அழிந்துவரும் பாரம்பரிய தின்பண்டங்களான #கடலைமிட்டாய்_மற்றும்_எள்ளுமிட்டாயின் மருத்துவகுணங்கள்​...!! | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil அழிந்துவரும் பாரம்பரிய தின்பண்டங்களான #கடலைமிட்டாய்_மற்றும்_எள்ளுமிட்டாயின் மருத்துவகுணங்கள்​...!! ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 26 செப்டம்பர், 2020

அழிந்துவரும் பாரம்பரிய தின்பண்டங்களான #கடலைமிட்டாய்_மற்றும்_எள்ளுமிட்டாயின் மருத்துவகுணங்கள்​...!!

அழிந்துவரும் பாரம்பரிய தின்பண்டங்களான #கடலைமிட்டாய்_மற்றும்_எள்ளுமிட்டாயின் மருத்துவகுணங்கள்​...!!

★நிலக்கடலைகடலை மிட்டாயின் மருத்துவ குணங்கள்.

●நிலக்கடலை மிட்டாய் நாள்தோறும் 50 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.

●உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிலக்கடலை மிட்டாய் சாப்பிடலாம்.

●இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

●மன அழுத்தத்தைப் போக்குகிறது. 

●இது குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக். 

●இது ஞாபக சக்திக்கும் பெரிதும் உதவும். இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

●நிலக்கடலை நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.

●நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை. நிலக்கடலையில் உள்ள நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.

★எள்ளுமிட்டாய் மருத்து குணங்கள்..!!

●எள் அளவில் வேண்டுமானால் சிறிதாக இருக்கலாம், ஆனால் அதன் நன்மைகள் மிக அதிகம

●எள்ளு மிட்டாய் இதயநோய்களைத் தடுக்க உதவுகிறது. ஆர்த்ரைட்டிஸ் முதலான முடக்குவாத நோய்களைத் தடுக்கும், எலும்புகளைப் பலப்படுத்தும்.

●மது அருந்துவதால் உடலில் சேரும் நச்சுக்கள், கல்லீரலைச் சிதைக்கும். எள் சாப்பிட்டுவந்தால் நச்சுக்கள் வெளியேறி, கல்லீரல் சிதைவு தவிர்க்கப்படும்.

●எள்ளு மிகவும் அதிக கலோரி கொண்டது. நல்ல கொழுப்பு நிறைந்தது. உடல் எடை அதிகம் கொண்டவர்கள், உடல் எடை குறைவாக இருப்பவர்கள் என இரண்டு பிரிவினரும், நாள் ஒன்றுக்கு 50 கிராம் மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும். 

●உடல் ஒல்லியாக இருப்பவர்கள் எள்ளை சாப்பிட்டால் உடல் பருமனை அதிகரிக்கலாம்.

●உடல் மெலிந்து போய் காணப்படுபவர்கள் எள் சாப்பிடுவதால் குண்டாகலாம்

●ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது

●இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் எள்ளை பித்த உடல் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாது.

தீங்கிழைக்காத பாரம்பரிய தின்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுத்து உடல் ஆரோக்கியத்தினை மேலோங்கச்செய்யுங்கள்..

பாரம்பரிய உணவுப்பொருளின் நன்மைகளையும் அதன் அவசியத்தினையும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வூட்டுங்க பெற்றோர்களே..!!

Popular Posts

Facebook

Blog Archive