இலுப்பை மரம் - அழிவின் விளிம்பில்
சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது.
Author: Infomas | ஏப்ரல் 30, 2019 |
Author: Infomas | ஏப்ரல் 30, 2019 |
Author: Infomas | ஏப்ரல் 30, 2019 |
Author: Infomas | ஏப்ரல் 30, 2019 |
Author: Infomas | ஏப்ரல் 30, 2019 |
Author: Infomas | ஏப்ரல் 24, 2019 |
நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்...
🌝 தவளை கத்தினால் மழை
🌝 அந்தி ஈசல் பூத்தால்
அடை மழைக்கு அச்சாராம்
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது
🌝 தை மழை நெய் மழை
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு
🌝 வெள்ளமே ஆனாலும்
பள்ளத்தே பயிர் செய்
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு
🌝 களர் கெட பிரண்டையைப் புதை
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு
🌝 நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு
🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை
🌝 உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ
🌝 அகல உழவதை விட
ஆழ உழுவது மேல்
🌝 புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை
🌝 ஆடு பயிர் காட்டும்
ஆவாரை கதிர் கட்டும்
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர்
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்
🌝 தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம்
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை
🌝 சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்
🌝 விதை பாதி வேலை பாதி
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு
🌝 கோப்பு தப்பினால்
குப்பையும் பயிராகாது
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்
வாழ்க வையகம்! வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.
யாரையும் நம்பாதீர்கள்.
உழவே தலை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.
கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும் - இனி
பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!!
ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.
நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது.
Author: Infomas | மார்ச் 17, 2019 |
Author: Infomas | மார்ச் 17, 2019 |
Author: Infomas | மார்ச் 17, 2019 |
Author: Infomas | மார்ச் 17, 2019 |
நாகரீக பெண்களே வணக்கம்.
பொள்ளாச்சி துயரத்தை தாங்க முடியாத பெண் குழந்தையின் தந்தையாக எழுதுகிறேன்....
நாகரீக பெண்களே..
உண்மையான தோழமைக்கும் , உடலுக்காக ஏங்கி உங்கள் பின் திரியும்
தருதலைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நீங்கள்..?
ஆத்மார்த்தமான அன்புக்கும்,
உங்களை அணைக்க மட்டுமே அலையும்
அற்ப புத்தி ஆண்களுக்கும் வித்தியாசம்
அறியாதவர்களா நீங்கள்..?
இரவலாகவோ , சொந்தமாகவோ, ஒரு இருசக்கர வாகனம் வாகனங்கள் வைத்திருப்பது மட்டுமே வாழ தகுதி...?
கண்டபடி முடியை வெட்டிக் கொண்டு
கழிசடை தமிழ் சினிமா கதாநாயகன் போன்ற செயற்கையான தோற்றம்
உங்களை ஈர்க்க போதுமான ஒன்றா...?
காலை முதல் இரவு வரை நேரிலும் , கைபேசியிலும் தொடர்ந்து உங்கள்
பின் தொடருபவன் வேலை வெட்டி இல்லாதவன் , வேறு நோக்கம் உள்ளவன் என்பதை கூடவா அறியாதவர்கள் நீங்கள்....?
இதை பார்த்து உண்மை காதல் என்றும் நட்பு என்றும்
ஏமாந்து விட்டேன் என்கிற அளவுக்கு தான் உங்கள் அறிவு உள்ளதா..?
எல்லாவற்றையும் விட தனியாக இருக்கும் வீட்டிற்கு அழைத்த பின்புமா
உனக்கு வந்த ஆபத்தை நீ உணரவில்லை..?
நீங்கள் கற்ற கல்வியின் பலன் இவ்வளவு தானா..?
உன் வயதில் அடுத்த தெருவு பிள்ளையார் கோவிலுக்கு சென்று வர உன் தாத்தாவிடம் கால் வலிக்க நின்று அனுமதி வாங்கிய உன் அம்மாவுக்கு வராத பாதிப்பு உனக்கு வருகிறது என்றால் உனக்கு கொடுக்கப் பட்டது சுதந்திரமா..? சாபக்கேடா..?
கைபேசியையே கட்டிலுக்குள் மறைத்து வைத்து எங்களுக்கு எல்லாமே தெரியும்
என்று ஏமாந்து நிற்கும் நாகரீக பெண்களே...
ஏமாந்ததும் , பாதிப்பு அடைந்ததும் நீங்கள் மட்டுமே அல்ல
உங்கள் மீது நம்பிக்கை வைத்த உங்கள் குடும்பமும் , இந்த சமூகமும்தான்...
அனைத்தும் Google ல் கிடைக்கும்
நல்லதும் , கெட்டதும் சேர்த்து..
ஆனால் பெற்றோர்களிடம் இருந்து "நல்லது மட்டுமே" கிடைக்கும்.
எனவே அருமை சகோதரிகளே
கல்வியுடன் சேர்ந்து மனிதர்களின்
மனநிலையையும் சேர்த்து படியுங்கள்.
கைபேசியை ஆபத்துக்கு உதவும் உபகரணமாக மட்டுமே பயன்படுத்துங்கள்...
வாழ்க்கைக்கே ஆபத்தானதாகவும் , உபத்திரவம் தரும் வகையிலும் பயன்படுத்தாதீர்கள்.
நாடக காதல் நாதாரிகளிடம் சிக்கி சீரழிய வேண்டாம்...
பெற்றோர்களே
நம் வாழ்நாட்கள் என்பது பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே இல்லை.
குழந்தைகளின் முகம் பார்த்து அவர்கள் உள்ளம் அறியும் அளவுக்கு குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.
நீங்காத நல்ல நினைவுகளும் நல்ல சம்பாத்தியமே..
தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே அதில் சந்தேகம் இல்லை..
இப்படிக்கு ஒரு"தந்தையின் கண்ணீர் குமறல்....
அடுத்து...
நீ அழகா இருக்கே,
உன் கேரக்டர் புடிச்சிருக்கு,
Friendly யா பேசுறதுல என்ன தப்பிருக்கு,
இதெல்லாம் இந்த காலத்துல ரொம்ப சகஜம்,
சரியான பட்டிக்காடா இருக்கியே,
Facebook ல தானே பேசுறங்க,
சும்மா பேசிப்பாரு,
என்னது boyfriend டே இல்லையா,
எனக்கெல்லாம் ரெண்டு மூணு பேரு
இருக்காங்க,
இந்த காலத்துல எந்த பொண்ணு
தப்பு பண்ணாம இருக்கு,
Teenage ன்னா அப்படி இப்படிதாம்பா
இருக்கும், இதெல்லாம் சகஜம்,
சீரியஸா நீ அந்த மாதிரி
ஒரு வீடியோ கூட பார்த்ததே இல்லையா,
Friend கூட சினிமா போனா என்ன தப்பு,
இதெல்லாம் கூட வீட்ல சொல்வாங்க,
சும்மா ஜாலி டிரிப் தானே,
Hot வேணாம் beer வேணா லைட்டா
சாப்பிட்டு பாரு, ஜூஸ் மாதிரி தான் அது,
தயவு செஞ்சி வீட்ல மட்டும் சொல்லிடாத
அப்புறம் வெளியவே விடமாட்டாங்க,
எல்லாத்துக்கும் சந்தேகப்படுவாங்க,
Photo வச்சி என்ன பண்ண போறான்,
அதெல்லாம் ஒண்ணும் இல்ல அனுப்பு,
சும்மா லவ் பண்ணி பாரு,
Set ஆனா ஓகே,
இல்லன்னா breakup பண்ணிடு
அவ்ளோதானே...
இதுக்கு ஏன் பயப்புடுறே..
Etc etc etc
இவையெல்லாம் வெறும் வார்த்தைகள் இல்லை
பொள்ளாச்சியில் நடந்தது போன்ற
அத்தனை பாலியல் பிரச்சனைகளும்
இது போன்ற சாதாரண உரையாடல்களில்
இருந்து தான் தொடங்குகிறது,
வளர்கிறது, அல்லது தூண்டப்படுகிறது.
காமுகர்களைப்பற்றிய போதுமான
விழிப்புணர்வு இல்லாமல் மிக ஆபத்தான
சமூகவலைதளங்களில் உலாவருவதும்,
ஒழுக்கத்தின் மீதான மதிப்பை
இழந்துவிட்டதும், சினிமாவை வாழ்க்கையோடு
பொருத்தி வாழ்வதும், பொறுப்பற்ற வளர்ப்பும்,
பொய் பேசுவதும், தவறை மறைப்பதும்
தாமே தீர்வு தேடுவதும் போன்ற
பலப்பல காரணங்கள் சேர்ந்து
இரக்கமற்ற நவீன கொடூர இளைஞர்களிடம்
சிக்கி நாசமாக போக காரணமாக இருக்கிறது,
எது நடந்தாலும் ஆரம்பத்திலேயே
பெற்றோரிடம் சொல்லிவிடும்
பெண் பிள்ளைகள் பெரும்பாலும்
இதுபோன்ற நரகத்தில் சிக்குவதில்லை....
இழந்ததை திரும்ப பெறமுடியாது,
இனி இருக்கின்ற பெண்களாவது
மேலே சொன்ன ஆபத்தான
போலி வார்த்தைகளை நம்பி
ஏமாறாமல் இருக்கவேண்டும்...
👍👍👍
Author: Infomas | ஜனவரி 24, 2019 |
90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.
கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.
சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.
அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.
ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.
அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.
செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.
*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.
* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.
* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.
* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்
அலைபேசி : 97903 95796
வாழ்த்துகள்
இந்த பதிவை எவ்வளவு குரூப்புக்கு அனுப்ப முடியுமோ அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள்.
அன்பு நண்பர்களே உங்களுக்கு தெரிந்த கிராம நகர பஞ்சாயத்துக்கு தெரிவிக்க வேண்டுகோள் வைக்கிறேன் நான் படித்த பதிவில் மிக மிக சிறந்த பதிவு வீணா போன அரசியல் செய்திகளுக்கு நேரத்தை செலவிட்டு என்ன கண்டோம் இது போல நல்ல *செயதிகளை பரப்பி வான் மழை பெறுவோம்
*
*நன்றி*
🙏🏻🙏🏻🙏🏻
Author: Infomas | ஜனவரி 21, 2019 |
உங்கள் ஊரில் மோசமான தார் சாலையா ....?
என்ன செய்ய வேண்டும் ? யாருக்கு புகார் அனுப்ப வேண்டும் ?
எப்படி புகார் அனுப்ப வேண்டும் ?. எப்படி எழுதுவது ?
அந்த தார் சாலை பற்றிய விபரங்களை உங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் / வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அலுவலர் /துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பணிகள் ) அவருக்கு தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பி அந்த தார் சாலை பற்றிய விபரங்களை பெறுங்கள் .,
அதன் பின் புகார் மனு எழுதுங்கள் ...,
புகார் மனுவில் பொது மக்கள் கையொப்பம் குறைந்தது 10 நபர்கள் கையொப்பம் பெறுங்கள் .,
புகார் மனுவை அனுப்ப வேண்டிய முகவரி.,
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பதிவு தபால் அனுப்புங்கள் .,
புகார் கொடுப்பதற்கான அடிப்படை காரணங்கள் (GROUNDS OF MAKING COMPLAINT):
1. தரமில்லாத தார் சாலையால் பொது மக்கள் மிகவும் பாதிப்பு
அடைந்துள்ளனர்
2. தரமில்லாத தார் சாலையை போட்ட ஓப்பந்தகாரர் மீது
நடவடிக்கை எடுக்கவும்.
3. தரமில்லாத தார் சாலை அமைக்கும்போது ஆய்வு செய்த
மேற்பார்வையாளர், சாலை பொறியாளர் ஆகியவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கவும்.
4. தரமில்லாத தார் சாலையை ஆய்வு
வளர்ச்சி (கிராம-ஊராட்சி) அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கவும்.
5. தரமில்லாத தார் சாலையை சீரமைத்து தருமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
6. பொது மக்களின் வரி பணத்தை தவறாக பயன்படுத்திய
அனைத்து அரசு ஊழியர்கள் மீதும் நடவடிக்கை
எடுத்து,அதனை புகார்தாரர் ஆகிய எங்களுக்கு
தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்....
புகார் மனுவில் நகல் என்று போட்டு...
1.முதல் அமைச்சர் தனி பிரிவு ,முகவரி.
2.குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 2(7)இன் கீழ் உங்கள் வட்டத்திற்கு/தாலுக்கா க்கு உட்பட்ட மாஜிஸ்ட்ரேட் அவர்கள் முகவரி.
3.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,முகவரி.
4.வட்டார வளர்ச்சி அலுவலர்,வட்டார வளர்ச்சி அலுவலகம் ,முகவரி.
ஆகியோருக்கும் அனுப்பவும்
குறிப்பு : நீங்கள் முதலிலேயே தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆவணங்கள் / ஆதாரங்கள் பெற்ற பின்..அவைகளையும் இணைத்து புகார் அனுப்புவது கூடுதல் வலு சேர்க்கும், அதுவே உசிதமானது .,
தங்கள் பகுதியை ஊழல் இல்லாத ஊராக மாற்ற முதல் படியை எடுத்து வையுங்கள்..வாழ்த்துக்கள்..!!
Akram Khan
Author: Infomas | நவம்பர் 25, 2018 |
*புயல் எப்படி உருவாகிறது...*
*புயல் என்றால் என்ன..*
கொஞ்சம் பெரிய பதிவுதான்
புயல் உருவாகும் போதெல்லாம் துறைமுகங்களில் ஒன்றாம் எண், இரண்டாம் எண், மூன்றாம் எண் கூண்டு ஏற்றப்படுவதாக அறிவிக்கிறார்களே, இவை ஒவ்வொன்றும் எதைக் குறிக்கின்றன? இதனால் என்ன பயன்?
முதலில் புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன? தாழ்வுநிலை என்றால் என்ன? சுழற்காற்று என்றால் என்ன?
தண்ணீரின் இயல்பு , பள்ளத்தை நோக்கிப் பாய்வது. காற்றின் இயல்பு மேல்நோக்கி எழுவது. வெப்பக் காற்று விரைவாக மேலெழும். ஈரக்காற்று மெல்ல மெல்ல மேல் நோக்கிச் செல்லும். காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் வைத்துள்ள பெயர் சலனம். ஈரக்காற்று வெகு உயரம் செல்லாமல் வானில் தங்கிவிடுவதால் அது தாழ்வுநிலை. அந்தத் தாழ்வுநிலை காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரித்தால் காற்றழுத்தத் தாழ்வுநிலை.
காற்றழுத்தத் தாழ்வு நிலையின்போது காற்று சாதாரணமாக மணிக்கு 31 கி.மீ. வேகத்தில் வீசும். மணிக்கு 32 கி.மீட்டரிலிருந்து 51 கி.மீ. வரை வீசினால் அதற்கு (காற்று) அழுத்தம் (Depression) என்று பெயர். அதுவே வேகம் அதிகரித்து 52-லிருந்து 61 கி.மீ. வேகத்தில் வீசினால் அது தீவிர அழுத்தம் (Deep Depression). 62.கி.மீட்டரிலிருந்து 88 கி.மீ.வரை வீசினால் புயல் (Cyclonic strom). அதற்கு மேல் கடும்புயல் (89 முதல் 118 கி.மீ.), மிகக் கடும் புயல் (119 முதல் 221 கி.மீ.), சூப்பர் புயல் (222 கி.மீ.க்கு மேல்).
Cyclone என்பது, ‘சுருண்டு கிடக்கும் பாம்பு’ என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து உருவான வார்த்தை.
புயல் வீசும்போது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப் பகுதிகள். குறிப்பாக துறைமுகங்கள். துறைமுகங்களை நோக்கி வரும் படகுகள், கப்பல்கள். கடலில் இருந்து கரையை நோக்கி வருபவர்களை, மீனவர்களை எச்சரிக்க விடுக்கப்படும் ‘சிக்னல்’தான் இந்தக் கூண்டுகள்....
இந்த எச்சரிக்கையைத் தெரிவிக்க, கடலில் இருந்து காண ஏதுவாக, துறைமுகத்தில் ஓர் உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில் கூண்டுகளையும் இரவு நேரத்தில் சிகப்பு-வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். கொடி ஏற்றினால் காற்றில் கிழிந்துவிட வாய்ப்புண்டு. அதனால் கூண்டு.
இந்த எச்சரிக்கையில் 11 நிலைகள் இருக்கின்றன. நிலைமையின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க… எண்ணிக்கை உயர்ந்துகொண்டு போகும். இந்த நிலைக்கு இந்தக் கூண்டு என்பதை இந்திய வானிலைக் கழகம் தீர்மானித்து வைத்திருக்கிறது.
*புயல் எப்படி உருவாகிறது*
புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்புதான். ஒரு ஆரஞ்சுப்பழம் போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் உஷ்ணம் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை. இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும் இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும்.
வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் காற்று விரிவடைந்து மேலே செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து ஒரு வெற்றிடம் உண்டாகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து காற்று வேகமாய் வீச ஆரம்பிக்கிறது. அப்போது பூமியின் சுழற்சியின் காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு சூறாவளியாக மாறி புயலாய் அதாவது குறைந்த காற்று அழுத்த மண்டலமாக உருவாகிறது.
புயலுக்குப் பெயர் வைப்பது ஏன்
வங்காள விரிகுடாவில் சமீபத்தில் உருவான புயல்களின் பெயர்கள் என்ன தெரியுமா? பைலின், ஹெலன், லெஹர். அடுத்து வரவிருப்பது மடி புயல். இந்தப் பெயர்களுக்கு என்ன அர்த்தம்?
பைலின் (நீலக்கல்), ஹெலன் (பிரகாச ஒளி), லெஹர் (அலை). சரி, புயலுக்குப் பெயர் வைப்பது அவசியமா? இதற்கான விடையைப் பின்னால் பார்ப்போம்.
சாதாரணமாக வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தாலேயே புயல்கள் உருவாகுகின்றன. எப்பொழுதெல்லாம் காற்று சூடாகிறதோ, அது விரிந்து லேசாகிறது. லேசான காற்று மேலே செல்கிறது. அது ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பக் கனமான குளிர்ந்த காற்று ஓடோடி செல்கிறது. இந்தக் காற்று செல்லும் வேகம் காரணமாகவே புயல்கள் உருவாகுகின்றன.
புயலின் வகைகள்...
புயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் 19ஆம் நூற்றாண்டில் நினைத்தார். இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார்.
இந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று (Gale), மரக்கிளைகள் ஓடியலாம். 10 என்றால் புயல் காற்று (Strom). 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மணிக்கு 74 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக காற்று வீசுபவை.
அதேநேரம் புயல் என்பது உலகின் பல்வேறு பகு
திகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளில் Hurricane (சூறாவளி), அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி), சீனக் கடற்கரைப் பகுதிகளில் Typoon (சூறாவளிப் புயல்), மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் Willy Willy என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone (புயல்) எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே விஷயத்தையே குறிக்கின்றன.
பெயர் சூட்டுதல்
அடுத்ததாக ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நட வடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.
பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.
புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம். பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன..
இந்தியப் பெருங்கடலில்…
வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு.
புயல் கூண்டுகள் குறித்த விளக்கம்
புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் குறித்த விளக்கங்களின் விபரம் பின்வருமாறு :
ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.
இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.
மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.
5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.
6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.
7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.
8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
9-ம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.
10 ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்று பொருள்...