20 கூலிக்கு மாறடிக்கும் உயிர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil 20 கூலிக்கு மாறடிக்கும் உயிர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

20 கூலிக்கு மாறடிக்கும் உயிர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்

யாதுமாகி
 
20 கூலிக்கு மாறடிக்கும் உயிர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்...கொல்லப்பட்டோர்கள் தமிழர்கள்... கொன்றவர் ஆந்திராகாரர்கள் அதனால் 20 ஆந்திராகாரர்களை கொன்று வஞ்சம் தீர்த்துக் கொள்வோம் என்ற கருத்தில் யெமக்கு உடன்பாடில்லை என்ற போதும்..மனம் கலங்கி குமுறி எழும் கேள்விகளுக்கு குறைவில்லை.

1. மரங்களை அவர்கள் வெட்டியதாகவே இருக்கட்டும் - வெறும் கோடாலியை வைத்து இருக்கும் ஒரு கூலி தொழிலாளியை சுட்டு கொன்றுதான் பிடிக்கவேண்டுமா? அவ்வளவு கோழைகளா நீங்கள்? இல்லை கையால் ஆகாதவர்களா?

2. இந்த துப்பாக்கி சூட்டிற்க்கு ஆணை பிரப்பித்தவர்கள்..கடத்தல்கார கும்பல் தலைவனை பிடிக்க வக்கு இல்லை..கடத்தல் தொடர்புடைய அரசியல்வாதியை பிடிக்க வக்கில்லை..ஒரு புழுவை துப்பாக்கி கொண்டு சுடுவதுதான் உங்கள் வீரமா?

3. இவர்கள் வெட்டியதாக சொல்லப்படும் மரங்களை நீங்கள் எடுத்துக்கொண்டு இவர்கள் உயிர்களை நீங்கள் திருப்பித் தர முடுயுமா?

4. மாட்டை கொன்றால் மல்லுகட்ட மாமேதைகள் பல உண்டு இங்கு ..மனுசனுக்கு இவர்கள் எங்கே போனார்கள்?

5. தொட்டதுக்கெல்லாம் வழக்கு தொடரும் மேன் மக்கள் இப்போ எங்கே போனார்கள்? மனித மிருக உரிமை பாதுகாவலர்கள் எங்கே போனார்கள்?

6. ஒரு சினிமா வெளிவரக்கூடாது என்று சிரத்தை எடுத்து அனைத்து விதங்களிளும் தடை செய்யும் விளம்பர விரும்பிகள் இப்போ எங்கே போனார்கள்?

7. ஒரு சாதியயை மதத்தை ஒரு சொல் சொல்லிவிட்டால் ஊரையே கொளுத்தி தமிழகத்தை ஒரு வழி செய்யும் இன உணர்வாளர்கள் இந்த மனிதர்களுக்கும் கொஞ்சம் உணர்வை ஏன் பகிரவில்லை? ஒரு வேளை இறந்தவர்கள் இன்ன மதம் இன்ன சாதி என்று தெரிந்திருந்தால் போராட்டம் செய்திருப்பர் போலும்..இறந்தவர்கள் கேட்பார் அற்ற மலை வாழ் மக்கள் தானே..

8. ஊழல் குற்றவாளிகளுக்கும் இங்கு பால் குடம் பூஜை அர்ச்சனை தீ மிதிக்க இங்கு தீவிர விசுவாசிகள் பலர் உண்டு...ஈன கூலி தொழிலாளிக்கு தெய்வம் வந்து தான் தீ மிதிக்கனும்.

9. பல பேரை சுட்டுக்கொள்ளும் தீவிரவாதிகளுக்கு கூட வழக்காட இங்கே வழி உண்டு..வயிற்றுப் பிழைப்புக்காக தினம் திண்டாடும் மக்களுக்கோ மரணம் அன்றி வேறு வழி இல்லை..

10. பல திருட்டு ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் எத்தனையோ பேர் திருப்பதி கோவிலில் தரிசிக்கிறார்கள் அவர்களை சுட தைரியம் இருக்கிறதா?
இந்த படு கொலைக்கு நீதி கிடைக்கும் வரை தமிழகம் ஓங்கி உயர்த்தி ஒரே குரலில் எதிர்ப்பு எழுப்புவதே..தமிழர் என்ற ஒற்றுமையை பிரதிபலிக்கும்.

பட்டுக்கோட்டையின் வரிகள் தான் நினைவிற்க்கு வருகிறது. "பட்ட பகல் திருடர்களை பட்டாடைகள் - கோட்டு சூட்டு மறைக்குது.... ஒரு பஞ்சை தான் எல்லாம் சேர்ந்து திருடன் என்றே உதைக்குது"

Popular Posts

Facebook

Blog Archive