பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 27 செப்டம்பர், 2014

பெண்களுக்கான சிறப்பு பதிவு facebook -தொந்தரவுகளில் இருந்து பாதுகாப்பது எப்படி ...?-...!

பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர்.
நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.
1. பேஸ்புக் பிளேசஸ் ( Facebook Places ): இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது.நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம். யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
2. தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த: உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் ( Profile ) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர்.
முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம். எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lock என்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் ( Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize )இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ள Customize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு அடிக்கடி என்னை உன் நண்பனாகச் சேர்த்துக் கொள் என்றெல்லாம் மெயில் செய்தி வரும். தெரியாதவர் என்றால், உடனே அதனை அலட்சியப் படுத்திவிடுங்கள். இது போன்ற வேண்டுகோளுக்கு யெஸ் சொல்லித்தான் பலர் மாட்டிக் கொள்கிறார்கள்.
3. அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா? : பேஸ்புக் தளத்தில், மெட்ரோபோலிஸ் மற்றும் மாபியா வார்ஸ் போன்ற விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும். இது போன்ற செய்திகள் உங்களுக்குத் தொல்லை தருவதுடன், மற்றவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு செல்லும். மேலும், நீங்கள் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து விளையாடுவது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டுமா என்று யோசிக்கவும். இதில் நீங்கள் மட்டுமே இயங்க ஒரு செட்டிங்க்ஸ் அமைத்துவிடலாம். உங்கள் அக்கவுண்ட் செட்டிங்கில் Privacy Settings செல்லவும். இதன் கீழ் இடது பக்கத்தில் Applications and websites என்று ஒரு பிரிவு இருக்கும். இங்கு Edit Your Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Game and applicationactivity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.
Error: 103
4. அப்ளிகேஷன்களுக்குத் தடா: பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applications என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.
5. அணுகுவதற்குத் தடை: உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites சென்று Edit your settings- ய் கிளிக் செய்யவும். இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.
6.இறுதி நடவடிக்கை: பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது.https://ssl.facebook.com/help/contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும். Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும். திரும்பிப் பார்க்காமலேயே.

பேஸ்புக் தளத்தில் இருப்பது ஒரு நல்ல இனிமையான மற்றும் வேடிக்கையான அனுபவம் தான். ஆனால் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. அதற்கான வழிகளைத் தான் மேலே பார்த்தீர்கள். அவற்றை மேற்கொள்வது உங்கள் முடிவைப் பொறுத்தே உள்ளது.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

New Moto G Smartphone with 5-inch HD Display, Dual SIM Launched for Rs.12999

Motorola has launched its new second generation Moto G Dual Sim in India, the successor to the Moto G smartphone. It’s also called as Moto G but some are called as Moto G2. The phone comes with an affordable price of Rs.12999 for the 16 GB model. Moto G comes with 5-inch HD display with 1280x720p resolution and Corning Glass protection. It runs on Android 4.4 KitKat operating system and powered by 1.2 GHz Snapdragon 400 quad-core processor with 1 GB of RAM.

New Moto G Smartphone with 5-inch HD Display, Dual SIM Launched for Rs.12999

Moto G features 8 MP rear camra with 720p video recording and 2 MP front facing camera for video call support. It has 16 GB of internal storage and external storage can be extended with microSD cards. For the connectivity, It has 3G, Wi-Fi, Bluetooth 4.0 and GPS options. The phone has Dual SIM card support and packed with 2070 mAh battery.

New Moto G / Moto G2 Specifications: 

SIMDual SIM (GSM+GSM)
Operating SystemAndroid 4.4 KitKat
Display5-inch HD display with 1280px720p resolution
Corning Glass protection
Processor1.2 GHz Quad-core Snapdragon 400 processor
RAM1 GB RAM
Memory16 GB internal memory, External with microSD
Camera8 MP rear camera with LED Flash, 720p recording, 2 MP front facing camera
Connectivity3G, Wi-Fi,Bluetooth 4.0, GPS
Battery2070 mAh battery
Dimensions10.9 mm thick, Weight: 149 grams

New Moto G / Moto G2 Price & Availability:

Moto G2 is an upgraded version of Moto G with improved specifications. Moto G comes in Black and white colors and it has the removable back covers so you can change it anytime. The phone is exclusively available in Flipkart for the price of Rs. 12999.

Check & Buy Moto G Black 

Turbo C++ நிறுவும் வழிமுறைகள்

டர்போ சி ப்ளஸ் பிளஸ் நிறுவும் முறை:

சி பிளஸ் பிளஸ் கற்றுக்கொள்ள உதவும் ஒருமென்பொருள் turbo C++. இம்மென்பொருள் உங்களுடைய கணினியில் எவ்வாறு நிறுவுது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி:
Download Turbo C++

install method of turbo c++

install method of turbo c++

Zip பார்மட்டில் இருக்கும் கோப்பை விரித்து கொள்ளவும். அதில் உள்ள install.exe கோப்பினை இயக்கவும்.     சோர்ஸ் டிரைவினை தேர்ந்தெடுத்து இயக்கவும். பெரும்பாலும் C டிரைவில்தான் extract செய்யப்பப்பட்ட கோப்பு இருக்கும்.
அடுத்து திரையில், Install.exe இருக்கும்போல்டர் காட்டப்படும். இப்பொழுது enter தட்டவும்.
அடுத்து தோன்றும் திரையில் சில ஆப்சன்கள் காட்டும். அதில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாம் F9 பட்டனை அழுத்தவும்.

அவ்வளவுதான் இப்பொழுது டர்போ சி பிளஸ் பிளஸ் நிறுவப்பட்டுவிடும்.
முக்கியமாக செய்ய வேண்டிய மாற்றம் ஒன்று உள்ளது. அது கமாண்ட் பிராம்பட்டில் எந்த போல்டரில் இருந்தும் TC என தட்டசிட்டு enter கொடுத்தால் turbo c++ இயங்க வேண்டும். அதற்கு Path variable – இல் C:/TC/BIN என்று சேர்க்க வேண்டும்.
ஏற்கனவே Path variable -ல் இருப்பதோடு அதை நீக்காமல், அதனுடன் தொடர்ச்சியாக C:/TC/BIN என்பதை இணைக்க வேண்டும். எப்படியென்றால் பாத்வேரியபிளின் முடிவில் ஒரு செமகோலன் உள்ளீடு செய்து அதற்கு பிறகு C:\TC\BIN என உள்ளீடு செய்ய வேண்டும்.
இறுதியில் பாத்வேரியபிள் அப்டேட் செய்வதற்கு உங்கள் கம்ப்யூட்டரை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்திடுங்கள்.

ரீஸ்டார்ட் ஆகி முடிந்தவுடன் டர்போ சி ++ பயன்படுத்தத்தொடங்கலாம்.

நன்றி.

கம்ப்யூட்டரில் உங்களுடைய ஆவணங்களை பாதுகாக்க அருமையான வழி

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் வைரஸ் பிரச்னை வந்துவிடும்.
முக்கியமாக கம்ப்யூட்டரில் வைத்திருக்கும் ஆவணங்களை கோப்புகளை பதம் பார்த்துவிடும்.
ஒரு சிலர் எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரு ஆபிஸ் டாக்குமெண்ட்டோ அல்லது ஏதேனும் ஒரு படமோ இப்படி உருவாக்கிய ஆவணத்தை சேமிக்கும்பொழுது தானாகவே டீபால்டாக மை பிச்சர் போல்டர், மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேமிக்கப்படும்.ways-to-protect-your-documents-in-computer
பிரச்னை என்னவென்றால் இவ்வாறுக C டிரைவில் சேமிக்கப்படும் கோப்புகள் பாதுகாப்புக்கு உகந்ததல்ல..என்பதுதான். எப்படியென்றால் ஏதாவது ஒரு சமயத்தில் உங்களுடைய கம்ப்யூட்டரை பார்மட் செய்திடும்பொழுது, C டிரைவிலுள்ள கோப்புகள் அனைத்துமே அழிந்துபோய்விடும்.
பார்மட் செய்திட்ட பிறகு அந்த கோப்புகளை மீண்டும் எடுக்கவே முடியாது.
அதுசரி.. மைடாக்குமெண்ட், மைபிக்சர், மை ஸ்கேன், மை மியூசிக், மை வீடியோஸ் (My Document, My Picture, My Scan, My Music, My Videos) போன்ற போல்டர்களெல்லாம் சி டிரைவில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.
அதை உங்களுடைய விருப்பத்திற்கு தகுந்தவாறு மற்ற டிரைவ்களிலும் மாற்றிக்கொள்ளலாம்.
உதாரணமாக My documents போல்டரை நீங்கள் சி டிரைவிலிருந்து D டிரைவிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.

வழிமுறை:
முதலில் My Documents போல்டரின் மீது ரைட் கிளிக் செய்யுங்கள்.
இவ்வாறு ஒரு விண்டோ தோன்றும். அதில்
டார்கெட் என்ற இடத்தில் உங்களுக்கு எந்த டிரைவில் போல்டர் இடம்பெற வேண்டுமோ அதை உள்ளீடு செய்யவும்.
பிறகு Move என்பதைக் கொடுத்தால், அந்த போல்டரானது D டிரைவிற்கு மூவ் ஆகிவிடும்.
இனி நீங்கள் சேமிக்கும் எந்த ஒரு டாக்குமெண்டும் தானாகவே டி டிரைவில் உள்ள போல்டரில் சேமிக்கப்பட்டுவிடும்.
நன்றி.

சனி, 6 செப்டம்பர், 2014

Windows 9 Desktop Evolution Concept

Microsoft is apparently finally going to reveal Windows 9 on the 30th of September.
The #technology -giant has long been said to focus more on the desktop again with this next big iteration of #Windows .

I guess it’s rather hard to come up with great changes to an interface that hasn’t changed much since decades and that you might even think of as perfect, but #Microsoft did an overwhelming job with Windows 7. A lot of small enhancements to old elements made it a great evolution of the desktop and a big step forward for Windows.

The feature I want to present you within this article - the so-called Pin-functionality - is also just one small update. This concept is not about guessing what #Windows9 will actually be like - Start Menu, Windows Store apps on the desktop, etc - but only about explaining this one idea and discussing its impact and advantages.


What’s your opinion? Do you also think the possibility to pin windows would add much value to the desktop? Have you ever taken serious advantage of Vista’s Desktop Gadgets?




Download A.R.Rahman Official App Available for Android and iOS

Are you Diehard fan of A.R Rahman’s music, then here is good news to you. A.R.Rahman is one of the best music directors in the world and he released his official mobile app recently. This is surely for his fans and followers can connect with him and his music easily through the app. The app is named as “AR Rahman app” and it is available for Android and iOS users.


There are over 24 million fans for his on Facebook and Twitter now and they will able to follow him through this AR Rahman app. The app is developed in partnership with an online multi-channel network Qyuki which is founded by A.R.Rahman and his friends. The Music King Rahman also gets in touch directly with his fans and followers with this app by providing exclusive content and merchandise.

Download A.R.Rahman Official App Available for Android and iOS
Key Features of AR Rahman Official app: 

  • Social feed including Twitter, Instagram and Facebook Posts made directly by A R Rahman
  • Photo and Video galleries
  • Latest news and press releases
  • Exclusive content only available on the app

A.R.Rahman told in a statement to the news, “I wanted to thank my fans for their support by offering them a new and convenient way to stay in touch with me and my music. I am looking forward to a more engaging experience with my friends and well-wishers.” If you are always like his songs and music you can surely download this app and enjoy  
Download AR.Rahman app for Android | iOS

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க..



எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க
இணைய இணைப்பின்றி எல்லா வகையான தொலைபேசி மற்றும் கைபேசி இலக்கத்துக்கும் அழைக்க ஒரு APPS இருக்கின்றது அது பற்றி தான் இந்த பதிவு
இதற்கும் உங்கள் கைத்தொலைபேசியில் இணைய இணைப்பு இருந்தால் போதும் libon என்றும் இந்த அப்பிக்கேசனை நிறுவிக்கொண்டால் 1 மணி நேரம் எந்த ஒரு வெளிநாட்டு இலக்கத்துக்கும் அழைப்பை மேற்கொண்டு முற்றிலும் இலவசமாக பேச முடியும் கீழே உள்ள லிங்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்..

Anroid


iphone

இலவச E-Set Anti virus (NOD32) (2050 வரை)

Download Here - Eset 2050

Link 2 Download Here - Eset 2050

காலாவதியாகும் திகதி 2050

35 வருடங்களுக்கு பயன்படுத்த முடியும்


எவ்வாறு Downlod செய்வது ?

முதலில் Click TO SKIP AD

 


  Regular Download என்பதை Click செய்யவும்


undefined


59 வினாடி காத்திருக்கவும்


undefined


பெட்டியில் இருப்பதை பார்த்து கீழே Type செய்யவும்



undefined


Continue என்பதை Click செய்யவும்

இப்போது Download File  என்பதை Click  செய்தால் உங்கள் File Download ஆகும்


undefined
 LIKE & SHARE

மொபைலில் உங்கள் படத்தை நீங்களே வரைந்து கொள்ளலாம் – புதிய மென்பொருள்

undefined


நீங்கள் விரும்பியவாறு உங்கள் படங்களை நீங்களே வரைந்து கொள்ளாலாம். அதும் உங்கள் Phone மூலமாக வரைந்து கொள்ளாலாம்.
உங்கள் நண்பர்களின் புகைப்படத்தின் தலை மட்டும் இருந்தால் போதும், அவர்களை காமெடியா வரைந்து அவர்களுக்கே அனுப்பி மகிழலாம்.

MomentCam எனும் மென்பொருள் தான் இந்த அசத்தல் வேலைகளை செய்கின்றது. Android மற்றும், iOS சாதனங்களில் பயன்படுத்தக் கூடிய இம் மென்பொருளின் உதவியுடன் புகைப்படங்களை வரைந்தது போன்று மாற்றிக்கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. bluestack என்னும் மென்பொருள் மூலம் நீங்கள் கணினியிலும் இதை உபயோகப்படுத்தலாம்.

மேலும் இந்த மென்பொருள் 52.8MB கோப்பு அளவுடையதாகக் காணப்படுவதுடன், கேலி சித்திர உருவங்களுக்கு Animtion கொடுக்கும் வசதியினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
download for ios mobiles:- Apple

download for android mobiles:- Android

tnx to sarfan

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

How to Restore Deleted Whatsapp Messages from your Smartphone

Hello guys, Today I will be discussing with you a very important trick by which you can easily Restore deleted whatsapp messages. We all know that whatsapp is the most popular instant messaging application available for our smartphones. Every other person in the world is using whatsapp for communicating with friends, relatives and  family.

As you all know that touchscreen devices are just awesome but sometimes they can be very annoying. With one wrong touch everything can get easily erased. Let me put a situation for you. By touching a wrong option you can easily delete your all important conversations available on whatsapp and then what will be your next step?

How to Restore Deleted Whatsapp Messages



Many among us know that how to Recover deleted whatsapp conversation on their smartphones. But for those who are not knowing about this trick, today this article is specially for those guys only. Below I have separated the Restoring process in 2 simple methods.
  1. With the Help of Manual Method

  2. Doing it by taking help of web applications
So, without taking much time let’s move over the first method that is of by recovering whatsapp deleted conversations by manual method.

1. Manual Method

There are very less amount of people who know’s that whatsapp creates daily backup of all the data at the system time i.e, at 4 a.m. These backup’s normally get stored in the SD card. So, if you are searching for how to get back deleted messages easily then carefully start following the below listed steps.

Step 1. Firstly, Open your SD card and then go to WhatsApp > Databases.

Step 2. After opening the Databases Folder you will see your conversation backup files which are like msgstore-2014-04-05.1.db.crypt. These files are not given these names simply but if you see carefully then you will notice that these files consist dates.

Step 3. In that folder you will see that there is one file named as msgstore.db.crypt, You have to simply rename that file by adding a word in front of it.

Step 4. After performing the above steps carefully, search for the file which shows you date before you have deleted your conversation.

How to Recover Deleted Whatsapp Messages 
 
Step 5. After finding that file, rename that file to msgstore.db.crypt.

Step 6. Now go to Settings > Applications > Manage applications > Whatsapp and then clear all the data. 

Open whatsapp again and then choose the restore option which will be automatically be shown to you as you open the application.

That’s it. You have now all your deleted messages which are not actually deleted from your phone. 

So guys, this one is the manual method now let’s move towards the next method. Keep reading this article and find out.
 
 2. By using Web Application
By seeing the name only you all guys came to know that we will be taking some online help for Restoring deleted chats. Exactly, In this method we are going to take help of a web application which is know as Recover messages. Recover messages is an online application which is specially designed for such incidents only. You can use this service absolutely free of cost.

But the next question rise is that how to operate this website ? Just start following the below steps and Resotre your conversation on your smartphone back.

Step 1. Go to http://recovermessages.com/ and then click on select SQlite file to upload your database file.
 Step 2. Select The Database file which you are willing to recover from your SD card.

Step 3. Then simply Accept the terms and conditions of use and then click Scan.

Now, wait to a minute and then you will be shown all your deleted whatsapp conversation again back on your smartphone. So, isn’t this method simple for use.

Hope, you have now get the exact and simple solution for your problem. If you have any type of doubts in your mind after going through the above article properly then you can leave your comments below in the comment box and at the last do not forgot to share this article with your friends… :) 
If You Like This Post Please Mind to Share It.

அனுப்பிய மெயில் படிக்கப்பட்டதா?

வணக்கம் நண்பர்களே..!
நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் உரியவர் படித்துவிட்டாரா இல்லையா என்று எப்படி அறிந்துகொள்வது?
email tracker
அந்த வசதியை நமக்கு கொடுக்கிறது ஸ்பைபிக் என்ற தளம்.

நீங்கள் பயன்படுத்தும் E-Mail கிளையண்ட் எதுவாக இருந்தாலும் சரி.. அதாவது, Gmail, Yahoo mail, Rediffmail, Eudora, Gmail, Hotmail, AOL Email இப்படி எந்த ஒரு மின்னஞ்சல் சேவையை நீங்கள் பயன்படுத்தினாலும், இச்சேவையைப் பயன்படுத்தி, உங்கள் நண்பர் மின்னஞ்சலைத் திறந்து படித்துவிட்டாரா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும்.
  1. மின்னஞ்சலை தட்டச்சிட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
  2. பிறகு www.spypig.com தளத்திற்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி, மின்னஞ்சலின் தலைப்பு ஆகியவற்றை கொடுத்துவிடுங்கள். 
  3. அடுத்து Select your SpyPig tracking image என்பதற்கு கீழாக உள்ள ஐந்து படங்களில் ஏதேனும் ஒன்றினை தேர்ந்தெடுக்கவும். (அல்லது உங்கள் விருப்ப படங்களையும் உங்கள் கணினியிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.)
  4. பிறகு click to create my spypic என்ற படத்தின் கிளிக் செய்யவும். 
  5. இப்பொழுது உங்களுடைய tracking image உருவாகியிருக்கும். 
  6. அதை காப்பி செய்துகொண்டு, நீங்கள் தட்டச்சிட்டு வைத்திருக்கும் மின்னஞ்சலில் இறுதியில் Past செய்துவிடவும். 
  7. இப்பொழுது உங்கள் மின்னஞ்சலில் Send பட்டனை அழுத்தி மின்னஞ்சலை அனுப்பிவிடவும். 
உங்கள் மின்னஞ்சல் நண்பரை சென்றடைந்து, அதை அவர் திறந்ததும் உங்களுக்கு மின்னஞ்சல் திறக்கப்பட்டுவிட்டது என்ற தகவல்களும், எந்த ஊரிலிருந்து திறக்கப்பட்டது என்ற தகவல்கள் அனைத்தும் வந்துவிடும்.
அவசரத் தகவல், மிக முக்கியமான தகவல்கள் உள்ளடக்கிய மின்னஞ்சல் உரியவர் படித்துவிட்டாரா இல்லையா என்பதை உடனடியாக அறிந்துகொள்ள இந்த சேவை பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

Employment – ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம்

 

 தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது
அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய
தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக
கையில் வைத்திருத்தல் வேண்டும்.

முதலில் இணையதள முகவரி [to_like] www.tnvelaivaaippu.gov.in [/to_like]என்ற இணையதளத்திற்கு சென்று
click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும்
பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை
எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும்
பக்கத்தில்
உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number
Create ஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save
கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.
Register Number : RPD2013M00007502
வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD – என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM )
பதிவு செய்த ஆண்டு : 2013
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.
User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy
கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின்
சுட்டிக்காட்டுங்கள் திருத்தம் செய்து கொள்கிறேன்.

 Tanx     tamilnewsbbc

Share this:

புதன், 27 ஆகஸ்ட், 2014

கம்ப்யூட்டர் ஹேங் ஆகி நின்னுடுச்சா… கவலையேப் படாதீங்க… இதோ தீர்வு… !!!!

வணக்கம் நண்பர்களே..!

உங்கள் கணினி அடிக்கடி அப்படியே ஸ்ட்ரக்ட் ஆகி உறைந்து நின்றுபோகிறதா? பின்னணியில் ஏதேனும் பிழைச் செய்தியை காண்பித்து அப்படியே உறைந்து அப்படியே உங்களையே வெறித்துப் பார்க்கிறதா? 

இதுபோன்ற பிரச்னைகள் சாதாரணமாக அனைத்து கணினிகளிலுமே ஏற்படக்கூடியதுதான். அதற்காக என்னவோ ஏதோவென்று பயந்துவிட வேண்டாம். அதாவது நீங்கள் உபயோகித்துக்கொண்டிருக்கும் applications களில் ஏதேனும் ஒன்று வேலை செய்யாமல் நின்றுவிட்டது என்றுதான் அதற்கு பொருள். அதிக பணிச்சுமை காரணமாகவோ, அதிகமான அப்ளிகேஷன்களை கணினியில் திறந்து வைத்திருந்தாலோ இதுபோன்ற நிகழ்வுகள் உங்கள் கணினியில் ஏற்படும்.

கணினி உறைதலை எப்படி உணர்ந்துகொள்வது? 

கணினியில் பணிசெய்துகொண்டிருக்கும்போது அந்த அப்ளிகேஷனை minimize செய்யவோ, maximize செய்யவோ முடியாது. எத்தனை தடவை நாம் முயற்சித்தாலும், மினிமைஸ் செய்யவோ, மேக்சிமைஸ் செய்யவோ முடியாது. அந்த விண்டோ அப்படியே திரையில் காட்சிக்குத் தெரியுமே தவிர நாம் மௌஸ் துணையுடன் அவற்றை சிறியது செய்யவே, பெரியதாக மாற்றவோ முடியாது. இவ்வாறு ஒரு application செயல்படாமல் அப்படியே நின்றுபோவது கணினி உறைந்துவிட்டது என்பதை அறிந்துகொள்வதற்கான ஒருவகை அறிகுறி. 

அதைப்போலவே மற்றுமொரு வகையான அறிகுறி என்னவெனில், அப்ளிகேஷன் விண்டோக்களை மினிமைஸ் செய்தால் எப்படி சிறியதாக காட்சித்திரை கீழிறங்குமோ… அதைப்போன்று தொடர்ச்சியாக விண்டோக்கள் மினிமைஸ் செய்வதைப்போன்ற தோற்றம் வந்துக்கொண்டே இருக்கும். இதுவும் கணினி உறைந்துவிட்டதைக் குறிப்பதற்கான ஒருவகையான அறிகுறியாகும். 

மற்றுமொரு முக்கியமான அறிகுறி.. Mouse pointer எங்கும் நகராமல் அப்படியே ஸ்தம்பித்து ஒரே இடத்திலேயே நிற்பது..அவ்வாறு மௌஸ் பாய்ண்டர் நகராமல் இருந்தாலும் கணினி ஸ்டரக் ஆகி நின்றுவிட்டது என்று அறிந்துகொள்ளலாம். 


மற்றுமொரு அறிகுறி not respond என்னும் பிழைச்செய்தியைக் காட்டும். சில நேரங்களில் this program performed an illegal operation will be shutdown என்ற எச்சரிக்கை செய்தியும் காட்டப்படும். 



இவ்வாறு ஏதேனும் ஒரு வகையில் நமக்கு கணினியானது உறைந்துவிட்டது என்பதை கணினி அறிவிக்கும். அப்பொழுது இந்த புரோகிராமை நிறுத்திவிடுமாறு பணிக்கும். அல்லது Cancel செய்துவிடுங்கள் என்ற செய்தியைக் காட்டும். அவ்வாறு கேன்சல் செய்த பிறகு தானாகவே மீண்டும் அந்த அப்ளிகேஷன் திரும்ப இயங்கும் வகையில் செயலாற்றும். 




ப்ளூ ஸ்கீரீன் டெத் (blue screen death) என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரியும் ஒரு அறிகுறியாகும். அச்சூழ்நிலையில் வெண்மை நிறத்தில் பிழைச் செய்திகளைக் காட்டும். இவ்வாறு தோன்றும் நிலையை கிராஸ்(crash) ஆகிவிட்டது என்பர்.




கணினி Crash ஆவதற்கு காரணம் என்ன? 




முக்கியமாக கணினி நினைவகத்தில் ஏற்படும் அதிக பணிச்சுமையை குறிப்பிடலாம். 




அடுத்து வன்பொருட்கள் ஒன்றுடன் ஒத்திசைந்து இயங்காத நிலையில் இவ்வாறான நிலை ஏற்படும். 




இயங்குதளம் (operating system), அப்ளிகேஷன்ஸ் சாப்ட்வேர்ஸ் (application softwares), Driver softwares ஆகிய மென்பொருள்களில் ஏற்படும் பிரச்னைகள் காரணமாகவும் இவ்வாறான கணினி உறைதல் நடைபெறும். 




கணினி நன்றாக செயல்பட வேண்டுமாயின், நிச்சயமாக கணினியில் இடம்பெற்றுள்ள மென்பொருள்களுக்குத் தகுந்த நினைவகம் (RAM-Random access Memory) வேண்டும். இந்த நினைவகம் ஏற்றுச் செய்யும் அளவைவிட அதிக மென்பொருள்களைப் பயன்படுத்தும்போது தற்காலிகமாக இவ்வாறான கணினி உறைநிலை ஏற்படும். இது தவிர்க்க இயலாத ஒன்று. 




அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை ஒரே நேரத்தில் இயக்க முற்படும்பொழுது அதிகமான பணிச்சுமையின் காரணமாக கணினி உறைந்துவிடும். 




கணினி உறைதலுக்கு வேறு சில காரணங்கள்: 




கணினியில் நாம் பயன்படுத்தும் வெவ்வேறுவிதமான அப்ளிகேஷன்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகள் காரணமாகவும்.  (இயங்கிகொண்டிருக்கும் அப்ளிகேஷன்கள் conflict ஆவதாலும்) கணினி உறைதல் ஏற்படுகிறது. 




Antivirus மென்பொருள்கள் மற்ற அப்ளிகேசன்களுடன் சில சமயம் ஒத்துப்போகாமல் இவ்வாறான conflict ஏற்படும்.





கணினி உறைதல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? 




கணினியை Reboot செய்யலாம்.. அவ்வாறு ரீபூட் செய்யும்பொழுது பிரச்னை எதுவும் இல்லையென்றில் கண்டிப்பாக ரெஜிஸ்ட்ரியில் ஏதேனும் பிரச்னை இருக்கும். 




அவ்வாறு ரெஜிஸ்ட்டிரில் பிரச்னை என்றால், உங்கள் கணினியை Safe மோடில் இயக்கவிட்டு, நல்லதொரு Registry cleaner மென்பொருள் கொண்டு Registry கிளீன் செய்து, கணினியை பழைநிலைக்கு கொண்டு வரலாம். 




கணினியை Safmode-ல் இயங்க வைப்பது எப்படி? 




இது ஒன்றும் பிரமாதமான விஷயம் இல்லை.. உங்கள் கணினியை Restart கொடுக்கும்பொழுது F8 கீயை அழுத்தி, கணினி எந்த முறையில் தொடங்க வேண்டும் என்னும் மெனுவைப் பெறலாம். அதில் Safe Mode தேர்ந்தெடுத்து enter செய்வதன் மூலம் Safe mode-ல் கணினியை துவக்கலாம். 



ரெஜிஸ்ட்ரி பைல்கள் இடம் மாறினால் கூட கணினி இவ்வாறான உறைநிலைக்கு போக வாய்ப்பிருக்கிறது. 



Registry பைல்கள் என்றால் என்ன? 




Registry பைல்கள் என்பது கணினியில் இருக்கும் Registry எனும் அமைப்பில் இருக்கும் கோப்புகளாகும். இந்த Registry உள்ள கோப்புகள் ஒவ்வொன்றும் கணினியில் உள்ள ஒவ்வொரு அப்ளிகேஷனுக்குரிய கட்டளைகளை கொண்டிருக்கும். அந்த கட்டளைகளின் மூலமே கணினியில் அடுத்தடுத்த செயல்கள் நடைபெறும். அவ்வாறான அடுத்த அடுத்த செயல்பாடுகளை செய்யும் கட்டளை நிரல்வரிகளை உள்ளடக்கியிருப்பது இந்த ரெஜிஸ்ட்ரி பைல்களே..!




இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த Registry Fileகள் இடம்மாறும்பொழுது கணினியில் முறையான செயல்பாடு நடைபெறாது. அவ்வாறு செயல்பட எந்தெந்த கட்டளைகள் எங்கெங்கு உள்ளன என்பதை தேடிப்பெற கணினிக்கு அதிக சிரமம் ஏற்படும். இவ்வாறு தான் தேடும் கட்டளைக்குரிய கோப்புகள் கிடைக்காதபொழுது கணினி தானாகவே உறைந்துவிடும். 




தீர்வு: 




அப்ளிகேஷன்கள் இயங்காது அப்படியே உறைந்துவிடும்பொழுது Task Manager-ஐப் பயன்படுத்தி அந்த அப்ளிகேஷன்களின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வரலாம். அதாவது Ctrl+Alt+ Delete பட்டன்களை ஒருசேர அழுத்தி தோன்றும் விண்டோவில் எந்த அப்ளிகேஷன் செயல்படாமல் உள்ளதோ அந்த அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுத்து End Task கொடுப்பதன் மூலம் அந்த அப்ளிகேஷனின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வரமுடியும். 




அவ்வாறு செய்தும் அந்த அப்ளிகேஷனின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போகும்பொழுது மீண்டும் ஒருமுறை   Ctrl+Alt+ Delete அழுத்த கணினி ரீபூட்(Reboot)ஆகிவிடும். 



அப்படி செய்தும் ரீபூட் ஆகவில்லை எனில் இறுதியாக இந்த வழியை நீங்கள் கடைப்பிடிக்கலாம். அதாவது Reset பட்டன் ஒன்று சிறியதாக இருக்கும் அல்லவா? அந்த பட்டனை அழுத்தி மீண்டும் புதியதாக கணினியை மறுதொடக்கம் செய்யலாம். அவ்வாறு செய்தும் மறுதொடக்கம் ஆகவில்லை என்றால் கணினியில் மெயின் பவர் பட்டனை ஐந்து வினாடிகள் தொடர்ச்சியாக அழுத்திக்கொண்டே இருந்தால் கணினி தானாக தன்னை முடக்கிக்கொள்ளும். 




பிறகு மீண்டும் கணினியை Start செய்து பயன்படுத்தலாம். 




மிக்க நன்றி நண்பர்களே..!



- தங்கம்பழனி. 


தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள்

‘மளமள’வென விலைவாசி உயர்ந்துகொண்டே போனாலும் தங்கத்தின் மவுசு மட்டுமே என்றுமே குறையாது. தங்கத்தின் மீது ஆசைக்கொள்ளாத பெண்களே இல்லையென்றே சொல்லலாம்..
பெண்கள் மட்டுமா.. ஆண்களும் கூட அதன் மீது தனி மோகம்
வைத்திருக்கிறார்கள்..
என்றுமே.. எக்காலத்திலுமே தங்கத்தின் மதிப்பு குறைந்ததாக சரித்திரம் இல்லை.. அப்படிப்பட்ட தங்கம் இரண்டு வகையாக நமக்கு கிடைக்கும். ஒன்று  கட்டித்தங்கம்.. மற்றொன்று ஆபரணத்தங்கம்.
கட்டித் தங்கத்தை வாங்கி நேரடியாக நகை செய்ய முடியுமா என்றால் அது முடியாது. அதனுடன் ஒரு சில உலோகங்களை சேர்த்துதான் தங்க நகைகள் செய்ய முடியும்.
அவ்வாறு கலப்படம் செய்யப்பட்டு உருவாகும் நகைகளின் தரத்தை குறிக்கும் சொல்தான் காரட் (KARAT)என்பது.
தங்கத்தில் மற்ற உலோகங்கள் கலந்துள்ள விகிதத்தைப் பொறுத்து அவற்றை தரத்தை அறிய முடியும்.
அதாவது
  • 24 கேரட்,
  • 22 கேரட்
  • 18 கேரட்
  • 14 கேரட்
  • 10 கேரட்
  • 9 கேரட்
  • 8 கேரட்
 என தரம் பிரிக்கின்றனர்.
24 கேரட் தங்கத்தில் 99.9 சதவிகிதம் சுத்த தங்கமும், 22 கேரட் தங்கத்தில் 91.6 சதவிகிதம் தூய தங்கமும், 18 காரட் தங்கத்தில் 75 சதவிகிதம் தூய தங்கமும், 14 காரட் தங்கத்தில் 58.5 சதவிகிதமும், 10 கேரட்டில் 41.7 சதவிகிதமும், 9 கேரட்டில் 37.5 சதவிகதமும், 8 கேரட் தங்கத்தில் 33.3 சதவிகிதமும் தூய தங்கம் உள்ளது. 
 
இதில் 22 கேரட் தங்கமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. அதாவது ஆபரணத்தங்கத்தில் 22 காரட் சுத்த தங்கத்தையே பெரும்பாலான ஜீவல்லரி நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து விற்கின்றனர். 22 காரட் தங்கத்தில் 97.61% சுத்த தங்கம் இருக்கும். வாடிக்கையாளரின் விருப்பமும் அதுவே.
இந்த வகையான தங்கத்தைதான் நாம் டிவியிலும், நாளிதழ், வார இதழ் விளம்பரங்களிலும் பார்க்கிறோம். இதை 916 BIS ஹால்மார்க் தங்கம் எனக் குறிப்பிடுகின்றனர்.  இதையே ஆபரணத்தங்கம் என்று குறிப்பிடுவார்கள்.
 
தங்கத்தின் தரத்தை அறிய ஹால்மார்க்:
பெரும்பாலான தங்க நகைகள் 24 கேரட், 22 கேரட், 18 காரட் தங்கமாகவே உள்ளது. எந்த வகையான தங்கம் என அறிய உதவுகிறது ஹால்மார்க் முத்திரை.
இந்த முத்திரையானது மற்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தரத்தை நிர்ணயிக்கும் ISI தர முத்திரையைப் போன்றதுதான் தங்கத்தின் தரத்தை அறியும் BIS ஹால்மார்க் முத்திரை.
இந்திய அரசின் தரக் கட்டுப்பாடு அமைப்பு Bureau of Indian Standards என்பதின் சுருக்கமே BIS என அழைக்கபடுகிறது. இந்த இமைப்பு தங்க நகைகளுக்கு ஹால்மார்த் முத்திரையை வழங்கி தரத்தை நிர்ணயிக்கிறது.
 
BIS முத்திரையை யார் கொடுப்பார்கள்? 
BIS முத்திரையை வழங்குவதற்காக அரசு நாடு முழுவதும் உரிமைப்பெற்ற (License) டீலர்களை நியமித்திருக்கிறது. இந்த உரிமைப் பெற்ற டீலர்கள் மட்டுமே தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை வழங்க முடியும்.
ஜூவல்லரி கடை உரிமையாளர் இந்த நகைகளை பொற்கொள்ளர்களிடமிருந்து பெற்று இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்களிடம் பரிசோதித்து, அந்த நகைகளுக்கான தரத்தை நிர்ணயித்து ஹார்மார்க் முத்திரையைப் பெற்றுக்கொள்கின்றனர். சோதிக்கப்படும் நகைகள் 22 கேரட் கொண்டதாக இருப்பின் அவற்றை 91.6% ஹால்மார்க் முத்திரையும், 18 காரட் அளவுடையதாக இருப்பின் 75% ஹார்மார்க் முத்திரையும் கொடுக்கப்படுகிறது.
 
தங்கம் வாங்கறீங்களா? கொஞ்சம் கவனமா பார்த்து வாங்குங்க.. 
நீங்கள் வாங்கும் தங்கத்தில் ஹால்மார்க் முத்திரை மட்டும் இருந்தால் போதாது. அந்த ஹால்மார்க் முத்திரையில் நகையின் தரம் எத்தனை சதவிகிதம் என்பது குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும்.
 
தவறான ஹால்மார்க் நகைகளை எப்படி கண்டுபிடிப்பது? 
நீங்கள் 22 காரட் நகையென கடைகளில் வாங்கிய பிறகு, ஏதாவது ஒருகாரணத்திற்காகவோ.. அல்லது சோதனை செய்து பார்க்கும்பொழுதே அந்த நகை 18 காரட் தரமுடைய நகை என்பதை தெரியவந்து உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக  தவறான ஹால்மார்க் முத்திரையை வழங்கிய டீலரின் லைசென்சை BIS அலுவலகம் ரத்து செய்துவிடும்.
தரமற்ற நகைகளை விற்ற ஜூவல்லரி கடையும் வாங்கிய நகைகளுக்கான நஷ்ட ஈடு வழங்கியே ஆக வேண்டும். அவ்வாறு நஷ்ட ஈடு தர மறுக்கும் பட்சத்தில் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி நஷ்ட ஈட்டைப் பெற முடியும்.
 
இவர்தான் ஹால்மார்க் முத்திரையை வழங்கினார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? 
இது மிக சுலபம். நீங்கள் வாங்கும் எந்த ஒரு ஆபரணத் தங்கத்திலும் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை இருக்கும்.  BIS ஒவ்வொரு டீலருக்கும் தனிப்பட்ட முத்திரையை வழங்கியிருப்பார்கள். அதாவது ஒருவருக்கு கொடுக்கப்படும் முத்திரை அடையாளமானது, மற்ற எந்த டீலருக்கும் அதே முத்திரையை கொடுக்கமாட்டார்கள். ஒவ்வொரு டீலருக்கும் தனிப்பட்ட முத்திரை தான் வழங்கப்படும். அதனால் குறிப்பிட்ட ஹால்மார்க் முத்திரைக்கு சொந்தக்காரர் இவர்தான் என எளிதாக அந்த அடையாளப்படுத்தி கண்டுபிடித்துவிடுவார்கள்.
 
தமிழ்நாட்டில் உள்ள BIS  அலுவலகங்களின் முகவரிகள்:
 
SOUTHERN REGIONAL OFFICE
C.I.T CAMPUS, IV CROSS ROAD,CHENNAI-600 013.
91 044 22542315,22541584, 22541470
Fax: 91 044 22541087 .
 sro@bis.org.in
COIMBATORE BRANCH OFFICE
5th Floor, Kovai Towers,
44 Bala Sundaram Road,
Coimbatore 641 018.
LandMark- on RTO road, near womens polytechnic
0422 2201016, 2210141, 2215622; Fax: 0422-2216705
cbto@bis.org.in
 
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜூவல்லரி (நகைகடைகளிலும்) உள்ள நகைகளிலும் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை பதிந்தே விற்பனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி நீங்கள் நகைகள் வாங்கினால் அதன் தரம் என்ன எத்தனை காரட்.. அதில் BIS ஹால்மார்க் முத்திரை பதியப்பட்டுள்ளதா? என்பதையெல்லாம் நன்றாக கவனித்து வாங்குங்கள்…
உங்களின் பணத்தின் மதிப்புக்கேற்ற நகைகளையும் நீங்கள் வாங்க வேண்டாமா என்ன? கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும். இந்த தகவல்களனைத்தையும் நகைக்கடைகளிலேயே பெற்று மனதுக்கு திருப்தியாக நகைகளை வாங்கலாம்.
நன்றி நண்பர்களே..!
 
இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.

இன்டர்நெட் பில் (internet bill)அதிகரிக்காமல் அளவோடு பயன்படுத்த

வணக்கம் நண்பர்களே..!
இணைய இணைப்பு பெற நாம் பல வழிகளை பயன்படுத்துகிறோம். அதாவது பிராட்பேண்ட்  டேட்டா கார்ட், செல்போன் போன்றவைகளிலிருந்து குறிப்பிட்ட   அளவு (1GB, 2GB, 500MB) போன்ற குறைந்த இணைய
பயன்பாடுள்ள வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டிருப்போம்.

இணையத்தைப் பயன்படுத்தும்பொழுது எவ்வளவு யூசேஜ் ஆகிறது.. என்பதை இன்னும் எவ்வளவு இருக்கும்?.. அதிகமாக பயன்படுத்தினால் இன்டர்நெட்பில் எகிறிடுமே.. என்றெல்லாம் சிந்தனையில் இருந்தவாறே பயன்படுத்திக்கொண்டிருப்போம்.
நம்மை அறியாமல் இணையத்தை கட்டுப்பாடில்லாமல் பயன்படுத்தும்பொழுது, பயன்படுத்ததக்க அளவை அடைந்து ஒன்று பயன்பாடு நின்றுவிடும். அல்லது அதிகபட்சம் பயன்படுத்தியதற்காக இன்டர்நெட்பில் இரட்டிப்பாகிவிடும்.
இவ்வாறான தொல்லைகளைத் தவிர்க்கவும், இணையத்தை இதுவரைக்கும் எத்தனை GB வரைக்கும் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதை நாம் ஒவ்வொரு முறையும் இணையத்தொடர்பை ஏற்படுத்தும்பொழுது குறிப்பிட்டுக் காட்டுவதற்காகவே ஒரு மென்பொருள் உள்ளது.
மென்பொருளின் பெயர் Net Speed Monitor. இந்த மென்பொருள் நாம் கணினியை உயிர்ப்பித்து, இணைய இணைப்பை ஏற்படுத்தும்பொழுது, இதுவரைக்கும் நாம் பயன்படுத்திய இணையத்தில் அளவை தேதி, மாத வாரியாக நமக்கு காட்டும்.
மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி:
http://netspeedmonitor.en.softonic.com/download
இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்து அதை விரித்து (Extract) செய்து நிறுவிக்கொள்ளுங்கள். மென்பொருளை நிறுவியவுடன் கணினியின் TaskBar-ல் வலதுபக்கம் நீல நிறத்தில் ஒரு சிறிய அளவீட்டு படம் தோன்றும்.
அதில் U எனக் குறிப்பிட்டிருப்பது Upload அளவினையும், D என்பது Download அளவினையும் குறிக்கும். இந்த அளவீடானது நீங்கள் இணையத்தை தொடர்புகொள்வதிலிருந்து ஆரம்பிக்கும்.
டாஸ்க்பாரில் உள்ள நீல நிற படத்தில் ரைட் கிளிக் செய்து நீங்கள் பயன்படுத்திய தரவுகளின் அளவுகள் முதல், சில மேலதிக வசதிகளையும் பெற முடியும்.
நன்றி நண்பர்களே..!


- தங்கம்பழனி
sdfasdfsdf sdf sdf sdfasdf

Popular Posts

Facebook

Blog Archive