Grandmother's cure | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Grandmother's cure

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Grandmother's cure லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Grandmother's cure லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மார்ச், 2022

12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்!! - Grandmother's cure for 12 types of diseases - Home Remedies

 12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்!! -  Grandmother's cure for 12 types of diseases

✍️என்னதான் நாம் நவீன காலத்தை நோக்கி மாறிக்கொண்டே இருந்தாலும், நம்முடைய சில பழங்கால பழக்க வழக்கத்தை விட்டு மட்டும் மாறுவதில்லை அவற்றில் ஒன்றுதான், பாட்டி வைத்தியம்.

இன்று பாட்டி வைத்தியத்தில், உடலின் பலவகையான பிரச்சனைகளை வீட்டில் இருந்தே சரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1. தலைவலி குணமாக: Headache

கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குணப்படும்.

வெற்றிலையை நன்றாக இடித்து சாறு பிழிந்து கொள்ளவும். இந்த சாறில் கிராம்பை நன்றாக அரைத்து கொண்டு, நெற்றியின் இரண்டு பொட்டு பகுதியில் நன்றாக தேய்த்து வந்தால் தலை வலி குணமாகும்.

2. வாய் புண் குணமாக:Mouth sore

மோரில் உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை வாயில் வைத்திருந்து, பின்பு வாய் கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை ஒரு வாரம் வரை தொடர்ந்து செய்து வர வாய் புண் குணமாகும்.

நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

3. பல் வலி குணமாக:Toothache

பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.

4. வறட்டு இருமல் குணமாக:dry cough

கிராம்பை இடித்து பொடி செய்து கொள்ளவும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

வேலிப்பருத்திச் சாறு, துளசிச் சாறு, பசு வெண்ணெய், கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் காய்ச்சி வடித்து, காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

5. விக்கல் குணமாக:Hiccups

விக்கல் வரும்போது 1 கிண்ணம் அளவு தயிரை எடுத்து 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து மெதுவாக குடித்து வர விக்கல் குணமாகும்.

விடாமல் விக்கல் எடுத்தால் துளசி இலைகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.

6. ஓயாத சளி குணமாக:Cold

வெற்றிலை சாறை கொதிக்க வைத்து அந்த சாறை நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாத சளி குணமாகும்.

தூதுவளைச் சாறு, துளசி இலைச் சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் ஓயாத சளிக் குறையும்.

7. கழுத்துச் சுளுக்கு குணமாக:Neck sprain

ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணிநேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும்.

சம அளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் எடுத்து நன்றாக கலந்து சுளுக்கு இருக்கும் இடத்தில் சிறிது விட்டு நன்கு தடவி விட்டு வந்தால் சுளுக்கு குறையும்.

8. தூக்கமின்மை குணமாக:Insomnia

வெங்காயத்தை தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.

நல்லெண்ணெயில் பாகற்காய் சாறு கலந்து படுக்கும் முன் இந்த எண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி நன்றாக தேய்த்து விட்டு படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.

9. மூலம் குணமாக:

கண்டங்கத்திரிப் பூ, நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி மூலத்தில் தடவி வந்தால் மூலநோய் குறையும்.

திப்பிலி, சுக்கு, எள் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து பொடி செய்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.

10. நினைவாற்றல்:

பத்து பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.

வல்லாரை கீரையை தினமும் துவையல் செய்து சாப்பிட நினைவாற்றல் பெறுகும்.

11. ஒற்றை தலைவலி குணமாக:

ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிகாய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.

முட்டைகோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையின் மீது ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.

12. கால் ஆணி குணமாக:

அத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும். கால் மிருதுவாகும்.

மல்லிகை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி குறையும்.

Tamil health tips -வீட்டு வைத்தியம்

Popular Posts

Facebook

Blog Archive