Tirupattur - திருப்பத்தூர் மாவட்டம் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Tirupattur - திருப்பத்தூர் மாவட்டம் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 1 ஜனவரி, 2020

Tirupattur - திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் தற்போது வேலூர் மாவட்டத்தில்
அடங்கிய தாலுகா மற்றும் வருவாய்
கோட்டமாக உள்ளது

தமிழ் நாட்டின் சந்தன நகரம் என அழைக்கப்படும்
திருப்பத்தூரில் ஆசியாவின் மிகப்பெரிய
சந்தனமரக் கிடங்கு உள்ளது

1911ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது 100
ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஒரே இடத்தில் சார்
ஆட்சியர் அலுவலகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற
வளாகம், 
மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட வன
அலுவலகம், 
அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்
அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு அரசு
அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

அணைத்து அரசு அலுவலகங்களும் அருகருகே
அமைந்திருப்பது திருப்பத்தூர் நகரின்
தனிச்சிறப்பு ஆகும்

இப்பகுதியில் இயற்க்கை எழில் மிகுந்த ஏலகிரி
ஜலகாம்பறை ஜவ்வாதுமலை உள்ளிட்ட
சுற்றுலா தளங்கள் உள்ளன

இக்கோட்டத்தில் ஆலங்காயம் அருகே உள்ள
வைன்னு பாப்பு தொலைநோக்கி மையம்
ஆசிய அளவில் மிகப்பெரியது ஆகும்

2008 வரை திருப்பத்தூர் ஒரு மக்களவை
தொகுதியாக இருந்து வந்தது. திருப்பத்தூரில் இருந்து வேலூர் 90 கி.மீ
தொலைவிலும் இதனை சார்ந்த மாவட்டத்தின் கடைசி எல்லையில் உள்ள கிராமங்கள் 130 கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்தில் அமைந்துள்ளது
இதனால் பொதுமக்கள் மாணவர்கள் வணிகர்கள் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள்  திருப்பத்தூரில் இருந்து இரண்டரை மணி
நேரத்திற்கு மேலும் ஜவ்வாது மலை புதுர்நாடு போன்ற மாவட்டத்தின் கடைகோடி  கிராமங்களில் இருந்து 4 மணி நேரத்திற்கு
மேலும் செலவு செய்து தான் மாவட்ட ஆட்சியர்   அலுவலகம் மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட கருவூலம்
மற்றும் மாவட்ட அரசு வருவாய் துறை  அலுவலகங்களை மிகுந்த சிரமத்துடன் அணுக  வேண்டிய நிலை உள்ளது
இப்பகுதியை சேர்ந்தவர்கள் அவசர
சிகிச்சைக்காக வேலூர் அல்லது தர்மபுரிக்கு
செல்வதற்குள் பலர் உயிரிழக்க நேரிடுகிறது
மாவட்ட தலைநகரம் மிக அதிக தொலைவில்
உள்ளதால் இந்த மாவட்டத்தை நிர்வகிப்பது அரசு
அதிகாரிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது
இந்த பகுதிகளுக்கு அலுவல் நிமித்தம் உயர்
அதிகாரிகள் சென்று வர ஒரு நாளை செலவிட
வேண்டியுள்ளது.


இதனால் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளில்  கலந்துகொள்ள குறிப்பிட்ட இடத்திற்கு மாவட்ட  ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மற்றும் பிற அரசு அதிகாரிகள் குறித்த  நேரத்திற்குள் வந்து சேர முடிவதில்லை  இதனால் பொதுமக்கள் அதிகமாக  பாதிக்கப்படுவதோடு மாவட்ட நிர்வாகம்  செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது  மேற்கண்ட சூழ்நிலைகள் காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பத்துரை
தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம்  அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் பட்டதாரி  இளைஞர்கள் வழக்கறிஞர்கள் வணிகர்கள் உள்ளிட்ட  அனைத்து தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்
டு வருகிறது.


தற்போது வேலூர் மாவட்டத்தில் 13 வட்டங்களும்
( புதிதாக அறிவிக்கப்பட்ட பேரணாம்பட்டு,
நெமிலி வட்டங்கள் உட்பட), 843 வருவாய்
கிராமங்களும் 39 இலட்சத்து 36 ஆயிரத்து 331
மக்கள் தொகையும் 6067. ச.கி.மீ பரப்பளவும்
கொண்டு உள்ளது

தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில்
வேலூர் மாவட்டம் மக்கள் தொகையில் 3வது
பெரிய மாவட்டமாகவும் பரப்பளவில் 4வது
பெரிய மாவட்டமாகவும் உள்ளது
அரசாணை 279 நாள் 09.06.2013ன் படி புதிய
மாவட்டம் அமைக்க 10இலட்சம் மக்கள் தொகையும்
200 கிராமங்களும் 2500 ச.கி.மீ பரப்பளவு மற்றும் 5
வட்டங்கள் தேவை.
திருப்பத்தூர் கோட்டத்தில் மட்டும் 217 வருவாய்
கிராமங்களும் 12 இலட்சத்து 17 ஆயிரத்து 362
மக்கள் தொகையும் உள்ளது
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் 5143 ச.கி.மீ
பரப்பளவுடன் 18 இலட்சத்து 79 ஆயிரத்து 809 மக்கள்
தொகை கொண்டுள்ளது இம்மாவட்டத்தில்
புதிதாக பர்கூர்
சூளகிரி ஆகிய 2 வட்டங்கள் உருவாக்கப்பட்டு
ள்ளதால் அங்கு இப்போது 7 வட்டங்கள் உள்ளன
ஒரு மாவட்டத்திற்கு 5 வட்டங்கள் போதுமானது
என்பதால்
7 வட்டங்களை கொண்டுள்ள கிருஷ்ணகிரி
மாவட்டத்திலிருந்து ஊத்தங்கரை வட்டத்தை
பிரித்து திருப்பத்தூர் மாவட்டத்தோடு
இணைக்கலாம்
ஊத்தங்கரையிலிருந்து
கிருஷ்ணகிரி 50 கி.மீ தொலைவிலும்,
திருப்பத்தூர் வெறும் 25 கி.மீ தொலைவிலும்
உள்ளது குறிப்பிடத்தக்கது
திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள 4 வட்டங்களோடு
ஒரே ஒரு வட்டத்தை இணைத்தாலே தனி
மாவட்டத்திற்கு தேவையான 2500 ச.கி.மீ
பரப்பளவும் 5 வட்டங்களும் கிடைத்துவிடும்
எனவே திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள ஆம்பூர்
வாணியம்பாடி திருப்பத்தூர் நாட்றம்பள்ளி
ஆகிய 4 வட்டங்களுடன் ஊத்தங்கரை அல்லது
பேரணாம்பட்டு இவற்றில் எதாவது ஒரு
வட்டத்தை இணைத்து திருப்பத்தூரை தலைமை
இடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கி,
எங்கள் பகுதி மக்களின் நீண்ட காலமாக உள்ள
நியாயமான கோரிக்கையை பரிசீலித்து உரிய
உத்தரவினை பிறப்பித்திட பொதுமக்கள் சார்பில்
வேண்டுகிறேன்.

Popular Posts

Facebook

Blog Archive