திருப்பத்தூர் மாவட்டம் - Tirupathur District

சந்தனமும் , ஜவ்வாதும் மணக்கும் எங்கள்
திருப்பத்தூர் மாவட்டம்.
#திருப்பத்தூர்மாவட்டம்.
பத்து திருத்தலங்களை கொண்ட ஊர் திருப்பத்தூர் (திரு+பத்து+ஊர் )
ஆசியாவிலேயே அதிகம் சந்தனம் விளையும் ஜவ்வாது மலை காடுகள் உள்ளது எங்கள் திருப்பத்தூர் மாவட்டம்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு படித்த இசுலாமிய கல்லூரி உள்ள வாணியம்பாடி.
ஏழைகளின் ஊட்டி என்று போற்றப்படும் ஏலகிரிமலை இருப்பதும் இங்கேதான்.
உலகத்திலேயே முதன்முதலாக விண்கல் விழுந்து இறந்த மனிதனும் எங்கள் ஊர் (நாட்றம்பள்ளி காமராஜ்) தான்.
உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவில் பாடிய முதல் பாடல் எழுதிய ஆம்பூர் அடுத்த மிட்டாளம். நேதாஜி.
500 படங்களுக்கு மேல் சண்டை பயிற்சி அளித்த ஆர்.எஸ்.பாபு பிறந்த ஆம்பூர்.
பிரபல "நாயுடு ஹால் "முதலாளியின் சொந்த ஊர் ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு (எ) காந்திநகர்.
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மாமியார் ஊர் திருப்பத்தூர்.
நக்ஸலைட்டுகளை அழிப்புப் போரில் 7 போலீசார் இறந்து தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமையை சேர்த்த திருப்பத்தூர்.
முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தன் மகன் பேரரறிவாளனை மீட்க நீதி போராட்டம் நடத்தி வரும் பாசத்தாய் அற்புதம்மாள் வாழ்ந்து வரும் சோலையார்பேட்டை.
கவிக்கோ அப்துல் ரகுமானும், கவியருவி அப்துல் காதரும் பேராசிரியர்களாக பணியாற்றிய வாணியம்பாடி இசுலாமிய கல்லூரி.
தமிழ் வளர்த்த மதுரைக்கும், காரைக்குடிக்கும் போட்டியாக முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிமாநில ஆளுநர்கள், அயல் நாட்டு அமைச்சர்களை அழைத்து வந்து ஆண்டு தோறும் "முத்தமிழ் மன்றம் விழா "நடத்தி தமிழ் வளர்க்கும் வாணியம்பாடி.
ராஜ் டி.வி.யில அகடவிகடம் நடத்துற V.L.பாஷ்கர்ராஜ் எங்க ஊரு வாணியம்பாடிதான்.
நடிகர் சந்தானத்துக்கு அத்தை ஊரும் எங்க ஆம்பூர்தான்.
குளித்து மகிழவும் , கொண்டாட்டம் போடவும் "ஜலகாம்பாறை " நீர்வீழ்ச்சி.
ஆசியாவின் மிகப்பெரிய வான் தொலைநோக்கி உள்ள ஆலாங்காயம் அடுத்த காவனூர்.
திருக்குறள் தெளிவுரை தந்த டாக்டர்.மு.வரதராசன் பணியாற்றிய திருப்பத்தூர்.
டால்மியாபுரத்தை கல்லக்குடியாக்கும் போராட்டத்தில் கலைஞர்.மு.கருணாநிதியோடு இரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த ஆலாங்காயம் அடுத்த முல்லை சத்தியின் ஊர்.
சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத்துக்கும் மாமியார் ஊர் திருப்பத்தூர்.
முன்னாள் தமிழக முதல்வர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா பெரும்பாலான ஆடைகள் தந்து அழகு பார்த்த எம்.ஜி.நாயுடு பிறந்த ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு (எ) காந்திநகர்.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் மனைவி பிரேமலதா படித்த ஆம்பூர்
உலக பெரும் பணக்காரன் புரூனே சுல்தான் வீட்டில் சம்பந்தம் வைத்தவர்கள் ஆம்பூர்க்காரர்கள்.
1000 ஆண்டுகளுக்கு முந்தைய வர்ண பூச்சு ஓவியங்கள் இன்று வரை அழியாமல் காட்சி தரும் ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள அரும்பாவி மலை என்னும் ஆர்மா மலை.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு பிரியாணி செய்து போட விமானத்தில் போய் வந்த பக்காத்தியும் (பிரியாணி செய்பவரை எங்க ஊருல அழகா பக்காத்தினுதான் கூப்பிடுவோம்) எங்கள் ஆம்பூர்தான்.
உலகின் 100 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு காலணிகளை ஏற்றுமதி செய்யும் மாவட்டம்.
தமிழ்நாட்டிலேயே 400 ஆண்டுகளுக்கு முன்னரே கலைமகளாம் சரஸ்வதிக்கு கோவில் கட்டப்பட்ட ஆலயம் உள்ள ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊட்டல் கோவில்.
தனித்தமிழ் இயக்கத்துக்கு தன்னையே அர்ப்பணித்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கொஞ்சம் காலம் பயின்றதும், ஆசிரியராக பணியாற்றியதும் (ஆம்பூர் ) வேலூர் மாவட்டம்.
தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய ரயில் விபத்து நடந்த வாணியம்பாடி.
பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தவர்களும் எங்க ஊர் (ஆம்பூர்) தான்.
அண்மை காலத்தில் அதிகமாய் ஆன்மீக பக்தர்கள் வந்து வணங்கும் ஆம்பூர் ஆஞ்சநேயர் கோவில்.
**அருண்பிரசாத்**
திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம், infomas, Tamil Awareness, Tamilnadu, Tirupathur District, Vellore