Facebook Messenger Fly Balloons பேஸ்புக் மெசெஞ்சர் மாதாந்த 1 பில்லியன் பயனர்களை எட்டியது! பறக்கும் பலூன் மூலம் நண்பர்களை வாழ்த்தலாம்
பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது அரட்டையடிப்பதற்கும் அழைப்புக்களை
மேற்கொள்ளவதற்கும் மாத்திரம் அல்லாது மேலும் பல பயனுள்ள வசதிகளை
பெற்றுக்கொள்ளவும் உதவுகிறது.
நீங்கள் பறந்த அனுபவத்தை எம்முடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்!

அத்துடன் இதனை பயன்படுத்தும் மாதாந்த பயனர்களின் எண்ணிக்கை 1 பில்லியன் வரை
அதிகரித்திருப்பதாக பேஸ்புக் தளம் அதன் அதிகாரபூர்வ தளத்தில் கூறியுள்ளது.
பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது கடந்த 2014 ஆம் ஆண்டு பேஸ்புக் சமூக வலைதளத்தின் பிரதான சேவையில் இருந்து வேறு பிரிக்கப்பட்டு ஒரு தனித்த சேவையாக இயங்கி வருகிறது. அதாவது நீங்கள் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையை பயன்படுத்த வேண்டும் எனின் பேஸ்புக் தளத்தில் கணக்கொன்று இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை மாறாக உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளிட்டு கணக்கொன்றை உறுவாக்குவதன் மூலம் நேரடியாக பேஸ்புக் மெசெஞ்சர் சேவையை மாத்திரம் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

எது எப்படியோ பேஸ்புக் மெசெஞ்சர் 1 பில்லியன் மாதாந்த பயனர்கள் எனும்
மைல்கல்லை எட்டியதை தொடர்ந்து அதனை ஏனையவர்களுடன் கொண்டாடும் வகையில்
பறக்கும் பலூன்களை நண்பர்கள் மத்தியில் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது.
எனவே நீங்களும் இந்த புதிய அனுபவத்தை பெற விருபுகிரீர்களா? கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.
பறக்கும் பலூன்களை பேஸ்புக் மெசெஞ்சரில் பகிர்வது எப்படி?
படி 1: கீழுள்ள இணைப்பு பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் புதிய பதிப்பை தரவிறக்கிக் கொள்க.

படி 2: இனி பேஸ்புக் மெசெஞ்சரில் இமொஜிகளை பயன்படுத்துவதற்காக தரப்பட்டுள்ள குறியீட்டை சுட்டுக.

படி 3: இனி அதில் பலூன் இமொஜியை தெரிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
அவ்வளவுதான்!
நீங்கள் பறந்த அனுபவத்தை எம்முடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்!