body heat | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: body heat

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

body heat லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
body heat லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மார்ச், 2022

இயற்கையாக உடல் சூடு குறைய கோடை பானங்கள் - summer drinks - Decrease body heat naturally

 

அடுத்து நாம் எதிர்கொள்ள இருக்கும் வெயில் காலம்
சில இயற்கை வைத்திய டிப்ஸ்....Decrease body heat naturally

✍  இயற்கையாக உடல் சூடு குறைய

வெண்ணெய் மற்றும் பால்

ஒரு டம்ளர் பாலில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும், உடல் வெப்பத்தைக் குறைக்கலாம். ஆனால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பின், இம்முறையைத் தவிர்க்கவும்.
வைட்டமின் சி  நிறைந்த உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை கோடையில் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும். எனவே இப்பழங்களைக் கொண்டு ஜூஸ் போட்டு பருகுவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்

மோர்

கோடையில் மோர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மோரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோபயாடிக்குகள் போன்றவை அதிகம் உள்ளதால், இது கோடையில் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

புதினா டீ

புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வர, அதில் உள்ள குளிர்ச்சித்தன்மையினால் உடல் சூடு தணியும்.

சோம்பு நீர்

ஒரு கையளவு சோம்பை எடுத்து நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரை வடிகட்டி, தினமும் காலையில் குடித்து வர, உடல் வெப்பம் குறையும்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழையின் ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், அது உடலைக் குளுமைப்படுத்துவதை நன்கு உணர முடியும். மேலும் கற்றாழையின் ஜெல்லை 2 ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது தேன் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து குடித்து வர, கோடையில் பிடித்த உடல் சூடு குறையும்.

கரும்பு ஜூஸ்

கோடையில் தெருவின் மூலைமுடுக்குகளில் கரும்பு ஜூஸ் விற்பதைக் காண்பீர்கள். இந்த கரும்பு ஜூஸை குடிப்பதால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நல்ல விடுதலைக் கிடைக்கும்.

முள்ளங்கி

பலருக்கும் முள்ளங்கி பிடிக்காது. இதற்கு அதன் சுவையே காரணம். ஆனால் இந்த காய்கறியை கோடைக்காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் முள்ளங்கியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. கோடையில் வெப்ப பக்கவாதம் வருவது பொதுவானது. இதற்கு காரணம் அதிகப்படியான உடல் சூடு மற்றும் உடல் வறட்சி தான். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அடிக்கடி முள்ளங்கியை கோடைக்காலத்தில் சாப்பிடுங்கள்.

வெள்ளரிக்காய்

கோடையில் அதிகம் விற்கப்படும் ஓர் காய்கறி தான் வெள்ளரிக்காய். இது மிகவும் சுவையாகவும், நீர்ச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதோடு, கோடையில் இதை சாப்பிட்டால், உடல் வறட்சி தடு, உடல் சூடு பிடிப்பது தடுக்கப்படும். எனவே இந்த வெள்ளரிக்காயை சாலட் போன்று செய்து, அடிக்கடி சாப்பிடுங்கள்.

முலாம் பழம்

கோடையில் விற்கப்படும் மற்றொரு சுவையான பழம் தான் முலாம் பழம். இந்த பழத்திலும் நீர்ச்சத்து மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த முலாம் பழத்தை ஜூஸ் தயாரித்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், கோடைக்காலத்தில் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இளநீர்

நம் அனைவருக்குமே உடல் சூடு என்றதும் குடிக்கத் தோன்றும் ஓர் பானம் இளநீர். இந்த இளநீர் ஒருவரது உடல் சூட்டைத் தணிப்பதோடு, உடலை வறட்சி அடையாமலும் தடுக்கும். மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலின் ஆற்றலை மேம்படுத்தும். எனவே கோடையில் தவறாமல் ஒரு இளநீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
   

தர்பூசணி

உடல் சூட்டைக் குறைக்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிகளவிலான நீர்ச்சத்து தான் காரணம். மேலும் தர்பூசணியை ஒருவர் தொடர்ச்சியாக கோடையில் சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சியைத் தடுத்து, உடலை போதிய நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளும். அதற்கு தர்பூசணியை சிறு துண்டுகளாக்கி, அத்துடக் சிறிது நாட்டுசர்க்கரை மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து அரைத்துக் குடியுங்கள். இல்லாவிட்டால், அதை சாலட் போன்று செய்தும் சாப்பிடலாம்.

மாதுளை ஜூஸ்

கோடைக்காலத்தில் தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸில் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைவதைக் காணலாம்.

தண்ணீர்

உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான வழி என்னவன்று கேட்டால், முதலில் பலருக்கும் தண்ணீர் தான் நினைவில் வரும். ஆகவே ஒரு அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் கால்களை ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வர, உடலில் உள்ள அதிகமான வெப்பம் வெளியேறும். மேலும் குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.

எள்

உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க தினமும் இரவில் படுக்கும் முன், 1 டேபிள் ஸ்பூன் எள்ளை சாப்பிட வேண்டும். குறிப்பாக எள்ளில் ஓபியேட்ஸ் உள்ளது மற்றும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்...!!!

summer drinks  - Decrease body heat naturally
💐💐

Popular Posts

Facebook

Blog Archive