நாம், அந்த பங்கிலோ வேறு பங்கிலோ ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும்போது முறையே ஒவ்வொரு லிட்டருக்கு 6 பைசாவும் 4 பைசாவும் கழிவறை பராமரிப்பு செலவுக்காகக் நம் கையிலிருந்து கொடுக்கிறோம். Petrol bunk | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil நாம், அந்த பங்கிலோ வேறு பங்கிலோ ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும்போது முறையே ஒவ்வொரு லிட்டருக்கு 6 பைசாவும் 4 பைசாவும் கழிவறை பராமரிப்பு செலவுக்காகக் நம் கையிலிருந்து கொடுக்கிறோம். Petrol bunk ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 7 நவம்பர், 2020

நாம், அந்த பங்கிலோ வேறு பங்கிலோ ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும்போது முறையே ஒவ்வொரு லிட்டருக்கு 6 பைசாவும் 4 பைசாவும் கழிவறை பராமரிப்பு செலவுக்காகக் நம் கையிலிருந்து கொடுக்கிறோம். Petrol bunk

இந்தியாவில் ஹோட்டல்கள் மட்டுமல்லாது ஓவ்வொரு பெட்ரோல் பங்க்களும் சரியான பராமரிப்புள்ள குடிநீர் மற்றும் கழிவறை வசதியை பொதுமக்களின் உபயோகத்திற்காக கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது மத்திய அமைச்சகத்தின் விதியாகும். 

நாம், அந்த பங்கிலோ வேறு பங்கிலோ ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும்போது முறையே ஒவ்வொரு லிட்டருக்கு 6 பைசாவும் 4 பைசாவும் கழிவறை பராமரிப்பு செலவுக்காகக் நம் கையிலிருந்து கொடுக்கிறோம்.

அதனால் அடுத்த முறை அவசரம் எனில், உங்கள் கூகிள் மேப்பில் பக்கத்திலுள்ள பெட்ரோல் பங்ககளை கண்டுபிடியுங்கள்.

இந்த இலவசமாக கழிவறை உபயோகப்படுத்தும் வசதி அங்கு இல்லை என்றாலோ, இருந்தும் நம்மை உபயோகப்படுத்த தடுத்தாலோ, பூட்டி வைத்து சாவி ஓனரிடம் உள்ளது என்று சிப்பந்திகள் மறுத்தாலோ, கழிப்பறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லையென்றாலோ, உங்கள் மொபைல் போனில் அந்த பங்க் மற்றும் கழிப்பறையின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, பங்கின் பெயர், முகவரியுடன் தேதி குறிப்பிட்டு கூகிள் பிளே ஸ்டோரில் (Google Play Store) - ல் உள்ள ஸ்வஸ்தா மொபைல் ஆப் (Swachhta@PetroPump App) மூலம் புகார் பதிவு செய்யலாம்.

பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய அரசு (Ministry of Petroleum and Natural Gas, Government of India) மூலம் 3 நாள்களுக்குள் நேரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உங்களுக்கு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும். 

பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் இந்தச் செய்தியை பகிர்ந்திடவும் கேட்டுகொள்கின்றேன்.

Popular Posts

Facebook

Blog Archive