பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 21 மார்ச், 2015

மறந்துபோன விண்டோஸ்-7 கடவுச்சொல்லை மாற்றியமைக்க

நான்கு நாட்களுக்கு முன் வாசகர் ஒருவர் மறந்துபோன கடவுச்சொல்லை மாற்றியமைப்பு எவ்வாறு என பின்னூட்டம் மூலமாக கேட்டிருந்தார், இதோ அதற்கான பதில்.

பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்பர். தீடிரென கடவுச்சொல் தவறு என்று பிழைச்செய்தி வரும், நாம் எவ்வளவு தான் முட்டி மோதினாலும் கணினியை திறக்க முடியாது.
அதுபோன்ற சூழ்நிலையில் இதற்கு வழி என்னதான் என்று பார்த்தால் கணினியை பற்றி அறியாதவர்கள் இயங்குதளத்தை நிறுவுதல் ஒன்றே வழி என்று கூறுவார்கள். ஆனால் கணினியில் எந்தவித மாற்றமும் செய்யமல் கடவுச்சொல்லை மாற்றியமைக்க எளிமையான வழி இருக்கிறது.




முதலில் நம்முடைய கணினியில் என்ன இயங்குதளம் நிறுவியுள்ளோமோ அந்த இயங்குதளத்தை சீடி/டிவிடி யிலோ அல்லது பெண்ட்ரைவிலோ
பூட் செய்து கொள்ளவும். பின் பூட் செய்த சீடி/டிவிடி அல்லது பெண்ட்ரைவினை கணினியில் இட்டு, பயாஸ் சென்று First Booting Device யை சீடி/டிவிடி அல்லது பெண்ட் இதில் ஒன்றில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து பின் பயாஸினை சேமித்து பின் அதிலிருந்து பூட் செய்யவும். கணினி பூட் ஆனவுடன் இயங்குதளத்தை நிறுவுவதற்கான தொடக்க விண்டோ தோன்றும் அதில் Repair your computer என்பதை கிளிக் செய்யவும். 



உங்கள் கணினி உள்ள இயங்குதளங்கள் பட்டியலிடப்படும். அதில் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செய்து Next என்ற பொத்தானை அழுத்தவும். இதில் நீங்கள் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற நினைக்கிறீர்களோ அது எந்த கோலனில் நிறுவப்பட்டுள்ளது என்பதை குறித்து வைத்துக்கொள்ளவும். இங்கு விண்டோஸ் 7 D: கோலனில் நிறுவப்பட்டுள்ளது.



அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Command Prompt என்பதை கிளிக் செய்யவும்.


வரும் கட்டளை பலகையில் கீழ்காணும் கட்டளைகளை உள்ளிடவும்.

copy d:\windows\system32\sethc.exe d:\

மேலே குறிப்பிட்ட கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவும். 1 file(s) copied. என்ற செய்தி வரும். அடுத்து மீண்டும் மற்றொரு கட்டளையை உள்ளிடவும்.

copy d:\windows\system32\cmd.exe d:\windows\system32\sethc.exe

கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவுடன் மீண்டும் அதன் மேலே பதியட்டுமா என்ற உங்களிடம் கணினி கேட்கும். நீங்கள் Yes என்று தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்தவும். 1 file(s) copied. என்ற செய்தி அடுத்த வரியில் தோன்றும். 



பின் கட்டளை பலகையினை மூடிவிட்டு கணினியை மறுதொடக்கம் செய்யவும். பயனர்கணக்கு முகப்புபக்கம் தோன்றும். அப்போது Shift+Tab கீகளை ஒரு சேர ஐந்து முறை தொடர்ந்து அழுத்தவும். அப்போது ஒரு கட்டளை பலகை தோன்றும். அதில் கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்.


net user TCINFO passwd
  


இதில் net user என்பது இருப்பியல்பு கட்டளை ஆகும். TCINFO என்பது நீங்கள் மாற்ற இருக்கும் விண்டோஸ் பயனர் கணக்கின் பெயர் ஆகும். Passwd என்பது நீங்கள் புதியதாக மாற்ற நினைக்கும் கடவுச்சொல் ஆகும். அதை உங்கள் விருப்பபடி உள்ளிட்டுக்கொள்ளவும். அவ்வளவுதான் இனி நீங்கள் புதிதாக மாற்றிய கடவுச்சொல்லே செயல்படும்.

மீண்டும் வேறொரு பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமெனில், முதலிலிருந்து மீண்டும் அப்படியே செய்யவும். இது விண்டோஸ் 8 ற்கும் பொருந்தும்.

மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? - புதியவர்களுக்கு

இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம். 


1.முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும். 

2.Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும். 

3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும். 

4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும். 



இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும். 

5. Windows 7/Vista பயனாளிகள்
 
    • Control Panel ->Date, Time, Language, and Regional Options--> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும். 
    • Change keyboards... என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும். 
    • Language Bar க்கு வரவும். 
    •  Language Bar -ல் உள்ள  Docked in the taskbar  என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும். 
    • இப்போது Apply கொடுக்கவும்.  இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும். 
    •  
6.Windows XP பயனாளிகள்
    • Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும். 
    • முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.           

    • Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.  
    • இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும். 
    • இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும். 

7. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும். 


8.இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும்.


9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். உதாரணம்: 

Amma - அம்மா, 
karpom - கற்போம் 


இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும். 

10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம். ‌

11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்.

கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன?

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.


காரணங்கள்:
  • மிகக் குறைந்த Hard Disk Space
  • நிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது.
  • Data Corruption
  • அதிக சூடாகுதல்
  • Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.
  • Hardware Problems
  • Driver பிரச்சினை

இந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.

Reboot :

உங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம்.

Hard Disk Space

இது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த Drive-இல் Operating System இன்ஸ்டால் செய்து உள்ளீர்களோ, அதன் மொத்த அளவில், 25 சதவீதம் காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

மற்ற Drive-களில் குறைந்த பட்சம் 500MB – 1GB காலியாக இருத்தல் நலம்.

Hard drive corrupted or fragmented

இந்த இரண்டையும் நீங்கள் மெதுவாக இயங்கும் போதெல்லாம் கவனிக்க வேண்டும்.

Run ScanDisk – இது Hard Disk – இல் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று சோதிக்க பயன்படுகிறது.

இதை செய்ய – My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Error Check

இதில் Start என்பதை கிளிக் செய்யவும். Scan ஆரம்பித்து விடும்.

அந்த பகுதியில் வரும் “Automatically fix errors” என்பதை கிளிக் செய்தால், அடுத்த முறை கணினி On/Restart ஆகும் போது இந்த சோதனை நடைபெறும்.

Run Defrag – இதை செய்ய My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Defragment now என்பதை தெரிவு செய்து, வரும் பகுதியில் Drive தெரிவு செய்து, Defragment என்பதை என்பதை கிளிக் செய்யவும். இந்த செயல் இப்போது தொடங்கி விடும்.

தேவை இன்றி இயங்கும் Programs

சில நேரங்களில் நம் கணினியில் சில ப்ரோக்ராம்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும், இவை நம் கணினியின் வேகத்தை குறைக்கும். CTRL+ALT+DELETE அழுத்தி “Task Manager” பகுதிக்கு வரவும். இதில் “Applications” Tab -இல் தேவை இல்லாத ப்ரோக்ராம் மீது ரைட் கிளிக் செய்து “Go To Process” கொடுத்தால் “Process” பகுதியில் அந்த மென்பொருளின் இயக்கம் தெரிவு செய்யப்பட்டு இருக்கும். இங்கே மீண்டும் ரைட் கிளிக் செய்து “End Process” தந்து விடும்.

கணினி ON ஆகும் போதே சில ப்ரோக்ராம்கள் இயங்க ஆரம்பித்து விடும், இது வீண். அவற்றை நிரந்தரமாக நிறுத்த கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig என்ற பதிவை படிக்கவும்.

Virus பிரச்சினைகள்

இது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை. நல்ல Antivirus மென்பொருள் மட்டுமே இதற்கு தீர்வு.

Device பிரச்சினைகள்

உங்கள் கணினியில் உள்ள Device கள் கூட உங்கள் கணினியை மெதுவாக இயங்க வைக்கும். இவற்றை செக் செய்ய. Right Click On My computer>> Manage என்பதை கிளிக் செய்து அதில் “Device Manager” பகுதிக்கு செல்லவும்.

இங்கே உள்ள Device-களில் கீழே காண்பது போல வந்தால் அவற்றில் பிரச்சினை என்று அர்த்தம்

இவற்றில் முதலாவது போல மஞ்சள் நிறத்தில் வந்தால் அதன் மீது ரைட் கிளிக் செய்து Remove செய்து விட்டு கணினியை Restart செய்யவும். இப்போது மீண்டும் Detect ஆகும்.

இரண்டாவது போல பெருக்கல் குறி வந்தால் Disable ஆகி இருக்கலாம், அப்படி என்றால் ரைட் கிளிக் செய்து enable தரவும். இது enable ஆகியும் பிரச்சினை என்றால் Remove செய்து விட்டு Restart செய்யவும்.

மறுபடியும் பிரச்சினை குறிபிட்ட Device க்கு நீங்கள் Latest Driver ஐ தரவிறக்க வேண்டும்.

கம்ப்யூட்டர்/Processor சூடாகுதல்

மிக அதிக நேரம் இயங்கினால் இந்த பிரச்சினை வரும். அத்தோடு உங்கள் கணினியின் CPU பகுதியில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் இந்த பிரச்சினையை உருவாக்கும். எனவே CPU-வை கழட்டு சுத்தப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் மிக கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். எந்த Wire, அல்லது Device-க்கும் எந்த பிரச்சினையும் வரமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே இதை கணினி பற்றி நன்கு அறிந்த ஒருவரை அருகில் வைத்து செய்தல் நலம்.

RAM Memory Increase செய்தல்

உங்கள் கணினியில் RAM Memory பொறுத்து உங்கள் கணினி வேகம் மாறும். இப்போதைய நிலைமைக்கு 2GB RAM பயன்படுத்துதல் நலம்(கணினியை பொறுத்து மாறும், எனவே இது குறைந்த பட்ச அளவு). புதிய கணினி வாங்குவோர் இந்த விசயத்தில் எப்படி தெரிவு செய்வது என்பதை புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்ற பதிவில் படிக்கலாம்.

உங்கள் RAM Memory எவ்வளவு என்று அறிய Right Click On My Computer >> Properties என்பதில் General Tab-இல் பார்க்கவும்.

Registry Cleaner பயன்படுத்துதல்

பெரும்பாலும் மேலே சொன்ன வழிகளுக்கு உங்கள் கணினி வேகமாக இயங்க வேண்டும். அப்படியும் மெதுவாகத் தான் இயங்குகிறது என்றால் சில Registry Cleaner மென்பொருட்களை பயன்படுத்தி முயற்சிக்கலாம்.

குப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி? என்ற பதிவில் CCleaner என்ற Registry Cleaner மென்பொருள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதை முயற்சி செய்யவும்.

Operation System இன்ஸ்டால் செய்தல்

மேலே சொன்ன எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் புதிய Operating System இன்ஸ்டால் செய்து முயற்சிக்கவும்.

Hardware பிரச்சினைகள்

மேலே கூறிய எல்லாம் செய்தும் பிரச்சினை என்றால் Hard Drive, RAM, Mother Board, CPU போன்றவற்றில் ஏதேனும் பிரச்சினை என்று அர்த்தம். இனி Service Center-ஐ நாடுதல் நலம்.

பழைய கணினி

உங்கள் கணினி ஐந்து வருடத்துக்கும் அதிகமாக உழைத்து இருந்தால் அதை மாற்றி விட்டு புதிய கணினியை வாங்குதல் நலம்.

அவ்வளவு தான் நண்பர்களே. சற்றே பெரிய பதிவாகினும் உங்களுக்கு கட்டாயம் பயன்படும் என்று நினைக்கிறேன்.

வெள்ளி, 20 மார்ச், 2015

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம் // படித்து பகிருங்கள் //

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய
தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று
click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும்.

அடுத்து வரும் பக்கத்தில் உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number  Create ஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.
Renewal செய்வதற்கான குறிப்பு :

உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.
Register Number : RPD2013M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM )
பதிவு செய்த ஆண்டு : 2013
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்தம் செய்து கொள்கிறேன்..
http://www.tnvelaivaaippu.gov.in/
www.tnvelaivaaippu.gov.in
Thanks :
Balaguru Sfl
"Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம் // படித்து பகிருங்கள் //

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய
தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக
கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று

click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும்
பக்கத்தில்

பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை
எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும்
பக்கத்தில்

உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number
Create ஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save
கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து
கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number : RPD2013M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM )
பதிவு செய்த ஆண்டு : 2013
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..

அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின்
சுட்டிக்காட்டுங்கள் திருத்தம் செய்து கொள்கிறேன்..
http://www.tnvelaivaaippu.gov.in/
www.tnvelaivaaippu.gov.in

Thanks :
Balaguru Sfl 

@[297395707031915:274:Relaxplzz]"

மீத்தேன் திட்டம் ரத்தாகிறது: மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி:
தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை,
திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ்
ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின்
உற்பத்தி செய்யப்போவதாகவும் கூறிய கடந்த காங்கிரஸ் தலைமையிலான
மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தத்தை, ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கியது. ஆனால், இந்த மீத்தேன் திட்டத்தால்
இயற்கை வளங்கள் நாசமாகி விடும் என்றும், டெல்டா மாவட்டங்கள்
பாலைவனமாகி விடும் என்றும் விவசாயிகள் மற்றும் அப்பகுதி
மக்களிடையே கடும் எதிர்ப்பு  கிளம்பியது.


இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு  அரசியல் கட்சிகள் மட்டுமின்றி,
விவசாயிகளும் மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
நடத்தினர். 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் உயிருடன்
இருந்தபோது, தனது கடைசி நாட்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான்
செலவிட்டார். பல ஊர்களில் அவரது  தலைமையில், மக்கள் குழாய்களைப்
பிடுங்கி எறிந்தனர்.  இந்நிலையில், மாநிலங்களவையில்
இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எழுப்யிய
கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்
தர்மேந்திர பிரதான், இந்த மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
SPV
Siravai Singam
"=====மீத்தேன் திட்டம் ரத்தாகிறது: மத்திய
அரசு அறிவிப்பு!=====

புதுடெல்லி: தமிழகத்தில் தொடர்ந்து
எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று
வரும் மீத்தேன் திட்டம் ரத்து
செய்யப்படுவதாக மத்திய அரசு
அறிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில்
மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை,
திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய
மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ்
ஏராளமான மீத்தேன் வாயு
உள்ளதாகவும், அதை எடுத்து மின்
உற்பத்தி செய்யப்போவதாகவும் கூறிய
கடந்த காங்கிரஸ் தலைமையிலான
மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தத்தை,
ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட
கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்
லிமிடெட் (Great eastern energy corporation Ltd.)
என்ற நிறுவனத்துக்கு வழங்கியது.
ஆனால், இந்த மீத்தேன் திட்டத்தால்
இயற்கை வளங்கள் நாசமாகி விடும்
என்றும், டெல்டா மாவட்டங்கள்
பாலைவனமாகி விடும் என்றும்
விவசாயிகள் மற்றும் அப்பகுதி
மக்களிடையே கடும் எதிர்ப்பு
கிளம்பியது.

இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு
அரசியல் கட்சிகள் மட்டுமின்றி,
விவசாயிகளும் மீத்தேன் திட்டத்திற்கு
எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
நடத்தினர். 'இயற்கை வேளாண்
விஞ்ஞானி’ நம்மாழ்வார் உயிருடன்
இருந்தபோது, தனது கடைசி நாட்களை
மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான்
செலவிட்டார். பல ஊர்களில் அவரது
தலைமையில், மக்கள் குழாய்களைப்
பிடுங்கி எறிந்தனர்.
இந்நிலையில், மாநிலங்களவையில்
இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எழுப்யிய
கேள்விக்கு பதிலளித்த மத்திய
பெட்ரோலியத்துறை அமைச்சர்
தர்மேந்திர பிரதான், இந்த மீத்தேன் திட்டம்
ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

SPV
Siravai Singam"

புதன், 18 மார்ச், 2015

அரசு தரும் டிஜிட்டல் லாக்கர்

மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை, பொதுமக்களுக்கு தங்கள் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திட, டிஜிட்டல் லாக்கர் வசதியை வழங்குகிறது.

அது எப்படி ஆவணங்களைக் கொண்டு போய், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கும் ஒரு லாக்கரில் வைக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறதா? மேலே படியுங்கள்.

இந்த டிஜிட்டல் லாக்கர் வசதியைப் பெற உங்களுக்கென ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் எண் இருக்க வேண்டும். ஆதார் அட்டை எண்ணுடன் இந்த லாக்கர் வசதி இணைக்கப்படும். இந்த லாக்கரில்,

உங்கள் ஆவணங்களின் மின்னணு நகல்களைப் பாதுகாப்பாக வைக்கலாம். அரசின் பல்வேறு துறைகள் உங்களுக்கு வழங்கும் டிஜிட்டல் ஆவணங்களையும் இதில் சேவ் செய்து வைக்கலாம். இதில் உள்ள ஆவணங்களில், நீங்கள் உங்கள் மின்னணு கையெழுத்தினையும் (e-signature) போடலாம்.
இதனைப் பெற https://www.digilocker.gov.in/ என்ற தளத்திற்குச் செல்லுங்கள். உங்கள் பிரவுசர் இந்த தளத்தின் பாதுகாப்பு குறித்து சந்தேகச் செய்தி தரும். அதனைப் புறக்கணித்து தொடரவும். ஏனென்றால், அரசு இந்த தளத்திற்கான பாதுகாப்பு சான்றிதழைப் பெறவில்லை என்று தெரிகிறது.

முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், ஆதார் எண், மொபைல் போன் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி போன்ற தகவல்களைத் தரவும். உங்களுக்கான டிஜிட்டல் லாக்கர் தரப்படும் பணியில் ஒன்றாக, உங்கள் மொபைல் போனுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பாஸ்வேர்ட் ஒன்று வழங்கப்படும். இந்த பாஸ்வேர்ட் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கும் வழங்கப்படும். இதனை தளத்தில் அதற்கெனத் தரப்பட்டுள்ள இடத்தில் அமைத்து on “Validate OTP” என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். உங்களுக்கான டிஜிட்டல் லாக்கர் தரப்படும். பின்னர், உங்கள் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து, டிஜிட்டல் லாக்கரை இயக்கலாம்.

உங்கள் ஆவணங்களை மின்னணு நகலாக, XML பார்மட் பைலாக இதில் சேமித்து வைக்கலாம். சான்றிதழ் நகல்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பெயர், பெற்ற நாள் கொண்டு பைலின் பெயரை அமைக்கவும். இதன் மூலம், நாம் நம் விண்ணப்பங்களுடன், சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு, இந்த டிஜிட்டல் லாக்கர் எண்ணைத் தந்துவிட்டால், அவர்கள் இந்த ஆவணங்களைப் பெற்று சரி பார்த்துக் கொள்ளலாம். இதனால், தேவையற்ற வகையில் டாகுமெண்ட் நகல்களை இணைத்து எதற்கும் விண்ணப்பிக்க தேவை இல்லை.
இதில் பதிந்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒரு Issuer ID வழங்கப்படும். இது வழங்கப்பட்ட பின்னர், அவர் தன் ஆவணங்களை XML பார்மட்டில் பதியலாம்.

பதியப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் ஒரு uniform resource identifier (URI) தரப்படும். அது நம் ஆதார் எண்ணுடனும் இணைக்கப்பட்டிருக்கும். நம் ஆவணங்களைக் காட்ட விரும்புபவருக்கு இந்த முகவரியைத் தரலாம். அவர் இதே போல, பயனாளராக ஓர் அக்கவுண்ட் திறந்து ஆவணங்களைப் பார்வையிடலாம். ஒவ்வொருவருக்கும் 10 எம்.பி. இடம் கொண்ட டிஜிட்டல் லாக்கர் தரப்படுகிறது.

அரசு அண்மையில் தான் இந்த திட்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. இதனைச் சோதனை முறையில் மட்டுமே பயன்படுத்திப் பார்க்கலாம். இது முழுமையான பின்னர், இது குறித்த மத்திய அரசின் ஆணை வெளியிடப்படும். இதன் வெற்றி, நம் அரசு துறைகள் மற்றும் நம்மிடம் உள்ளது.கூடுதல் தகவல்களை அறிய http://cdn.mygov.nic.in/bundles/frontendgeneral/images/beta-release-of-digital-locker-system.pdf என்னும் இணைய தளம் செல்லவும்.

SAMSUNG பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை!

சாம்சங் நிறுவனத்தைப் பற்றிய சில தகவல்களை நீங்களும் அறிந்திருப்பீர்கள். அதாவது சாம்சங் ஒரு தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம். இதில் மொபைல் போன்கள் தயாரிக்கப்படுகின்றன, டேப்லெட் கணினிகளும் கிடைக்கின்றன. இவ்வளவு தான் தெரியுமா? போங்க பாஸ் இதெல்லாம் ரொம்ப பழசு...!
 
சாம்சங் நிறுவனத்தைப் பற்றிய அன்மைத்தகவல்களை உங்களுக்காகவே இங்கே வழங்கியுள்ளோம். பெரும்பாலானோருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இதோ சாம்சங் பற்றிய விரிவான மற்றும் அறிய 11 தகவல்கள்...

http://img.talkandroid.com/uploads/2012/03/Samsung-Logo-800.jpg
 
  1. சாம்சங் ஆரம்பிக்கப்பட்டது 1938ல். தற்பொழுது சாம்சங் குரூப் செய்யும் வியாபாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 80ற்க்கும்  மேல்
  2. சாம்சங் நிறுவனத்தின் கட்டுமான பிரிவு தான் உலகின் உயரமானகட்டிடமான துபாயில் இருக்கும் பூர்ஜ் கலீஃபாவை கட்டியது.
  3. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் மட்டும் உலகம் முழுவதும் 370,000பணியாளர்கள் உள்ளனர்.
  4. 2011ல் சாம்சங் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் கொடுத்த சம்பளத்தின் அளவு 14.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாம்!!
  5. சாம்சங் நிறுவனம், கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவிகிதம் பங்களித்திருக்கிறது.
  6. கடந்தவருடம் சாம்சங் சாதனங்களை விளம்பரப்படுத்துவதற்கு மட்டுமே கிட்டத்தட்ட ரூ.2000 கோடிகளை செலவழித்துள்ளது. மேலும் மார்க்கெட்டிங் செய்வதற்காக ரூ.2,500 கோடிகள்!! [கோடிகள் தோராயமாகவே இருக்கும்.
  7. 2011 ஆம் ஆண்டின் வருமானம் மட்டுமே சுமார் ரூ.1247000 கோடிகள். இதில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவின் வருமானம் மட்டுமே 9 லட்சம் கோடிகள் என்கிறது சாம்சங்கின் அறிக்கை.
  8. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவின் சென்ற காலாண்டின் நிகர லாபம் மட்டுமே 827 கோடி அமெரிக்க டாலர்கள். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,600 கோடிகள். இதே சமயம் கூகுளின் மொத்தவருமானமே 340 கோடி அமெரிக்க டாலர்கள் மட்டுமே!
  9. கடந்தவருடம் மட்டும் சாம்சங் விற்பனை செய்த செல்போன்களின் எண்ணிக்கை 215.8 மில்லியன்.
  10. சாம்சங் இணையதளத்தில் செல்போன்களுக்கான பிரிவில் மொத்தம் 145 போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிள் 3 போன்களை 2 வேறு வண்ணங்களில் மட்டுமே வெளியிட்டுள்ளது.[தளத்தில்]
  11. டிவி விற்பனையில் கடந்த 6 ஆண்டுகளாக சாம்சங் டிவிக்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு முதலிடத்திலேயே உள்ளது.

வியாழன், 5 மார்ச், 2015

முக்கிய செய்தி.! செல்வமகள் திருமணத்திட்டம்

அன்பு நண்பர்களுக்கு முக்கிய செய்தி.!

நமது அஞ்சலகத்தில் புதிய நல்ல திட்டம் ஒன்றை அமுல் படுத்தபட்டுள்ளது. செல்வமகள் திருமணத்திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டத்தில் பத்து வயதிற்க்கு உட்பட்ட 02/12/2003 பிறகு பிறந்த பெண் குழந்தைகள் பதிவு செய்ய தகுதி பெற்றவர்களாவர்.!

முதன் முதலாக ₹1000 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து உங்கள் குழந்தைகளை இந்த திட்டத்தில் இணைக்கலாம்..!அதன் பிறகு மாதம் 100 ரூபாய் மட்டும் செலுத்தி வர வேண்டும்.இது 21 வயதை தொட்டதும் உங்கள் குழந்தையின் திருமணத்திற்காக ₹6,50,000-/- கிடைக்கும் .மத்திய அரசின் சிறப்பான திட்டம் அனைத்து பெண்குழந்தைகளுக்கும் கிடைக்கப்பெற்று வளமான வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

மிக இலகுவான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய தேவையானவை.!

(1) தந்தையின் புகைப்படம் ஒன்று.மற்று இருப்பிடம் உறுதி செய்ய அடையாள அட்டை.(வாக்காளர் அட்டை. அல்லது ஆதார் அட்டை நகல் ஓன்று)

(2).பெண் குழந்தையின் பிறப்புச்சான்று நகல்

(3)₹1000 ஆயிரம் ரூபாய் பணம்.!
இது அனைத்து அஞ்சலகத்திலும்(post office)கிடைக்கப்பெறும்.!

More Details: http://masinfom.blogspot.in/2015/03/sukanya-samriddhi-account-govts-special.html

"அன்பு நண்பர்களுக்கு முக்கிய செய்தி.!

நமது அஞ்சலகத்தில் புதிய நல்ல திட்டம் ஒன்றை அமுல் படுத்தபட்டுள்ளது. செல்வமகள் திருமணத்திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டத்தில் பத்து வயதிற்க்கு உட்பட்ட 02/12/2003 பிறகு பிறந்த பெண் குழந்தைகள் பதிவு செய்ய தகுதி பெற்றவர்களாவர்.! 

முதன் முதலாக ₹1000 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து உங்கள் குழந்தைகளை இந்த திட்டத்தில் இணைக்கலாம்..!அதன் பிறகு மாதம் 100 ரூபாய் மட்டும் செலுத்தி வர வேண்டும்.இது 21 வயதை தொட்டதும் உங்கள் குழந்தையின் திருமணத்திற்காக ₹6,50,000-/- கிடைக்கும் .மத்திய அரசின் சிறப்பான திட்டம் அனைத்து பெண்குழந்தைகளுக்கும் கிடைக்கப்பெற்று வளமான வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

மிக இலகுவான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய தேவையானவை.!

(1) தந்தையின் புகைப்படம் ஒன்று.மற்று இருப்பிடம் உறுதி செய்ய அடையாள அட்டை.(வாக்காளர் அட்டை. அல்லது ஆதார் அட்டை நகல் ஓன்று)

(2).பெண் குழந்தையின் பிறப்புச்சான்று நகல்

(3)₹1000 ஆயிரம் ரூபாய் பணம்.!
இது அனைத்து அஞ்சலகத்திலும்(post office)கிடைக்கப்பெறும்.!

More Details: http://www.relakhs.com/sukanya-samriddhi-account-govt-scheme-girl-child/

- முத்துக்குமார்"

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

பன்றிக்காய்ச்சல் - அறிந்ததும் அறியாததும் !

பொதுவாக நம் மக்களிடையே , பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வுகளைக் காட்டிலும் , பயம் தான் அதிகமாக உள்ளது..

மக்களின் பயத்தை மூலதனமாகக்கொண்டு ,பல்வேறு தொழில்துறையினர் அதன்மூலம் லாபம் அடைகின்றனர்! இறுதிவரை நம் மக்கள் பயத்துடனே , பன்றிக்காய்ச்சலை பற்றிய அடிப்படை விடயங்களை தெரிந்து கொள்ளாமலே போய் விடுகின்றனர்..

2009 ஆம் ஆண்டு , உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த வைரஸ் நோய்கிருமிகளால் பாதிக்கப்பட்ட போதே , நம் ஆட்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.. ஆனால் அது நம் மக்களை முறையாக சென்றடையவில்லை.. நமது அரைகுறை புரிதலின் தாக்கமே , இப்போது 2015ஆம் ஆண்டு மீண்டும் பயத்துடன் பன்றிக்காய்ச்சலை அணுகுகின்றோம்..

மக்கள் பலருக்கு உள்ள சந்தேகங்களும் , அதற்கான விடைகளையும் சற்று ஆராய்வோம் ..

கேள்வி - ஏன் இதற்கு பன்றிக்காய்ச்சல் என பெயரிடப்பட்டது ?
பதில்- இந்தக் காய்ச்சல் முதன்முதலில் பன்றிகளிடம் அதிகளவு காணப்பட்டதால் இதற்கு அந்தப் பெயர் கொடுப்பட்டது.. இது குறிப்பாக பன்றிகளின் நுரையீரல் மண்டலத்தைத் தாக்கக்கூடிய வைரஸ்நோய்!

கேள்வி - பன்றிகள் அதிகம் உள்ள ஊர்களில் தான் இந்த காய்ச்சல் இருக்குமா ?
பதில் - அவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வைரஸ் , பன்றிகள் மூலமாக மனிதர்களைத் தாக்கினாலும். பிறகு பாதிக்கப்பட்ட நபரின் சளி , இருமல், தும்மல் மூலமாக சக மனிதர்களுக்குப் பரவும்...

கேள்வி - இது எய்ட்ஸ் , எபோலா போன்றதொரு கொடிய வைரஸா ?
பதில்-இல்லவே இல்லை..இது ஒரு சாதாரணமான வைரஸ்..பனிக்காலங்களில் இதனின் உக்கிரம் சற்று அதிகமாக காணப்படுவதால் ,நாம் விழிப்புடன் இருப்பது நல்லது!

கேள்வி - இந்த வைரஸ் யாரை எல்லாம் எளிதாகத் தாக்கும்?
பதில்-பொதுவாக நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களை இந்த வைரஸ் எளிதாகத் தாக்கும். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் , கர்ப்பிணி தாய்மார்கள், சக்கரை நோயாளிகளிடம் இந்த பாதிப்பு அதிகளவில் காணப்படும். இருப்பினும் இது யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் ,.

கேள்வி - இந்த வைரஸ் காய்ச்சலில் இருந்து எப்படி தப்பிப்பது ?
பதில்- மிகவும் எளிதான வழிமுறை தான்.. ஆனால் நாம் தான் அவற்றை கடைப்பிடிக்க மறுக்கின்றோம்..
இந்த வைரஸ், பாதிக்கப்பட்ட நபரின் சளி , இருமல், தும்மல் மூலமாகத் தான் சக மனிதர்களுக்குப் பரவுகின்றது.

1.எனவே , பொது இடங்களில் இருமல் , மற்றும் தும்மல் வரும்போது மற்றவர்கள் மேல் படாதவாறு ஒரு துணி , கர்சீப் அல்லது டிஷூ பேப்பரை பயன்படுத்த வேண்டும்..

2. நாம் பயன்படுத்திய துணி , கர்சீப் , டிஷூ பேப்பரை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் ஒரே துணி மற்றும் கர்சீபை பல நாட்கள் பயன்படுத்துவதும் தவறு.அவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்தப்பின் தான் மறுபடியும் பயன்படுத்த வேண்டும்.

3. ஒரே வீட்டில் உள்ள நபர்கள் , அவர்களுக்கென்று தனித்தனியாக டவல் , கர்சீப் , சோப்புகளை பயன்படுத்த வேண்டும்..

4.யாருக்காவது சற்று அதிகமாக சளி , இருமல் இருப்பின் அவர்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருக்கக்கூடாது.குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்ட நபரை 3-7 நாட்கள்வரை பார்க்காமல் இருப்பதே நல்லது..

5.குழந்தைகளுக்கு இந்த காய்ச்சலின் அறிகுறி இருந்தால் , அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு 5 நாட்கள் வரை அனுப்புவதை தவிர்க்கவேண்டும். (ஒரு வாரம் அவர்களுக்கு ஓய்வு மிக அவசியம்.. பெற்றோர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கவேண்டும்).

6. மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். (கோவில்கள், திரை அரங்குகள் , மார்கெட், நெடுதூர இரயில், பேருந்து பயணங்கள் போன்றவை)

கேள்வி - பன்றிக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் என்ன?
பதில்-சாதாரண காய்ச்சல் , சளி , இருமல், தொண்டை கரகரப்பு , உடம்பு வலி , தலைவலி , குளிர்காய்ச்சல் , மற்றும் சிலருக்கு வாந்தி , பேதி கூட இருக்கலாம்..

இவை அனைத்தும் 99 % நபர்களுக்கு ஒரு வாரத்தில் குணமடைந்து விடும்.

கேள்வி - மருத்துவமணைகளில் கிடைக்கும் அறுவை சிகிச்சை மாஸ்க் பயன்படுத்தினால் , இந்த வைரஸ் பரவுவதை தடுக்க முடியுமா?
பதில்-அறுவைசிகிச்சை மாஸ்க் பயன்படுத்துவது பயன்அளிக்காது..ஏனெனில் வைரஸுகள் அதுமுழுமையாக கட்டுப்படுத்தாது.. மேலும் இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஒருமுறை அவற்றை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.. மேலும் , அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.. எனவே

சாதாரண சர்ஜிகல் மாஸ்க் கை நோய்தடுப்பிற்காக உபயோகிப்பது வீண்.. அவசியம் ஏற்பட்டால் ஒன்றின் மீது ஒன்றாக மூன்று மாஸ்க்குகளை அணிந்து கொள்ளலாம்( இவற்றையும் இரண்டு மணிநேரத்திற்குத் தான் பயன்படுத்தவேண்டும்.). அல்லது N-95 என்ற சிறப்பு மாஸ்க்கை பயன்படுத்தலாம்..

கேள்வி - இந்த பன்றிக்காய்ச்சலுக்கு வைத்தியம் என்ன? கண்டிப்பாக மருத்துவரை நாட வேண்டுமா ?
பதில்-முதலாவது மற்றும் முக்கியமானது ,முழுமையான ஓய்வு (டிவி பார்ப்பது , செல்போன் அதிகமாக பயன்படுத்துவதையும் சேர்த்து).. பிறகு தங்குமிடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் - பயன்படுத்திய கர்சீப் , துணிகளை முறையாக அப்புறப்படுத்துதல் , அதிகளவு தண்ணீர் குடித்தல்( 2-3 லிட்டர் ), எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை உண்ணுதல் போன்றவையே 99%பன்றிக்காய்ச்சலை குணப்படுத்திவிடும்.. காய்ச்சலுக்கு பாராசிடமால் மாத்திரைகளை பயன்படுத்தலாம்..ஆண்டிபயாடிக் மருந்துகள் பெரிதாக பயன்தராது..

கேள்வி -  எப்போது மருத்துவரை /மருத்துவமணையை அணுகவேண்டும் ?
பதில்-மேற்கூறிய அறிகுறிகளுடன் , முச்சுத்தினறல் இருந்தாலோ , அல்லது அதிகப்படியான காய்ச்சல் -தலைவலி-வாந்தி - குளிர்காய்ச்சல் இருந்தாலோ மருத்துவர்களை அணுகவேண்டும். .

கேள்வி - தடுப்பூசிகள் பயன் அளிக்குமா ? அவசியம் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டுமா ?
பதில்-பொதுவாக குளிர்காலம் துவங்குவதற்கு 15 நாட்கள் முன்னே ,
தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். . சமுதாயத்தில் பன்றிக்காய்ச்சல் பரவிய பின்னர் , தடுப்பூசி போட்டுக்கொள்வது பெரிதாக பயன்தராது..(எனவே இந்த ஆண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் , நாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லையே என்று அச்சப்படத் தேவை இல்லை)

பன்றிக்காய்ச்சல் குறித்தான செய்திகளை உங்கள் நண்பர்களிடத்தில் பகிருங்கள் ! அதன்மூலம் முழுமையான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்துவோம் !

பன்றிக்காய்ச்சல் மேல் உள்ள அச்சங்களை முதலில் போக்குவோம்! பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுப்போம்! அவற்றை எதிர்கொண்டு மீள்வோம்!

-நன்றியுடன்

மரு.கலைக்கோவன் பாலசுப்ரமணியன் , நுரையீரல் மருத்துவர்.
@Kalaikovan Balasubramaniyan
"பன்றிக்காய்ச்சல் - அறிந்ததும் அறியாததும் !

பொதுவாக நம் மக்களிடையே , பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வுகளைக் காட்டிலும் , பயம் தான் அதிகமாக உள்ளது..

மக்களின் பயத்தை மூலதனமாகக்கொண்டு ,பல்வேறு தொழில்துறையினர் அதன்மூலம் லாபம் அடைகின்றனர்! இறுதிவரை நம் மக்கள் பயத்துடனே , பன்றிக்காய்ச்சலை பற்றிய அடிப்படை விடயங்களை தெரிந்து கொள்ளாமலே போய் விடுகின்றனர்..
2009 ஆம் ஆண்டு , உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த வைரஸ் நோய்கிருமிகளால் பாதிக்கப்பட்ட போதே , நம் ஆட்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.. ஆனால் அது நம் மக்களை முறையாக சென்றடையவில்லை.. நமது அரைகுறை புரிதலின் தாக்கமே , இப்போது 2015ஆம் ஆண்டு மீண்டும் பயத்துடன் பன்றிக்காய்ச்சலை அணுகுகின்றோம்..

மக்கள் பலருக்கு உள்ள சந்தேகங்களும் , அதற்கான விடைகளையும் சற்று ஆராய்வோம் ..

கேள்வி - ஏன் இதற்கு பன்றிக்காய்ச்சல் என பெயரிடப்பட்டது ?

பதில்- இந்தக் காய்ச்சல் முதன்முதலில் பன்றிகளிடம் அதிகளவு காணப்பட்டதால் இதற்கு அந்தப் பெயர் கொடுப்பட்டது.. இது குறிப்பாக பன்றிகளின் நுரையீரல் மண்டலத்தைத் தாக்கக்கூடிய வைரஸ்நோய்!

கேள்வி - பன்றிகள் அதிகம் உள்ள ஊர்களில் தான் இந்த காய்ச்சல் இருக்குமா ?

பதில் - அவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வைரஸ் , பன்றிகள் மூலமாக மனிதர்களைத் தாக்கினாலும். பிறகு பாதிக்கப்பட்ட நபரின் சளி , இருமல், தும்மல் மூலமாக சக மனிதர்களுக்குப் பரவும்...

கே -இது எய்ட்ஸ் , எபோலா போன்றதொரு கொடிய வைரஸா ?

ப- இல்லவே இல்லை..இது ஒரு சாதாரணமான வைரஸ்..பனிக்காலங்களில் இதனின் உக்கிரம் சற்று அதிகமாக காணப்படுவதால் ,நாம் விழிப்புடன் இருப்பது நல்லது!

கே -இந்த வைரஸ் யாரை எல்லாம் எளிதாகத் தாக்கும்?

ப- பொதுவாக நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களை இந்த வைரஸ் எளிதாகத் தாக்கும். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் , கர்ப்பிணி தாய்மார்கள், சக்கரை நோயாளிகளிடம் இந்த பாதிப்பு அதிகளவில் காணப்படும். இருப்பினும் இது யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் ,.

கே -இந்த வைரஸ் காய்ச்சலில் இருந்து எப்படி தப்பிப்பது ?

ப- மிகவும் எளிதான வழிமுறை தான்.. ஆனால் நாம் தான் அவற்றை கடைப்பிடிக்க மறுக்கின்றோம்.. 
இந்த வைரஸ், பாதிக்கப்பட்ட நபரின் சளி , இருமல், தும்மல் மூலமாகத் தான் சக மனிதர்களுக்குப் பரவுகின்றது.

1.எனவே , பொது இடங்களில் இருமல் , மற்றும் தும்மல் வரும்போது மற்றவர்கள் மேல் படாதவாறு ஒரு துணி , கர்சீப் அல்லது டிஷூ பேப்பரை பயன்படுத்த வேண்டும்..

2. நாம் பயன்படுத்திய துணி , கர்சீப் , டிஷூ பேப்பரை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் ஒரே துணி மற்றும் கர்சீபை பல நாட்கள் பயன்படுத்துவதும் தவறு.அவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்தப்பின் தான் மறுபடியும் பயன்படுத்த வேண்டும்.

3. ஒரே வீட்டில் உள்ள நபர்கள் , அவர்களுக்கென்று தனித்தனியாக டவல் , கர்சீப் , சோப்புகளை பயன்படுத்த வேண்டும்..

4.யாருக்காவது சற்று அதிகமாக சளி , இருமல் இருப்பின் அவர்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருக்கக்கூடாது.குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்ட நபரை 3-7 நாட்கள்வரை பார்க்காமல் இருப்பதே நல்லது..

5.குழந்தைகளுக்கு இந்த காய்ச்சலின் அறிகுறி இருந்தால் , அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு 5 நாட்கள் வரை அனுப்புவதை தவிர்க்கவேண்டும். (ஒரு வாரம் அவர்களுக்கு ஓய்வு மிக அவசியம்.. பெற்றோர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கவேண்டும்).

6. மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். (கோவில்கள், திரை அரங்குகள் , மார்கெட், நெடுதூர இரயில், பேருந்து பயணங்கள் போன்றவை)

கே -பன்றிக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் என்ன? 

ப- சாதாரண காய்ச்சல் , சளி , இருமல், தொண்டை கரகரப்பு , உடம்பு வலி , தலைவலி , குளிர்காய்ச்சல் , மற்றும் சிலருக்கு வாந்தி , பேதி கூட இருக்கலாம்.. 
இவை அனைத்தும் 99 % நபர்களுக்கு ஒரு வாரத்தில் குணமடைந்து விடும்.

கே - மருத்துவமணைகளில் கிடைக்கும் அறுவை சிகிச்சை மாஸ்க் பயன்படுத்தினால் , இந்த வைரஸ் பரவுவதை தடுக்க முடியுமா?

ப- அறுவைசிகிச்சை மாஸ்க் பயன்படுத்துவது பயன்அளிக்காது..ஏனெனில் வைரஸுகள் அதுமுழுமையாக கட்டுப்படுத்தாது.. மேலும் இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஒருமுறை அவற்றை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.. மேலும் , அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.. எனவே சாதாரண சர்ஜிகல் மாஸ்க் கை நோய்தடுப்பிற்காக உபயோகிப்பது வீண்.. அவசியம் ஏற்பட்டால் ஒன்றின் மீது ஒன்றாக மூன்று மாஸ்க்குகளை அணிந்து கொள்ளலாம்( இவற்றையும் இரண்டு மணிநேரத்திற்குத் தான் பயன்படுத்தவேண்டும்.). அல்லது N-95 என்ற சிறப்பு மாஸ்க்கை பயன்படுத்தலாம்..

கே -இந்த பன்றிக்காய்ச்சலுக்கு வைத்தியம் என்ன? கண்டிப்பாக மருத்துவரை நாட வேண்டுமா ?

ப- முதலாவது மற்றும் முக்கியமானது ,முழுமையான ஓய்வு (டிவி பார்ப்பது , செல்போன் அதிகமாக பயன்படுத்துவதையும் சேர்த்து).. பிறகு தங்குமிடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் - பயன்படுத்திய கர்சீப் , துணிகளை முறையாக அப்புறப்படுத்துதல் , அதிகளவு தண்ணீர் குடித்தல்( 2-3 லிட்டர் ), எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை உண்ணுதல் போன்றவையே 99%பன்றிக்காய்ச்சலை குணப்படுத்திவிடும்.. காய்ச்சலுக்கு பாராசிடமால் மாத்திரைகளை பயன்படுத்தலாம்..ஆண்டிபயாடிக் மருந்துகள் பெரிதாக பய்ன்தராது..

கே - எப்போது மருத்துவரை /மருத்துவமணையை அணுகவேண்டும் ?

ப- மேற்கூறிய அறிகுறிகளுடன் , முச்சுத்தினறல் இருந்தாலோ , அல்லது அதிகப்படியான காய்ச்சல் -தலைவலி-வாந்தி - குளிர்காய்ச்சல் இருந்தாலோ மருத்துவர்களை அணுகவேண்டும். .

கே - தடுப்பூசிகள் பயன் அளிக்குமா ? அவசியம் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டுமா ?

ப- பொதுவாக குளிர்காலம் துவங்குவதற்கு 15 நாட்கள் முன்னே , தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். . சமுதாயத்தில் பன்றிக்காய்ச்சல் பரவிய பின்னர் , தடுப்பூசி போட்டுக்கொள்வது பெரிதாக பயன்தராது..(எனவே இந்த ஆண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் , நாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லையே என்று அச்சப்படத் தேவை இல்லை)

பன்றிக்காய்ச்சல் குறித்தான செய்திகளை உங்கள் நண்பர்களிடத்தில் பகிருங்கள் ! அதன்மூலம் முழுமையான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்துவோம் !

பன்றிக்காய்ச்சல் மேல் உள்ள அச்சங்களை முதலில் போக்குவோம்! பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுப்போம்!  அவற்றை எதிர்கொண்டு மீள்வோம்!

-நன்றியுடன் 

மரு.கலைக்கோவன் பாலசுப்ரமணியன் , நுரையீரல் மருத்துவர். @Kalaikovan Balasubramaniyan"
Arun Prasath M

உலகம் தோன்றிய வரலாறு (அன்று முதல் கி.பி. 1947 வரை)

கி.மு 14 பில்லியன் : பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன் : பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்: நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில்
தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000: இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000: முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள்கொண்டு வந்தனர்.

கி.மு. 300000 : யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000 : நியாண்டெர்தல் மனிதன், கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000: கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000: தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000: தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000: ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000: ஒளியர் கிளை மொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527: முதல் தமிழ்ச் சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100: பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற
நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000: கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087: கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000 : கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000: உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000: சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000 : கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200 : சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113 : அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக்
கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102 : சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்:
இடமிருந்து வலம்:
நெடுமண்டை நீள்வட்ட வடிவம்;
இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்-
நீளுருண்டை வடிவமும்
ஆப்பு வடிவமும்;
நடுமண்டை ஐங்கோண வடிவம்.

கி.மு - 3100 - 3000: ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600 : எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387 : இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப்பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000: காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915 : திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900: வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500: முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450: உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316: மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250 : மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200: ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000 : உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600 : வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950 : அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950 : வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925: யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900 : இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850 பின் : இப்போதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்க வில்லை.)
தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன,
கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொரு நராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம்,
ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776 : கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி. குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு:கெராஸிமவ்)

கி. மு. 750 : பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700: சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543: கௌதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600: லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னல மின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600 : கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப் பட்டுள்ளது.

கி. மு. 599 - 527 : மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560 : பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478 : கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500 : கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478 : இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450: ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348 : சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400 : கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328: உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270: மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326 : அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305 : சந்திரகுப்த மௌரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302 : சந்திரகுப்தரின் அமைச்சர் கௌடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300 : சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300 : கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232: மௌரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245 : சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251 : புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220 : சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221 : புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200: கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180 : குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி.உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர்வாழ்ந்த காலம்.

கி.மு. 200 : முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200 : தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87: ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62 : செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42 : யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25 : பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்தஉக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள்.இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார்,பொன்முடியார்கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31: உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9: இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன்.
கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர்ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1 : கருவூர் ஏறிய ஔ¢வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4 : ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

கி.பி. 1 - 20: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல்கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வௌ¢ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.

கி.பி. 10 : உலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன்.

கி.பி. 21 - 42: குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வௌ¢ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம்.

கி.பி. 42 - 100: சோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன் நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை, இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன், பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன் சாத்தனார், பாண்டியன்
இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின் அற்புதகாலம். கண் இமையின் கட்டமைப்பு திட்ட வரைவு- ஐரோப்பிய வகையும் (இடம்) மங்கோலிய வகையும் (வலம்) குறுக்கு வெட்டும் நேர் தோற்றமும். பெல்ஸின் ( bellz ) படி மார்ட்டின் (martin,1928 ) செய்த உருமாற்றம்.

கி.பி. 53 : ஏசுநாதரின் தூதவரில் ஒருவரான செயின்ட் தாமஸ் இக்கால சென்னையில் மறைவு.

கி.பி. 101 - 120 : பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆட்சி.

கி.பி. 105 : சைனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

கி.பி. 107 : ரோமப் பேரரசு அளவிற் மிகபெரியதான காலம்.

கி.பி.120-144: ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆட்சி. மூவேந்தர்கள் எதிர்த்தனர், ஆதிக்கும்ப கல்வெட்டு மூலம்.

கி.பி.145-175 : வெற்றிவேற்செழியன் ஆட்சி. சிலப்பதிகாரக் கதை நடைப்பெற்ற காலம் கண்ணகிக்குக் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன். இலங்கை மன்னன் கயவாகு, சோழன் மாவண்கிள்ளி வாழ்ந்த காலம்.

கி.பி.175-200 : கடைக்கழக இலக்கியங்கள் தொகுத்து வழங்கப்பட்டன. நற்றிணை (மாறன் வழுதி)- ஐங்குறுநூறு ( சேரன் யானைகட்சேய்) குறுந்தொகை (பூரிக்கோ- பாண்டியன்-உக்கிரப்பெருவழுதி) மனிதனுடைய மயிரின் நிறமும் விழித்திரையினதும் தோலினதும்
நிறம், கன்களின் வடிவம் ஆகியவற்றின் முக்கிய வகைகள்:பல்வேறு நிறங்கள் கொன்ட மயிர்கள், விரைப்பானவை (மேலே இடம்),சுருட்டையானவை (மேலே வலம்), அலை படிந்தவை; கண் வெளிறியது, கலப்பு நிறம் உள்ளது, கருமயானது (கரு விழியில்

மங்கோலிய வகையினரிடமும் புக்ஷ்மன்களிடமும் காணப்படும் இமையோர மடிப்பு காட்டப்பட்டிருக்கிறது); வெளிறியதும், இடைப்பட்டதும், ஆழ் நிறம் உள்ளதுமான தோல்.

கி.பி.180: இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதினார்.

கி.பி.200 : இக்கால கம்போடியாவிலும், மலேசியாவிலும் தமிழ் அரசு.

கி.பி.250-275 : வரகுண பாண்டியன் ஆட்சி

கி.பி.275-300 : மாணிக்கவாசகர் காலம்.

கி.பி.300-700: தமிழகத்தின் தென்பகுதி களப்பிரகர்களின் ஆட்சி.

கி.பி.300-700: தமிழகத்தின் வடபகுதி பல்லவர்களின் ஆட்சி, பல்லவ மன்னர்கள் விசுணுகோபன், முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் சிம்மவர்மன், சிம்மவிசுணு ஆகியோரின் ஆட்சி.

கி.பி.358 : துருக்கியைச் சேர்ந்த அன்ஸ் எனும் பெரும் போர் வீரன் ஐரோப்பா நாடுகளைப் படை எடுத்து வெற்றி கண்டான்

கி.பி.400 : மனுதர்மம் அமைக்கப்பட்டது.

கி.பி.419 : பெருநாட்டில் 150 அடி ஆதவன் கோவில் அமைத்தனர்.

கி.பி.450-535 : தெற்கில் போதிதர்மர் காலம்.

கி.பி.570-632: முகமது நபிநாயகம் இஸ்லாமிய மதம் ஏற்படுத்தல். உருவ வழிபாடு இன்மை. ஒரே கடவுள் அல்லா என்ற தத்துவம்

கி.பி.590-631 : சைவ நாயனார் திருநாவுக்கரசர் காலம். 312 திருமறைப்பாடல்களை இயற்றினார். இவரை அப்பர் என்றும் அழைப்பர்.

கி.பி.600-900: வைணவ ஆழ்வார்காலம். 4000 பாடல் கொண்ட நாலாயிர திவ்விய பிரபந்தம் தொகுக்கப்பட்டது.

கி.பி.610 : நபி நாயகம் இஸ்லாமிய கருத்துக்களை கூறல்.

கி.பி.622 : நபி நாயகம் மெக்கா தப்பிச் செல்லல்.

கி.பி.630-644 : சைன திரு உலாப்பயணி யுவான் சுவாங் பயணம். தலைத் தோலின் ஊடாக வெட்டுக்கள்.இடம்- சுருட்டை மயிருடன்.வலம்- நேர் மயிருடன் படங்களின் ஓரங்களில் அதே மயிர்களின் குறுக்கு வெட்டுக்கள்.

கி.பி.641-645 : அராபிய முகமதியர் எகிப்த், மெசபடோமியா, பெர்சியா நாடுகளைக் கைப்பற்றினர்.

கி.பி.650 : திருஞான சம்பந்தர் காலம். 384 பாடல்களை கொண்ட திருமறையை இயற்றினார்

கி.பி.788 : ஆதிசங்கரர் தோற்றம் (788-820) விவேக சூடாமணி இயற்றினார்.

கி.பி.800: இரண்டாம் அவ்வையார் அவ்வை குறள் இயற்றினார். நம்மாழ்வார் பெரும் வைணவ முனி. காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர். ஆண்டாள் கிருட்டிணன் பற்றிய பாடல்களை பாடியவர். பக்திமார்க்கம், புத்த மதம் தமிழ்நாட்டில் பரவுவதை தடுத்தது. கௌதம புத்தரை ஒன்பதாவது அவதாரமாக்கினர்.

கி.பி.825: சுந்தரர் நாயன்மார்களில் ஒருவர். இப்போதைய தென் ஆற்காட்டில் தோன்றினார். 38,000 சிவப்பாடல்களை எழுதியுள்ளார். தற்போது 100 பாடல்கள் கிடைத்துள்ளன. இவை திருமறை ஏழாவது புத்தகத்தில் சேர்ந்துள்ளன.

கி.பி.850: மாணிக்கவாசகர் தோற்றம். திருவாசகம் திருபள்ளி எழுச்சி, திருவெம்பாவை இவரது நூல்கள். வைணவர்களின் சமயக்கட்சி தமிழ்நாட்டில் ஆரம்பம்.

கி.பி.900 : குண்டலினி யோகப் பயிற்சி மட்ஸ்சிந்தர நாதர் காலம். பத்கூம் மண்டையோட்டு முகடு (இடப்புற, நேர், மேலிருந்து தோற்றம்).

கி.பி.900 : இந்தோனேசிய பேரரசு புத்தமதம் விடுத்து சைவத்தை ஆதரித்தது. 150 சைவக்கோவில்கள் கட்டப்பட்டன.

கி.பி.1000 : உலக மக்கட் தொகை 256 மில்லியன். (இக்காலத்து கூறப்படும்)
இந்தியா மக்கட்தொகை 79 மில்லியன்

கி.பி.1000: சிகாண்டிநேவியாவைச் சேர்ந்த கடற் பயணிகள் வட அமெரிக்காவிலுள்ள நோவகோசியா அடைந்தனர்.

கி.பி.1000 : பாலிநேசிய இனத்தவர் நியுசிலாந்துவை அடைந்தனர் உலகில் அதிக அளவில் பரவியுள்ளவர்கள்.

கி.பி.1000: துருக்கிய முகமதியர்கள் ஆப்கானித்தானம் பெசாவர் வழியாக இக்கால இந்தியாவில் முதல் முறையாக நுழைந்தவர்கள். முதலாவது ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின்னர்.

கி.பி.1010 : சைவ நூற்தொகுப்பு திருமறை நம்பியாண்டார் நம்பி அவர்களால் தொகுக்கப்பட்டது.

கி.பி.1017-1137 : தமிழ்ச் சித்தாந்தி இராமனுசர் காலம். பக்தி மார்க்கம் கடைப் பிடிக்கப்பட்டது.

கி.பி.1024: முகமது கஜினி சோமநாதபுரம் கோவிலை அழித்தான்.

கி.பி.1040 : சைனர்கள் திசை அறி கருவி கண்டுபிடித்தனர்.

கி.பி.1150: வீர சைவர் தலைமை மேற்கொண்டு பசுவண்ணா, மனிதநேயம், மனிதர்களிடையே சம நிலை, சிவலிங்க வழிபாடு இவற்றை போதித்தார்.

கி.பி.1197 : நாலந்தாவில் புத்தசமய பல்கலைக்கழகம் முகமதியரால்
அழிக்கப்பட்டது.

கி.பி.1230-60 : ஒரிசாவில் கொனர்க்கில் சூரியன் கோவில் கட்டப்பட்டது.

கி.பி.1232 : போசள வீர நரசிம்மன் காவிரிக்கரையில் மகேந்திரமங்கலத்தில் பாண்டியர்களையும், காடவ கோப்பெருஞ்சிங்கனையும் தோற்கடித்து, மூன்றாம் இராசராசனை விடுவித்து சோழ நாட்டை மீட்டு சோழரிடம் ஒப்படைத்தான். போசளர்கள் திருச்சிக்கு அருகாமையில் கண்ணூர் கொப்பத்தில் துணை தலைநகரை உருவாக்கினார்.

கி.பி.1250 : சைவ சித்தாந்தி மெய்கண்டார் காலம்.

கி.பி.1268-1369 : தமிழ் அறிஞர் வேதாந்த தேசிகர் காலம். வடகலை வைணவத்தை காஞ்சியில் அறிமுகப்டுத்தினார்.

கி.பி.1272: மார்க்கோ போலோ தற்போதைய இந்தியா வந்தார்.

கி.பி.1296: அலாவூதின் கில்ஜி பெரும்பாலான தற்போதைய இந்தியாவை தன் ஆட்சியில் கொண்டுவந்தார். அவருடைய தளபதி மாலிக்கப்பூர் இராமேசுவரம் வரை படை எடுத்து வென்றார்.

கி.பி.1300 : கன்யாகுமரியில் முகமதிய மசூதி அமைக்கப்பட்டது.

கி.பி.1311 : தமிழ்நாட்டில் முகமதியர் ஆட்சி வேரூன்றியது.

கி.பி.1333-1378: மதுரை ஒரு சுதந்திர சுல்தானியப் பகுதியாக முகமதியர் ஆட்சியில் இருந்தது, முகமதியர்களின் வெற்றியைக் கண்டு கொதித்த இந்துக்கள் தக்காணத் தின் கிழக்கில் புரலாய நாயக்கனும், கபாய நாயக்கனும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

கி.பி.1340: போசள மன்னன் மூன்றாம் வல்லாலன் காலத்தில் மதுரை சுல்தான் சலாவுதீன் அசன்சாவை கொன்றான். சம்புவராயர்கள் சோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்) மூன்னூற்றுப் பள்ளியை ஆண்டு வந்தார்கள். பிற்காலத்தில்

ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராஜகம்பீர இராச்ஜியம் என்ற பெயரில் ஆன்டனர். விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர். சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றி உள்ளனர். அழகிய சிங்கன், இராஜராஜசம்புவராயன், திருபுவனவீரசம்புவராயன் அழகிய சோழசாம்புவராயன் அத்திமல்லன், வீரப்பெருமாள், எடிதிலி சம்புவராயன், இராஜகம்பீர சம்புவராயன் ஆகியோர் சம்புவராயர்களின் ஆரம்ப கால அரசர்கள்.

கி.பி.1336 : விஜய நகரஅரசு(1336-1646) தொடர்ந்தது. அரிகரன் விஜயநகர அரசை நிறுவினான். அரிகரனின் தம்பியும் துணையரசனுமாகிய புக்கன் முகமதியர்களுக்கு எதிராக போர் செய்தான். கம்பணன் தமிழகம் உள்ளிட்ட தென்மண்டலத்தில் விஜயநகரத்தின் மகாமண்டலேசுவரனாக விளங்கினான். விஜயநகர ஆட்சிகாலத்தில் - தெலுங்கு பிராமணர்கள் தமிழகம் வந்தனர். துளுநாட்டைச் சேர்ந்த வேளாண். தொழில் செய்த ரெட்டியார்களும் வந்தனர். சௌராட்டிரர்களும் குஜராத்திலிருந்து வந்தனர்.

வருணாசிரமம் வழியுறுத்தப்பட்டது. போர்த்துகீசியர்கள் வழி வந்த கிறித்துவத் துறவிகள் தமிழகத்துக் கடலோர பகுதிகளில் சமயப்பணி ஆற்றினார். சிற்றம்பர் நாடிகள் என்ற புலவரும், இரட்டைப் புலவர்களும், காலமேகப் புலவரும் இக்காலத்தில் வாழ்ந்தனர். 15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கிருட்டிண தேவராயர் புலவர்களின் புரவலராக இருந்தார்.

கி.பி.1337: உலகம் முழுமையும் பிளேக் நோய் பரவி 75 மில்லியன் மக்கள் உயிர் கொள்ளை கொண்டது.

கி.பி.1350 : தென்னிந்திய சித்தாந்தி அபிய திக்தத்திரர் காலம். சைவ, வைணவ வேற்றுமை அகற்ற பெரு முயற்சி எடுத்தவர்.

கி.பி.1440: ஜெர்மனியில் அச்சடிக்கும் இயந்திரம் சோகன்ஸ் கட்டன்பர்க் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கி.பி.1469-1538: சீக்கிய மதம் கண்ட குரு நானக் காலம்

கி.பி.1492: கிரிசுடோபர் கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்க எண்ணி சேன் செல்வி டோர் சென்று வட அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.

கி.பி.1498 : போர்த்துக்கல்லைச் சேர்ந்த வாசுகோடா காமா கடல் வழி முதன்
முதலாக கல்கத்தா வந்து சேர்ந்தார்.

கி.பி.1500 : திருப்புகழ் இயற்றிய தமிழ்ச் சித்தாந்தி அருணகிரிநாதர் காலம்.

கி.பி.1500: புத்த சைவ அரச குமாரர் சாவா விலிருந்து படையெடுத்து வந்த
முகமதியர்களால் வெளியேற்றப்பட்டார்.

கி.பி.1500 : உலக மக்கள் தொகை 425 மில்லியன். தற்போதைய இந்திய மக்கள் தொகை 105 மில்லியன்.

கி.பி.1509: தமிழகத்தில் கிருட்டிணதேவராயர் ஆட்சி.

கி.பி.1510: போர்த்திகீசிய கத்தோலிக்கப் பாதிரியார் வருகை. ஐரோப்பியர் வருகை ஆரம்பம்.

கி.பி.1546: நாயக்கர்கள் ஆட்சி, விசய நகர ஆட்சிக்குப் பின்னர் இடைப்பட்ட காலத்தில் சூரப்ப நாயக்கரும், கிருட்டிணப்ப நாயக்கரும் ஆண்டனர்.

கி.பி.1565: விஜய நகர ஆட்சி முகமதியர்களால் அழிக்கப்படது...........

Popular Posts

Facebook

Blog Archive