விண்டோஸ் 10 உடன் புத்தம் புது ஸ்பார்டன் பிரவுசர் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil விண்டோஸ் 10 உடன் புத்தம் புது ஸ்பார்டன் பிரவுசர் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 24 ஜனவரி, 2015

விண்டோஸ் 10 உடன் புத்தம் புது ஸ்பார்டன் பிரவுசர்

மைக்ரோசாப்ட் நிறுவனம், வரும் மாதங்களில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட உள்ளது. அத்துடன் தரப்படும்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருடன், இன்னொரு பிரவுசரும் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முற்றிலும் புதியதாகத் தரப்படும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். புதியதாக வடிவமைக்கப்பட்டு தரப்படும் பிரவுசரர் Spartan என்ற குறியீட்டுப் பெயரினைத் தற்போது கொண்டுள்ளது. இது வழக்கமான பிரவுசரின் மேம்பாடடைந்த பதிப்பாக இல்லாமல், முற்றிலும் புதியதான தோற்றமும் பயன்பாடும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரவுசர், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் தோற்றத்திற்கு இணையான தோற்றத்தினைக் கொண்டிருக்கும். எக்ஸ்டன்ஷன்கள் எனப்படும் புரோகிராம்களை ஏற்றுக் கொள்ளும், இதில் வழக்கமான சக்ரா
 ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் (Chakra JavaScript engine) பயன்படுத்தப்படும். இதனுடன் Trident rendering engine இணைந்து செயல்படும். எப்படி விண்டோஸ் 10, விண்டோஸ் 9 என்ற தொடர் எண்ணைக் கொண்டிராமல் அறிமுகமாகிறதோ, அதே போல, வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், தொடர் பதிப்பு 12 ஆக இல்லாமல், முற்றிலும் புதியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபாரி மற்றும் குரோம் பிரவுசர்கள், வெப்கிட் கொண்டு வடிவமைக்கப்பட்டவையாகும். விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைத்து இது வழங்கப்படும். இதில் மொபைல் சாதனங்களில் இயங்கும் பதிப்பும் கிடைக்கும்.

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11ம், ஸ்பார்டன் எனத் தற்போது அழைக்கப்படும் பிரவுசரும் என இரண்டும் இடம் பெறும்.

தற்போது தரப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைக் காட்டிலும், இதன் வசதிகள் 300 மடங்கு அதிகமாக மேம்படுத்தப்பட்டு கிடைக்கும். பிரவுசர் பயன்பாட்டினைப் புதிய கோணத்தில் ஆச்சரியம் கலந்த அனுபவத்துடன் ஸ்பார்டன் பிரவுசர் தரும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இதன் கிராபிகல் யூசர் இண்டர்பேஸ் பயன்பாடு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதன் மூலம், போட்டியில் இருக்கும் மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் வாடிக்கையாளர்களால், அதிகம் விரும்பப்படும் என்று தெரிகிறது. பல மேம்பாட்டு வசதிகளுக்கான தூண்டுதல்கள், கூகுள் நவ் போன்ற அப்ளிகேஷனிலிருந்து மைக்ரோசாப்ட் எடுத்திருக்கலாம். தற்போது பிங் தேடல் சாதனத்தில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து தேடல் வகைகளையும், ஸ்பார்டன் பிரவுசரிலும் மேற்கொள்ளலாம்.

இதில் தரப்பட இருக்கும் இன்னொரு முக்கிய டூல் Cortana அசிஸ்டண்ட் ஆகும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த டூல் மூலம், பிரவுசரில் குரல் வழியிலும் தேடலாம். வர இருக்கும் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 10 மற்றும் அதனுடன் தரப்பட இருக்கும் ஸ்பார்டன் பிரவுசர் ஆகிய இரண்டிலும், பயனாளர்கள், குரல் வழியிலும் தங்கள் தேடல்களை மேற்கொள்ளலாம். Cortana அசிஸ்டண்ட் என்னும் டூல் இவை இரண்டிலும் இணைக்கப்படலாம் என்று தெரிகிறது. இது குரோம் சிஸ்டத்தில் செயல்படும் "OK Google" என்பதனைப் போல், அல்லது கூடுதல் வசதிகளுடன் இருக்கலாம் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

ஸ்பார்டன் பிரவுசரில், புதிய டேப் ஒன்று தரப்பட்டு, அதனைக் கிளிக் செய்கையில், Cortana டூல் இயக்கப்பட்டு, அதன் மூலம் நம் தேடல்களை, ஒலி மூலம் மேற்கொள்ளலாம். நீங்கள் தேடுவது ஓர் இணைய தளமாகவும் இருக்கலாம்; அல்லது நீங்கள் பயணம் செய்வதற்கான பயணச் சீட்டுப் பதிவு குறித்தும் இருக்கலாம்.

ஸ்பார்டன் பிரவுசரில், ”குரூப் டேப்பிங்” என்ற வசதி தரப்பட உள்ளது. இதன் மூலம், நாம் இணைய தள முகவரிகளை, நம் விருப்பப்படி ஒரே டேப்பில் இணைத்து வைத்து இயக்கலாம். இதனால், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் தளங்களை இயக்குபவர்களின் பிரவுசரில், டேப்கள் மொத்தமாகக் கூட்டமாக இருக்க வேண்டியதிருக்காது.

மைக்ரோசாப்ட், ஸ்பார்டன் பிரவுசருடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 ஐயும் சேர்த்து தர இருக்கிறது. ஏனென்றால், ஸ்பார்டன் பிரவுசரினைப் பயன்படுத்துவது, வாடிக்கையாளர்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை என்றால், அவர்கள் வழக்கம் போல், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பயன்படுத்தலாம். ஒரே நேரத்தில், இரண்டு பிரவுசர்களையும் இயக்கலாம். விண்டோஸ் 10 சிஸ்டத்தில் மட்டும் இந்த இரண்டு பிரவுசர் இயக்கும் வசதியை மைக்ரோசாப்ட் தர உள்ளது.

“ஸ்பார்டன்” என்பது, புதிய பிரவுசருக்கான உறுதி செய்யப்பட்ட பெயர் அல்ல. விண்டோஸ் 10 குறித்த தகவல்களுடன் இதன் பெயர் பின்னர் தரப்படும். இது குறி அறிவிக்கப்பட்டு, நமக்குக் காட்டப்படும்போது, இன்னும் பல ஆச்சரிய வசதிகள் கிடைக்கலாம் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி /நிலவு
Read IN English

http://masinfom.blogspot.in/2015/01/microsoft-builds-new-browser.html

Popular Posts

Facebook

Blog Archive