பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள்

பெண்கள் மீதான வன்முறை குறித்த செய்திகள் இல்லாமல் எந்தவொரு நாளையும் கடந்துவிட முடியாத சூழ்நிலையில்தான் நாம் இன்று 
வாழ்கிறோம். சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த மூதாட்டிகள் வரை பல்வேறு வகையில் பாலியல் வன்முறைக்கு ஆளாகிற கொடூரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
பள்ளிக் கூடமோ, பணிபுரியும் அலுவலகமோ எந்த இடமாக இருந்தாலும் பெண்கள் இன்று தங்களை எல்லா விதத்திலும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பெண்கள் ஏதாவது ஆபத்தில் மாட்டிக்கொண்டால் அவர்களுக்கு உதவுவதற்காகத் தொழில்நுட்பம் கைகொடுக்கத் தயாராக இருக்கிறது. பெண்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் ‘ஆப்ஸ்’ எனப்படும் அப்ளிகேஷன்ஸ் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
ஐ யம் சேஃப் ( I AM SAFE ) : 
பயண இடங்களைக் கண்காணித்து, பாதுகாப்புக்கு வழி செய்யும் ஒரு இலவச மென்பொருள் இது. கூகுளால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மென்பொருள், பெண்கள் கடந்து வரக்கூடிய எல்லா இடங்களையும் ஜி.பி.எஸ் மூலம் கண்டறிந்து, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்புகிறது.
அலர்ட்.அஸ் ( Alert.us ) : 
பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்ற குழந்தைகள் பத்திரமாகத் திரும்பி வர வேண்டுமே என்று கவலைப்படும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதமான அப்ளிகேஷன் இது. இதன் மூலம் மகனோ மகளோ எங்கு இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும். இது அவசர காலத்தில் அலர்ட் பொத்தானை அழுத்தும்போது குறிப்பிட்ட எண்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பி ஆபத்திலிருந்து காக்கிறது.
லைஃப் 360 டிகிரி (Life 360) : 
இது அதிகம் பேரால் டவுன்லோட் செய்யப்பட்ட அப்ளிகேஷன். ஸ்மார்ட் போன் அல்லாத பிற போன்களிலும் பயன்படுத்த முடிவது கூடுதல் வசதி. குறிப்பிட்ட வட்டத்துக்குள் (குடும்பம்) பயன்படுத்த முடிகிற இந்த மென்பொருளில் அடிப்படையான பாதுகாப்பு விஷயங்களைத் தாண்டி வேறு நிறைய விஷயங்களும் உண்டு.
ஜி.பி.எஸ், வைஃபை (WIFI) வசதியும் கொண்ட இந்த அப்ளிகேஷன், அடிக்கடி நாம் செல்கிற இடத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் சொல்வது, குடும்ப உறுப்பினர்கள் வெளியே புறப்படும்போதும் வீட்டுக்குத் திரும்பி வந்த உடனேயும் மெசேஜ் தருவது, பாலியல் குற்றவாளிகள் பற்றிய விபரங்கள், நாம் குடியிருக்கும் இருப்பிடத்தின் அருகில் நடந்த பாலியல் குற்றங்கள் போன்ற தகவல்களையும் தருகிறது.
பாதுகாப்பு விஷயத்திலும் இது சிறந்தது. அபாயத்திலிருக்கும் ஒருவர் பேனிக் பட்டனை அழுத்தினால், தகவல் குறுஞ்செய்தியாகவும், ஈ-மெயில் மூலமாகவும், செய்தி சென்று சேர்பவரிடம் அந்த ஆப் இருக்கும் பட்சத்தில் நோட்டிஃபிகேஷன் மூலமாகவும் செல்கிறது.
பீ சேஃப் ( BSafe ) :
 இதன் தாரக மந்திரமே ‘நீங்கள் தனியாக நடக்கத் தேவையில்லை’ என்பதுதான். இலவசமாகப் பயன்படுத்தும் வெர்ஷனில் ஒரு கார்டியன் உங்கள் எஸ்.ஓ.எஸ். (ஆபத்துக்கால) மெசேஜுக்குப் பதில் அனுப்புவார். பணம் செலுத்திப் பெறப்படும் வெர்ஷனில் 3 கார்டியன்கள் கால் மூலமாகவோ அல்லது மெசேஜ் மூலமாகவோ உங்களைத் தொடர்பு கொள்வர். இரு மோடுகளில் இது செயல்படுகிறது.
ரிஸ்க் மோடு - ரியல் டைமில் ஜி.பி.எஸ் மூலம் செல்லும் வழி கண்காணிக்கப்படும்.
டைமர் மோடு - குறிப்பிட்ட நேரம் கழித்து இந்த அப்ளிகேஷனுள் நுழையவில்லை என்றால் தானாகவே அலாரம் ஒலிக்கும்.
இதன் மிக முக்கியமான வசதி ஆபத்து காலங்களில் 5 நொடி, 15 நொடி, 1 நிமிடம், 5 நிமிடங்கள், 10 நிமிடங்கள் என ஆறு கால இடைவேளையில் புரோகிராம் செய்து விட்ட பிறகு அதுவாகவே போலியாக நமக்கு அழைப்பு (Fake Call) கொடுப்பது. இதன் மூலம் தனியாகச் செல்கிறோம் என்ற பயத்தைப் போக்கி, எதிராளிக்கு எச்சரிக்கை மனநிலையைக் கொடுக்கிறது.
இதன் மிக முக்கியமான வசதி ஆபத்து காலங்களில் 5 நொடி, 15 நொடி, 1 நிமிடம், 5 நிமிடங்கள், 10 நிமிடங்கள் என ஆறு கால இடைவேளையில் புரோகிராம் செய்து விட்ட பிறகு அதுவாகவே போலியாக நமக்கு அழைப்பு (Fake Call) கொடுப்பது. இதன் மூலம் தனியாகச் செல்கிறோம் என்ற பயத்தைப் போக்கி, எதிராளிக்கு எச்சரிக்கை மனநிலையைக் கொடுக்கிறது.
சர்க்கிள் ஆஃப் 6 (Circle of 6 ) :
 ஐ போனில் மட்டுமே இயங்கும் இந்த அப்ளிகேஷன் மூன்று பெண்களாலும், மூன்று ஆண்களாலும் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வெளியே செல்லும் பெண்கள் வீட்டு நபர்கள், நம்பத்தகுந்த நண்பர்கள், காவல்துறை என்று அவரவர் விருப்பத்துக்கேற்ப 6 பேரின் எண்களை இந்த சர்க்கிளில் வைத்துக்கொள்ளலாம்.
ஆபத்து ஏற்படும் நிலையில் இது ஜி.பி.எஸ். மூலம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து முன்னரே பதிவு செய்து வைக்கப்பட்டு இருக்கும் செய்தியை 6 எண்களுக்கும் அனுப்பி சிக்னல் கொடுத்துவிடும்.
ஐ போனில் மட்டுமே இயங்கும் இந்த அப்ளிகேஷன் மூன்று பெண்களாலும், மூன்று ஆண்களாலும் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வெளியே செல்லும் பெண்கள் வீட்டு நபர்கள், நம்பத்தகுந்த நண்பர்கள், காவல்துறை என்று அவரவர் விருப்பத்துக்கேற்ப 6 பேரின் எண்களை இந்த சர்க்கிளில் வைத்துக்கொள்ளலாம். ஆபத்து ஏற்படும் நிலையில் இது ஜி.பி.எஸ். மூலம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து முன்னரே பதிவு செய்து வைக்கப்பட்டு இருக்கும் செய்தியை 6 எண்களுக்கும் அனுப்பி சிக்னல் கொடுத்துவிடும்.
எஸ்.ஓ.எஸ் விசில் (SOS Whistle) :
 இது ஆபத்துக் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய உத்தியின் மேம்பட்ட வடிவம். விசில் சத்தத்தின் மூலம் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது. இந்த ஆப் எவ்விதமான எச்சரிக்கை செய்தியையோ, அழைப்பையோ அனுப்பாமல் விசில் சத்தத்தை மட்டும் எழுப்புகிறது. போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் ஒலியை எழுப்பும் இந்த அப்ளிகேஷனுக்கு இணையமோ, ஜி.பி.எஸ். சேவையோ தேவையில்லை என்பது கூடுதல் வசதி.
நன்றி //நிலவு

Popular Posts

Facebook

Blog Archive