நீண்ட நேரம் இருந்தால் அதன் தன்மையே மாறிப்போய்விடும்.

வெங்காயம்: இதனை பிரிட்ஜுக்குள் வைத்தால் மென்மையாக மாறிவிடும். அதில் பூஞ்சையும் படரக்கூடும். வெளியே காற்றோட்டமாக வைத்திருந்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

பூண்டு: பிரிட்ஜுக்குள் பூண்டுவை சேமித்து வைக்கக் கூடாது. அதில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலை பூண்டுவின் சதை பகுதியை கடினமான தாக்கிவிடும். நீண்ட நாட்கள் சேமித்துவைத்தால் முளை விடக்கூடும். காற்றோட்டமான கூடையில் சேமித்துவைத்தால் ஒரு மாதம் கூட உபயோகிக்கலாம். கெட்டுப்போகாது.

உருளைக்கிழங்கு:
உலர்ந்த இடத்தில் உருளைக்கிழங்கை சேமித்து வைப்பதுதான் நல்லது. பிரிட்ஜின் குளிர்ச்சி தன்மை உருளைக்கிழங்கில் இருக்கும் மாவுச்சத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். சுவையும் குறைந்துபோய்விடும். பிரிட்ஜுக்குள் நீண்ட நாட்கள் உருளைக்கிழங்கை வைத்திருந்தால் மேற்புற தோல் கருமையாக மாறிவிடும்.

ஆரஞ்சு: சிட்ரஸ் பழங்களில் அதிக அமிலத்தன்மை கொண்டது ஆரஞ்சு. அதனை குளிர்சாதன பெட்டியில் சேமித்துவைத்தால் தோல் பகுதியில் புள்ளிகள் தோன்றக்கூடும். மென்மை தன்மையும் மாறக்கூடும். கடினமான தோல் கொண்ட ஆரஞ்சுக்கு வெப்பமான சூழல்தான் ஏற்றது.

பப்பாளி: பப்பாளியையும் பிரிட்ஜில் வைக்கக்கூடாது. காற்றோட்டமான இடத்தில்தான் பப்பாளியை வைக்க வேண்டும்.

தேன்: இது இயற்கையாகவே தன்னை பாதுகாத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. அறையின் வெப்பநிலையில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கெட்டுப்போகாமல் பாதுகாக்கலாம். பிரிட்ஜுக்குள் சேமித்துவைத்தால் கடினமாகிவிடும்.

ஊறுகாய்: ஊறுகாய் தயாரிக்கும்போது உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. அவை கெட்டுபோகாத அளவிற்கு பதப்படுத்தப்படுகிறது. அதனால் அதனை குளிர்ந்த வெப்பநிலையில் வைத்திருப்பது தேவையற்றது.

வாழைப்பழம்: வாழை மரங்கள் வெப்பமான காலநிலையில் வளர்க்கப்படுகின்றன. பழங்களை அறை வெப்பநிலையில் வைக்கும்போது ஊட்டச்சத்துக்கள் சீராக இருக்கும். குளிர்சாதன பெட்டியில் வைத்தால் இயற்கையாக பழுக்கும் செயல்முறை பாதிப்புக்குள்ளாகும்.

சாக்லெட்: நிறைய பேர் சாக்லெட்டை குளிர்சாதன பெட்டியில் சேமித்துவைத்து சாப்பிடுகிறார்கள். அப்படி குளிரவைப்பதன் மூலம் அதன் சுவை மாறுபடலாம்.

ஆப்பிள்: இதனை பிரிட்ஜில் வைப்பதை விட வெப்பமான இடத்தில் வைத்தால் அதன் சுவை நன்றாக இருக்கும். அறை வெப்பநிலையில் 2 வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் உபயோகிக்கலாம்.

மாவு: குளிர்ந்த வெப்பநிலையில் மாவை வைத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இருந்தாலும் பிரிட்ஜில் வைக்க தேவையில்லை. காற்றுப்புகாத அளவுக்கு இருக்கமாக மூடி வைத்தாலே போதுமானது.


 

Popular Posts

Facebook

Blog Archive