பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 29 மார்ச், 2014

கணிதம், விஞ்ஞானம் மற்றும் எந்த பாடங்களையும் கற்றுக்கொள்வதற்கு உதவும் இணையத்தளங்கள்


தற்காலத்தில் மாணவர்களுக்கு அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கு இணையமே முக்கிய சோர்ஸ்ஸாக இருக்கிறது.
ஆன்லைனிலேயே பாடங்களை படித்துமுடிக்கவும் செய்கிறார்கள் சிலர்.

இதேபோல் ஆன்லைனில் கணிதம், விஞ்ஞான பாடங்களையும் மற்றும் ஏனைய பாடங்களையும் கற்பதற்கு உதவி புரிகின்ற இணையத்தளங்களைப்பற்றிய தகவல்கள் இங்கே.

Wolfram Alpha

கணித சிக்கல்களை தீர்ப்பதற்கு உதவுகிறது இந்த தளம்.

எந்த கணிப்பீடாயினும் அதன் விபரங்களை கொடுத்ததும் ஒவ்வொரு படிமுறையாக காட்டுகிறது இந்த தளம்.

Click Skip Ad இணைப்பு  www.wolframalpha.com
Mathaway

algebra, calculus, trigonometry, statistics போன்றவற்றையும் மற்றும் ஏனைய கணித சமன்பாடுகளின் பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது இத்தளம்

Click Skip Ad இணைப்பு  www.mathway.com
Babbel

வேறு மொழிகளை கற்றுக்கொள்வதற்கும் உங்கள் பேச்சு திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் உதவுகிறது இந்த தளம்.Click Skip Ad
www.babbel.com
Dynamic Periodic Table

ஹெமிஸ்ரி பாடங்களை கற்பவர்களுக்கு
Dynamic Periodic Table போன்ற வசதிகளை தருகிறது இந்த தளம்.Click Skip Ad
www.ptable.com

Tutor2u

Economics, Business, Politics, Enterprise, Law, Sociology, History, Religious பாடங்களுக்குரிய டியூட்களை வழங்குகிறது இந்த தளம் Click Skip Ad

www.tutor2u.com

Verbalearn

ஆங்கில மொழித்திறமையை வளர்த்துக்கொள்வதற்கு உதவுகிறது இந்த தளம்.Click Skip Ad

verbalearn.com

பாட்டு கேட்க்க ஒரு நல்ல இணையதளம்



பாட்டு கேட்க்க ஒரு நல்ல இணைய தளம் என்று சொல்வதை விட சிறந்த பழைய பாடல்கள் கேட்க்க சிறந்த தளம் இது

அதிலும் பி பி ஸ்ரீநிவாஸ் எ எம் ராஜா ஜிக்கி போன்றவர்களின் ஓஹோ எந்தன் பேபி முதல் ஆடாத மனமும் ஆடுமே போன்ற பாடல்கள் பாடல்கள் வந்த ஆண்டு வாரியாக பாடகர்கள் வாரியாகா ,படங்கள் வாரியாக என நமக்கு தேவையான வகையில் நல்ல பாடல்கள் கேட்கலாம்


அதிலும் இளையராஜா அவர்களின் பாடல்கள் ஒவ்வொரு ஆண்டு வாரியாக கேட்க்கும் போது இசை மேதையின் இசை உழைப்பை நினைத்தால் பிரமிப்பாக இருக்கு அதிலும் எனக்கு ரொம்ப நாள்களாக தேடிய கரையெல்லாம் செண்பகபூ ,நண்டு ,கன்னித்தீவு ,கரும்பு வில் போன்ற இளையராஜா அவர்களின் பாடல்கள் ஆண்டு வாரியாக கேட்க்க சூப்பர்

மற்றும் நமக்கு பிடித்த பாடல்களை ப்ளே லிஸ்டில் வரிசைபடுத்தி நமக்கு பிடித்த பாடல்கள் மட்டும் எடுத்து நமக்கு தேவையான நேரத்தில் கேட்கலாம்

அதிலும் இந்த இணையத்தில் 1939 தொடங்கி இன்று வரை எல்லா பாடல்களும் கேட்டும் வசதி உள்ளது

இணையதளத்தில் நமக்கு பிடித்த பாடல்கள் எல்லாம் கேட்க சிறந்த தளம் இது
Skip Ad====>> thiraipaadal.com

Mp3 பாடல்களை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள்



நண்பர்கள் சிலர் ஒரு முழு mp3 பாடலில் இருந்து குறிப்பிட்ட வரிகளை மட்டும் வெட்டி எடுத்து பயன்படுத்த விரும்புவார்கள். சில நேரம் குறிப்பிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட சிறுபாடல்களை இணைத்து முழு பாடலாக மாற்ற விரும்புவார்கள். கல்லூரி நிகழ்ச்சிகளில் ஆடல்பாடல்களில் பல பாடல்களை கோர்வையாக ஒளிபரப்பி நாடகம் போடுவார்கள். இந்த நேரத்தில் நமக்கு உதவும் மென்பொருள் தான் Mp3 Split and Joiner.

இந்த மென்பொருளை வைத்து விரும்பிய இடத்தில வெட்டிக்கொள்ளலாம். வெட்டிய சிறிய பாட்டை செல்போன்களில் ரிங்க்டோனாக ( mobile ringtone ) வைத்துக்கொள்ளலாம். விரும்பிய இசைக்கோர்வைகளை ஒன்றாக இணைத்துக்கொள்ளலாம்.

இதில் எளிதான வகையில் விரைவான நேரத்தில் கட் செய்யலாம். கோப்புகளை இழுத்து ( drog and drop )அதன் விண்டோவில் விட்டு விடலாம். மேலும் ஒரே நேரத்தில் பல கோப்புகளை மாற்றும் Batch Splitting வசதியும் உள்ளது.

இது விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயங்குதளங்களிலும் வேலை செய்யும்.தரவிறக்கச்சுட்டி:http://adf.ly/hxc6U 
Click to Skip Add 

வியாழன், 27 மார்ச், 2014

கணிணி முன் உட்கார முன்னர் சில யோசனைகள்..

நாம் கணிப்பொறி முன் சரியாக அமர்ந்து கொள்ள வேண்டும். அப்படி அமர்ந்து கொள்ளாவிட்டால் கழுத்து, இடுப்பு, முதுகு, கைகள் போன்ற இடங்களில் வலி ஏற்படும். ஆகையால் நான் சொல்லுமாறு அமர்ந்து கொள்ளுங்கள். கழுத்து, இடுப்பு, கைகள், தேல்கள் போன்றயிடங்களில் வழி ஏற்பட்டால் உடன் வைத்தியரிடம் ஆலொசனை பெறவும்கணினி மேசையானது 65ல் இருந்து 70 செ.மீ உயரம் இருக்க வேண்டும். நாம் அமர்ந்தபின் நமது உடல் கால் பகுதியில் இருந்து 90டிகிரி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது நன்கு நிமிர்ந்து உட்கார்ந்திருக்க வேண்டும். நமது கண்களுக்கும் திரைக்குமான இடைவெளி 50ல் இருந்து 60 செ.மீக்கு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திரை வடிகட்டி(பில்டர்) பயன்படுத்துதல் நல்லது. 30ல் இருந்து 45 நிமிடத்துக்கு ஒருமுறை நம் பார்வையைத் திரையில் இருந்து அகற்றி தூரத்தில் உள்ள பச்சை மரங்களையோ, கொடிகளையோ காண வேண்டும். குறைந்தது 2முதல் 5 நிமிடத்துக்கு கண்களுக்கு ஓய்வு கொடுத்தபின் மீண்டும் திரையைப் பார்க்கலாம்.






*அதிக விசை கொடுத்து மவுசை பிடிக்காதீர்கள்..

*நேரடி வெளிச்சத்தில் அமர்ந்து பணிபுரிவதை தவிர்க்கவும்..

*தோள்களை இலகுவாக வைத்திருக்கவும், கைமூட்டுக்களை இலகுவாகவும், நேராகவும் வைத்திருக்கவும்.

*மணிக்கட்டுக்களை நீட்டி நேராகவும் மேசைக்கு இணையாகவும் வைக்கவும்.

*உங்கள் பர்வை மட்டத்தில் கொஞ்சம் கீழே இருக்குமாறு திரையை அமைக்கவும்.

*கழுத்தை கொஞ்சம் தாழ்த்தியே வைத்திருக்கவும், தலையை முன்னோக்கி நீட்டி இருக்கக்கூடாது.

*உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையே 60 சென்டி மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

*ஒவ்வொரு அரைமணி அல்லது முக்கால் மணி நேரத்திற்கொரு முறை திரையிலிருந்து பார்வையை விலக்கி ஒரு வெற்று இடத்தை கொஞ்சம் நேரம் பார்க்கவும். அல்லது பச்சை மரங்களைப் பார்க்கவும்.

*முதுகினை எப்பொதும் இருக்கையில் சாய்ந்திருக்குமாறு அமரவும்.

*கால் பாதங்கள் தரையில்படும்படி இருக்கவும்.

*கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றவும்.

*இரண்டு மணி நேரத்திற்குகொரு முறை சிறிது உலாவி வரலாம். வேலையிடத்தில் வேலை பார்ப்பவர்கள் வேறு எதாவது வேலைகளை பார்க்கலாம்.

*திரை : ஆன்டிகிளேர் திரைகள் திரையிலிருந்து வரும் கதிர்கள் நம் கண்களை பாதுகாக்கின்றது

*கீபோர்ட் பாவிக்கும் போது மணிக்கட்டை ஓய்வாக வைத்திருக்கவும். கீபோர்ட் பட்டன்களை மெதுவாக அழுத்தவும். அச்சு தட்டில் தூசிகள் படியாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும்.

*மவுஸ் உள்ளங்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்காதவாறு சிறிய மவுஸ்களை வாங்கவும். ஸ்க்ரோலிங் பட்டன் உள்ள மவுஸ் வாங்குவது சிறந்தது.

*இருக்கை, மேசைகள்: மலிவாக கிடைக்கின்றது என்பதற்காக முறையற்ற மேசை நாற்காலிகளை வாங்காமல் முதுகுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டவைகளை மட்டுமே பார்த்து வாங்கவும்

டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்

கம்ப்யூட்டர்களை செட் செய்திடுகையில் வழக்கமாக முக்கிய டிரைவ் C ஆகவும் மற்றவை அதனைத் தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இணைத்து எடுக்கக் கூடிய பென் டிரைவ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் போது கம்ப்யூட்டரில் உள்ள இயக்கத் தொகுப்பு தானாகவே ஒரு எழுத்துப் பெயரை சூட்டிக் கொண்டு பின் அதனை எடுத்தவுடன் நீக்கி விடுகிறது.ஆனால் A முதல் Z வரை இந்த டிரைவ்களுக்குப் பெயர் சூட்டலாம், அதுவும் நீங்களே சூட்டலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள டிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்நாப் இன் (Disk Management snapin) என்ற சாப்ட்வேர் சாதனம் இந்த வசதியைத் தருகிறது.

உங்களுடைய கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ்களுக்கு A மற்றும் F எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹார்ட் டிரைவின் இயக்கத் தொகுப்பின் செயல் பகுதி இக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ் இல்லை என்றால் A மற்றும் F எழுத்துக்களையும் நீங்கள் விரும்பும் டிரைவிற்குப் பயன்படுத்தலாம். ஆனால் ஏதேனும் ஒரு நாளில் பிளாப்பி டிரைவ் இணைக்கையில் இந்த எழுத்துக்கள் தேவை என்பதால் அவற்றை நீக்கி மற்ற எழுத்துக்களை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டிரைவ் அல்லது அதில் உள்ள ஒரு பிரிவு அல்லது வால்யூம் ஆகியவற்றிற்கு நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை முதல் முதலாக எப்படி அதன் பெயராக அமைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள். முதலில் வழக்கம் போல உங்கள் கம்ப்யூட்டர் பயனாளராக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள்.

1. பின் Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக்கிடவும்.
(குறிப்பு: கண்ட்ரோல் பேனலில் category view என்ற வகைப் பிரிவில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டிருக்கும். எனவே அந்த வகையை முதலில் திறந்து கொள்ள வேண்டும்.)

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. இதில் நீங்கள் எழுத்து அமைத்திட விரும்பும் டிரைவில் அல்லது பிரிவில் ரைட் கிளிக் செய்திடவும். அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. கிடைப்பதில் Add என்பதைக் கிளிக்கிடுக.

5. இப்போது “Assign the following drive letter” என்பதில் கம்ப்யூட்டர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து காட்டும் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந் தால் அதனையே தேர்ந்தெடுக்கவும். இல்லையேல் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

டிரைவ் ஒன்றுக்கு அல்லது அதன் பிரிவிற்கு ஒரு எழுத்து ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மாற்றி, விரும்பும் எழுத்தை அமைப்பது என்று பார்ப்போம்.

1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Change என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. “Assign the following drive letter” என்ற பிரிவில் நீங்கள் விரும்பும் எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

6. எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தவா என்று செய்தி கிடைக்கையில் கவனமாக ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இனி நீங்கள் மாற்றம் செய்த பிரிவு அல்லது டிரைவில் அதற்கான பெயர் எழுத்து வழக்கமாகக் காட்டப்படும் இடங்களில் எல்லாம் தென்படும்.

ஏற்கனவே கொடுத்த எழுத்தை நீக்குவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள படி செயல்படுங்கள்.

1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Remove என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. இந்நிலையில் எழுத்தை நீக்கவா என்ற எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். இப்போது ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடவும். இந்நிலையில் அந்த பகுதிக்கு அளிக்கப்பட்ட பெயர் எழுத்து நீக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு தேவைப்படும் எழுத்தினை உங்கள் டிரைவிற்குக் கொடுத்து பார்க்கலாம்

PDF என்பது என்ன?

இப்போது வரும் பெரும்பாலான மென்நூல்கள்,மென்ப்பொருள் கையேடுகள் PDF கோப்புகளாக வருகிறது.PDF என்பது Portable Document Format என்பதன் சுருக்கம் ஆகும்.இதன் சிறப்பு என்னவென்றால் இந்த கோப்பில் உள்ள வாக்கியங்களை எந்த கணினியிலிருந்து படிக்கமுடியும்.அதற்கு தேவை PDF reader என்ற மென்பொருள் இருந்தால் போதும்.இது இலவசமாகவே கிடைக்கிறது.

PDF -ன் அவசியம் என்ன?நமது கணினியில் தமிழில் ஒரு எழுத்துருவை பயன்படுத்தி ஒரு ஃபைலை உருவாக்குவோம்.அதே ஃபைலை மற்றொரு கணினியில் படிப்பதற்காக திறந்தால் சதுர வடிவமாக எழுத்துக்கள் படிக்க முடியாதவாறு இருக்கும்.
இந்த கணினியில் தகுந்த தமிழ் எழுத்துருவை நிறுவினால் மட்டுமே நம்மால் அந்த கோப்பில் உள்ள வார்த்தைகளை படிக்க முடியும்.இந்த சிக்கலை களைவதற்க்கு தான் PDF பயன்படுகிறது.
உங்கள் ஃபைலை PDF கோப்பாக மாற்றிவிட்டால் எந்த கணினியிலும் திறந்து படிக்கமுடியும்.அது மட்டும்மல்லாமல் எளிதாக ப்ரிண்ட் செய்ய்வும் முடியும்.

அடோப் நிறுவனத்தின் acrobat distiller மென்பொருளை கொண்டு PDF கோப்புகளை உருவாக்க/மாற்ற முடியும்.ஆனால் இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும்.இதுதவிர இலவசமாக கிடைக்க கூடிய PDF மென்பொருள்கள் இணையத்தில் நிறைய உள்ளன.
http://get.adobe.com/uk/reader/
ஓப்பன் ஆபிஸ் PDF கோப்புகளை ஆதரிக்கும்.இதனால் ஓப்பன் ஆபிசில் நாம் உருவாக்கும் கோப்புகளை எளிதாக PDF ஆக மாற்றலாம்.

PDF லிருந்து Wordக்கு மாற்ற கீழ்கண்ட இணையதளத்திலிருந்து இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அனுப்பிய மெயிலைத் திரும்பப் பெற!

undefined
மெயில் "Compose" செய்து, மின்னஞ்சலை அனுப்பிய பிறகு, Mail Send Successfully என்ற செய்தி வரும்.  நீங்கள் இந்த வசதியை activate செய்திருந்தால், மின்னஞ்சல், அனுப்பிய பிறகு, "Your Message has been send, Undo" என்ற இணைப்பு வரும்.  மின்னஞ்சல் திரும்பப் பெறுவதாயின், இந்த இணைப்பைச் சொடுக்கினால் போதும்.

ஜிமெயில், "Undo Send" என்ற ஒரு புதிய வசதியை அளிக்கிறது. அதாவது, நீங்கள் தவறுதலாக அனுப்பிய மெயிலை,  மெயில் பெறுபவர் இன்பாக்ஸிக்குச் செல்லாமலேயே தடுத்திடலாம். 


இந்த சேவையை பயன்படுத்த,  ஜிமெயிலில் உள்நுழைந்து, "Labs" பக்கத்திற்குச் சென்று,  "Undo Send" சேவையைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்தவும்.  (ஜிமெயில் பக்கத்தில், மேலே வலது மூலையில்,  பயனர் பெயர், "Setting" இடையில்,  பச்சை  நிற குடுவை  ஒன்று இருக்கும்.  அதுவே, "Labs" பக்கத்திற்குச் செல்லும் இணைப்பாகும்.)

மின்னஞ்சல்,  பெறுநர் இன்பாக்ஸிக்குச் சென்றுவிட்டால்,  அதை  திரும்பப் பெற இயலாது.

Kaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி



Kaspersky தனது வாடிக்கையாளர்களை 30 நாட்கள் இலவசமாக பரீட்சித்துப்பார்க்க விட்டுள்ளது, இந்த 30 நாட்களும் Kaspersky ஆனது காசு கொடுத்து வாங்குவதை போலவே இயங்கும்,



இந்த முயற்சியின் மூலம் கிடைத்த விடை, நாம் அந்த பரீட்சாத்த மென்பொருளை (Trial), எவளவு நாட்கள் வேண்டுமெண்றாலும்
பாவிக்கலாம்

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது 29 நாட்களுக்கு ஒருமுறை தல 1 நிமிடம் வரை செலவு செய்ய வேண்டும்.

செய்முறை :

*kaspersky இன் எந்த மென்பொருளயும் நீங்கள் வைத்திருக்கலாம், (Kaspersky IS, Kaspersky AV)

1. நீங்கள் பழய அனுமதி வைத்திருந்தால் (KEY FILE) அதை அழித்துவிடுங்கள்
2. Kaspersky ஐ open செய்து Enable Self-Defense ஐ Un-tick செய்யவும்.

Enable Self-Defense ஐ Un-tick செய்யும் முறை

1. Open the kaspersky
2. Go to “Settings” on the right hant top corner
3. you will prompt a box
4. in the box click the “option Button”
5. u can see in the right hand side ” Enable Self-Defens”
6. un-tick that

3. பின்னர் kaspersky ஐ exit செய்யவும்

Kaspersky Trial Resetter v1.8.0.0 Final REZMAN1984
4. kaspersky Trial Resetter v1.8.0 ஐ தள இறக்கம் செய்து உங்கள் கணனியின் முகதிரையில் வைத்துக்கொள்ளவும் (SAVE ON DESKTOP)
5. extract the file (password : kaspersky)
6. in the folder u can find kaspersky resetter.exe
7. run it
8. press “start”

9. ஒரு 30 நொடி (sec) பொறுங்கள்….. உங்களது Kaspersky மறுபடியும் செயற்பட்டு உங்களிடம் Activate செய்ய கேட்கும்…
அப்பொளுது “Activate Trial vertion” என்பதை அளுத்துங்கள்….

உங்களது மென்பொருள் 30 நாட்கள் பாவனக்கு தயாராகுவிடும்…

முக்கிய குறிப்பு :
1. trial resetter ஐ வேலை முடிந்தவுடன் அழித்துவிடவும் (delete the restetter but don’t delete the .rar file)
2. உங்களது Kaspersky trail இல் இயங்குகிறது எண்று சொல்லும்.. அதை நீங்கள் “Hide Message” இல் மறைத்து விடலாம்

29 நாட்களுக்கு ஒருமுறை இதை செய்து கொள்ளவும்…. (29 நாள் தான் என்று கட்டாயம் இல்லை, நீங்கள் விரும்பும் நேரத்திலும்
செய்து கொள்ளலாம்)

இது Windows XP, Windos 7 Home Premium, என்பவற்றில் பரீட்சித்து பார்க்கப்பட்டது.

முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க

1. முதலில் http://VisitsToMoney.com/index.php?refId=349225 இந்த லிங்க் க்கு சென்று UserName, Password, Email ID கொடுத்து New Account ஐ Create செய்யுங்கள். 2. உங்களுக்கு அதில் கிடைக்கும் லிங்க் இனை உங்கள் நண்பர்களுக்கு கொடுத்து New Account open பண்ண சொல்லவும். Note...! new Account Open பண்ணினால் உங்களுக்கு 4$ கிடைக்கும். உங்கள் லிங்க் இனை பயன்பத்தி உங்கள் நண்பர்கள் New Account Open பண்ணினால் ஒவ்வொரு நண்பருக்கும் 0.5$ உங்களுக்கு கிடைக்கும். மொத்தமாக 40$ கிடைத்த பிறகு PayPal, Liberty Reserve, Payza, Cheque, Western Union, Money Gram போன்றவற்றில் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். VisitsToMoney.com Earn Money easily by promoting a link - 0.5$ per referral link visit visitstomoney.com VisitsToMoney.com is a leading online referral link advertising company offering high rates referral links advertisement. Earn Money by promoting your refe Id: http://VisitsToMoney.com/index.php?refId=349225

புதன், 26 மார்ச், 2014

Convertor எந்த வகை வீடியோவையும் எந்த வகைக்கும் எளிதாக மாற்றலாம்

வீடியோக்கள் பல வகையில் இணையத்தில் கிடக்கின்றன இதில் நமக்கு தேவையான வீடியோக்களை நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்கிறோம். ஒரு சிலவகையான வீடியோக்கள் நம் கணினியில் இயங்காத பார்மட்டில் இருக்கும் மற்றும் இந்த வீடியோக்களை நம் மொபைல் போனுக்கு காப்பி செய்ய நினைத்தாலோ இந்த வகை வீடியோக்களை நாம் வேறு பார்மட்டில் மாற்ற நினைப்போம்.
இதை வசதியை தர இணையத்தில் நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் Hamster Free Vedio Convertor என்ற மென்பொருள் சிறப்பாக உள்ளது.
மென்பொருளின் பயன்கள்:
  • இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
  • இதில் எந்த வீடியோவையும் ipod,ipad, Iphone, PS3, PSP, Black Berry, Xbox, zune, Apple TV, iRiver இப்படி 200 வகையான சாதனங்களில் உபயோகிக்கும் படி மாற்றி கொள்ளலாம்.
  • எந்த வீடியோவையும் 3GP, MP3, MP4, AVI, DVD, WMV, DIVIX, MPEG, FLV, M2TS இப்படி எந்த வகை பார்மட்களிலும் எளிதாக மாற்றி கொள்ளலாம்.
  • வீடியோவில் வுள்ள பாடலையோ அல்லது வேறு ஏதேனும் ஆடியோவையோ தனியாக பிரித்து கொள்ளலாம்.
  • உபயோகிப்பதற்கு மிகவும் சுலபம்.
  • WINDOWS7/ VISTA / XP - க்கு உகந்தது.
  • இந்த மென்பொருளை உங்கள் விருப்பம் போல் தீம் மாற்றி அழகாக்கி கொள்ளலாம்.
  • 40 வகையான மொழிகளுக்கு உகந்தது.
உபயோக்கிக்கும் முறை:
  • கீழே உள்ள DOWNLOAD பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு வரும் ZIP பைலை EXTRACT செய்து உங்கள் கணினியில் Hamster vedio convertor மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் முதல் படியில் உள்ள Add file என்பதில் நீங்கள் கன்வெர்ட் செய்ய வேண்டிய வீடியோ பைலை ட்ராக் செய்தோ அல்லது அந்த கட்டத்தில் க்ளிக் செய்தோ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து Edit க்ளிக் செய்து கொண்டு அங்கு நீங்கள் மாற்ற வேண்டிய பார்மட்டை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • இந்த படியில் நீங்கள் உங்கள் வீடியோவின் height width மற்றும் quality போன்றவைகளை உங்கள் விருப்பம் போல் மாற்றி கொள்ளலாம்.
  • முடிவில் நீங்கள் க்ளிக் செய்ய வேண்டியது Convert பட்டனை. இந்த பட்டனை அழுத்தியவுடன் உங்கள் வீடியோவின் அளவை பொருத்து உங்கள் வீடியோ கான்வர்ட் ஆகி வரும்.
  • இது போன்று உங்களுக்கு தேவையான வீடியோக்களை தேவையான வடிவில் மாற்றி கொள்ளலாம்.
  • இதில் உள்ள செட்டிங்க்ஸ் க்ளிக் செய்து உங்கள் மொழி மற்றும் மென்பொருளின் நிறத்தை மாற்றி கொள்ளலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்.



Windows 7 Logon Screen Change

விண்டோஸில் லாகின் ஸ்கிரீன் பேக்ரவுண்டை மாற்ற.!!


விண்டோஸ் பயன்படுத்தும் அனைவரும் பார்த்திருப்போம் அதில் லாகான் செய்யும்போது தோன்றும் நீல நிற புகைப்படத்தை மாற்ற முடியாது. எப்பொழுதும் ஒரே மாதிரி படம் இருப்பதால் அலுப்பு தட்டுகிறது இல்லையா? எனவே இன்று விண்டோஸ் லாகான் ஸ்கிரீன் பின்புலத்தில் உள்ள புகைப்படத்தை நம் இஷ்டத்திற்கு மாற்றி அமைப்பதை பற்றி பார்க்கப்போகிறோம்,இதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன.

1)Logon Studio
இந்த மென்பொருளானது இலவச மென்பொருள்தான் இதில் முதலிலேயே நிறைய பேக்ரவுண்டு படங்களுடனே வருகிறது, நாம் நமக்கு பிடித்த படங்களையும் இதில் இணைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிய பின்னர் இதனை திறந்து உங்களுக்கு தேவையான படத்தை தேர்ந்தெடுத்து அப்ளை என்பதை க்ளிக் செய்யவும்.உங்களின் லாகான் ஸ்கிரீன் மாறிவிடும்.


2)Windows 7 Logon Screen Rotator
இந்த மென்பொருளில் நீங்கள் ஒவ்வொரு முறை லாகின் செய்யும்போதும்
 தானாகவே படங்கள் மாறும்படி செய்யலாம்.இதனை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவத் தேவையில்லை... இந்த மென்பொருளை தரவிறக்கி அந்த பேக்கேஜை Unzip செய்து அதில் உள்ள .exe கோப்பின் மீது க்ளிக் செய்யுங்கள்.




தோன்றும் விண்டோவில் உங்களுக்கு பிடித்த படங்களை தேர்வு செய்த பிறகு
Enable And Exit என்பதை க்ளிக் செய்யுங்கள். நீங்கள் அடுத்தமுறை லாகின் செய்யும்போது உங்களுக்கு வேறு பேக்ரவுண்டுகள் கிடைக்கும்.

3) Windows 7 Logon Screen Change
இதுவும் மேலே உள்ளதை போன்ற லாகின் ஸ்கிரீன் மாற்றும் மற்றொரு மென்பொருள், இதனை தரவிறக்கி உங்களுக்கு தேவையான படத்தை செலக்ட் செய்து லாகான் ஸ்கிரீனாக பயன்படுத்துங்கள்...


Backup and Restore (விண்டோஸ் 7 பேக் அப் )


நாம் கம்ப்யூட்டரில் அமைத்திடும் டேட்டா பைல்களை பாதுகாத்து பதிப்பது அவற்றைக் காப்பாற்றும் சிறந்த வேலை ஆகும். இதற்கெனவே, விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு தனி வசதியினை அளித்துள்ளது. இதனை Backup and Restore என அழைக்கின்றனர். இந்த வசதியினைப் பயன்படுத்துவது குறித்துக் காணலாம்.

முதலில் சிஸ்டத்தில் உள்ள இந்த Backup and Restore வசதியினை இயக்க வேண்டும். இதனை Control Panel பகுதியில் System and Security என்பதைக் கிளிக் செய்து பெறலாம். Backup and Restore என இந்த வசதி தரப்பட்டிருக்கும்.

இந்த வசதியினை இதற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்த வில்லை எனில், ‘Backup’ என்பதன் கீழாக ‘Windows Backup has not been set up’ என்ற ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தியின் வலது புறமாக உள்ள Set up backup என்ற லிங்க்கின் மீது கிளிக் செய்திட வேண்டும்.

இந்த புரோகிராம் தொடங்கியவுடன், உங்கள் பேக் அப் பைல்களை எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டும் என்ற ஆப்ஷன் கேட்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள முதன்மை ஹார்ட் ட்ரைவினை பேக் அப் ட்ரைவாக தேர்ந்தெடுக்க, விண்டோஸ் சிஸ்டம் இடம் தராது. எக்ஸ்டர்னல் ட்ரைவ் ஒன்றினை கம்ப்யூட்டரில் இணைத்து Refresh என்பதில் கிளிக் செய்திடவும்.

இந்த வகையில் பேக் அப் பைல்கள் பதியப்பட வேண்டிய ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து செட் செய்த பின்னர், எந்த பைல்களை பேக் அப் செய்திட வேண்டும் என கம்ப்யூட்டர் உங்களைக் கேட்கும். நீங்கள் எதனையும் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை எனில், விண்டோஸ் தானாக, ஹார்ட் ட்ரைவின் இமேஜ் பைல் ஒன்றை பேக் அப் பைலாக உருவாக்கும். அல்லது, இதற்குப் பதிலாக, Let me choose என்ற பட்டனில் கிளிக் செய்து, நீங்கள் பேக் அப் செய்திட விரும்பும் பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

எந்த ட்ரைவில் பதிய வேண்டும் என்பதனையும், எந்த வகை பைல்களை பேக் அப் செய்திட வேண்டும் என்பதனை யும் தேர்ந்தெடுத்த பின்னர், சிஸ்டம் உங்களுக்கு பேக் அப் ஆக இருக்கும் பைல்களின் தொகுப்பு திரை ஒன்றைக் காட்டி உறுதி செய்திட கேட்கும். பேக் அப் செயல்பாடு தொடங்கும் முன்னர், விண்டோஸ் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள தான் அமைத்துள்ள கால நேரத்தினைக் காட்டும்.

அந்த நேரத்தில் கம்ப்யூட்டர் இயக்க நிலையில் இருப்பதனை உறுதி செய்திட இந்த கேள்வி கேட்கப்படும். இதில் மாற்றம் தேவை என நீங்கள் கருதினால், Change schedule என்பதில் கிளிக் செய்து, உங்களுக்கு வசதியான நேரத்தினை அமைக்கவும். இறுதியாக Save settings கிளிக் செய்து பேக் அப் செயல்பாட்டினை இயக்கவும்.

முதல்முதலாக பேக் அப் எடுக்கையில், சிறிது கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதனை அடுத்து எடுக்கப்படும் பேக் அப் செயல்பாட்டிற்குக் குறைந்த அளவிலேயே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். ஏனென்றால், அடுத்தடுத்து பேக் அப் எடுக்கப்படுகையில், மாற்றம் செய்யப்பட்ட பைல்களில் மட்டுமே பேக் அப் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே பேக் அப் எடுக்கப்பட்ட பைல்களுடன் வைக்கப்படும்.


பேக் அப்பிலிருந்து பைல்களை மீட்டல்:

பேக் அப் செய்யப்பட்ட கோப்பிலிருந்து, நம் பைல்களை விரித்து எடுப்பது மிக மிக எளிதான ஒன்றாகும். முதலில், ஏற்கனவே கூறியபடி, Backup and Restore என்ற செயல்பாட்டினை இயக்கவும். இப்போது அனைத்து பைல்களையும் மீட்க வேண்டுமா, அல்லது அழிக்கப்பட்ட, கெட்டுப் போன பைல்கள் மட்டும் மீட்கப்பட வேண்டுமா என்பதனை முடிவு செய்திட வேண்டும்.

அனைத்து பைல்களையும் மீட்க, Restore my files என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Browse for folders என கிளிக் செய்திடவும். அடுத்து இடது பக்கம், உங்கள் பேக் அப் பைலுக்குக் கொடுத்த பெயருடன் உள்ள போல்டரைக் காணவும். அதில் கிளிக் செய்து, பின்னர் Add folder என்பதில் கிளிக் செய்திடவும்.

இந்த போல்டர் இணைக்கப்பட்ட பின்னர், Next என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு, நீங்கள் மீட்கும் பைல்கள், அவை முன்பு இருந்த இடத்தில் பதியப்பட வேண்டுமா அல்லது புதிய இடத்தில் பதியப்பட வேண்டுமா என்பதனைக் கம்ப்யூட்டருக்குச் சொல்ல வேண்டும். இதன் பின்னர், Restore என்பதில் கிளிக் செய்தால், நீங்கள் தேர்ந்தெடுத்தபடி பைல்கள் மீட்கப்படும்.

குறிப்பிட்ட பைல்களை மட்டும் மீட்க வேண்டும் எனில், Restore my files என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Browse for files என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது உங்களின் பேக் அப் பைல் போல்டருக்குச் சென்று, நீங்கள் மீட்க விரும்பும் பைலைக் கிளிக் செய்திடவும். இங்கேயும், இந்த பைல்களை, அவை இருந்த பழைய இடத்தில் வைத்திடவா, அல்லது புதிய இடத்தில் வைத்திடவா என்ற கேள்வியினை உங்களிடம் கம்ப்யூட்டர் கேட்கும். இதனை முடிவு செய்து காட்டிய பின்னர், Restore என்பதில் கிளிக் செய்திட, பைல்கள் மீட்கப்படும்.


நீங்கள் மீட்க விரும்பும் பைலின் பெயர் உங்கள் நினைவில் இல்லை எனில், Restore my files கிளிக் செய்த பின்னர்,சர்ச் பட்டனைப் பயன்படுத்தி பைல்களைக் கண்டறியவும். சர்ச் முடிவுகளின் பட்டியலைப் பயன்படுத்தி, நீங்கள் மீட்க விரும்பும் பைல்களைத் தேர்ந்தெடுத்துக் காட்டவும். இவற்றை நீங்கள் மீட்க விரும்பும் பைல்களின் பட்டியலில் இணைக்கவும். பின் மீண்டும் Restore கிளிக் செய்து மீட்கவும்.

செவ்வாய், 25 மார்ச், 2014

ஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க...


இன்று அதிகமானோரால் உபயோகப்படுத்தப்படும் தொலைபேசி ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்ட தொலைபேசிகள் இவை பல வேளைகளில் வேகம் குறைவாக அல்லது குறைந்து செல்ல வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன . சில தேவை அற்ற கோப்புக்கள் சேமிக்க படுவதன் காரணமாக இவ்வாறு ஏற்பட்ட காரணம் ஆகின்றது

இவ்வாறு வேகம் குறைவாக உள்ள தொலைபேசியை எவ்வாறு வேகத்தினை அதிகரிப்பது என்பதே இந்த பதிவின் நோக்கம். கீழே ஆன்ட்ராய்ட் தொலைபேசியை அறுவைசிகிச்சை செய்ய உதவும் சில மென்பொருள்கள் தரப்பட்டுள்ளன அவற்ரை உங்கள் தொலைபேசியில் தரவிறக்கி உங்கள் தொலைபேசி சுத்தம் செய்வதன் மூலம் புதிய தொலைபேசி போன்று உங்கள் தொலைபேசி வேகத்தை மாற்றலாம் .

நிச்சயம் இணைய வேகத்தில் கூடுதல் வேகம் வந்திருக்கும்.

Startup Manager (Free)
Size : 879K
Price : Free

Download:
https://play.google.com/store/apps/details?id=imoblife.startupmanager

Clean Master
Price : Free
Size : 2.1 MB

Download:
https://play.google.com/store/apps/details?id=com.cleanmaster.mguard

Android Booster FREE
Price : Free
Size : 3.9 MB

Download
https://play.google.com/store/apps/details?id=com.netqin.mobileguard

Advanced Task Manager
Price : Free
Size : Varies With Device

Download
https://play.google.com/store/apps/details?id=mobi.infolife.taskmanager

App cache Cleaner
Price : Free
Size : Varies with device

Download
https://play.google.com/store/apps/details?id=mobi.infolife.cache

ஆன்ட்ராய்ட் பாவனையாலர்கலான நாம் இதை நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியது நமது கடமை எனவே பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

Like our Page:
https://www.facebook.com/arindhukolvom
Photo: ஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க...

இன்று அதிகமானோரால் உபயோகப்படுத்தப்படும் தொலைபேசி ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்ட தொலைபேசிகள் இவை பல வேளைகளில் வேகம் குறைவாக அல்லது குறைந்து செல்ல வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன . சில தேவை அற்ற கோப்புக்கள் சேமிக்க படுவதன் காரணமாக இவ்வாறு ஏற்பட்ட காரணம் ஆகின்றது

இவ்வாறு வேகம் குறைவாக உள்ள தொலைபேசியை எவ்வாறு வேகத்தினை அதிகரிப்பது என்பதே இந்த பதிவின் நோக்கம். கீழே ஆன்ட்ராய்ட் தொலைபேசியை அறுவைசிகிச்சை செய்ய உதவும் சில மென்பொருள்கள் தரப்பட்டுள்ளன அவற்ரை உங்கள் தொலைபேசியில் தரவிறக்கி உங்கள் தொலைபேசி சுத்தம் செய்வதன் மூலம் புதிய தொலைபேசி போன்று உங்கள் தொலைபேசி வேகத்தை மாற்றலாம் .

நிச்சயம் இணைய வேகத்தில் கூடுதல் வேகம் வந்திருக்கும்.

Startup Manager (Free)
Size : 879K
Price : Free

Download:
https://play.google.com/store/apps/details?id=imoblife.startupmanager

Clean Master
Price : Free
Size : 2.1 MB

Download:
https://play.google.com/store/apps/details?id=com.cleanmaster.mguard

Android Booster FREE
Price : Free
Size : 3.9 MB

Download
https://play.google.com/store/apps/details?id=com.netqin.mobileguard

Advanced Task Manager
Price : Free
Size : Varies With Device

Download
https://play.google.com/store/apps/details?id=mobi.infolife.taskmanager

App cache Cleaner
Price : Free
Size : Varies with device

Download
https://play.google.com/store/apps/details?id=mobi.infolife.cache

ஆன்ட்ராய்ட் பாவனையாலர்கலான நாம் இதை நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியது நமது கடமை எனவே பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

Like our Page:
https://www.facebook.com/arindhukolvom

Popular Posts

Facebook

Blog Archive