பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 19 ஜூலை, 2014

அதிவேக இணையம் – ஆச்சர்யமளிக்கும் தகவல்கள்!

கூகிள் இணையப் பயன்பாட்டு தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறை இன்டர்நெட் ஸ்பீடை (The Next Generation Internet Speed) கொண்டு வர உள்ளது. இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும்பொழுது நிச்சயம் அது ஒரு ஆச்சர்யம் அளிக்கும் விஷயமாகவே இருக்கும்.
சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இத்தொழில்நுட்பத்தினை மூன்றே ஆண்டுகளில் பயனர்கள் பெறுவதற்கான முயற்சிகளில் கூகிள் இறங்கிறயுள்ளது.
the-next-generation-internet-speed
the-next-generation-internet-speed
இதுபோன்று அதிவேக இணைய இணைப்பை ஏற்கனவே அமெரிக்காவில் கேன்சஸ் நகரத்தில் பைபர் என்னும் திட்டத்தின் கீழ், அங்கு வசிக்கும் மக்களுக்கு ஒரு நொடிக்கு 1GB Data பரிமாற்ற வேகத்தினை தந்துவருகிறது.
தற்பொழுது ஒரு நொடிக்கு 10 கிகா பிட்ஸ் வேகத்திற்கு இன்டர்நெட் பயன்பாட்டை கொண்டுவரும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது கூகிள். இந்தளவிற்கு இணைய வேகம் அமைந்தால் ஒரு திரைப்படத்தை இணையம் மூலம் 4 வினாடிகளில் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.
இணையத்தின் வேகம் இந்தளவிற்கு இருந்தால், சாப்ட்வேர் சேவைகளை மிக எளிதாக அனைவரும் பெற்றுப் பயன்படுத்த முடியும். அதிகமான கொள்ளவு கொண்ட மென்பொருட்களை ஒரு நொடியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திட முடியும்.
இதுபோன்ற அதிவேக இணையவேக தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் கூகிளுடன் வேறு சில நிறுவனங்களும் இணைந்துள்ளன.
இதற்கு முன்பு, சீனா, பிரிட்டன் நாடுகள் லைபை – lifi என்ற தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஒளி மூலம் டேட்டாவினை அதிக வேகத்தில் பரிமாறிக்கொள்ள முடியும் என நிருபித்திருந்தனர்.
வாசியுங்கள்: வைபை – லைபை ஒரு பார்வை..!
மற்றுமொரு நிறுவனமான வெரிசான் நிறுவனமும் 10 கிகா பிட் டேட்டா பரிமாற்றச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. வெரிசான் நிறுவனம் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் வேறு சில இணைய சேவை நிறுவனங்களும் இந்த அதிவேக தொழில்நுட்பத்தின் மூலம் டேட்டாவினை பரிமாற்றம் செய்தது.
எனினும் கூகிள் நிறுவனம் இத்தொழில்நுட்பத்தினை முறையான ஆய்வின் மூலம் மேற்கொள்வதால், விரைவில் அதிவேக இணைய இணைப்பு உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி: தினமலர். (கம்ப்யூட்டர் மலர்)

டாப் 10 வீடியோ வெப்சைட்டுகள்

சாதாரணமாக வீடியோ பார்ப்பதற்கும், ஆன்லைனில் வீடியோ பார்ப்பதற்கு வித்தியாசம் உண்டு. இன்று மிகப் பலரும் இன்டர்நெட்டைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இன்டர்நெட்டிலேயே வேலைகளும் செய்து சம்பாதிப்பவர்களுக்கும் உண்டு.
இவ்வாறு தொடர்ச்சியாக இணையத்தில் பணியாற்றுபவர்களுக்கு சலிப்பு ஏற்படுவது சகஜம். அதுபோன்ற சமயங்களில் இணையத்தில் உள்ள பிடித்தமான வீடியோக்களை பார்ப்பது வழக்கம். பொழுது போக்காகவும் சிலர் வீடியோ பார்ப்பது உண்டு. பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒரு வீடியோ வெப்சைட் யூடியூப்.
யூடியூப்பை போன்றே பல முன்னணி வீடியோ தளங்கள் உண்டு. அவற்றுள் முதல் பத்து தளங்களை நான் பட்டியலிட்டுள்ளேன். இத்தளங்களில் வேண்டிய வீடியோக்களை தேடிப் பிடித்துப் பார்க்கலாம்.
சினிமா பாடல் முதற்கொண்டு, நாடகம், பாட்டு, இசை என எல்லா துறைகளில் வீடியோக்களும் இத்தளங்களில் இடம்பெற்றுள்ளன.
ஆன்லைனில் வீடியோ பார்ப்பதற்கு நிறைய தளங்கள் உள்ளன. அவற்றுள் டாப் 10 ஆன்லைன் வீடியோ வெப்சைட்டுகள் இவை.
  1. YouTube
  2. NetFlix
  3. Yahoo! Screen
  4. Vimeo
  5. DailyMotion
  6. Hulu
  7. Vube
  8. LiveLeak
  9. Twitch
  10. Break
மேற்கண்ட வெப்சைட்டுகள் மட்டுமில்லாமல், மேலும் சில முக்கியமான வீடியோ வெப்சைட்டுகளும் உண்டு.

INCREASE SPEED OF HARD DISK

It is common observation that some times our computer slows down due to low performance of hard drive. This problem happens due to the slow performance or poor speed of hard drive. When we say about poor performance, actually we mean, poor speed of reading/writing of hard drive. This problem can be solved by increasing the hard drive speed. Follow these steps to solve your problem.


Click Start menu and select run.
Now type (sysedit.exe) in run and press enter.
System configuration editor will appear.
Here you can see some multiple windows but you will select (system.ini).
This window contains a line (386enh)
Now after this line type (irq14=4096)
Now close this window and save it.
Reboot your computer now.
You will surely feel better performance of your computer.
Enjoy.

Windows XP இன்னும் பயன்படுத்தறீங்களா? ஆபத்து

Windows XP

கால மாற்றத்திற்கேற்ப ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. அதுபோல உலக மக்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Windows Operating System மும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.
பழைய விண்டோஸ் ஓ.எஸ். பதிப்புகள் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்புகளாக மாறுவதும், பழைய பதிப்புகள் நீக்கப்படுவதும் நடைமுறையில் உள்ளன.
அந்த வகையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கணினி பயனர்களைக் கவர்ந்து, இன்றும் கூட பயனர்கள் அதை விட முடியாத நிலையில் உள்ள இயங்குதளம் Windows XP தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

windows-xp-gone
மைக்ரோசாப்ட் வெளியிட்ட விண்டோஸ் ஓ.எஸ்.களில் மிகப்பெரிய அளவில் அதிகமான பயனர்களைப் பெற்றுத் தந்த இயங்குதளம் இது.
2001 ம் ஆண்டு அறிமுகமான விண்டோஸ் எக்ஸ்பி ஆபரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8.1 விட நான்கு பதிப்புகள் முந்தையது ஆகும்.
மைக்ரோசாப்ட் வெளியிட்ட விண்டோஸ் இயங்குதளங்களானது , ஆரம்ப கால MS – DOS லிருந்து தற்பொழுது சமீபத்தில் வெளயிடப்பட்ட விண்டோஸ் 8.1 வரை, படிப்படியான மாற்றங்களுக்கு உட்பட்டு, மேம்படுத்தபட்டு வெளிவந்தவை.
ஒவ்வொரு பதிப்பிலும் புதிய நுட்பங்கள், எளிய பயனர் இடைமுகம் என மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு பதிப்பிலும் உள்ள பிழைகள் திருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்ட பதிப்புகளாக மைக்ரோசாப்ட் வெளியிட்டது.
இதனால் பயனர்கள் பழைய பதிப்பை விட்டுவிட்டு, புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு மாறி வந்தனர்.

விண்டோஸ் OS பதிப்புகள்
ஆரம்ப காலத்திலிருந்து வெளிவந்துள்ள விண்டோஸ் OS பதிப்புகள் (ஆண்டு வாரியாக)
  1. MS-DOS – 1981
  2. Windows 1.0 – 1985
  3. Windows 2.0 – 1988
  4. Windows 2.03, Windows 3.0 – 1990
  5. Windows 3.1 – 1992
  6. Windows NT – 1993
  7. Windows 95 – 1995
  8. Windows 98 – 1998
  9. Windows 2000
  10. Windows XP – 2002
  11. Windows Server 2003
  12. Windows 7 – 2007
  13. Windows 8 – 2008
  14. Windows 8.1
விண்டோஸ் XP சேவை நிறுத்தம்:
இந்தியாவில் மட்டும் உள்ள Windows XP கம்ப்யூட்டர்களை இயக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 1,190 கோடி ரூபாய் செலவானதாகவும், தற்பொழுது வெகு சிலரே விண்டோஸ் எக்ஸ்பி யைப் பயன்டுத்துவதால் அதற்கு 300$ டாலர் செலவாகும் எனவும் தெரிவித்த மைக்ரோசாப்ட் நிறுவனம் செலவுகளைக் குறைக்கவும், புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் பயன்பாடுகளை (Windows 8.1) அதிகரிக்கவும் இச்சேவையை நிறுத்துவதாக அறிவித்தது.
இதனால் பெரும்பாலானவர்கள் விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து, அடுத்த அடுத்த புதிய பதிப்புகளான Windows 7, Windows 8 , Windows 8.1 பதிப்புகளுக்கு மாறிவிட்டனர்.


விண்டோஸ் புதிய பதிப்பிற்கு மாறுவது கட்டாயம்.
ஒரு சிலர் மட்டும் இன்னும் மாறாமல் விண்டோஸ் எக்ஸ்பியிலேயே கணினியை இயக்கிக்கொண்டுள்ளனர். குறிப்பாக அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் உள்ளவர்கள் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி – யை பயன்படுத்தி வருகின்றனர்.
மற்ற பயனர்கள் 84 சதவிகதம் பேர் விண்டோஸ் எக்ஸ்பியை விட்டு, புதிய பதிப்புக்கு மாறிவிட்டனர். ஏனைய 16 சதவிகிதம் பேர் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
Windows XP இயங்குதளங்களுக்கு புதிய அப்டேட் கிடைக்காத நிலையில் இவர்கள் அனைவரும் அடுத்த மாதம் இறுதிக்குள் விண்டோஸ் ஓ.எஸ். -ன் அடுத்தடுத்த புதிய பதிப்புகளுக்கு மாறுவது கட்டாயமாகும். இதனால் இணையம் வழியாக ஏற்படும் வைரஸ் போன்ற பிரச்னைகளிலிருந்து கம்ப்யூட்டர்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதோடு, பதிய பதிப்புகளில் உள்ள மேன்படுத்தப்பட்ட வசதிகளை பெற்று பயனடைய முடியும்.

வியாழன், 17 ஜூலை, 2014

சிறந்த 300+ க்கும் அதிகமான இலவச சாப்ட்வேர்கள் ஒரே இடத்தில்


 
 
தற்போது உள்ள நிலையை பார்த்தால் நீங்கள் பணம் கொடுத்து எந்த   மென்பொருட்களையும் வாங்க தேவையில்லை என்றே கூறலாம். அத்தனையும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்து விட்டது. இருந்தாலும் நாம் ஒவ்வொரு இலவச மென்பொருட்களை பெறவும் நாம் கூகுளிலோ அல்லது வேறு ஏதாவது சர்ச் என்ஜின் பயன் படுத்தி தேடிபிடிப்போம். அது மட்டுமில்லால் நாம் அந்த தளத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே தரவிறக்க முடிகின்ற வகையில் ஒரு சில தளங்கள் இருக்கும். இதனால் தேவையில்லாமல் நம் நேரம் தான் விரயம் ஆகும். இந்த குறைகளை போக்குவதற்காகவே ஒரு தளம் உள்ளது. இதில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அத்தனையுமே இலவசம். இதில் சுமார் முன்னூறுக்கு அதிகமான மென்பொருட்கள் உள்ளது. அது மட்டுமில்லாமல் தினம் தினம் ஒரு புதிய மென்பொருட்களை கொடுத்து கொண்டே இருப்பார்கள்.

TOP 300 Freeware software!
  • OFFICE

  • ARCHIVE MANAGEMENT

  • INTERNET

  • P2P

  • CHAT

  • SECURITY

  • NETWORK

  • SERVERS

  • AUDIO

  • VIDEO

  • IMAGE

  • 3D

  • DEVELOPERS

  • CD/DVD

  • CODECS

  • SYSTEM UTILITIES

  • UI ENHANCEMENTS

  • HARDWARE MONITORING

  • GAMES

  • EDUCATION

  • MISCELLANEOUS
என்று பல பிரிவுகளில் மென்பொருட்களை கொடுத்து உள்ளார்கள். (என்னடா இவன் இவ்வளவு கதை பேசிட்டு கடைசிவரை அந்த தளத்தின் முகவரியை தரமாட்டேன்கிறான் என்கிறீர்களா). இந்த தளத்திருக்கு இந்த லிங்கை http://www.winaddons.com/top-300-freeware-software/ க்ளிக் செய்யவும். இனி நம் கணினிக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் தேடி அலைய வேண்டியதில்லை அனைத்தும் ஒரே இடத்தில்

ஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்...


மொபைல் பேசுவதற்கு என்று போய் இன்று அனைத்து தொலைதொடர்பு சாதனங்களையும் உள்ளடக்கு ஸ்மார்ட் ஃபோன் என்று நம் கைகளில் தவழுகிறது. பேஸிக் ஃபோன்களில் ஒரு வாரம் வரை நிற்கும் பேட்டரி சார்ஜிங், ஸ்மார்ட் ஃபோன்களில் ஒரு நாள் முழுவதும் வருவது பல பேருக்கு பெரும்பாடாக இருக்கிறது. அத்தகையவர்களுக்கு இப்பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
1/ வைபரேஷன்ஸ்  (Vibrations) ஆஃப் செய்து விடுங்கள்:
வைபரேஷன்ஸ் (Vibrations) மோடை  தேவையான (மீட்டிங்க், கான்ஃப்ரன்ஸ், வழிபாட்டுத்தளங்கள் போன்ற ) இடங்களில் தவிர மற்ற இடங்களில் ஆஃப் செய்துவிடுவது நல்லது. ரிங்டோன்களை விட அதிர்வுகள் அதாவது வைபரேஷன்ஸ்  (Vibrations) இயக்க அதிக மின்சக்தி தேவைப்படுகிறது எனவே ரிங் டோனுடன் வைப்ரேஷனையும் சேர்த்து இயக்குவது பேட்டரியை அதிகம் உபயோகப்படுத்தும்.
2/டிஸ்ப்ளே ஸ்க்ரீனை டிம்மாக (DIM) வையுங்கள்:
 ஸ்மார்ட் ஃபோன்களில் ஏறக்குறைய 90 சதவீத பேட்டரி ஸ்க்ரீன் ட்ஸ்ப்ளேவுக்கே செலவாகிறது. எனவே முடிந்த அள்வு டிம்மாக வைக்கவும். ஆட்டோ ப்ரைட்னஸ் மோடில் வைப்பது சூழ்நிலைக்கேற்ப உங்கள்  ஃபோனே வெளிச்சத்தின் அளவை நிர்ணயித்துக்கொள்ளும். அல்லது உங்கள் சூழ்நிலை குறைந்த வெளிச்சத்திலேயே உபயோகிக்கும் வகையில் இருந்தால் டிம் மோடிலேயே நிறந்தரமாக வைத்து விட்டால் நீங்கள் ஆச்சரியப்படும் அளவுக்கும் பேட்டரியில் வாழ்நாள் நிலைத்திருக்கும்.
3. ஸ்க்ரீன் ஆஃப்: 
 அதே போல் ஃபோனை உபயோக்கித்து முடித்தவுடன் உடனே ஸ்க்ரீன் ஆஃப் ஆகும் வகையில் ஸ்லீப் மோடை குறைந்த நொடிகளில் ஆஃப் ஆகுமாறு வைய்யுங்கள்.ஏனெனில் நம்மில் பலர் ஃபோனை உபயோகித்த பின்னர் அப்படியே பாக்கெட்டிலோ மேஜை மேலோ வைத்துவிடுவோம். ஸ்லீப் மோட் அதிக நேரம் கழித்து ஆஃப் ஆகும் மோடில் இருந்தால் அத்தனை நேரமும் பேட்டரி வீணாகும். எனவே உடனே ஸ்லீப் மோடில் 15 அல்லது 30 வினாடிகளில் ஆஃப் ஆகும் படி வையுங்கள்.
4.தேவையில்லாத நேரங்களில் போனை ஆஃப் செய்து வைத்தல்:
நீண்ட நேரம் உபயோகிக்காத நிலையில் போனை ஸ்விச் ஆஃப் செய்து வைப்பதும் பேட்டரியை சேமிக்கும் வழிமுறையில் ஒன்றாகும். ஃபோனை ஆஃப் பண்ணி ஆன் பண்ணுவதால் அதிக பேட்டரி செலவாகும் என்பது உண்மைதான் என்றாலும், நீண்ட நேர இடைவெளி இருந்தால் இந்த முறையை உபயோகப்படுத்துவது நல்ல பலனை தரும் என்பதில் ஐயமில்லை.
மேலும் இரவில் தானாக ஆஃப் ஆகி காலையில்  ஆன் ஆகும் ஆட்டோ ஸ்விச் ஆஃப் ஸ்விச் ஆன் மோடையும் பயன்படுத்திகொள்ளலாம். இதில் இரவில் அவசர அழைப்புக்கு எப்படி பதிலளிப்பது என்ற கேள்வி எழும் ! வீட்டில் லேண்ட் லைன் வைத்திருப்பவர்கள் மேலும் இரண்டு போன்கள் வைத்திருப்பவர்கள் சாதாரணமாக இரண்டாவது ஃபோன் பேசிக் ஃபோனே வைத்திருப்பதால் இம்முறை மிகவும் உபயோகமாக இருக்கும்.
வீட்டில்தானே இருக்கிறோம், சார்ஜ் போட்டுக்கொள்ளலாமே என்று நினைக்கலாம் ! நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் உபயோகிக்கும் காலம் மற்றும் சார்ஜ் செய்யும் எண்ணிக்கையை பொறுத்து பேட்டரியின் ஆயுட்காலமும் அதன் செயல்படும் தரமும் அமைகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
5. சரியான முறையில் பேட்டரியை சார்ஜ் செய்தல்:
 தற்கால ஸ்மார்ட் ஃபோன்களி இருவகையான் பேட்டரிகள் பயன்படுத்த்ப்படுகிறன. ஒன்று  Lithium-ion (Li-Ion), மற்றொன்று Nickel Cadmium (NiCd) பேட்டரிகள்.
NiCd பேட்டரிகளை பேட்டரி சார்ஜ் மொத்தம் தீர்ந்தவுடன் மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டும் அதற்கு மாறாக பேட்டரி சிறிது குறைந்தவுடன் சார்ஜ் செய்தால் பேட்டரி டேமேஜ் ஆவது மட்டுமின்றி வெடிக்கக் கூடிய வாய்ப்பும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
Li-Ion பேட்டரிகளை பொறுத்தவரை பேட்டரி குறைய குறைய ரீசார்ஜ் செய்து வைப்பது பேட்டரியின் தரத்தையும் ஆயுட்காலத்தையும் அதிகரிக்கிறது. எனவே உங்கள் ஃபோனில் எந்த வகையான பேட்டரி போடப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அத்ற்கு தகுந்தவாறு சார்ஜிங் செய்து கொள்வது நன்மையை தரும்.
6. தேவையில்லாத ஆப்ஸ்களை ஆஃப் செய்து வையுங்கள்: 
அடுத்ததாக பேட்டரியை கபளிகரம் செய்வது Apps என்படும் அப்ளிகேஷன்களாகும். தேவைக்கதிகமான அல்லது தேவையே இல்லாத பல அப்ளிகேஷன்கள் பலருடைய மொபைல்களில் நிறைந்திருக்கும். முதலில் தேவையில்லாத அப்ளிகேஷன்களை அளித்துவிடுவது சி்றந்தது. அடுத்தாக  ஒரு அப்ளிகேஷனை உபயோகித்த பின் அதை மூடிவிடுவது. கவனத்தில் கொள்க நீங்கள் ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை திறந்து விட்டு ஏதோ ஒன்றை மட்டும் உபயோகிக்கும்போது நீங்கள் மூடாதவரை  மற்றவை திறந்த நிலையிலேயே இருக்கும். அவை பேட்டரியையும், இன்டெர் நெட்டையும் உபயோகப்படுத்திக்கொண்டே இருக்கும் என்பதையும் மறந்து விடாதீர்கள். இதைவிட விந்தையான விஷயம் என்னவெனில் ஒருசில ஆப்ஸ்கள் மூடிய நிலையிலேயே பேட்டரியையும், இண்டெர்நெட் டேட்டா உபயோகத்தையும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும். அவற்றை சரியான டாஸ்க் கில்லர் எனப்படும் ஆப்ஸைக் கொண்டு செயழிலக்கச்செய்யலாம். ஆண்ட்ராய்டில் Advanced Task Killer எனப்படும் ஆப்ஸ் மிகவும் பிரபலமானதாகும் இதை கூகுல் ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் இதை அவ்வப்போது உபயோகித்து இது போன்ற ஆப்ஸ்களை கட்டுக்குள் கொண்டு வரலாம்
7. GPS ஆஃப் செய்து விடுங்கள்: 
GPS  மற்றும் அதுசார்ந்த ஆப்ஸ்கள் பேட்டரியை அதிகமாக சாப்பிடும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அறிய GPS  ஆனது செயற்கை கோளை தொடர்பு கொள்ளும் எனவே நீங்கள் நடமாடிக்கொண்டு இருக்கும்போது சாட்டிலைட்டுக்கு சிக்னல் அனுப்பிக்கொண்டே இருக்கும் இதற்கு செலவாகும் பேட்டரி உங்கள் கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. கூகுள் மேப்ஸ், ஃபேஸ்புக்க்கில் இடத்தை அறிதல்  போன்றவை இவ்வகையை சேர்ந்தவை ஆகும். எனவே GPS மற்றும் அதை உபயோகிக்கும் ஆப்ஸ்களை தேவையில்லாத போது அணைத்து வைப்பது  பேட்டரிக்கு நல்லது.
8. வை ஃபை, ப்ளூடூத், 3 ஜீ போன்றவற்றை தேவையில்லாத போது அனைத்து வையுங்கள்:
 எப்பொழுதெல்லாம் சிக்னலுக்காக உங்கள் போன் தேட ஆரம்பிக்கறதோ அப்பொழுதெல்லம் பேட்டரியின் சக்தி அதிக அளவு உபயோகிக்கப்படுகிறது.வை ஃபை, ப்ளூடூத், 3 ஜீ போன்றவை ஆனில் இருந்தால் அவை சிக்னலுக்காக தேடிக்கொண்டு இருக்கும் எனவே இவற்றை தேவையில்லாத போது ஆஃப் செய்து வைக்கவேண்டும்இது மட்டுமின்றி நெட் ஒர்க்  சிக்னல் வீக்காக இருக்கும்போது உங்கள் அதிக சக்தியை செலவழித்து சிக்னலை தேட ஆரம்பிக்கும் அப்போது பேட்டரி மிக விரைவாக காலியாகிவிடும். எனவே அது போன்ற சூழ்நிலைகளில் ஸ்விச் ஆஃப் செய்வதோ அல்லது ஏரோப்ளேன் மோடில் வைப்பது மிக சிறந்ததும் எளியதும் ஆகும்.
ஒருசில வீடு அல்லது அலுவலகங்களில் ஒரிரு இடங்களி சிக்னல் வீக்காகவும் ஒரு சில இடங்களில் சிக்னல் முழுமையாகவும் கிடைக்கும். அதுபோன்ற இடங்களில் சிகனல் ஸ்ட்ராங்காக இருக்கும் இடங்களில் ஃபோனை வைப்பது இக்குறையை நிவர்த்தி செய்யும்.
9. அறிவிப்புக்கள் அப்டேட்டுக்களை குறைத்துக்கொள்ளல்:
இண்டெர்நெட் இணைப்பு கொடுக்கும் போதெல்லாம் ஸ்மார்ட் போன்கள் அறிவிப்புகள், மேம்படுத்தல்கள் எனப்படும் அப்டேட்கள்  ஆகிக்கொண்டே இருக்கும். இவற்றை அந்தந்த ப்ரோக்ராம்களில் உள்ள ஆப்சனில் தடை செய்யலாம். மென்பொருள் அப்டேட்டை பொருத்த வரை செய்தி வந்தவுடன் அப்டேட் செய்துவிடுவது நல்லது இல்லையெனில் ஒவ்வொரு முறையும் நோட்டிஃபிகேஷன் வந்துகொண்டே இருக்கும். இது எரிச்சலை உண்டு பண்ணுவது மட்டுமின்றி இண்டெர்நெட் உபயோகத்தையும், பேட்டரியையும் சாப்பிட்டு விடும்.
10. கூலாக வைத்திருங்கள்: 
கடைசியாக குளிரான ஆனால் ஈரமற்ற நிலையில் பேட்டரியின் தரமும், வாழ்நாளும் அதிகரிக்கும்எனவே அதிக வெப்பமான நிலையில் ஃபோனை வைப்பதை தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக மூடிய காருக்குள் ஃபோனை விட்டுச்செல்வது பேட்டரியை மிக எளிதாக காலியாக்கி விடும்.

Popular Posts

Facebook

Blog Archive