பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 16 டிசம்பர், 2014

HTML Tutorial 8-ஒரு HTML கோப்பு


இப்பதிவில் ஒரு HTML நிரலை எவ்வாறு உருவாக்குவது? அதை எப்படி 
 
சேமிப்பது? சேமித்த கோப்பை எப்படி திறந்து பார்ப்பது? என்பதைப் பற்றிப் 
 
பார்ப்போம். 

ஒரு HTML PROGRAMME எழுதலாம் வாங்க..!!

உங்கள் கணினியில் , 

Start --> Programs-->Notepad என்னும் கட்டளை மூலம் Notepad ஐத் திறக்கவும்.
 
கீழிருக்கும் HTML நிரல் வரிகளை நோட்பேட்டில் உள்ளிடவும்.

<html>
<head>
<title>Welcome to webpage</title>
</head>
<body>
Hi Friends! this is my first webpage
</body>
</html>

அனைத்தையும் தவறில்லாமல் தட்டச்சு செய்த பிறகு Menu bar-ல் File 
 
என்பதை கிளிக் செய்யவும்.

கீழிவிரியும் மெனுவில் Save என்பதை கிளிக் செய்தால் Save As என்ற 
 
உரையாடல் பெட்டித் தோன்றும்.

அதில் தங்களுக்கு விருப்பமான பெயரை தட்டச்சிட்டு .html என்னும் 
 
விரிவுடன் சேமிக்கவும்.

நான் mypage.html எனப் பெயரிட்டு .html விரிவுடன் சேமித்திருக்கிறேன்.இங்கு 
 
.html என்பதுதான் இது HTML கோப்பு என்பதை நிர்ணயிக்கிறது. இது மிகவும் 
 
முக்கியமான ஒன்றாகும். 

 சேமித்த HTML கோப்பை  திறப்பது எப்படி ?

உங்கள் இன்டர்நெட் உலவியைத் திறக்கவும். 
  • அதில் File ==> Open என்பதை கிளிக் செய்யவும்.
  • உரையாடல் பெட்டி ஒன்று திரையில் தோன்றும். 
  • அதில் Open என்ற பெட்டியில் நீங்கள் சேமித்த கோப்பின் பெயரைக் கொடுத்து Browse என்பதைச் சொடுக்குங்கள். 

அதில் நீங்கள் உள்ளிட்ட பெயருடன் கூடிய html கோப்பு இன்டர்நெட் 
 
எக்ஸ்புளோரர்  அல்லது Firefox, Google chrome (நீங்கள் எந்த உலவியைப் 
 
பயன்படுத்துகிறீர்களோ) அந்த ஐகானுடன் இருக்கும்.

அக்கோப்பைத் தேர்வு செய்து Open என்பதை கிளிக் செய்யவும். இப்போது  
 
Internet உலவியில் உங்கள் வலைப்பக்கமானது திறந்திருக்கும்.

இதில் நீங்கள் எழுதிய HTML குறிஒட்டுகள் தெரியாது. குறிஒட்டுக்குள் என்ன 
 
எழுதினீர்களோ அதுமட்டுமே வலைதளத்தில் தெரியும்.

நான் எழுதி <title></title> குறிஒட்டிற்குள் எழுதிய Welcome to webpage என்பது தலைப்பு பகுதியிலும், <body></body> என்னும் குறிஒட்டிற்குள் எழுதிய வாக்கியம் வலைப்பக்கத்திலும் தெரிவதைக் கவனியுங்கள்..

இவ்வாறு ஒரு முழு HTML நிரல் வரிகளை எழுதி மேற்குறிப்பிட்ட வகையில் 
 
.html என்னும் விரிவுடன் சேமித்து, அதை வலைஉலவியில் திறந்து 
 
சோதனை செய்துகொள்ளலாம்.


தொடர்ச்சியாக ஒரு HTML ஆவணம் தயாரிக்கும்போது முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை:


1. HTML ஆவணம் <HTML> மற்றும் </HTML> என்னும் குறி ஒட்டுகளுக்கு இடையில் இருக்க வேண்டும்.

2. <TITLE> மற்றும் </TITLE> என்னும் குறி ஒட்டுகள் <HEAD> மற்றும் </HEAD> என்னும் குறிஒட்டுக்குள் இடையில் இருக்க வேண்டும்.

3. <BODY> மற்றும் </BODY> என்னும் குறி ஒட்டுகள் </HEAD> என்னும் குறிஒட்டிற்குப் பின்னர்தான் எழுதப்பட வேண்டும்.

4. மற்ற அனைத்து குறிஒட்டுகளும் <BODY> மற்றும் </BODY> என்னும் குறிஒட்டுகளுக்கு இடையில் இருக்க வேண்டும்.

5. அனைத்து HTML ஆவணங்களும் ".htm" அல்லது ".html" என்னும் விரிவுடன்(Extension) இருக்க வேண்டும். 

6. <> என்ற குறியீடுகளுக்கு இடையில் தொடக்க குறிஒட்டு(Tag) ஆகும்.

7. </ > என்ற குறியீடுகளுக்கு இடையில் முடிவுக் குறிஒட்டு(Tag) ஆகும்.

HTML Tutorial 7-HTML கட்டமைப்பு (HTML Structure)

undefined
HTML Tutorial 7

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இப்பதிவில் ஒரு HTML ஆவணத்தின் முழு கட்டமைப்பு எப்படி இருக்கும் 
 
என்பதைப் பார்க்க இருக்கிறோம்.

ஒவ்வொரு HTML ஆவணமும் என்னும் குறி ஒட்டுடன் தொடங்க வேண்டும். 
 
இந்தக் குறி ஒட்டு, இதன் பின்னர் வருவது HTML ஆவணம் என்பதை 
 
தெரிவிக்கிறது. ஒரு HTML ஆவணம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. 


1. தலைப்பகுதி (Head Section) 2. உடல் பகுதி (Body Section)


1. Head section - தலைப்பகுதி



தலைப்பகுதி ஆவணத்தின் தலைப்பைப் குறிப்பதற்குப் பயன்படுகிறது இது 
 
என்னும் குறி ஒட்டுடன் தொடங்குகிறது. இதில் என்னும் முடிவுக் குறி 
 
ஒட்டுடன் முடிவடைகிறது. தலைப்பகுதியை முடிக்க முடிவுக் 
 
குறிஒட்டைப்(Tag) பயன்படுத்த வேண்டும். 


2. உடல் பகுதி (Body Section)


உடல் பகுதியில் என்னும் குறி ஒட்டைத் தொடர்ந்து ஆவணத்தின் உரைப் 
 
பகுதி இருக்கும். இது என்னும் முடிவுக் குறிஒட்டுடன் முடிவடைகிறது. 
 
ஆவணத்தின் உடல் பகுதி பல HTML குறி ஒட்டுக்களைக் கொண்டிருக்கும். சில 
 
குறி ஒட்டுகள் உரையின் வரிகளை வடிவூட்டல் செய்வதற்கு 
 
பயன்படுத்தப்படுகின்றன. சில குறிஒட்டுகள்(Tags)படங்கள், அட்டவணைகள், 
 
மற்றும் படிவங்களைச் சேர்ப்பதற்கும், இணைப்புகளை உருவாக்குவதற்கும் 
 
பயன்படுகின்றன.



ஆவணத்தின் இறுதியிலுள்ள என்னும் முடிவுக் குறி ஒட்டு HTML ஆவணம் முடிவடைகிறது என்பதைக் குறிக்கிறது. 



ஒரு HTML ஆவணத்தின் அடிப்படை கட்டமைப்பு கீழ்க்கண்டவாறு இருக்கும்.



<HTML>

<HEAD>
<TITLE>....</TITLE>
</HEAD>
<BODY>
</BODY>
</HTML>



இந்த HTML ஆவணத்தை இரண்டு பகுதிகளாப் பிரிக்கலாம். ஒன்று Header 
 
Section, இரண்டு Body Section.. இவற்றிற்கான விளக்கங்கள் மேலே குறிப்பிட்டுள்ளேன். 



இனி HTML ல் உள்ள ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றியும், அதன் 
 
முக்கியத்துவங்களைப் பற்றியும், அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது 
 
என்பதைப் பற்றியும் காண்போம். 

நன்றி நண்பர்களே...!!
 
 

வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி

டெக்ஸ்ட் மெசேஜ்கள் பறிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு முன்னணி அப்ளிகேஷன் இது. இதைப்போன்ற சேவையை வழங்கும் kakao talk, viber அப்ளிகேஷன்களை விட whatsapp செயலிதான் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ மாந்தோறும் 46 கோடி இதனைப் பயன்டுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப் செயலியின் அதிவே வளர்ச்சியால் பேஸ்புக் அந்த நிறுவனத்தை வாங்கி தன்னுடன் இணைத்துக்கொண்டது. இது பற்றி கடந்த பதிவொன்றில் பார்த்தோதற்பொழுது அந்த செயலியில் கூடுதலாக வாய்ஸ் காலிங் வசதியும் கொடுக்கபட உள்ளது.
voice call option in whatsapp
voice call option in whatsapp

Voice Calling வசதி தரப்பட்டால் மொபைல் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கடும்.

வாய்ஸ் கால் செய்ய இணைய இணைப்பு மட்டும் இருந்தாலே போதுமானது. ஒரு போனிலிருந்து மற்றொரு போனுக்கு பேசலாம். இதற்கு போன் பில் எதுவும் கட்டவேண்டியதில்லை. வழக்கமாக இணையப்பயன்பாட்டுக்கு ஆகும் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
டெக்ஸ்ட் மெசேஜ்களை இலவசமாக பறிமாறிக்கொள்வதைப் போல, இனி இந்த வாட்ஸ்அப் செயலிமூலம் குரல் அழைப்புகளை ஏற்படுத்தி, உலக நண்பர்களுடன் பேச முடியும்.

இந்த வசதி எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்சிலோனாவில் நடைபெற்ற பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கில் வாட்ஸ் அப் தலைமை நிர்வாகி ஜேன் கௌம் இதனைத் தெரிவித்தார்.
முதலில் கூகுள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மொபைல் சிஸ்டங்களில் இது கிடைக்கும். இதனைத் தொடர்ந்து விண்டோஸ் போன் மற்றும் பிளாக்பெரி இயக்கங்களில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்.

இந்த வசதியின் மூலம் வாட்ஸ் அப் செயலியின் வாடிக்கையாளர்கள் இருமடங்கு உயரும் என எதிர்பார்க்கபடுகிறது.

WhatsApp will add free voice-call services for its 450 million customers later this year, laying down a new challenge to telecom network operators just days after Facebook Inc scooped it up for $19 billion.
The text-based messaging service aims to let users make calls by the second quarter, expanding its appeal to help it hit a billion users, WhatsApp CEO Jan Koum said at the Mobile World Congress in Barcelona on Monday.
Buying WhatsApp has cemented Facebook’s involvement in messaging, which for many people is their earliest experience with the mobile Internet. Adding voice services moves the social network into another core function on a smartphone.

திங்கள், 15 டிசம்பர், 2014

HTML Tutorial 6-HTML பண்புகள் (Attributes)

HTML Tutorial 6

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HTML -ல் முக்கியமானது பண்புகள்(Attributes). இந்த பண்புகள்தான் மிக 
 
முக்கியப் பணிகளில் ஒன்றான வலைப்பக்கத்தை அழகூட்ட, 
 
எழுத்துருக்களை(வெவ்வெறு எழுத்துருக்களாக) மாற்றி காண்பிக்க,  
 
வண்ணங்களை மாற்ற பலவகைகளில் பயன்படப்போகிறது. இந்த  
 
பண்புகளைப்(Attributes) பற்றி இப்பதிவின் ஊடாக காண்போம்.

 சாதாரணமாக பண்புகள் என்றால் என்ன? என்பதைப் பற்றி நமக்குத் தெரியும். 
 
ஒவ்வொரு பொருளுக்கும் பண்புகள் என்பது உண்டு. அதாவது சக்கரை 
 
இனிக்கும். இங்கு இனிப்பு சர்க்கரையின் பண்பு..



அதுபோன்றே குறிஒட்டுகளின் (Tags)  தன்மைகள் விளக்கிக்கூற இந்த 
 
பண்புகளைப் பயன்படுத்தலாம்.

HTML குறிஒட்டுகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளை சேர்க்க முடியும்.

ஒரு குறிஒட்டில்(டேகில்) பண்புகளைச் சேர்ப்பதன் மூலம் அக்குறிஒட்டு 
 
எவ்வாறு தெரிய வேண்டும் அல்லது செயல்பட வேண்டும் என்பதற்கான 
 
கூடுதல் தகவல்களை உலவிக்குத் தெரிவிக்க முடியும். பண்புகளின் பெயர் 
 
மற்றும் அதன் மதிப்பை சமக்குறியீட்டுடன் (=) கொடுக்க வேண்டும். அதாவது 
 
இவ்வாறு இருக்க வேண்டும்.

<BODY BGCOLOR="green">

இதில் BODY என்னும் குறிஒட்டு(TAG) BGCOLOR எனும் பண்புடனும், green எனும் மதிப்புடனும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனுடைய பொதுவான வடிவம்(syntax) இவ்வாறு இருக்கும்.

<tag_name attribute 1="value" attribute 2="value"...>

HTML Tutorial 5-HTML உறுப்புகள்(Elements)

HTML Tutorial 5

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இப்பதிவில் நாம்  பார்க்க இருப்பது உறுப்பு என்று சொல்லப்படுகிற Element என்பதைப் பற்றி..

ஒரு உறுப்பு என்பது தொடக்க குறிஒட்டு,  மற்றும் இறுதி குறிஒட்டு , (Starting Tag, End Tag) இரண்டும் சேர்ந்ததுதான் உறுப்பு என்று சொல்லப்படுகிறது.

< > - இது ஒரு டேக்(குறிஒட்டு) - இதற்கு ஆரம்ப குறிஒட்டு (Starting Tag) என்று பெயர்.
</>- இது ஒரு டேக்(குறிஒட்டு)- இதற்கு முடிவு குறிஒட்டு (End Tag) என்று பெயர்.

இதை இரண்டையும் ஒரு சேர எழுதி, இடையில் என்ன பொருள் இருக்க வேண்டுமோ அதை எழுதினால் இதற்கு பெயர் உறுப்பு.

<>பொருள்</>  - இதற்கு பெயர் உறுப்பு (Elements).

ஒரு முழு  HTML உறுப்பானது இவ்வாறு அமையும்.
<b>வணக்கம்</b>

இப்போது உறுப்பு(Elements) என்றால் என்ன என்பதை நாம் நன்றாக தெரிந்துவிட்டோம். அதாவது ஒரு ஆரம்ப குறிஒட்டிற்கும் , முடிவு குறிஒட்டிற்கும் இடையில் ஏதாவது ஒன்றை (பொருள்) எழுதி முடித்திருந்தால் அதுதான் உறுப்பு என்பது. மேலும் ஒரு உதாரணம்

<I>வணக்கம்</I>
இதுவும் ஒரு உறுப்பு(Elements) என அழைக்கலாம்.
                          நன்றி நண்பர்களே..!!
Arunprasath....

சனி, 13 டிசம்பர், 2014

மறந்துபோன விண்டோஸ்-7 கடவுச்சொல்லை மாற்றியமைக்க

நான்கு நாட்களுக்கு முன் வாசகர் ஒருவர் மறந்துபோன கடவுச்சொல்லை மாற்றியமைப்பு எவ்வாறு என பின்னூட்டம் மூலமாக கேட்டிருந்தார், இதோ அதற்கான பதில்.

பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்பர். தீடிரென கடவுச்சொல் தவறு என்று பிழைச்செய்தி வரும், நாம் எவ்வளவு தான் முட்டி மோதினாலும் கணினியை திறக்க முடியாது.
அதுபோன்ற சூழ்நிலையில் இதற்கு வழி என்னதான் என்று பார்த்தால் கணினியை பற்றி அறியாதவர்கள் இயங்குதளத்தை நிறுவுதல் ஒன்றே வழி என்று கூறுவார்கள். ஆனால் கணினியில் எந்தவித மாற்றமும் செய்யமல் கடவுச்சொல்லை மாற்றியமைக்க எளிமையான வழி இருக்கிறது.




முதலில் நம்முடைய கணினியில் என்ன இயங்குதளம் நிறுவியுள்ளோமோ அந்த இயங்குதளத்தை சீடி/டிவிடி யிலோ அல்லது பெண்ட்ரைவிலோ
பூட் செய்து கொள்ளவும். பின் பூட் செய்த சீடி/டிவிடி அல்லது பெண்ட்ரைவினை கணினியில் இட்டு, பயாஸ் சென்று First Booting Device யை சீடி/டிவிடி அல்லது பெண்ட் இதில் ஒன்றில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து பின் பயாஸினை சேமித்து பின் அதிலிருந்து பூட் செய்யவும். கணினி பூட் ஆனவுடன் இயங்குதளத்தை நிறுவுவதற்கான தொடக்க விண்டோ தோன்றும் அதில் Repair your computer என்பதை கிளிக் செய்யவும். 



உங்கள் கணினி உள்ள இயங்குதளங்கள் பட்டியலிடப்படும். அதில் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செய்து Next என்ற பொத்தானை அழுத்தவும். இதில் நீங்கள் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற நினைக்கிறீர்களோ அது எந்த கோலனில் நிறுவப்பட்டுள்ளது என்பதை குறித்து வைத்துக்கொள்ளவும். இங்கு விண்டோஸ் 7 D: கோலனில் நிறுவப்பட்டுள்ளது.



அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Command Prompt என்பதை கிளிக் செய்யவும்.


வரும் கட்டளை பலகையில் கீழ்காணும் கட்டளைகளை உள்ளிடவும்.

copy d:\windows\system32\sethc.exe d:\

மேலே குறிப்பிட்ட கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவும். 1 file(s) copied. என்ற செய்தி வரும். அடுத்து மீண்டும் மற்றொரு கட்டளையை உள்ளிடவும்.

copy d:\windows\system32\cmd.exe d:\windows\system32\sethc.exe

கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவுடன் மீண்டும் அதன் மேலே பதியட்டுமா என்ற உங்களிடம் கணினி கேட்கும். நீங்கள் Yes என்று தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்தவும். 1 file(s) copied. என்ற செய்தி அடுத்த வரியில் தோன்றும். 



பின் கட்டளை பலகையினை மூடிவிட்டு கணினியை மறுதொடக்கம் செய்யவும். பயனர்கணக்கு முகப்புபக்கம் தோன்றும். அப்போது Shift+Tab கீகளை ஒரு சேர ஐந்து முறை தொடர்ந்து அழுத்தவும். அப்போது ஒரு கட்டளை பலகை தோன்றும். அதில் கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்.


net user TCINFO passwd
  


இதில் net user என்பது இருப்பியல்பு கட்டளை ஆகும். TCINFO என்பது நீங்கள் மாற்ற இருக்கும் விண்டோஸ் பயனர் கணக்கின் பெயர் ஆகும். Passwd என்பது நீங்கள் புதியதாக மாற்ற நினைக்கும் கடவுச்சொல் ஆகும். அதை உங்கள் விருப்பபடி உள்ளிட்டுக்கொள்ளவும். அவ்வளவுதான் இனி நீங்கள் புதிதாக மாற்றிய கடவுச்சொல்லே செயல்படும்.

மீண்டும் வேறொரு பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமெனில், முதலிலிருந்து மீண்டும் அப்படியே செய்யவும். இது விண்டோஸ் 8 ற்கும் பொருந்தும்.

டோரன்ட்களை தரவிறக்கம் செய்ய மாற்று வழி (மற்றும்) IDM ல் டோரன்ட்களை பதிவிறக்கம் செய்ய

முதலில் டோரன்ட் என்றால் என்னவென்று கூறிவிடுகிறேன், இதைப்பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. டோரன்ட் என்பது மென்பொருள்கள், திரைபடங்கள், விளையாட்டுமென்பொருள்கள், மின்னனு புத்தகங்கள், கோப்புகள் மற்றும் பல்வேறு தகவல்களை யாருடைய அனுமதி இன்றியும் தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் ஒரு எளிய வழிமுறை ஆகும். நாம் எவ்வாறு இணையத்தில் தகவல்களை தேட கூகுள் தளத்தினை நாடுகின்றோமோ அதைபோல் டோரன்ட் பைல்களை தேட நாம் செல்ல வேண்டியது Torrentz தளமாகும். இந்த தளத்தில் அனைத்து வித டோரன்ட்களுக்கும் இணைப்பு நிச்சயம் இருக்கும்.

சரி டோரன்ட் பைல் என்பது KB அளவில் இருக்கும். இதை கொண்டு எவ்வாறு முழுகோப்பினையும் பதிவிறக்கம் செய்வது என்றால் அதற்கும் சில மென்பொருள்கள் உள்ளது அதில் புகழ்பெற்ற மென்பொருள்கள் UTorrent, Bittorrent ஆகியவை ஆகும். இந்த மென்பொருள்கள் உதவியுடன் கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் போது பதிவிறக்கத்தின் வேகம் சற்று குறைவாக இருக்கும்.

சரி, டோரன்ட்களை கொண்டு முழுகோப்புகளையும் தரவிறக்கம் செய்ய மாற்று வழி உண்டா என்றால் நிச்சயம் இருக்கிறது. டவுண்லோட் மேனேஜர்களின் உதவியுடன் அதிவேகமாக டோரன்ட் முழுகோப்புகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஒரு சில இணைய மையங்கள், அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்த டோரன்ட் கோப்புகளை தரவிறக்கம் செய்ய தடை செய்து இருப்பார்கள். அந்த தடையை உடைத்து டோரன்ட் முழுக்கோப்புகளையும் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பற்றியும் இந்தக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

முதலில் டோரன்ட் தேடுதளத்தில் குறிப்பிட்ட டோரன்ட் பைலை தரவிறக்கம் செய்யவும்.
Torrentz தளத்திற்கான சுட்டி 


Torrentz தளம் சென்று வேண்டிய டோரன்ட் பைலை தேடி பெறவும். சான்றாக நான் Autocad 2008 யை டவுண்லோட் செய்ய டோரன்ட் பைலை தேடினேன். அதற்கான டோரன்ட் பைலை தரவிறக்கம் செய்ய Torrentz தளம் சென்று Autocad 2008  என்று உள்ளிட்டு தேடினேன், அதில் பல்வேறு Autocad 2008 கான டோரன்ட்களுக்கான இணைப்பு கிடைத்தது. அதில் rating , peers அதிகம் உள்ள டோரன்ட் இணைப்பினை தேர்வு செய்யவும். இவ்வாறு தேர்வு செய்வதனால தரவிறக்கத்தின் வேகம் அதிகம் ஆகும்.

அடுத்து நீங்கள் தேர்வு செய்த டோரன்ட் பைல் இருக்ககூடிய அனைத்து முகவரியும் காட்டும். அதில் விருப்பமான ஒன்றை தேர்வு செய்யவும்.





பின் டோரன்ட் பைலை தரவிறக்கம் செய்ய சுட்டி கிடைக்கும். அதை பயன்படுத்தி டோரன்ட் பைலை தரவிறக்கி கொள்ளவும்.
        
அடுத்து நாம் செய்ய வேண்டியது டவுண்லோட் மேனேஜரை கணினியில் நிறுவ வேண்டும். புகழ்பெற்ற டவுண்லோட் மேனேஜர்களில் ஒன்று இண்டர்நெட் டவுண்லோட் மேனேஜர் (IDM) ஆகும். ஏற்கனவே உங்கள் கணினியில் இருந்தால் அப்படியே விட்டு விடவும். இல்லையெனில் பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
IDM தரவிரக்கம் செய்ய சுட்டி
  
அடுத்து செய்ய வேண்டியது  zbigz தளம் சென்று டோரன்ட் பைலை பதிவேற்றம் செய்து  பதிவிறக்க சுட்டி பெற வேண்டியது மட்டுமே ஆகும்..

தளத்திற்கான சுட்டி



சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இலவச பயனர் கணக்கினை உருவாக்கி கொள்ளவும். பின் Upload torrent file என்னும் பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட டோரன்ட் பைலை தேர்வு செய்து Go பொத்தானை அழுத்தவும். சிறிது நேரம் கழித்து தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு கிடைக்கும். Download என்னும் பொத்தானை அழுத்தவும். 



அடுத்து தோன்றும் விண்டோவில் Free எனும் இணைப்பினை அழுத்தவும். அதன் பின் நேரிடையாக இண்டர்நெட் டவுண்லோட் மேனேஜரில் பதிவிறக்கம் ஆகும்.
undefined

வழக்கம்போல் பதிவிறக்கம் முடிந்தவுடன் குறிப்பிட்ட பைலை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

HTML Tutorial 4-குறிஒட்டுகள் (Tags)

HTML Tutorial 4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
வணக்கம் நண்பர்களே..! கடந்த இடுகையில் HTML என்பது என்ன? HTML ஆவணம் உருவாக்க என்ன தேவை? என்பதைப் பற்றிப் பார்த்தோம். 

இந்த இடுகையில் HTML ஆவணத்தின் அடிப்படைகளான, Tags (குறிஒட்டுகள்), 
Element(உறுப்பு), Attributes (பண்புகள்)போன்றவற்றில் முதலில் 
 TAGS(குறிஒட்டுகள்) என்பதை ஒரு சிறிய விளக்கத்துடன் பார்ப்போம்.




குறிஒட்டுகள் என்பதற்கான விளக்கம் கடந்த இடுகைகளில் தெரிவித்திருந்தேன்.  இந்த குறிஒட்டுகள்(Tags) பலவகைப்படும். இந்த குறிஒட்டுகளைப் பற்றி சிறிய விளக்கத்துடன் பார்ப்போம்.



நாம் கணியில் ஒரு எழுத்தை தட்டச்சிடும்போது என்ன எழுத்தை தட்டச்சிடுகிறோமோ அதே எழுத்தாகவே எடுத்துக்கொள்ளும்.   உதாரணமாக C என்னும் எழுத்தை தட்டச்சிடும்போது C ஆகவே எடுத்துக்கொள்ளும்.  இது கணினியின் பண்பு.



அந்த எழுத்து சிறியதாகவோ, பெரியதாகவோ, தடிமனாகவோ, அல்லது சாய்வெழுத்தாகவோ இருப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

ஆனால் அந்த Com என்னும் எழுத்து மேற்குறிப்பிட்ட பண்புகளில் இருக்க வேண்டும் (அதாவது தடிமன், சாய்வு, பெரியது, சிறியது) என் நிர்ணயம் செய்வது இந்த HTML ல் அடங்கியுள்ள குறிஒட்டுகள்.

Com என்னும் எழுத்து தடிமனாக இருக்கவேண்டும் என உலவிக்கு தெரிவிப்பதற்கு C க்கு முன்னும் பின்னும் இவ்வாறு குறிஒட்டுகள் (Tags) சேர்க்க வேண்டும்.

<B>Com</B>

இந்த குறிஒட்டிற்குப் பெயர்தான் டேக்(Tag).



HTML-ல் குறிப்பிடப்படும் குறிஒட்டுகள்(TAGS),  எல்லா பிரௌசர்களிலும் ஒரே பொருளிலேயே குறிக்கப்படும். 



அதாவது வலைஉலவிகள் Firefox  opera, Google chrome  போன்ற அனைத்து வெவ்வேறான உலவிகளும் HTML குறியீடுகளை ஒரே பொருளிலேயே எடுத்துக்கொள்கிறது.

HTML ஆவணத்தை உலவியின் மூலமாக திறந்து பார்க்கும்போது நாம் எழுதிய குறிஒட்டுகள்(TAGS) உலவியில் தெரிவதில்லை. ஆனால் அதன் விளைவுகள் தெரியும்.

கீழே உள்ள அட்டவணை படத்தைப் பாருங்கள்.

HTML ஆவணமும், அதனுடைய வெளிப்பாடு வலைஉலவியில் எப்படித் தெரிகிறது என்பதையும் காட்டியிருக்கிறேன்.


HTML ஆவணம்
உலவியில் அதன் வெளிப்பாடு
இது ஒரு <b>அட்டவணை</b> ஆகும்.
இது ஒரு அட்டவணை ஆகும்.



இந்த அட்டவணையில் <b>அட்டவணை</b> என்ற HTML உறுப்பானது வலையுலவியால் அட்டவணைஎன்ற தடிமனான வார்த்தையாக மாற்றப்பட்டுள்ளது.

நன்றி

HTML Tutorial 3-HTML என்பது என்ன? HTML ஆவணம் உருவாக்க என்ன தேவை?

HTML Tutorial 3
நாம் எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள என்னும் தொடர் பதிவின் மூலம் இரண்டு பதிவுகளை கடந்து வந்திருக்கிறோம். கற்றுக்கொண்டிருக்கிறோம். இப்பதிவில் HTML ஆவணத்தில் டேக்(Tag) என்று ஆங்கிலத்தில் அழைக்ககூடிய குறிஒட்டுகளையும், HTML ஆவணம் உருவாக்க என்ன தேவை என்பதைப் பற்றியும் பார்க்கப்போகிறோம்.
கவனிக்க:
tag: குறிஒட்டு.
அதாவது <>இவ்வாறு இரு குறீயீடுகளும் சேர்ந்ததை ஆங்கிலத்தில் டேக் என்றும், தமிழில் குறிஒட்டு என்றும் அழைக்கப்படுகிறது.
எந்த ஒரு விஷயமானாலும் அ முதல் ஃ வரை தெளிவாகப் புரிந்துகொண்டால்தான் முழுவதுமாக கற்றுத் தேற முடியும். அந்த வகையில் எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள பாடமும்.
இதற்கு முன்னரே இரண்டு பதிவுகள்
1. எளிய தமிழில் HTML கற்க,
2. HTML அடிப்படை விளக்கம்

என்ற பதிவுகளைப் பார்த்திருக்கிறோம். பதிவைத் தவறவிட்டர்வகள் இப்பதிவுகளைப் பார்த்துவிட்டு தொடரலாம். படித்தவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்.
HTML என்பது என்ன? என்பதற்குரிய விளக்கம் முந்தையப் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன் என்றாலும் ஒரு சில விளக்கங்களை சுருக்கமாகத் தெரிந்துகொள்வோமே..!!

HTML என்பதன் விரிவாக்கம் Hyper Text Markup Language என்பதன் குறுக்கம்.
வலையுலவியின் மூலம் இணையப்பக்கத்தைப் பார்க்க HTML பயன்படுகிறது.
வலைப்பக்கத்தின் பொருளடக்கத்தை HTML ஆனது குறி ஒட்டுக்களின் (Tags) மூலம் விளக்குகிறது.

குறி ஒட்டுகள்<> என்னும் குறியீடு மூலம் வரையறுக்கப்படுகின்றன.
இந்தக் குறிஒட்டு (<>) தொடக்கக் குறி என அழைக்கப்படுகிறது. (ஆங்கிலத்தில் சொல்வதெனில் Starting tag , ending tag)
குறியீட்டுக்கிடையில் குறுக்கு சாய்வுக்கோடு / சேர்த்து முடிவுக் குறிஒட்டு </>வரையறுக்கப்படுகிறது.

ஒரு முழு HTML ஆவணம் என்னும் தொடக்கக் குறி ஒட்டுடன் தொடங்கி, என்னும் முடிவுக் குறி ஒட்டுடன் முடிவடைய வேண்டும்.(அதாவது ஒபனிங் டேக் தொடங்கி என்ற End Tag கொண்டு முடியவேண்டும்.)
ஹெச்.டி.எம்.எல் ஆவணமானது .html அல்லது .htm என்னும் விரிவைக்கொண்டிருக்கும்.

HTML ஆவணம் (document) உருவாக்க என்ன தேவை?
HTML ஆவணம் உருவாக்க சிறப்புச் சாதனம் அல்லது சிறப்பு மென்பொருள் எதுவும் தேவையில்லை. HTML ஆவணத்தை மிக எளிதாக உருவாக்க முடியும். HTML குறிமுறை உருவாக்குவதற்கு கீழ்க்கண்ட இரண்டு கருவிகள்(Tools) மட்டுமே போதுமானது.

சொற்செயலி(a simple - text editor) அதாவது நம் கணினியில் உள்ள note pad அல்லது வேர்ட் பேட்(word pad).
வலை உலவி ( a web browser) .
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் , Firefox, Google chrome, opera, epic போன்ற வலைஉலவிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதுமானது.

வழக்கமாக கணினியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வலைஉலவி கணினியில் நிறுவப்பட்டு இருக்கும்.
உங்கள் கணிப்பொறியிலேயே உங்களால் வலைப்பக்கங்களை(web pages) உருவாக்க முடியும். வலைப்பக்கம் உருவாக்குவதைப் பற்றி தனி ஒரு பாடத்தில் பார்க்கப்போகிறோம்.

இனி அடுத்தப் பாடத்தில் HTML -ஆவணத்தின் அடிப்படைகள் சிலவற்றைத் தெரிந்துகொள்வோம். பிறகு HTML பாடங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம். அடிப்படைகளைக் கற்றுக்கொண்டால் பிறகு வரும் பாடங்கள் எளிமையாக புரியும். நினைவில் நிற்கும். நான் சொல்வது சரிதானே..?

 நன்றி :தங்கம்பழனி

Popular Posts

Facebook

Blog Archive