பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 13 ஜூன், 2014

Php 6ம் பாடம் phpக்கான logout நிரல்

Php ல் லாக் அவுட் நிரல் மிகவும் எளிமையானதாகும்.
Logout என்றால் ஒரு பக்கத்தை விட்டு வெளியே வந்த பின் back button ஆனது சொடுக்கப்பட்டால் மீண்டும் அந்த பக்கத்திற்கு செல்லக் கூடாது.

அதற்கான கோடிங்:

<?php

Session_start();

Session_destroy();

header(“location:”.siteurl);

?>

இங்கே siteurl ஆனது logout லிங்க் க்ளிக் செய்யப்படும் போது நாம் எந்த பக்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதை குறிப்பதாகும்.

உதாரணமாக நாம் logout button சொடுக்கப்படும் போது home.php என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால்

header(“location:home.php”);

என்று அமைய வேண்டும்.

 

--நன்றி மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.

Php 5ம் பாடம்:


Php  யை இயக்குவதற்கு பின் வருவன தேவையாகும்.
1.ஒரு இயக்கமுறைமை(Operating system) பெரும்பாலும் லினக்ஸ்
2.ஒரு வெப் சர்வர்(usually apache on linux or iis on windows). இவை http requestயை இயக்குவதற்கு.
3.ஒரு Php  இண்டர்பிரட்டர் Php  கோடிங்கை பார்ஸ் செய்து இயக்குவற்கு.
4.மேலும் கூடுதலாக ஒரு database engine.(uaually Mysql)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லாமே இணையத்திலிருந்து இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
எடிட்டர் ஆக நீங்கள் நோட்பேட் ,ட்ரீம்வீவர் அல்லது நெட்பீன்ஸ் இவற்றில் ஏதாவது உபயோகிக்கலாம்
முதல் ஸ்கிரிப்ட்:
<?php

// this line of code displays a famous quotation

echo “hello world”;

?>
மேலே உள்ள கோடிங்கை ஒரு html மின் body டேகுகளுக்கு இடையே கொடுக்க வேண்டும்.
<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.0 Transitional//EN" "http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd">
<html xmlns="http://www.w3.org/1999/xhtml">
<head>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8" />
<title>Untitled Document</title>
</head>

<body>
// this line of code displays a famous quotation

 <?php

// this line of code displays a famous quotation

echo “hello world”;

?>

</body>
</html>
இதை c/xampp/htdoc என்ற ஃபோல்டரில் சேமிக்கவும்.உதரணமாக பெயர் prg1.php என இருக்கலாம்.
இயக்குவதற்கு உலாவியில்(browser) localhost/prg1.php  என்று கொடுத்தால் பின் வருமாறு வெளியிடும்.

Php 4ம் பாடம்


அர்ரேக்கள்.

<?php

$entryTitle = "Sample Title";

$entryDate = "April 13, 2009";

$entryAuthor = "Jason";

$entryBody = "Today, I wrote a blog entry.";

?>
மேலே உள்ள நிரல் வரிகளை பின் வருமாரு எளிதாக தொகுத்து வழங்கலாம்.அதாவது ஒவ்வொரு மதிப்புக்கும் ஒரு key கொண்டு தகவலானது map பண்ணப் பட்டிருக்கும்.இதுவே phpல் அர்ரே எனப்படுகின்றது.
<?php

$entry = array(

'title' => 'Sample Title',

'date' => 'April 13, 2009',

'author' => 'Jason',

'body' => 'Today, I wrote a blog entry.'

);

?>
மேலே உள்ள நிரல் வரிகளின் சிறப்பு என்னவென்றால் அணைத்து தகவல்களும் ஒரே ஒரு மாறியில் (variable) ல் சேமிக்கப்படுகின்றது.இந்த தகவல்களை அணுகுவதற்கு [ ] பயன்படுகின்றது.
<?php

echo $entry['title']; // Outputs "Sample Title"

echo $entry['date']; // Outputs "April 13, 2009"

echo $entry['author']; // Outputs "Jason"

echo $entry['body']; // Outputs "Today, I wrote a blog entry."

?>

அதே போல் அர்ரேயில்  index அடிப்படையிலும் தகவலை சேமிக்க முடியும்.
பொதுவாக நிரல் மொழிகளில் index ஆனது 0வில் அரம்பிக்கும்.உதாரணத்துக்கு பின் வரும் வரிகள்

<?php

$entry = array('Sample Title', 'April 13, 2009', 'Jason',

'Today, I wrote a blog entry.');

echo $entry[0], ' by ', $entry[2];

?>

இந்த வரிகளானது உலாவியில் (browser) பின் வருமாறு வெளியிடும்.

Sample Title by Jason

பிழைகளை தவிர்ப்பதற்காக string அர்ரே எனில் அவைகள்
{ மற்றும் } உள்ளே இருத்தப்படுகின்றன.
உதாரணம்:
<?php

$person = array('name' => 'Jason', 'age' => 23);


echo "This person's name is {$person['name']}

and he is {$person['age']}.";

?>

பிழைகளை தவிர்ப்பதற்கான மற்றொரு வழி அர்ரே இண்டக்ஸின் single quote ஐ தவிப்பதாகும்.
<?php

$person = array('name' => 'Jason', 'age' => 23);

echo "This person's name is $person[name]

and he is $person[age].";

?>
��----தொடரும்.

Php 3ம் பாடம்.

Data types and variables.

Php data types(தரவினங்கள்)

String

Strings என்பது எழுத்துக்களின் கோவையாகும்.
r”,”muthu” ஆகியவை string க்கு உதாரணங்கள் ஆகும்.
No limit to size.

Integer:

முழு எண்களை சேமிக்க integer type பயன் படுகின்றது.
இவை positive அல்லது negative  ஆக இருக்கலாம்.
குறிப்பிட்ட எல்லையை விட பெரிய எண்கள் float ஆக சேமிக்கப்படுகின்றது.

Float:

Fractional எண்களை சேமிக்கப் பயன் படுகின்றது.
உதாரணம்.
3.14,125.368

Boolean:

True or false மதிப்புகளை சேமிக்கப் பயன்படுகின்றது.
எனினும் இவை integer  மதிப்புகளாகவே சேமிக்கபடுகின்றது.
அதவது 0 என்றால் false  மற்ற எல்லா எண்களுமே true ஆகும்.

Array:

ஒன்றுக்கும் மேற் பட்ட மதிப்புகளை சேமிக்க பயன்படுகின்றது.
உதாரணம்:
Collection of color  ,days of week.

Object

ஒன்றுக்கும் மேற்பட்ட complex variables ஐ சேமிக்கப் பயன்படுகின்றது.
Resource:
Php data அல்லாதவற்றை சேமிக்கப்பயன் படுகின்றது.
உதாரணம்.
A picture.
Resource டைப் ஆனது உபயோகத்தில் இல்லாத போது freed up செய்யப் பட வெண்டும்.

variables.:

 


variables என்பது நிணைவக இடங்களுக்கு நாம் இடும் பெயர்களாகும்.
Php variables  என்பது weekly typed என்பதை முன்னரே அறிவோம்.
Naming rules க்கு php ஒரு அறிமுகம் என்ற பாடத்தைப் பார்க்கவும்.
Php variables  $  குறீயீட்டுடனே தொடங்கப்பட வேண்டும்.
variableக்கு மதிப்பு இருத்த = பயன் படுத்தப்படுகின்றது.
Example:
$name=”karthi”;
$age=35;
(பொதுவாக phpயில் பெரும்பாலான வாக்கியங்கள் semicolon(;) உடன் முடிக்கப்பட வேண்டும்.
Php யில் variable ந் பெயர்களானது case sensitive ஆகும்.
அதாவது $Name மற்றும் $name ஆகியவை வெவ்வேறு variable ஆகும்.
---தொடரும்.

Php 2ம் பாடம்

Strings in php.

Strings என்பது எழுத்துக்களின் கோவையாகும்.
பின் வருவன string க்கு உதாரணங்கள் ஆகும்.
Chennai”
‘100’
“November 14,2011”
இவை single Quotes அல்லது double quotes க்கு இடையே எழுதப்படுகின்றன.
பின் வரும் string ஐ எடுத்துக்கொள்வோம்.
$var=”“my place “Madurai” is in tamilnad”.

அதாவது quotes க்குள் quotes  வந்துள்ளது .
இதை சரி செய்ய
quotesescape செய்ய வேண்டும்.
$var=“my place \“Madurai\” is in tamilnad”.
Echo() அல்லது print() உபயோகித்து strings ஐ  பிரிண்ட் செய்யலாம்.
echo $var;
print $var;
$name=”vijay”;
echo “hello ,$name”;
மேலே உள்ள வாக்கியத்தில் $name ஆனது விரிவாக்கப்பட்டு
hello vijay
என உலாவியில் (browser) வெளியீடு செய்யப் படுகின்றது.


 <html>
    <head>
        <meta http-equiv="Content-Type" content="text/html; charset=windows-1252">
        <title></title>
    </head>
    <body>
        <?php
          $first_name="muthu" ; // put your code here;
          $last_name="karthikeyan";
          $full_name=$first_name.' '.$last_name;
          $place="madurai";
          echo "<p><em>$full_name</em> residing at $place</p> ;
"
        ?>
    </body>
</html>
மேலே உள்ள நிரலில் $name மற்றும் $place  விரிவாக்கப்பட்டு பின் வருமாறு
உலாவியில் வெளியீடு செய்யப்படுகின்றது.


மேலே உள்ள நிரலில் உள்ளவாறு இரு string களை இணைப்பதற்கு dot பயன் படுத்தப்படுகின்றது
உதாரணம் :
$full_name=$first_name. ’  ‘.$last_name.

Strlen என்ற function கொண்டு  ஒரு string ன் நீளத்தை அறியலாம்.
Example:
$num=strlen(‘some string’);
மேலும் சில string functions
Strtolower -lowercase letter க்கு மாற்றுவது
Strtoupper  -uppercase letter க்கு மாற்றுவது
Ucfirst    -stringன் முதல் எழுத்தை மட்டும் uppercase letter க்கு மாற்றுவது
Ucwords   -string ன் ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தை மட்டும் uppercase letter க்கு மாற்றுவது
ஒரு string உடன் இன்னொரு stringஐ இணைத்தால் concatenation assignment operator ஐ உபயோகிகலாம்.
 
Example.
$name=$name. $lastname
என்பதை
$name.=$lastname
என எழுதலாம்.
-தொடரும்

PHP ஒரு அறிமுகம்.-1

Php  என்பது server side script  language ஆகும்.
இது ஒரு கட்டற்ற மென் பொருள் .
(open source software).
நிறைய database களை ஆதரித்தாலும் mysql  உடன்  அதிகம் பயன் படுத்தப் ப்டுகின்றது.
Php files  என்பது html மற்றும் script ஆகிய வற்றின் கலவையாகும்.
 
<HTML>
<HEAD>Sample PHP Script</HEAD>
<BODY>
The following prints "Hello, World":
<?php
    print "Hello, World";
?>
</BODY>
</HTML>
 
மேலே உள்ள நிரலில் <?php  மற்றும் ?> இடையே  உள்ள வ்ரிகள் php interprter ல் இயக்கப்ப்ட்டு plain html ஆக மாற்றப்ப்ட்டு பின் கீழ் வரும் படி உலாவியால் வெளியீடு செய்யப்ப்டுகின்றது.
The following prints "Hello, World":
Hello, World
Php மொழியானது பெரும் பாலும் c மொழியின் இலக்கிணத்தை ஒற்று வ்ருவதால் புதியவர்களால் எளிதாக கற்க முடியும்.


Comments(குறிப்பு வரிகள்)
Comments ஆனது ஒரு நிரலின் இயக்கம் பற்றி நிரலாளரால் எழுதப்படும் வரிகளாகும். இவை interpreter ல் இயக்கப்படாது.
Phpல் single line comment
// this is a comment
அல்லது
#this is also a comment
என்றோ எழுதப் படுகிறது.
Multi line comments:
/* this is a
Multi
Line comment  */
என்று /* மற்றும் */ இடையே எழுதப் படுகிறது.
 
மாறிகள்(variables)
Php ல் மாறிகள் weekly typed  மாறிகளாக உள்ளது.
அதாவது மாறிகள் உபயோகிக்கும் முன் அறிவிக்கப்படுவதில்லை. அவை assign செய்யப்படும் மதிப்புகளுக்கு ஏற்றாற் போல் மாறிக் கொள்கின்றது.
என்வே தான் அவை weekly typed  variables ஆக உள்ளது.
மாறிகளின் naming rules மற்ற மொழிகளைப் போலவே. எனிதும் இது $ குறியீட்டுடன்  ஆரம்பிக்கிறது. அதற்கு அடுத்து வருவது alphabet ஆகவோ அல்லது _(underscore) ஆகவோ இருக்கலாம்.மற்ற எழுத்துக்கள் alphabet அல்லதுnumeric அல்லது underscore ஆக இருக்கலாம் space வரக் கூடாது. . முற்றுப் புள்ளி வரக் கூடாது.
இரண்டு வார்த்தைகளாக வரும் பொழுது _ஆல் இணைக்கப்படலாம் அல்லது இரண்டாவது வார்த்தை capital letterல் ஆரம்பிக்கலாம்.
உதாரணம்:
$total_salary அல்லது $totalSalary.

மென்பொருள் மற்றும் இன்டர்நெட் இல்லாமல் எல்லாத வித பைல்களையும் எளிதில் PDF ஆக மாற்றுவது எப்படி ?




நாம் உருவாக்கிய ஆக்கங்களை PDF ஆக மாற்றுவதற்க நமக்கு சில நேரங்களில் சிரமமாக இருக்கும். உதாரணமாக word அல்லாத மற்ற பைல்களை நாம் PDF ஆக மாற்றவிரும்பினால் அதற்குரிய மென்பொருளை தேட வேண்டியிருக்கும். பிறகு வேறு ஒரு format file ஐ PDF ஆக மாற்றி வேறு ஒரு மென்பொருள் தேட வேண்டியிருக்கும்.

PDF convert  வகையை சார்ந்த மென்பொருளை (software) பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும். ஆனால் PDF writer என்ற அடிப்படையிலான மென்பொருளை (software) பயன்படுத்தினால் மேற்கண்ட பிரச்சனை இருக்காது.
இதில் எந்த டாக்குமெண்டையும் எளிதில் PDF ஆக மாற்றிக் கொள்ளலாம். அது என்ன format ஆக இருந்தாலும் சரி.

தாங்கள் விரும்பும் File ஐ PDF ஆக மாற்ற எந்த தனிப்பட்ட மென்பொருளையும் நீங்கள் திறக்கத் தேவையில்லை. மேலும் இன்டர்நெட் போன்றவற்றை பயன்படுத்த தேவையில்லை.
நாம் வேலை செய்து கொண்டிருக்கும் Application னிலேயே அந்த file ஐ PDF ஆக மாற்றிக் கொள்ளலாம்.

உதாரணமாக adobe photoshop ல் நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தால் அந்த file ஐ adobe photoshop லியே PDF ஆக மாற்றிக் கொள்ளலாம். (அதில் அந்த வசதி இல்லை என்றாலும்) இதற்கென தனியாக எ்நத மென்பொளுக்கோ இணையளத்திற்கு செல்லத் தேவையில்லை. (இதை தான் நாம் தலைப்பில் குறிப்பிட்டுள்ளோம்)

இது தான் PDF writer வகையை சார்ந்த மென்பொருளின் சிறப்பு அம்சம். இந்த வகையை சார்ந்த CUtePDF writer என்ற மென்பொருளை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து கொண்டால் இந்த வசதியை தாங்கள் பெற முடியும். இந்த மென்பொருள் தானாக உங்கள் கணிணியில் CutePD Writer என்ற பெயரில் ஒரு Printer உருவாக்கும். (உங்கள் பிரிண்ட்ரை இன்ஸ்டால் செய்தால் வருமே அது போன்று)

பிறகு நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் application ல் Print ஐ கொடுத்து உங்கள் பிரண்ட்ருக்கு பதிலாக PDF Printer தேர்வு செய்தால் போதும் உங்கள் document PDF ஆக மாறி உங்கள் கணிணியில் save ஆகவிடும்.

இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் . பின் வரும் இணைப்பில் உள்ள இது இயங்குவதற்குத் தேவையான இரண்டு மென்பொருளை உங்கள் கணிணில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.



http://www.cutepdf.com/download/CuteWriter.exe
http://www.cutepdf.com/download/converter.exe


இனிமேல் எந்த பைலாக இருந்தாலும் அந்த File ஐ PDF ஆக மாற்ற நீங்கள் சிரமப்படத் தேவையில்…
பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை share செய்யுங்கள்.

உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும் இலவசமாக போன் செய்யலாம் – இன்டர்நெட் தேவையில்லை!




சில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன் செய்ய வேண்டியிருக்கும் ஆனால் நமது போனில் பேலன்ஸ் இருக்காது.  ஆள்பேர் இல்லாத இடத்தில் மாட்டிக் கொண்டிருப்போம். இன்டர்நெட் வசதியும் இருக்காது.. போன் செய்ய முடியாமல் போய், நமக்கு அதனால் இழப்பு ஏற்படும் இல்லை எனில் யாரிடமாவது திட்டுவாங்குவோம்..
இனி அந்த நிலை ஏற்படாது. பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள் சேர்ந்து FREEKALL என்ற சேவை அறிமுகம் செய்துள்ளனர்.
இதன் மூலம் நமது போனிலிருந்தே இலவசமாக கால் செய்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. சாதாரண black & white Nokia போன் போதும்..
ஐபோன் (iphone) முதல் சாதாரண சைனா போன் வரை அனைத்திலும் இது வேலை செய்யும்.
ஆச்சரியமாக உள்ளதா ஆம் இது உண்மை தான்!. இந்த சேவையை பயன்படுத்தி எப்படி இலவசமாக போன் செய்வது என்பதை பார்ப்போம்.
முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800 108 4444” என்ற Toll Free நம்பருக்கு போன் செய்ய வேண்டும்(இந்திய எண்ணிலிருந்து). இதற்கு நமது போனில் பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே பேலன்ஸ் இருந்தாலும் பணம் எடுக்கப்படமாட்டாது.

நாம் இந்த நம்பருக்கு கால் செய்ததும் கால் தானாக கட் ஆகிவிடும். கட் ஆன அடுத்த நொடியில் ”8067915000” என்ற எண்ணில் இருந்து நமது போனிற்கு (mobile) கால் வரும். அதை நாம் attend செய்து நாம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களது நம்பரை (phone number) dial செய்து அவர்களுடன்  இலவசமாக பேசிக் கொல்லாம்.
வித்தியாசமான சேவைாக இருக்கின்றதல்லவா ? ஆம் இந்த சேவையை கடந்த மார்ச் மாதம் தான் பெங்களுர் மாணவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்..
இப்பொழுதே பயன்படுத்தி பயன் அடையுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை share செய்யுங்கள்
பின் வரும் FREEKALL சேவை இணையதளத்திற்கு சென்று உங்கள் மொபைல்  நம்பரை பதிவு செய்து கொண்டு நீங்கள் இந்தியாவில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக போன் செய்யலாம். DND நம்பர்களுக்கும் இது வேலை செய்யும்.

freekall.in

ஆங்கிலத்தில் சுருக்கமாக:
One can make the use of this service by following way:
1. Call at 1800 108 4444 after which the call will drop.
2. You will receive a call on your number from 08067915000.
3. Pick up the call and dial the number on which you want to talk and you will be connected to that number.

Popular Posts

Facebook

Blog Archive