*இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு* | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil *இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு* ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 22 நவம்பர், 2020

*இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு*

*இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு*

🗝️குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீரருந்தவும்.  குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

🗝️பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள்.
அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

🗝️புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள்.
நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

🗝️பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூசிகள் உட்காராது.

🗝️முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். 
மரம் செழிப்பாக வளரும்.
பாம்பு ஓய்வெடுக்கும் இடத்தில் உங்கள் வீட்டைக் கட்டுங்கள். பாம்புகள் குளுமையான இடங்களில் மட்டுமே ஓய்வெடுக்கும்.

🗝️பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை 
தோண்டுங்கள்.

🗝️பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள்..
நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

🗝️அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

🗝️மீன்களை போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். 
நீங்கள் பூமியில் நடக்கும் போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

🗝️அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும். 

🗝️நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.

Popular Posts

Facebook

Blog Archive