பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 31 டிசம்பர், 2014

HTML Tutorials 21-DESCRIPTION TAG - விளக்கக் குறிஒட்டு

Description tag
comment tag
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 எளிய தமிழில் HTML தொடரில் ஏற்படும் சந்தேகங்களை மின்னஞ்சல் வழி கேட்டுத் தெளிவுறும் நண்பர்களுக்கு எனது நன்றி. இன்றைய பதிவிற்கு வருவோம்..

விளக்கக் குறிஒட்டு(DESCRIPTION TAG)

விளக்க குறி ஒட்டு என்பது மற்ற குறி ஒட்டுகளிலிருந்து சற்றே 
 
வேறுபடுகிறது. இந்த குறி ஒட்டை HTML ஆவணத்தின் தலைப்பகுதி(Header 
 
SECTION), உடல் பகுதி (BODY SECTION) என எந்தப் பகுதியில் 
 
வேண்டுமானாலும் கொடுக்கலாம். இது / என்ற குறியுடன் 
 
முடிவடைவதில்லை.. மாறாக <!-- என்னும் குறியுடன் தொடங்கி --> 
 
என்னும் குறியுடன் முடிகிறது.



இந்த குறியீடு எதற்கென்றால்... நிரல்வரிகள் குறிப்பிட்டுச்சொல்ல.. அதாவது 
 
எதற்காக இந்த நிரல் வரிகள்.. யாரால் எழுதப்பட்டது.. இப்படி தேவையான 
 
விளக்கங்களை அங்கங்கே எழுதி, அதை பிரௌசரில் வெளிப்படாமல் 
 
இருப்பதற்காக இந்த குறிமுறைப் பயன்படுகிறது.


பிளாக்கரின் Edit HTML பகுதிக்குச் சென்று உங்கள் வார்ப்புருவின் 
 
நிரல்வரிகளை கவனித்தால் இதுபோன்ற குறிஒட்டுகள் அங்கங்கே 
 
பயன்படுத்தப்பட்டிருக்கும்.


விளக்கக்குறிப்புகளை இவ்வாறு எழுதலாம்.

<!--Write your Comment Here-->
<!--This is comment-->
<!--This is my own coding-->
<!--Formating text and size-->
<!--Centers everyhthing in the CENTER element-->

ஒரு உதாரண நிரல்வரிகளை கீழேக் காண்போம்.

<HTML>
<HEAD>
<TITLE>MY OWN WEBPAGE
</TITLE>
</HEAD>
<!--CREATED: THE LAST DAY-->
<!--Written by Mr.Arun-->
<!--last modified: today-->
<BODY>
WELCOME TO HTML <BR>
WELCOME TO ALL
</BODY>
</HTML>

மேற்கண்ட நிரல்வரிகளை NOTEPAD-ல் எழுதி .html என்ற விரிவுடன் 
 
சேமித்து வெளிப்பாட்டை உலவியில் திறந்துபாருங்கள்..



<!--விளக்கக் குறிஒட்டில் --> எழுதியவை உலவியில் வெளிப்படாமல் இருக்கும்.



அதாவது இதனுடைய output இவ்வாறு இருக்கும்.


WELCOME TO HTML
WELCOME TO ALL 


அடுத்தப் பாடத்தில் HTML -ல் முக்கியப் பாடமான HTML ஆவணத்தில் 
 
படங்கள், ஒலி, பட்டியல் மற்றும் அட்டவணைகள் ஆகியவற்றை 
 
சேர்ப்பது எப்படி? என்பதைப் பற்றிக் காணவிருக்கிறோம்..

செவ்வாய், 30 டிசம்பர், 2014

கம்ப்யூட்டர் புரோகிராமிங் மற்றும் வெப் புரோகிராமிங் கற்றுக்கொள்ள பயன்படும் யூடியூப் வீடியோ சானல்கள்

கம்ப்யூட்டர் புரோகிராமிங் மற்றும் வெப் புரோகிராமிங் கற்றுக்கொள்ள பயன்படும் யூடியூப் வீடியோ சானல்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு துறை சார்ந்த எந்த ஒரு விடயத்தையும் கற்றுக்கொள்ள ஒரு சிறந்த களமாக உள்ளது யூடியூப் வீடியோ தளம். இதில் பொழுது போக்கு வீடியோக்கள் மட்டுமல்லாமல் கல்வி, கலை சார்ந்த எண்ணற்ற வீடியோக்கள் உள்ளன.

web and computer program video tutorial

குறிப்பாக Computer Programming மற்றும் C, C++ போன்ற கணினி மொழிகள் என விதவிதமான கம்ப்யூட்டர் சார்ந்த  புரோகிராமிங் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு தேவையான வீடியோக்கள் இதில் இருக்கிறது. 

இதுபோன்ற உள்ள கல்வி தொடர்புடைய புரோகிராமிங் சார்ந்த வீடியோக்கள் அனைத்தும் பல்வேறு நபர்களின் பங்களிப்பால் உருவானவை. 10 அல்லது 13 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோக்கள் அனைத்தும், புதியதாக அடிப்படை புரோகிராமிங் கற்றுக்கொள்பவர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை. 

இந்த வீடியோக்கள் அனைத்தும் ஒவ்வொரு தலைப்புகளின் அடிப்படை விஷயங்களை உள்ளடக்கியது. அதாவது காம்ப்ளக்ஸ் புரோகிராம் எழுதுவதற்கு IDE இன்டாலிங் செய்வது IDE installing to write complex programming போன்ற பயனுள்ள வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

பைதான் Python, சி- C, ஜாவா Java, ஐபோன் டவலப்மெண்ட் iPhone development மற்றும்   HTML, CSS, PHP போன்ற web programming கற்றுக்கொள்வதற்கு இந்த யூடியூப் சேனல்கள் பயன்படும்.

சேனலின் பெயர் தி நியூ போஸ்டன்  - இந்த சேனலில்

  •  ஜாவா புரோகிராமிங்  - Java Programming - 87 வீடியோக்கள்
  • ஜாவா கேம் டவலபிங் - Java Game Development - 36 வீடியோக்கள்
  • இன்டர்மீடியே ஜாவா புரோகிராமிங் Intermediate Java Programming 27 வீடியோக்கள்
  • பைதான் புரோகிராமிங் - Python Programming - 43 வீடியோக்கள்
  • சி புரோகிராமிங் - C Programming -15 வீடியோக்கள்
  • சி++ புரோகிராமிங் - C++ Programming -20 வீடியோக்கள்
  • ஹெச்டிஎம்ல் மற்றும் சிஎஸ்எஸ் - HTML and CSS  - 52 வீடியோக்கள்
  • ஐபோன் அப்ளிகேஷன் டவலப்மெண்ட் - iPhone app development - 37 வீடியோக்கள்
  • பிஹெச்பி புரோகிராமிங் - PHP Programming -35 வீடியோக்கள் 

ஆகியன உள்ளன.

பிஹெச்பி மற்றும் மைஎஸ்கியூஎல் கற்றுக்கொள்ள PHPacademy என்ற சேனல் பயன்படுகிறது.

இதில் இடம்பெற்றுள்ள வீடியோ பாடங்கள்

PHP Basic -  பிஹெச்பி அடிப்படை பாடங்கள் - 27 வீடியோக்கள்
MySQL மற்றும் PHP 6 வீடியோக்கள்

Xoax.net யுடியூப் சானல்:

Xoax -ல் 200 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளன. ஆனால் இதில் முக்கியமாக முன்னிறுத்தப்படுபவை C++ தான்.  இதில்,

C++ பேசிக் கற்றுக்கொள்ள C++ Programming for beginners (51 வீடியோக்கள்)
C++ ஓப்பன்ஜிஎல் கற்றுக்கொள்ள C++ OpenGL for beginners (7 வீடியோக்கள்)
C++ விண்32 கற்றுக்கொள்ள C++ Win32 Tutorials (12 வீடியோக்கள்)
Visual C++ Tutorials (8 வீடியோக்கள்)

இவ்வாறு யுடியூப் தளத்தில் மற்றும் கம்ப்யூட்டர் புரோகிராமிங் மற்றும் வெப் புரோகிராமிங் கற்றுக்கொடுக்கும் பல்வேறு வீடியோ சானல்கள் உள்ளன. அவற்றில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை ஒரு சிலதான்.

இதுபோன்ற எண்ணற்ற வெப் புரோகிராமிங் மற்றும் கம்ப்யூட்டர் புரோகிராமிங் வீடியோக்கள் YouTube இணையதளத்தில் உள்ளன. புரோகிராமிங் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இதுபோன்ற கல்வி, கலை சானல்கள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

Top 10 ஆண்ட்ராய்ட் ரேசிங் கேம்ஸ்

ஆண்ட்ராய்ட் போன்கள் அனைவரும் கவர்ந்து வரும் காலம் இது. ஒவ்வொருவரின் கையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ப்போன்கள் இருக்கிறது. ஆண்ட்ராய்ட் போனில் அதிகம் விரும்புவது கேம்ஸ் ஐட்டம்தான். 

வித விதமான கேம்ஸ்களை டவுன்லோட் செய்து விளையாடுவது அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இளைஞர்கள் முதல் சுட்டீஸ்கள் வரை விரும்பி விளையாடுவது Race Games தான்.

ஆண்ட்ராய்ட் போனில் இன்ஸ்டால் செய்து விளையாடக்கூடிய Top 10 Racing Game - ஐ இங்கு வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. 

தேவையானோர் டவுன்லோட் செய்து உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் இன்ஸ்டால் செய்து விளையாடி மகிழுங்கள். 

1. Death Rally FREE


Death Rally FREE android game
இந்த கேமை டவுன்லோட் செய்ய: Download Death Rally FREE android game

2. 2XL MX Offroad


2XL MX Offroad android game

இந்த கேமை டவுன்லோட் செய்ய: Download  2XL MX Offroad android game

3. Acceler8 Pro


Acceler8 Pro android game



4. GT Racing: Motor Academy Free+


GT Racing: Motor Academy Free+ android game



5. Parking Frenzy 2.0


Parking Frenzy 2.0 android game


6. Trial Xtreme 2


Trial Xtreme 2 android game


7. Pocket Racing


Pocket Racing android game


8. Raging Thunder 2


Raging Thunder 2 android game


9. Reckless Racing 2


Reckless Racing 2 android game


10. Snuggle Truck


Snuggle Truck android game




I collect android top-ten racing games for android phone users. most of games are free to download and install. All are in Google play store. so don't worry about virus, malicious problem. All the games are secure games.

உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனத்தை புதியதுபோல் பராமரிக்க

உலகில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது மொபைல் போன். மொபைல் போன் வரிசையில் புதிய புரட்சி ஆண்ட்ராய்ட் மொபைல்போன்கள். உலகெங்கும் அனைவராலும் விரும்பப்படும் ஆண்ட்ராய்ட் போன்கள் பல்வேறு விலைகளில், பல்வேறு அளவுகளில், பல்வேறு வசதிகளுடன் கிடைக்கின்றன. 

ஆண்ட்ராய்ட் போன்கள் இந்தளவிற்கு பிரபலமானதற்கு காரணம் user friendly கட்டமைப்புதான். இவ்வாறு அனைவரையும் கவரும் ஆண்ட்ராய்ட் போன்கள், நாளடைவில் கணினியைப் போன்று செயல்படும் திறனில் வேகம் குறைகின்றன. இதற்கு காரணம் பயன்படுத்தும் விதம் மற்றும் அதில் இடம்பெரும் அப்ளிகேஷன்களின் அளவு, இடம்பெற்றிருக்கும் கோப்புகளின் எண்ணிக்கை மற்றும் கோப்புகளின் அளவு போன்றவற்றைக் குறிப்பிடலாம். 


உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனத்தைப் புதிய போனைப் போன்று அதிக செயற்திறனுடன் செயல்பட வைக்க ஒரு புதிய மென்பொருள் பயன்படுகிறது.

மென்பொருளின் பெயர்: Advanced mobile care 

இந்த மென்பொருள் மெதுவாக இயங்கும் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்குகிறது. மேலும் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள தேவையற்ற வைரஸ்களை நீக்கி பாதுகாக்கின்றனது. 

Games Booster: 

நீங்க் உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனத்தில் கேம்ஸ் விளையாடும்போது , கேம்ஸ் ஸ்பீடர் (Games speeder) எனும் டூல் மூலம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் பேக்ரவுண்டில் இயங்கும் நிரலிகளை கட்டுப்படுத்தி, வேகமாக கேம் விளையாட உதவுகிறது. 

Battery Saver: 

இதிலுள்ள battery saver எனும் டூல் மூலம் வீணாகும் பேட்டரி சக்தியை முறையாக சேமித்து முடியும். 

Privacy Advisor: 

இந்த டூல் மூலம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனத்தில் நிறுவப்படும் ஒவ்வொரு அப்ளிகேஷனும் மூலம் உங்களுடைய சாதனத்தில் இருக்கும் எப்படிப்பட்ட வசதிகளை இயக்க முடியும் என்பதை  தனித்தனியாக காட்டுகிறது. 

Application Manager: 

இந்த டூல் மூலம் சாதனத்தில் நிறுவப்பட்டிருக்கும் அப்ளிகேஷன்களை நீக்கவும், movie apps என்பதன் மூல் SD card க்கு மூவ் செய்துகொள்ளவும் முடியும். 

Cloud Backup: 

இந்த வசதியின் மூலம் உங்கள் தொடர்பில் இருக்கும் contac, call log போன்றவற்றை இணையத்தில் சேமித்துக்கொள்ள முடியும். இந்த வசதியின் மூலம் நீங்கள் புதிய சாதனத்திற்கு மாறும்பொழுது அனைத்து விபரங்களையும் புதிய சாதனத்திற்கு எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். 

Anti Theft: 

இந்த Advance care மென்பொருள் நிறவப்பட்ட உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனம் தொலைந்துவிட்டால், மற்றொரு Advance care மென்பொருள் நிறவப்பட்ட சாதனத்தின் மூலம் தொலைந்து போன சாதனத்தை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக தொலைந்து போன சாதனத்தில் GPS இயக்கப்படாது இருந்தாலும் சாதனம் இருக்கும் இடத்தை துல்லியமாக Google Map மூலம் கண்டுபிடிக்க முடியும். 

Privacy Locker: 

இந்த வசதியின் மூலம் விடியோ கோப்புகள், ஆவணங்கள் மற்றும் ஆல்பம் போன்றவற்றினை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுக்க முடியும்.

இத்தனை வசதிகளும் கொண்ட இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம். 

மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி: 

நன்றி. 

ஆங்கிலத்தில்: 

www.masinfom.blogspot.com

All must-have tools for Android are in one Advanced Mobile Care.

HTML Tutorials 20-FONT குறிஒட்டும் அதில் பயன்படுத்தும் பண்புகளும்

எளிய தமிழில் HTML தொடரில் அடுத்து நாம் காணவிருப்பது <FONT>குறி 

 

ஒட்டாகும். இதில் பயன்படுத்தப்படும் பண்புகளைப் பற்றியும் பார்க்கலாம்.


FONT என்றால் எழுத்து. எழுத்தில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. 

 

இதற்கு பல்வேறு வகையான நிறங்களையும் கொடுக்கலாம். 


 

 

<FONT> குறிஒட்டில் FACE, SIZE மற்றும் COLOR என்னும் பண்புகளைச் சேர்ப்பதன் மூலம் எழுத்தின் வகை, எழுத்தின் அளவு, எழுத்தின் நிறம் போன்றவற்றை மாற்றி அமைக்க முடியும்.



அதாவது இவ்வாறு இருக்க வேண்டும


<FONT SIZE="Size of the text in pixels" COLOR="Color Name" FACE="font name"> Sample Text</FONT>


SIZE பண்பு


SIZE  பண்பினை <FONT> குறி ஒட்டில் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம்.

 

<FONT SIZE= "Value"> 1 முதல் 7 வரை எழுத்தின் அளவுகளை இதில் 

 

பயன்படுத்தலாம். Default(கொடாநிலை)ஆக எழுத்தின் அளவு 3 என 

 

இருக்கும். 


உதாரணம்: <FONT SIZE="3">Change the font size to 3</FONT>


COLOR பண்பு


உரை எந்த நிறத்தில் தெரிய வேண்டும் என்பதைக் குறிப்பிட COLOR பண்பு 

 

பயன்படுகிறது. இதில் நிறத்தின் பெயரையோ அல்லது அதற்கான RGB 

 

குறிமுறையையோ கொடுக்கலாம். 



COLOR பண்பினை <FONT> கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம். 


<FONT COLOR="#FF000">THIS TEXTX IS RED</FONT>

 

அல்லது இப்படியும் நிறத்தின் பெயரையும் கொடுக்கலாம்.

 

<FONT COLOR="red">THIS TEXT IS RED</FONT> 



FACE பண்பு


உரை எந்த எழுத்து வகையில் காட்டபட வேண்டும் என்பதைக் குறிக்க FACE 

 

பண்பு பயன்படுகிறது. பெரும்பாலும் அனைத்து உலவிகளும், பொதுவாகப் 

 

பயன்படுத்தப்படும் எழுத்து வகைகளை ஏற்றுக் கொள்கின்றன. உலவியால் 

 

காட்ட முடியாத எழுத்து வகைகளை ஏற்றுக் கொள்கின்றன. உலவியால் 

 

காட்ட முடியாத எழுத்து வகையை நாம் கொடுக்கும்போது,  உரையானது 

 

கொடாநிலை(DEFAULT) எழுத்து வகையில் காட்டப்படும். 


FACE பண்பினை <FONT> குறி ஒட்டில் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம். 


உ.ம்.


<FONT FACE="Arial">Welcome Friends</FONT>


<FONT > குறிஒட்டில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளைப் பயன்படுத்தலாம். 


உதாரணம்: <FONT FACE="Arial" SIZE="5" COLOR="Blue">Happy Birthday</FONT>



இவ்வாறு  <FONT> குறிஒட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பண்புகளைப் பயன்படுத்தலாம்..


ஒரு உதாரண நிரல்வரிகளைக் காண்போம்..


<HTML>

<HEAD><TITLE>Changing the Font, Size and Color </TITLE>

</HEAD>

<BODY>

<FONT face= "arial" size="3" color="red">Dear Friends..!"</FONT> <BR>

<FONT face= "digital" size="3" color="green">Dear Friends..!"</FONT> <BR>

<FONT face= "forte" size="3" color="blue">Dear Friends..!"</FONT> <BR>

<FONT face= "elephant" size="3" maroon="red">Dear Friends..!"</FONT> <BR>

<FONT face= "alerian" size="3" color="navy">Dear Friends..!"</FONT> <BR>

</BODY>


மேற்கண்ட நிரலை நோட்பேடில் எழுதி .html என்ற விரிவுடன் சேமித்து உலவியில் திறந்து பாருங்கள்.


இவ்வாறு இருக்கும்.


Dear Friends..!"

Dear Friends..!"

Dear Friends..!"
Dear Friends..!"
Dear Friends..!"

www.masinfom.blogspot.com

HTML Tutorials 19-BIG TAG மற்றும் SMALL TAG


கடந்த இடுகையில் <BODY>குறிஒட்டில் பயன்படுத்தப்படும் LINK Attribution-
சிறப்புப் பண்பைப் பற்றிப் பார்த்தோம். தவறவிட்டவர்கள் இணைப்பைக் 
 
கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
 
இன்றையப் பாடத்தில் மேலும் இரண்டு குறிஒட்டுகளைப் பற்றிப் 
 
பார்ப்போம். 
 
இதில் <BIG> மற்றும் <SMALL> என்ற குறி ஒட்டுகளைப் பற்றிப் பார்க்க 
 
இருக்கிறோம்.

  1. <BIG></BIG> என்ற குறிஒட்டுகள் நாம் எழுதிய எழுத்துகளை அதைவிட சற்று பெரியதாக காட்டப் பயன்படுகிறது.
  2. <SMALL> </SMALL> என்ற குறிஒட்டுகள் நாம் எழுதிய எழுத்துகளை அதைவிட சற்று சிறியதாக காட்டப் பயன்படுகிறது.

<HTML>
<HEAD>
<TITLE> BIG TAG and  SMALL TAG</TITLE>
</HEAD>
<BODY>
 <BIG>BIG என்ற குறிஒட்டு நாம் எழுதிய எழுத்துகளை அதைவிட சற்று பெரியதாக காட்டப் பயன்படுகிறது. </BIG>

<SMALL>SMALL என்ற குறிஒட்டு நாம் எழுதிய எழுத்துகளை அதைவிட சற்று பெரியதாக காட்டப் பயன்படுகிறது</SMALL>

</BODY>
</HTML>


மேற்கண்ட நிரல் வரிகளை வழக்கம்போலவே நோட்பேடில் எழுதி .html என்ற விரிவுடன் சேமித்து உலவியில் திறந்து பாருங்கள்.



அதன் வெளிப்பாடு இவ்வாறு இருக்கும்.


BIG என்ற குறிஒட்டு நாம் எழுதிய எழுத்துகளை அதைவிட சற்று பெரியதாக காட்டப் பயன்படுகிறது. 

SMALL என்ற குறிஒட்டு நாம் எழுதிய எழுத்துகளை அதைவிட சற்று பெரியதாக காட்டப் பயன்படுகிறது
அருண்
www.masinfom.blogspot.com

HTML Tutorials 18- LINK Attributions in BODY TAG

link attributes in body tag
கடந்த பதிவில் Body tag- ல் BACKGROUND பண்பு என்பதைப் பற்றிப் பார்த்தோம். 
 
தவறவிட்டவர்கள் இணைப்பில் சென்று பதிவைப் படித்துவிட்டுத் 
 
தொடரவும். 

Link பண்பு:


HTML ஆவணத்தில், ஒரு ஆவணத்திலிருந்து மற்றொரு ஆவணத்திற்கு 
 
இணைப்பை ஏற்படுத்த முடியும். இணைப்பை ஏற்படுத்தும் முறைகளைப் 
 
பற்றி பின்வரும் பாடங்களில் படிப்போம். இந்த இணைப்பிற்குப் பயன்படும் 
 
நிறத்தை LINK பண்பின் மூலம் கொடுக்கலாம்.


Internet Explorer, Netscape Navigator போன்ற உலவிகள், சாதாரணமாக இணைப்புகளை நீல நிறத்தில் காட்டுகின்றன. இந்த நிறத்தை நாம் மாற்றிக் கொள்ள முடியும். உதாரணமாக, இந்த இணைப்பைப் பச்சை நிறத்தில் காட்ட

<BODY LINK = "Green">

எனும் குறிமுறையைப் பயன்படுத்த வேண்டும்.


VLINK பண்பு(Attribution)


இந்தப் பண்பு, நாம் ஏற்கனவே பார்த்த இணைப்புகளின் நிறத்தை மாற்றிக் 
 
காட்ட பயன்படுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புரோர்ரும், நெட்ஸ்கேப் 
 
நேவிகேட்டரும் சாதாரணமாக இந்த இணைப்புகளை ஊதா நிறத்தில் 
 
காட்டுகின்றன. இந்த நிறத்தையும் நாம் மாற்றிக்கொள்ள முடியும். 
 
ஏற்கனவே பார்வையிட்ட இணைப்புகளை சிவப்பு நிறத்தில் காட்ட


<BODY VLINK = "Red">


என்னும் குறிமுறையைப் பயன்படுத்த வேண்டும்.


ALINK பண்பு (Attribution)


சுட்டியை ஒரு இணைப்புச் சொல்லின் மீது நிறுத்தும்போது ஏற்படும் 
 
இணைப்பு இயங்கு இணைப்பு (Active Link) எனப்படும். இன்டர்நெட் 
 
எக்ஸ்புரோளரும், நெட்ஸ்கேப் நேவிகேட்டரும் இயங்கு இணைப்பினை 
 
சாதாரணமாக சிவப்பு நிறத்தில் காட்டும். இந்த இணைப்பிற்கும் நாம் 
 
வேண்டிய நிறத்தைக் கொடுக்கலாம்.



உதாரணமாக,


<BODY ALINK = "aqua"> 


என்னும் குறிமுறை இணைப்பினை அக்வா நிறத்தில் காட்டும்.



 உதாரண நிரல் ஒன்றைப் பார்ப்போம்.


<HTML>
<HEAD>
<TITLE>LINK ATTRIBUTION In BODY TAG</TITLE>
</HEAD>
<BODY  LINK = "Green" VLINK = "Red" ALINK = "aqua">
 இணையப் பக்கங்களில் உள்ள இணைப்புகளுக்கு இணைப்பு பண்புகளும் மூலம் நாம் நினைக்கும் நிறத்தைக் கொடுக்க முடியும்.


<a href="http://www.thangampalani.com/search/label/confidence"> தன்னம்பிக்கை தகவல்கள்</a>



</BODY>
</HTML>


* இந்த நிரலை NotePad-ல்  எழுதி .html என்ற விரிவுடன் சேமித்து சோதனை செய்து கொள்ளுங்கள்.


இணையப் பக்கங்களில் உள்ள இணைப்புகளுக்கு இணைப்பு பண்புகளும் 
 
மூலம் நாம் நினைக்கும் நிறத்தைக் கொடுக்க முடியும்.

மேற்கண்ட நிரலில் உலவிகள் சாதாரணமாக இணைப்புகளைக் காட்டும் 
 
நிறத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிறங்களைக் கொடுத்திருக்கிறேன்.



1. இணைப்பு பச்சை நிறத்தில் காட்ட வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறேன்.
 
2. ஏற்கனவே பார்வையிட்ட(சொடுக்கப்பட்ட பிறகு) இணைப்பை சிவப்பு நிறத்திலும்
 
3. இணைப்பின் மீது சுட்டியை (Mouse) நிறுத்தும்போது தோன்றும் நிறமானது அக்வா நிறத்திலும் காட்டபட வேண்டும் என நிரல்வரிகளை அமைத்திருக்கிறேன்.

அடுத்த பதிவில் மேலும் சில முக்கிய குறிஒட்டுகளைப்(TAGs) பற்றிப் 
 
பார்ப்போம்.

HTML Tutorials 17- Body tag- ல் BACKGROUND பண்பு..

Learning HTML in Tamil

கடந்த இடுகையில் Body குறிஒட்டில் பயன்படுத்தப்படும் சிறப்புப் பண்புகளில் ஒன்றான TEXT என்ற பண்பைப் பார்த்தோம். முந்தையப் பதிவில் பார்த்த BGCOLOR என்ற பண்பை போன்றதே 

இன்றையப் பதிவில் பார்க்கப்போகும் BACKGROUND என்ற பண்பும். 


HTML ஆவணத்தில் முக்கிய குறிஒட்டான tag-ல் பயன்படுத்தப்படும் சிறப்புப் பண்புகளைப் பற்றி கற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள். 


இந்த BACKGROUND பண்பானது உங்கள் HTML ஆவணத்தில் பின்னணியில் படத்தைச் சேர்க்கப் பயன்படுகிறது. அதாவது முன்பு பார்த்த BGCOLOR என்ற பண்பைப் பார்த்தோமல்லவா? அதைப்போன்றேதான்.. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில் BGCOLOR பண்பில் பின்னணியில் நிறத்தை வைக்கிறோம். BACKGROUND பண்பு பின்னணியில் படத்தை வைக்கிறோம். அவ்வளவே. 

இவ்வாறு படத்தை வைக்க TAG-ல் BACKGROUND என்ற சிறப்புப் பண்பைச் சேர்க்க வேண்டும். 
உ.ம்.

<HTML>

<HEAD>
<TITLE>Background in BODY TAG</TITLE>
</HEAD>
<BODY BACKGROUND="IMAGE URL" > 
இந்த நிரல் HTML ஆவணத்தில் வலைபக்கங்களின் பின்னணியில் படங்களை வைக்கப் பயன்படும் background என்ற சிறப்புப் பண்பைப் பற்றியது 
</BODY>
</HTML>


மேற்கண்ட நிரலில் படத்தினுடைய URL -லை கொடுக்கவேண்டும்.
உலவியில் இதனுடைய வெளிப்பாடு இவ்வாறு இருக்கும்.



இதில் நீங்கள் வைக்க வேண்டிய படத்தின் சரியான கோப்புத் தடத்தைப்(File Path or image url) பதிய வேண்டும். அப்போதுதான் படமானது உங்கள் HTML வலைப்பக்கத்தின் பின்னணியில் படம் தோன்றும். 

நீங்கள் பின்னணியில் வைக்க விரும்பும் படம் உங்கள் கணினியிலேயே சேமிக்கப்பட்டிருந்தால், அந்த

  • படத்தின் மீது ரைட் கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
  • அதில் General என்ற டேபில் கீழே Location என்பதற்கு நேராக இருக்கும் பைல்பாத்தை-file path(கோப்புத் தடம்) காப்பி செய்து செய்துகொள்ளுங்கள்.
  • பிறகு HTML ஆவணத்தில் இறுதியாக அந்த படத்தின் பெயர் என்னவோ அதை தட்டச்சிட்டு சேமித்துக்கொள்ளுங்கள்.


அதாவது இவ்வாறு இருக்க வேண்டும்.
C:\Users\User\Desktop\imagename.jpg

இவ்வாறு கோப்புத் தடத்தை காப்பி செய்துகொண்டு உங்கள் HTML ஆவணத்தில்  
<BODY BACKGROUND="IMAGE URL" > என்பதில்  IMAGE URL 
என்பதை நீக்கிவிட்டு நீங்கள் காப்பி செய்த படத்தின் தடத்தை(FILE PATH) பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்.

அதாவது இப்படி இருக்க வேண்டும்.

 <BODY BACKGROUND="C:\Users\User\Desktop\imagename.jpg" >

இப்போது முழு HTML ஆவணம் 

<HTML>

<HEAD>
<TITLE>Background in BODY TAG</TITLE>
</HEAD>
<BODY BACKGROUND="C:\Users\User\Desktop\imagename.jpg" > 
இந்த HTML ஆவணம் பின்னணியில் படங்களை வைக்கப் BODY குறி ஒட்டில் பயன்படுத்தக்கூடிய background என்ற சிறப்புப் பண்பைப் பற்றியது.
</BODY>
</HTML>





இப்போது உங்கள் HTML ஆவணத்தை .html என்னும் விரிவுடன் சேமித்து, உங்கள் வலை உலவியில் திறந்து பாருங்கள்.. அங்கே ஓர் ஆச்சர்யம் காத்திருக்கும். நீங்கள் தேரந்தெடுத்த படமானது உங்கள் வலைப்பக்கத்தின் பின்னணியில் வந்து உங்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கும்.

குறிப்பு: படத்திற்கான URL அல்லது File Path சரியாக தட்டச்சிடப்பட்டுள்ளதா அல்லது சரியாக காப்பி பேஸ்ட் செய்துள்ளதா என்பதை ஒரு முறை சோதனை செய்துகொள்ளுங்கள். சிறு தவறு ஏற்படினும் படமானது பின்னணியில் தோன்றாது.

BODY TAG-ல் பயன்படுத்தக்கூடிய  சிறப்புப் பண்புகளில் ஒன்றான இணைப்பு பண்பைப் (LINK Attributions) பற்றி இனி வரும் பதிவுகளில் காணலாம். 

பதிவானது பலரையும் சென்றடைய திரட்டிகளில் ஓட்டுப்போட உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் நண்பர்களுக்கு பகிர சமூதளங்களில் பதிவைப் பகிர்ந்திடுங்கள். நன்றி நண்பர்களே மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்....!!

Popular Posts

Facebook

Blog Archive