New Facebook Messanger பேஸ்புக் மெசெஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி!
நாம்
சாதாரணமாக கூறும் ஒரு விடயத்தை விட அதில் இமொஜிகளையும் உள்ளிட்டு கூறும்
போது அது இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியவைகளாகவும், பார்ப்பதற்கு
அழகானதாகவும் அமைந்துவிடுகிறது.

மேலும் அது படிப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் மேலும் மேலும் படிப்பதற்கு ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.
எனவே வாட்ஸ்அப், வைபர், பேஸ்புக் மெசெஞ்சர் உட்பட பிரபலமான அனைத்து மெசேஜிங் சேவைகளிலும் இந்த இமொஜிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில்
பேஸ்புக் மெசெஞ்சரில் பயன்படுத்தப்பட்டு வந்த வழக்கமான இமொஜிகளுக்கு
பதிலாக புத்தம் புதிய தோற்றத்தை கொண்ட 1500 வரையான இமொஜிகள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இவைற்றை நீங்களும் பெற்றுக்கொள்வதற்கு பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் புதிய பதிப்பை கீலுள்ள இணைப்பு மூலம் நிறுவிக்கொள்க.
புதிய
பதிப்பை நிறுவிய பின்னரும் உங்களுக்கு புதிய இமொஜிகள் தோன்றவில்லை எனின்
Settings பகுதியின் ஊடாக Application Manager > Facebook Messenger
என்பதை தெரிவு செய்து Clear Cache என்பதை சுட்டுக.

பின்னர்
மீண்டும் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை திறந்து பயன்படுத்துக. இனி
உங்களுக்கு புதிய இமொஜிகளை பயன்படுத்தலாம். அவ்வாறு செய்தும் புதிய
இமொஜிகள் தோன்றவில்லை எனின் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை மிக விரைவில்
தானகவே அது உங்களுக்கு கிடைக்கப்பெறும்.

இதனை ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் மாத்திரம் இன்றி கணினிகளுக்கான மெசெஞ்சர் இணையதளத்தின் ஊடாகவும் இந்த வசதிகளை பெறலாம்.