ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 24 ஜனவரி, 2015

ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி?

கணினி மற்றும் லாப்டாப் பயன்படுத்தும் பலரும் தாங்கள் பயன்படுத்தும் கருவிகளில் வைரஸ் தாக்கும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சில வைரஸ்களை சாதாரணமாக பயன்படுத்தும் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை கொண்டு எளிதாக அழித்து விட முடியும். பெரும்பாலான வைரஸ்களை அழிப்பது சற்று சிரமமான காரியமாக தோன்றும், ஆனால் அவைகளையும் எளிதாக அழிக்க முடியும். அந்த வகையில் சிலருக்கு ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி என்று தெரியாமல் இருக்கும்.

ஷார்ட்கட் வைரஸ்களை CMD கொண்டு அழிப்பது எப்படி?


1. முதலில் உங்களது பென் டிரைவ் / யுஎஸ்பி / ஹார்டு டிஸ்க் கணினியில் பொருத்தி எந்த ஃபைலும் ஹிட்டன் மோடில் இல்லாததை உறுதி படுத்துங்கள்.

2. அடுத்து ஸ்டார்ட் - ரன் - "CMD" என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

3. பென் டிரைவ் அல்லது யுஎஸ்பி டிரைவ் சென்று "del*.lnk" டைப் செய்து அனைத்து லின்க் ஃபைல்களையும் டெலீட் செய்யுங்கள்

4. அடுத்து attrib -h -r -s /s /d g:\*.* டைப் செய்து என்டர் பட்டனை அழுத்துங்கள்

5. இப்பொழுது உங்களது கருவிகளில் இருந்த பழைய ஃபைல்கள் அனைத்தும் காணப்படும், அவைகளை பத்திரமாக வேறு போல்டருக்கு மாற்றிவிட்டு உங்கள் கருவியை ஃபார்மேட் செய்து பின் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

நன்றி /அன்பைத்தேடி

Popular Posts

Facebook

Blog Archive