YouTube க்கு போட்டியாக Yahoo வின் புதிய Video தளம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Google
வழங்கும் ஒரு சேவை Youtube தளத்தில் வீடியோக்களை பகிர மற்றும்
கண்டுகளிப்பதாகும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள்
ஒரு மாதத்திற்கு பார்க்கப்படுகிறதாம். Google தளங்களில்
வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது YouTube தளம்.
இதைப் பார்த்து Yahoo நிறுவனம் Youtube தளத்திற்குப் போட்டியாக புதிய வீடியோ தளத்தை உருவாக்கி உள்ளது.
இந்தத் தளத்திலும் YouTube தளத்தில் உள்ளதைப் போலவே பல்வேறு பிரிவுகளில் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம்.
Yahoo
தளம் இந்தியாவில் உள்ள டிவி சேனல்கள் மற்றும் சினிமா தயாரிப்பு
நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு காப்புரிமை வழங்கப்பட்ட original
வீடியோக்களை மட்டுமே இந்தத் தளத்தில் பகிர்ந்துள்ள்ளது.
Yahoo
நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தான் முழு நீளத் திரைப்படத்தை காணும்
Movieplex வசதியை கொண்டு வந்தது. அதற்குள் இப்பொழுது புதிய தளத்தை அறிமுகம்
செய்துள்ளது.
அவ்வளவும் original வீடியோக்கள் என்பதால் தரத்தைப் பற்றி கவலை இல்லை.
வாசகர்கள்
வீடியோக்களை upload செய்யும் வசதி இந்த தளத்தில் இல்லை. மேலும் பல
வசதிகளை கொண்டு வந்தால் இந்தத் தளமும் நல்ல வளர்ச்சியை பெரும் என்பதில்
ஐயமில்லை.