சனி, 9 மே, 2020
ஒன்றரை மாதங்களில் சுமார் 12 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்த ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள்.
அத்தனை மருந்துகளை உண்ணாமலும் உயிர் வாழும் மனிதர்கள்.
நாளொன்றுக்கு குறைந்தது 10 அறுவை சிகிச்சைகளாவது செய்து வந்த மருத்துவமனைகளில் ஒரு அறுவை சிகிச்சை கூட நடக்கவில்லை.
100, 200 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் காலியாகக் கிடக்கும் படுக்கை அறைகள்.
மூடிக்கிடக்கும் மருத்துவமனைகள்.
அப்படியென்றால் 12 ஆயிரம் கோடிகளுக்கு மருந்து வாங்காதவர்கள், அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாதவர்கள், மருத்துவமனைகளில் படுக்கைகளை நிரப்பாதவர்கள் எல பல ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்க வேண்டுமே?
ஆனால், இடுகாடு, சுடுகாடுகளிலும் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதே.
எங்கே போனார்கள் அத்தனை பேரும் ???
ஆக, 12 ஆயிரம் கோடி ரூபாய்கள் வணிகம் நின்று போனதில் கிழிந்து தொங்குகிறது மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள்.
அடப்பாவிகளா, இதெல்லாம் இல்லாமலே நல்லாதாண்டா நாங்க இருக்கோம்.
அப்போ .. தேவையையும் செயற்கையா உருவாக்கி பொருட்களை சேவைகளையும் உருவாக்கி விற்பதுதான் "நவீன மருத்துவ அறிவியலா" ?!
வெள்ளி, 24 ஏப்ரல், 2020
*இன்னும் சில நாட்களில் ஊரடங்கு அடங்கி விடும். இன்றைய தலைமுறைக்கு இது ஒரு அழியா பாடம் ஆகும் இந்த ஊரடங்கு.*
Author: Infomas | ஏப்ரல் 24, 2020 |
*இன்னும் சில நாட்களில் ஊரடங்கு அடங்கி விடும். இன்றைய தலைமுறைக்கு இது ஒரு அழியா பாடம் ஆகும் இந்த ஊரடங்கு.*
*1. மக்களே நீங்கள் நிச்சயம் வேலைக்கு செல்ல வேண்டும் குடும்பத்துக்காக வருமானம் ஈட்ட வேண்டும். இன்று முதல் ஒரு வருடத்திற்கு சிக்கனமாக இருக்கவும் தேவையற்றவைகளுக்கு செலவு செய்ய வேண்டாம்.*
*2. கூடிய வரையில் சிறு வியாபாரிகள் கடையில் பொருள்களை வாங்குங்கள். மால் மற்றும் சூப்பர்மார்கெட்களை தவிர்த்து விடுங்கள்.*
*3. Amazon /flip cart போன்ற online நிறுவனங்கள் செய்தித்தாள்களில் 5 அல்லது 6 பக்கங்களை ஆக்கிரமித்து விளம்பரம் கொடுத்தார்கள் வியாபாரத்தை பெருக்கினார்கள் ஊரடங்கு சமயத்தில் எல்லாம் காணாமல் போனார்கள் ஒரு வருடத்திற்கு நாம் அவர்களைத் தவிர்த்தால் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.*
*4. நகைக் கடைகளை புறக்கணியுங்கள் இன்று சவரன் 5000 ரூபாய்களைத் தொட்டு உள்ளது. ஒரு கிராம் வாங்க வேண்டும் என்றால். நீங்கள் புற்றீசல் போல நகைக் கடைகளை ஆக்கிரமித்தால் லாபம் நகை கடைக்காரர்களுக்கே. இந்த 2 மாத நஷ்டக் கணக்கை உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் ஜாக்கிரதை. ஒரு வருடத்திற்கு நீங்கள் நகைகள் வாங்கவில்லை என்றால் ஊரில் பாதி நகைக்கடைகள் காணாமல் போய் விடும்.*
*5. திரை அரங்குகளை புறக்கணியுங்கள். எந்த ஹீரோவும் நமக்கு ஒரு சிறு நன்மை கூடச் செய்யவில்லை. இந்த ஊரடங்கு முடிந்த நேரத்தில். மனைவியின் தாலியை அறுத்து ஹீரோவின் 70 அடி cut out வைக்க வேண்டாம். அதற்குப் பால் ஊற்றவும் வேண்டாம். ஏன் என்றால் அந்தத் தகுதி அவர்களுக்கு இல்லை. 2000 ரூபாய் கொடுத்து பிடித்த நாயகன் படத்தை முதல் ஷோ பார்ப்பதினால் உங்கள் குடும்பங்களில் மங்களம் பெறப் போவதில்லை. ஒரு மூன்று மாதங்கள் பொறுங்கள் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வந்த சில நாட்களே ஆன படம் என்று தொலைக்காட்சிகளில் நீங்கள் காணலாம்.*
*6. பெரும் குடிமகன்களுக்கு ஒரு வார்த்தை 2 மாதம் rehabilitation center செல்லாமல் குடியை நிறுத்திய இந்த ஊரடங்கிற்கு நன்றி சொல்லுங்கள். படிப்படியாக குடியை நிறுத்தி உங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்.*
*7. வாகனம் மற்றும் கார் வாங்குவதை அறவே தவிர்த்து விடுங்கள். ஏன் அரசாங்கம் விதித்த BS 4 வாகனங்கள் நிறைய உள்ளன. அதை விற்பதற்கு வாகன உற்பத்தியாளர்கள் நீதிமன்றம் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ discount என்கிற பெயரில் RTO ஆபீஸ் மூலமாக உங்கள் தலையில் கட்டி விடுவார்கள் ஜாக்கிரதை. அவர்களைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில் zero inventory Management என்கிற கொள்கையில் BS 4 வாகனங்களை கழித்துக் கட்டி விடுவார்கள் நீங்கள் ஏமாற வேண்டாம்.*
*8. 35000 ரூபாய் பெறுமான AC இன்று 10000 ரூபாய்க்கு விற்பனை என்று கூவிக் கூவி விற்பார்கள். இதனால் நஷ்டம் நமக்கே. ஏன் என்றால் Quality Compromise strategy will be adopted. அதே போல சீனாவில் இருந்து வரும் மொபைல் போன்றவைகளை online shop மூலமாக ஏகப்பட்ட discount கொடுத்து உங்கள் கைகளை அரிப்பு எடுக்கச் செய்வார்கள் ஜாக்கிரதை. ஒரு வருடம் மொபைல் வாங்கவில்லை என்றால் நமது குடி முழுகிப் போயிடாது.*
*9. மக்களே வாழ்விற்கு இது தேவை என்கிற நிலை வந்தால் மட்டுமே அந்தப் பொருள்களை வாங்குங்கள். அகலக்கால் அல்லது ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நிரந்தர கடன்காரனாக அல்லது குடிகாரனாக மாறி விடாதீர்கள்.*
*10. கடன் அட்டை (Credit Card ) உபயோகத்தை கூடிய அளவு தவிர்த்து விடுங்கள். வரவு எட்டணா செலவு பத்தணா என்கிற பாடல்களை நினைவு கொள்ளுங்கள்.*
*11.குழந்தைகளே தயவு செய்து உங்கள் பெற்றோர்களை வருத்தாதீர்கள். என் friend I Phone 12 லேட்டஸ்ட் மாடல் வைத்து* *இருக்கிறான் அதே போல எனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள்.* *விரலுக்கு தகுந்த வீக்கம் வேண்டும்.*
*இன்னும் ஒரு ஆண்டு நமக்கு சோதனையான காலம். அதைக் கடந்து விட்டால் இன்று புறநகரில் 70 லட்சம் விற்கும் வீடு 50 லட்சத்திற்கு வந்து விடும் பிறகு வாங்கிக் கொள்ளலாம். ஒரு வருட பொறுமை உங்களை 20 லட்சம் வரை சேமிப்பிற்கு வழி வகுத்து இருக்கிறது. அதே போல தங்கம் விலையும் நீங்கள் ஒரு வருடம் வாங்க வில்லை என்றால் அடுத்த வருடம் பாதி விலையில் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தயவு செய்து காத்திருக்கவும்.*
*ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே என்கிற எம்ஜிஆர் ன் பாடல் வரிகள் இன்னும் வருடத்திற்கு நமக்குத் தேவை என்பதை மறந்து விடாதீர்கள்.*
*சிக்கனமும் சேமிப்பும் நமக்கு சோறு போடும். ஊதாரித்தனம் நமது வம்சத்தை அழித்து விடும் ஜாக்கிரதை.*
*கலியுகத்தின் கொடுமைகளை இன்னும் ஒரு வருடம் நாம் கண் முன்னே காணப் போகிறோம் ஜாக்கிரதை. விலை உயர்ந்த நகைகளையோ அல்லது வேறு ஏதாவதோ போட்டுக் கொண்டு சாலையில் செல்ல வேண்டாம். ஏன் என்றால் பஞ்சத்தின் கொடுமை நமது நாட்டில் உள்ள சட்டத்தை திருடர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு திருட்டுச் செயலில் அல்லது அதை விட கொடுமையான செயல்களில் ஈடுபடுவார்கள். ஒரு ரூபாய்க்காக கொலை செய்யும் கயவர்கள் உண்டு இந்த நாட்டிலே.*
*பகிர்வு*
செவ்வாய், 14 ஏப்ரல், 2020
*தமிழ் புத்தாண்டு??*
Author: Infomas | ஏப்ரல் 14, 2020 |
*தமிழ் புத்தாண்டு??*
*சுறவம்*
தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?
01. மறைமலை அடிகளார் (1921)
02. தேவநேயப் பாவாணர்
03. பெருஞ்சித்திரனார்
04. பேராசிரியர் கா.நமசிவாயகொண்டாடுங்கள் சுப்பிரமணியனார்
06. மு.வரதராசனார்
07. இறைக்குருவனார்
08. வ. வேம்பையனார்
09. பேராசிரியர் தமிழண்ணல்
10. வெங்காலூர் குணா
11. கதிர். தமிழ்வாணனார்
12. சின்னப்பத்தமிழர்
13. கி.ஆ.பெ. விசுவநாதர்
14. திரு.வி.க
15. பாரதிதாசனார்
16. கா.சுப்பிரமணியனார்
17. ந.மு.வேங்கடசாமியார்
18. சோமசுந்தர் பாரதியார்
19. புலவர் குழுவினர் (1971)
மலையகத்தில்
01. கோ.சாரங்கபாணியார்
02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்
03. அ.பு.திருமாலனார்
04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்
05. கம்பார் கனிமொழி குப்புசாமி
06. மணி. வெள்ளையனார்
07. திருமாறன்
08. இரெ.சு.முத்தையா
09. இரா. திருமாவளவனார்
10. இர. திருச்செல்வனார்
இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து ஆரிய திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் துவக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.
இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டு அல்ல என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும்.
1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய
இந்த அறுபதில் எது தமிழ் வார்த்தை...
யாராவது சொல்ல முடியுமா?
தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள்.ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.
வைகறை
காலை
நண்பகல்
எற்பாடு
மாலை
யாமம்
என்று அவற்றை அழைத்தார்கள்.
அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள்.ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.
தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, _தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்_.
(1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்)
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.
ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் - (தை---மாசி)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
3. கார் - (வைகாசி - ஆனி)
4. கூதிர் - (ஆடி - ஆவணி)
5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)
மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.
சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.
காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.
இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!
பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்!
இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
*-பாவேந்தர் பாரதிதாசன்*
*அப்படி இந்த நாளை கொண்டாடிதான் ஆக்வேண்டுமெனில் சித்திரை திருநாளாக கொண்டாடுங்கள்.*
வெள்ளி, 10 ஏப்ரல், 2020
*சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்.* *அவசியம் அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*
Author: Infomas | ஏப்ரல் 10, 2020 |
*சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்.*
*அவசியம் அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*
=======================
*1. சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும்.*
*2. சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.*
*3. சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது.*
*4. குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.*
*5. சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்.*
*6. சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.*
*பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.*
*இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.*
*7. சாபிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.*
*8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.*
*9. சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ பளுவானவற்றை தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.*
செவ்வாய், 7 ஏப்ரல், 2020
*இத்தனை ஆண்டு காலமாக நம் தலையில் மிளகாய் அரித்து கொள்ளை லாபம் பார்த்த உணவகங்களின் உரிமையாளர்கள் எங்கே போய் பதுங்கிக் கொண்டனர்*!
Author: Infomas | ஏப்ரல் 07, 2020 |
*இத்தனை ஆண்டு காலமாக நம் தலையில் மிளகாய் அரித்து கொள்ளை லாபம் பார்த்த உணவகங்களின் உரிமையாளர்கள் எங்கே போய் பதுங்கிக் கொண்டனர்*!
*தலப்பாக்கட்டி*
*அடையாறு ஆனந்தபவன் என்கின்ற A2B*
*சரவணபவன்*
*ஹோட்டல் சங்கீதா*
*ரத்னா கபே*
*ஹோட்டல் சவேரா*
*ஹோட்டல் உட்லண்ட்ஸ்*
*ஹோட்டல் புகாரி*
*ஹோட்டல் அசோகா*
*ஆரிய பவன்கள்*
*ஹோட்டல் அன்னபூர்ணா*
போன்ற முன்னணி உணவகங்களின் உரிமையாளர்கள் உணவுக்காக அவர்கள் நிர்ணயித்த கட்டணத்தை கேள்வியின்றி செலுத்தி உணவருந்திய நாம் இன்று இல்லத்தில் வீட்டோட அமர்ந்து உணவு தயாரிக்கும் பொழுது தெரிகிறது ஒரு நூறு ரூபாயில் எத்தனை பேர் உணவருந்தலாம் என்பதை கண்கூடாக சிந்திக்க வைக்கிறது மனம். அதனால் இத்தனை நாட்கள் நம்மளை ஏமாற்றி அவர்கள் நிர்ணயித்த கட்டணத்தை கட்ட வைத்து நம் தலையில் மிளகாய் அரித்து கொள்ளை லாபம் அடித்து பெரிய மனிதர்களாக உலாவரும் இவர்கள் நினைத்தால் தினம் ஒரு பத்தாயிரம் பேருக்கு இலவசமாக உணவு சமைத்து தரலாம் அந்த அளவிற்கு மின்சாதனப் பொருட்களும் உபயோகப் பொருட்களும் இவர்களிடம் உள்ளது.மக்களுக்காக பணிபுரியும் காவலர்கள்,மருத்து வர்கள்,தூய்மை பணியாளர்கள்,மற்றும் பொதுமக்களுக்கு சேவையாற்ற முன்வரவில்லை ஏன்?
சேவையாற்றாத இவர்களின் உரிமத்தை ஏன் அரசு நிராகரிக்க கூடாது ?
சமூக சேவகர்கள் தயார் நிலையில் உள்ளனர் இவர்கள் உணவுப் பொட்டலங்கள் தயாரித்து தந்தாள் அவரவர் பகுதியில் அடங்கியுள்ள பொது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க *உத்தர விடுமா அரசு*?
*சிந்திப்போம் சுயநலமின்றி மக்களை காக்க*
*என்றும் மக்கள் நலனில் *🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
வெள்ளி, 3 ஏப்ரல், 2020
பாய் (கோரை) விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்....
Author: Infomas | ஏப்ரல் 03, 2020 |
பாய் (கோரை) விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்....
1.பொதுவாக தரையில் பாய் விரித்து நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்" எனலாம்.
2.பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகெலும்பு நேர்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது, [கல்வி கற்க்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகுவலி வராமலும் தடுக்கும் ]
3.கர்ப்பினி பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவிடும். [பாயில் படுக்கையில் பெண்களுக்கு இடுப்பு எலும்பு விரிகிறது. இடுப்பு எலும்பு விரிந்தாலே ஆப்பரேசன் இல்லாத சுக பிரசவம்தான்.]
4.மூட்டுவலி,முதுகுவலி,தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வாகும்.
5.பாயில் இரு கால் விரித்து மல்லாக்க படுக்கையில் உடலின் எங்கும் இரத்த ஓட்டம் சீராக பாய்கிறது. ஞாபக சக்தியை அதிகமாக தருகிறது. [பாயில் தலையணை இல்லாமல் உறங்குவதே சாலச் சிறந்தது.]
6.ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் மற்றும் தசைகள் தளர்ந்து விரியும்.
7.பாய் உடல்சூட்டை உள்வாங்கக் கூடியது.
8.பெரியோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சீர்வரிசைசாமான்கள் கொடுக்கையில் பாய் இல்லாமல் ஒரு சீர்வரிசையே கிடையாது எனலாம்.
9.ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது.
10.கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்
உடல் உஷ்ணம் அடைவதையும்...
உடலின் வளர்ச்சியையும்...
ஞாபக சக்தியையும்...
மன அமைதியையும்...
நீண்ட உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் தருகிறது.....
புதன், 25 மார்ச், 2020
சீனவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைகள், சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து.
Author: Infomas | மார்ச் 25, 2020 |
சீனவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைகள், சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து.
1) இந்த வைரசு சுவாசக் கால்வாயில் தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைகிறது.
2) மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதத்திற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப் பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு எண்ணுக்கணக்கிலான நாட்கள் தேவை.
கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கான சீன மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு:
1) சூடான நீராகாரங்களை அடிக்கடி எடுங்கள் - தேநீர், காபி, சூப், வெந்நீர் போன்றவை. அத்துடன், 20 நிமிடத்திற்கு ஓர் தடவை ஓர் முறடு வெந்நீரை உள்கொள்வது வாயை ஈரலிப்பாக வைத்திருப்பதுடன், வைரஸை (வாய்க்குள் இருந்தால்) உணவுக்கு கால்வாய் வழியாக கழுவி வயிற்ற்றை அடைந்து சமிபாடு தொகுதியினால் நடுநிலையாக்கப்படும் (neutralise)
2) இயலுமானவரை, ஒவ்வொருநாளும் வெந்நீராலும், உப்பு அல்லது எலுமிச்சம் சாறு அல்லது வினிகர் தொண்டையையும், வாயையும் அலசுங்கள் (gargle)
3) covid-19 வைரஸ் உடையிலும், மயிரிலும் ஒட்டிக் கொள்ளும் தனமாய் உள்ளது. எந்த சவர்க்காரமமும் அல்லது detergent உம் covid-19 ஐ கொல்லக் கூடியது. எனவே, வெளியில் சென்று வீடு திரும்பியவுடன், ஓர் இடத்தில் தொடாமலும், இருக்காமலும், நேரடியாக குளியல் செய்யுங்கள் அல்லது தோயுங்கள்.
4) நாள்தோறும் உடைகளை தோய்க்க முடியாவிட்டால், சூரிய வெய்யிலில் உலர்த்துவது வைரஸ் ஐ கொல்லக் கூடியது.
5) உலோக மேற்பரப்புகள் மற்றும் தொடு பரப்புகளை (metalic surface) மிகவும் கவனாமாக கழுவுங்கள். ஏனெனில், உலோக தொடுப்பரப்புக்களில் 9 நாட்கள் வரைக்கும் இந்த வைரஸ் தாக்கு பிடிக்க கூடியது.
6) கைபிடி சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றில் கவனமெடுத்து, தொடுவதை தவிருங்கள் அல்லது தவிர்ப்பதற்கன முறைகளை (கையுறை) கடைபிடியுங்கள். உங்கள் வீடுகளில் கைபிடி சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருங்கள்.
7) புகை பிடிப்பதை தவிருங்கள்.
😎 உங்கள் கைகளை 20 நிமிடத்திற்கு ஓர் தடவை நுரைக்கும் சவர்க்கரத்தினால் 20 நொடி கழுவுங்கள்.
9) மரக்கறி மற்றும் பழவகைளை உட்கொள்ளுங்கள். விற்றமின் C மாத்திரமின்றி, உங்கள் நாக தாது (Zinc) ஊட்டச்சத்தை தரக்கூடிய அல்லது கூட்டக்கூடியதாக இருக்கும் வழிமுறைகளை கையாளுங்கள்.
10) மிருகங்கள் covid-19 ஐ மனிதருக்கு கடத்துவதில்லை. மனிதனில் இருந்து மனிதனுக்கே கடத்தப்படுகிறது.
11) இயலுமானவரை தடிமன் காய்ச்சலை தவிர்பதற்கு முயற்சியுங்கள். குளிரான உணவுகளை தவிருங்கள்.
12) எதாவது தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு வருவதற்கன அறிகுறிகளோ அல்லது உணர்வோ தென்பட்டால், மேற்கூறியவற்றின் மூலம் தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
13) covid-19 தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு மூலம் தொற்றி, 3-4 நாட்கள் வரை தொண்டையில் தங்கி இருந்து, சுவாசப் பாதை வழியாக நுரையீரலை சென்றடையும். எனவே தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு மேற்கூறிய படிமுறைகள் மூலம் எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
14) உங்களில் கவனமெடுப்பதுடன், ஏனையோருக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
புதன், 18 மார்ச், 2020
பக்கவாதம் தடுப்பது எப்படி?
Author: Infomas | மார்ச் 18, 2020 |
பக்கவாதம் :
மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதைப் ‘பக்கவாதம்’ (Stroke) என்று சொல்கிறோம்.
வலது, இடது என்று மூளையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளை கட்டுப்படுத்துகிறது. இடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளை கண்காணிக்கிறது. ஆகவே, மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாது. பொதுவாக, வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கும். காரணம், பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருவதுதான்.
காரணங்கள்:
50 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். அதாவது, இந்த வயதுக்கு மேல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பக்கவாதம் வருகிற வாய்ப்பு 2 மடங்கு அதிகரிக்கிறது. குடும்பத்தில் பெற்றோருக்கு அல்லது அவர்களின் சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால், அவர்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக ரத்தக் கொழுப்பு, மாரடைப்பு, இதயவால்வு கோளாறுகள், இதயச் செயலிழப்பு, இதயத்துடிப்புக் கோளாறுகள் போன்றவை பக்கவாதம் வருவதற்கு அடித்தளம் அமைக்கின்ற முக்கிய நோய்கள். புகைப்பிடித்தல், அடுத்தவர் விடும் புகையைச் சுவாசித்தல், மது அருந்துதல், பருமன், உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கைமுறை ஆகியவை பக்கவாதம் வருவதைத் தூண்டுகின்றன. தலைக்காயம், மூளையில் ஏற்படும் தொற்று போன்றவற்றாலும் பக்கவாதம் வரலாம். முன் அறிவிப்புகள் இன்றி பக்கவாதம் பெரும்பாலும் திடீரென்றுதான் வருகிறது.
பக்கவாதத்தின் அறிகுறிகள் :
1. முகத்தில் அல்லது உடலில் ஒரு பக்கத்தில் மரத்துப்போதல், பலவீனம் அடைதல், தளர்ச்சி அடைதல் அல்லது ஒரு பக்கமாக இழுப்பது போன்ற உணர்வு, உடல் செயலிழத்தல்.
2. பேசும்போது திடீரென வார்த்தைகள் குழறுதல்... மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் பிரச்சனை... எளிய வாக்கியங்களைக்கூட வெளிப்படுத்த முடியாத நிலைமை...
3. நடக்கும்போது தள்ளாடுதல்... நேராக நிற்க முடியாத நிலைமை, ஒரு காலில் மட்டும் உணர்ச்சி குறைந்திருப்பது...
4. பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென்று சில நொடிகள் பேச்சு நின்றுபோகும். பார்வை திடீரென்று குறைந்து உடனே தெளிவாகும். இரட்டைப் பார்வை ஏற்படும்.
நடந்து செல்லும்போது தலைசுற்றும். உணவை வாய்க்குக் கொண்டுசெல்லும்போது கை தடுமாறும். கையெழுத்துப் போடும்போது கை விரல்கள் திடீரென ஒத்துழைக்காது. வழக்கத்துக்கு மாறான தலைவலி, வாந்தி.
பக்கவாத நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிந்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் தக்க சிகிச்சை அளிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி முழுவதுமாக செயலிழந்துவிடும். ஆகவே, காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு பாதிப்பு குறையும்.
தடுப்பது தான் எப்படி?
ரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்! முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ஒருமுறை தங்கள் ரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்ள வேண்டும். இந்த அளவு அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து முறைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க வேண்டுமென்றால், உணவுமுறையும் முக்கியம். ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு (சோடியம் குளோரைடு). நாளொன்றுக்கு 3லிருந்து 5 கிராம் வரை உப்பு போதுமானது. இதற்கு மேல் உப்பு உடலுக்குள் போனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதைத் தவிர்க்க ஊறுகாய், கருவாடு, அப்பளம். வடகம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப்பருப்பு, புளித்த மோர் போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.
இறைச்சி, முட்டையின் மஞ்சள்கரு, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, ஐஸ்கிரீம், சாஸ் மற்றும் சாக்லெட் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. காரமும் புளிப்பும் மிகுந்த உணவுகள், சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த, வறுத்த, ஊறிய உணவுகள் வேண்டவே வேண்டாம். தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக்கூட மிகக் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை விரும்பிச் சாப்பிடுங்கள். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள்... கொய்யா, தர்ப்பூசணி, மாதுளை போன்ற பழங்கள்... பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள்... புதினா, கொத்தமல்லி போன்ற பச்சை இலைகள்... காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம்.
ரத்த நாள அடைப்பு
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்த நாள அடைப்பு பிரச்சனை வரலாம்.
இதயத்துக்கு வெளியே உள்ள சுத்த ரத்தக் குழாய்கள் சுருங்குவதை பெரிப்ரல் ஆர்ட்டீரியல்டிசிஸ் என்று அழைப்பார்கள்.
ஒருவித கெட்ட கொழுப்பு கரைபடுவதால் இது உருவாகிறது.
ரத்த நாளங்களில் `பிளேக்’ என்று சொல்லக்கூடிய அழுக்கானது படியலாம்.
இது கையிலும் படியலாம். காலிலும் படியலாம்.
இதனால் சுத்தமான ரத்த நாளங்கள் அடைபடுகின்றன.
ரத்தம் போவது தடைபடுகிறது.
குறிப்பாக, காலுக்கு ரத்தம் செல்வது தடைபடுகிறது.
ரத்தம் போகாவிட்டால், என்ன நேரிடும்?
அங்குள்ள திசுக்கள் அழியும். இதனால் காலை எடுக்க வேண்டிவரும்.
இதற்கு முக்கியமான காரணம் புகைபிடித்தல்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இது வரலாம்.
அதிக கொழுப்பு உள்ளவர்கள்,
அதிக மன அழுத்தம் உள்ளவர்கள்,
இதய நோய் உள்ளவர்களிடம் இது காணப்படும். சிலருக்கு வலி, மரத்துப் போதல், குத்துதல், கால் ஆடுசதையில் வலி போன்றவை காணப்படும்.
காலில் நாடிப் பார்க்க வேண்டும். அப்பொழுது காலில் புண்கள் வரும். குறிப்பாக விரல்கள், பாதங்கள் இவற்றில் புண் வந்தால் ஆறாது, நாள்பட்டு ஆறும். காலினுடைய நிறம் சற்று நீல நிறத்தில் காணப்படும். ஒரு காலின் சூடு, அடுத்த காலின் சூட்டிலிருந்து மாறுபடும். நகங்களில் மாறுபாடு காணப்படும். ஆண்மைக் குறைவு ஏற்படும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வரலாம்.
இவர்கள் உடற்பயிற்சி, உணவு முறை, கொழுப்பை குறைக்கிற மருந்துகள், ரத்த அழுத்தத்தை குறைக்கிற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வேலை செய்யும்போது ஆடுசதையில் வலி வரும். ஓய்வு எடுத்தால் குறைந்துவிடும். ரத்தம் போகாததுதான் இதற்குக் காரணம். இவர்கள் பொதுவாகவே நடந்தால் வலி ஏற்படுகிறது என்பார்கள்.
5 நிமிஷம் ஓய்வெடுத்த பின் வலி குறைந்து விட்டது’ என்று சொல்வார்கள். இவர்களுக்கு டாப்ளர் டெஸ்ட் என்று சொல்லக்கூடிய காலில் ரத்தம் எவ்வாறு ஒடுகிறது என்று பார்க்கும் சோதனையை செய்ய வேண்டும். ஆஞ்சியோகிராபி பரிசோதனை செய்து பார்ப்பவர்களும் உண்டு. புகையிலையை அறவே ஒழிக்க வேண்டும். ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீரிழிவு நோய், கொழுப்பு, ரத்த அழுத்த நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 04258-226495
கொரோனா வைரசும் தமிழன் மறந்த தமிழர் நோய்த்தடுப்பு_மரபுகளும்
Author: Infomas | மார்ச் 18, 2020 |
கொரோனா வைரசும் தமிழன் மறந்த தமிழர் நோய்த்தடுப்பு_மரபுகளும்
1. இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது.
2. வாசல் முற்றத்தில் நீரில் கால் கழுவி பிறகு வீடுநுழைந்தது.
3. மாவிலை தோரணங்கள் கட்டியது.
4. மஞ்சள் பூசி குளித்தது தெளித்து விளையாடியது.
5. உணவில் மிளகு சுக்கு மஞ்சள் சேர்ந்தது.
6. வாழை இலையில் உணவு பரிமாறியது .
7. வேப்பங்குச்சி உப்பு கரி கொண்டு பல் துலக்கியது.
8. வேப்பம் இலையில் புகை போட்டது.
9. மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது.
10. வருடம் ஒரு முறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது.
11.எலுமிச்சம் பழம் காய்ந்த மிளகாய் படிகாரம் உத்திரசங்கு இவைகளை தலை வாசலில் தொங்க விட்டது.
12. நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது. பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது.
13. வெற்றிலை பாக்கு போடுவதும்.
14. கசாயம் ஊறல் குடிப்பதும்.
15. வெள்ளாவியில் உடை வெளுத்தது.
16.மரண வீட்டிற்கு சென்றுவந்தால் மஞ்சள் நீர் தெளித்து நீராடி வீட்டிற்குள் செல்லுதல்.
17.இறந்த பிரேதத்தை எரித்தது.
18. அம்மை வந்தால் வெப்பம் பத்திரம் போடுதல்.
19. வீட்டு முற்றத்தில் துளசிச் செடியை நாட்டி வைத்தல்.
20. மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டது.
இவை அனைத்துமே கிருமியை தடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் சுத்தமாக வாழ்வதுக்கு மட்டுமே தமிழனால் உருவாக்கப்பட்ட மரபு என்பது புரியாமல் இன்று நடக்கும் பெரு அழிவில் பங்காளர்களாக இருக்கிறோம்
"நீ புதைத்ததை நீயே எடுத்துவிடு இல்லாவிட்டால் நீயே புதைக்கப்படுவாய்"
இணையத்தளத்தில் இருந்து ...
செவ்வாய், 10 மார்ச், 2020
அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
Author: Infomas | மார்ச் 10, 2020 |
அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்த காரணத்தைப் பகிரவும் ஆதரிக்கவும்
இப்போது தலைவர்களின் தலைவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார், அதை உங்கள் மதிப்பீட்டிற்கு அனுப்புகிறார் ..
இந்தியாவின் அன்பான / மரியாதைக்குரிய குடிமக்கள் ... இந்த செய்தியைப் படிக்குமாறு நீங்கள் கோரப்படுகிறீர்கள், நீங்கள் ஒப்புக்கொண்டால், தயவுசெய்து உங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புங்கள், மேலும் மேலும் மேலும் அனுப்புமாறு அவர்களிடம் கேளுங்கள்.
மூன்று நாட்களில், இந்த செய்தி முழு இந்தியாவிலும் இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவில் குரல் எழுப்ப வேண்டும். __
2018 மேம்பாட்டுச் சட்டம்
எம்.பி.க்கள் ஓய்வூதியம் பெறக்கூடாது, ஏனெனில் அரசியல் ஒரு வேலை அல்லது வேலைவாய்ப்பு அல்ல, ஆனால் ஒரு இலவச சேவை. - அரசியல் என்பது பொது பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் ஒரு தேர்தல், ஓய்வு இல்லை, ஆனால் அவர்கள் மீண்டும் அதே சூழ்நிலையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம். (தற்போது அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது, 5 வருட சேவைக்குப் பிறகு).
இதில் இன்னொரு கோளாறு என்னவென்றால், ஒருவர் முதலில் கவுன்சிலராக இருந்து, பின்னர் சட்டமன்ற உறுப்பினராகி, பின்னர் எம்.பி. ஆகிவிட்டால், அவருக்கு ஒன்று அல்ல, மூன்று ஓய்வூதியங்கள் கிடைக்கும்.
இதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நாட்டின் குடிமக்களுக்கு இது ஒரு பெரிய துரோகம் ...
மத்திய ஊதியக்குழுவுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள கொடுப்பனவு திருத்தப்பட்டு வருகிறது .... இதை வருமான வரியின் கீழ் கொண்டு வர வேண்டும் ....
தற்போது, எம்.பி.க்கள் தங்களது சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் தன்னிச்சையாக வாக்களிப்பதன் மூலம் தன்னிச்சையாக அதிகரிக்கின்றனர், அந்த நேரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன.
எம்.பி.க்களின் சுகாதார பராமரிப்பு முறை நிராகரிக்கப்பட வேண்டும் .. மேலும் இந்தியாவின் பொது சுகாதாரம் போன்ற சுகாதாரப் பாதுகாப்பு மற்ற குடிமக்களைப் போலவே அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் .. தற்போது அவர்களின் சிகிச்சை பெரும்பாலும் வெளிநாடுகளில் செய்யப்படுகிறது .. அவர்கள் அதை வெளிநாட்டில் செய்ய வேண்டுமானால், அவர்கள் அதைப் பெற வேண்டும் தங்கள் சொந்த செலவில் செய்யப்படுகிறது.
மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி பில் போன்ற அனைத்து சலுகைகளும் முடிவுக்கு வர வேண்டும். (அவர்கள் இதுபோன்ற பல சலுகைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், அவற்றை தவறாமல் அதிகரிக்கிறார்கள்) -
குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும், தண்டனையான பதிவுகள், குற்றவியல் குற்றச்சாட்டுகள் மற்றும் உறுதியுடன் சந்தேகத்திற்கிடமான நபர்கள், கடந்த கால அல்லது நிகழ்காலத்தை நாடாளுமன்றத்தில் இருந்து தடை செய்ய வேண்டும் ..
அவர்களால் ஏற்படும் நிதி இழப்புகள், அலுவலகத்தில் உள்ள அரசியல்வாதிகள் காரணமாக அவர்களிடமிருந்தும் மீட்கப்பட வேண்டும், அவர்களின் வேட்பாளர்கள், சொத்துக்கள் - எம்.பி.க்களும் பொதுவான குடிமக்களுக்கு பொருந்தும் அதே விதிகளை பின்பற்ற வேண்டும்.
குடிமக்களால் எல்பிஜி எரிவாயு மானியத்திற்கு விலக்கு இல்லை ... பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு கிடைக்கும் மானியங்கள் மற்றும் பாராளுமன்ற கேண்டீனில் மானிய உணவு உள்ளிட்ட பிற மானியங்கள் திரும்பப் பெறப்படாவிட்டால்.
பாராளுமன்றத்தில் பணியாற்றுவது ஒரு மரியாதை, கொள்ளையடிக்கும் இலாபகரமான வாழ்க்கை அல்ல.
இலவச ரயில் மற்றும் விமானப் பயணம் நிறுத்தப்பட வேண்டும்.
சாமானியர்கள் தங்கள் வேடிக்கையை ஏன் தாங்க வேண்டும்?
ஒவ்வொரு நபரும் குறைந்தது இருபது பேருடன் தொடர்பு கொண்டால், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்த செய்தியைப் பெற மூன்று நாட்கள் மட்டுமே ஆகும்.
இந்த சிக்கலை எழுப்ப இது சரியான நேரம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
மேலே உள்ளதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், அதை அனுப்பவும்.
இல்லையென்றால், அதை நீக்கு.
நீங்கள் எனது 20+ பேரில் ஒருவர், இதைத் தொடரவும் ...
நன்றி.
https://www.facebook.com/100002669372058/posts/2373980772700879/?sfnsn=scwspmo
புதன், 26 பிப்ரவரி, 2020
ஆண்டுக்கு ஒரு கடை எப்படி?*தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு...! சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன ?*
Author: Infomas | பிப்ரவரி 26, 2020 |
*ட்ராபிக் ராமசாமி ..............*
ஆண்டுக்கு ஒரு கடை எப்படி?*
தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு...! சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன ?*
_____________________
💫 ஒரு பவுன் தங்கசெயினுக்கு
1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!
💫 இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால்
8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக
6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!
💫 ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்...!
💫 இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்...!
💫 ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் ! ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்...!
💫 ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!
💫 இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ? பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ? கணக்கு போட்டு பாருங்கள்...!
1 கிராம் தங்கம் ரூ. 2922/-
8 கிராம் தங்கம் ரூ. 23,376/-
1 கிராம் செம்பு - 4.80
1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-
6.5 கிராம் தங்கம் - 18,993/-
6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு அடக்க விலை -18993+7=19000/-
1 பவுனுக்கு தங்கத்தில் லாபம் - 23376-19000= 4376/--
சேதாரம் 1.5 கிராம் = 4383/-
1 பவுனுக்கு மொத்த லாபம் 4376+4383=8759
💫 என்ன தலை சுத்துதா ? எனக்குள் ஒரு ஆதங்கம். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்...!
💫 நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள நல்ல உள்ளங்களே ! உங்கள் ஆதங்கத்தை காட்ட அதிகப்படி ஷேர் செய்யவும்.
எதுவும் மக்களால் முடியும்...!
*தாய்ப்பாலில் எரிந்த பெரு உடையார் கோவில் தீபம்:**அழியாத வரலாற்று உண்மை*
Author: Infomas | பிப்ரவரி 26, 2020 |
கண் கலங்கிவிட்டேன் இந்த சரித்திர உண்மை யை படித்தினால்
🏹🗡🏹⚔🏹🗡🏹⚔🏹🗡🏹
🚩மாமன்னன் ராஜ ராஜசோழன்🚩
*தாய்ப்பாலில் எரிந்த பெரு உடையார் கோவில் தீபம்:*
*அழியாத வரலாற்று உண்மை*
சோழப்பேரரசன் ராஜராஜசோழனின் அரண்மனை. ஒருநாள் மன்னனைப் பார்த்து ‘சோழப்பேரரசே கோவிலுக்காகக் கொடுத்த நன்கொடைகள் ஏராளம் இருந்தாலும், உங்கள் திருமுகத்தில் தீராத கவலை படிந்திருக்கிறதே என்ன காரணம்?’ என்றார் அமைச்சர்.
மன்னர் கண்மூடி யோசித்தார். நெடுங்காற்றை உள்வாங்கி சீராக மூச்சுவிட்டார். கண் திறந்தார். நிதானமான குரலில் பேசத்தொடங்கினார்.
‘சோழப்பேரரசின் அடையாளம் இந்தப்பெருவுடையார் கோவிலின் மூலம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அழியக்கூடாது என்று தான் கவலைப்படுகிறேன். அரண்மனைகள் தனிச்சொத்து, ஆலயங்கள் மக்கள் சொத்து என்று கருதப்படுமாயின் மக்களுக்கும் இதில் பங்கிருக்க வேண்டும். சோழமண்டலத்தில் கடைக்கோடியில் சிற்றூரில் வாழும் மக்களும் இந்த ஆலயத்தின் பங்குதாரர்களாக மாற்றிவிடும் திட்டத்தைத்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.
‘திட்டம் என்ன மன்னா?’ அமைச்சர் கேட்டார்.
‘அதோ அந்தத்திரு விளக்குகள் செல்வந்தர்களின் நேர்த்திக் கடன்களால் எரிகின்றன. தினந்தோறும் கோவில்களில் தீபங்கள் எரிய வேண்டும். அதற்காக ஆடுகளையும், மாடுகளையும் ஏழைகளுக்கு வழங்கப் போகிறேன். அதற்குப்பதிலாக அவர்கள் திரு விளக்குகள் எரிய நெய் தந்தால் மட்டும் போதும். மொத்த வருமானமும் அவர் களுக்கே. அதாவது ஏழையின் அடுப்பும், ஆலயத்தின் திருவிளக்கும் ஒரே திரியில் எரியும். இந்த ஆலயத்தோடு அடித்தட்டு மக்களுக்கு உறவு மேம்படும். இதுதான் என் திட்டம், சரியா?’ என்றார்.
‘மிகச்சரியானது மன்னா’ என்று வணங்கினார்.
அரசன் ஆணை பிறப்பித்தான். ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கால்நடைகளை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள். எந்த நிலை யிலும் நிபந்தனை வழங்காது கட்டுப்பாடு வகுத்து கண்காணியுங்கள் என்றான்.
ஒருநாள் கோவில்களைச் சுற்றி வரும் பொழுது ஒரு கோவிலில் மட்டும் விளக்கு எரியவில்லை. காரணம் கேட்டறிந்தார்.
எவத்தூர் மாராயன் என்பவனுக்கு 42 பசு மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவனுடைய கட்டுப்பாட்டில் எரியவேண்டிய விளக்கு கடந்த ஏழு நாட்களாக எரியவில்லை என்பதை அறிந்தார்.
‘எவனவன், இறைவன் கட்டளையை நிறைவேற்ற மறுப்பவன். பூட்டுங்கள் தேரை, ஓட்டுங்கள் எவத்தூருக்கு’ என்றான்.
காலி மனையால் சூழப்பட்ட ஒரு குடிசையின் முன் மன்னரின் தேர் நின்றது. ‘பேரரசன் வந்திருக்கிறேன், மாராயா வெளியே வா’ என்று குரல் கொடுத்தார்.
உள்ளே ஒரு பெண்ணின் விசும்பலும் குழந்தையின் அழுகுரலும் கேட்டது.
சற்று நேரத்தில் கதவைத் திறந்து கசங்கிய சேலையும், கலைந்த கூந்தலும், கலங்கிய கண்களுமாய் பெண்ணொருத்தி வெளியே வந்தாள். அவளது இடுப்பில் நாராய் தொங்கிக் கொண்டிருந்தது, சவலை பாய்ந்த குழந்தை ஒன்று. பேரரசரைக் கண்டதும் அஞ்சி நடுங்கி கீழே விழுந்தாள்.
‘எழுந்திரு பெண்ணே! நீ யார்?’
‘நாந்தாங்க மாராயன் பொஞ்சாதி’
‘உன் கணவன் எங்கே?’
‘என் புருஷனும், ராசா கொடுத்த மாடுகளும் போன மாசம் காவிரி வெள்ளத்தில் ஆத்தோடு போயிருச்சி...’
அவள் சொல்வது மெய்யா என்பது போல திரும்பிப்பார்த்தார். ஆம்! என்று வருத்தத்தோடு தலை அசைத்தனர் பொதுமக்கள்.
‘உனக்காக வருந்துகிறேன். ஆனால் ஒரு கேள்வி. கடந்த மாதம் இறந்தார் என்கிறாய். ஏழு நாட்களுக்கு முன்பு வரை திருவிளக்கு எரிந்திருக்கிறது. கணவனும், மாடுகளும் இறந்தபின் இருபத்து மூன்று நாட்கள் எப்படி நீ விளக்கு எரித்தாய்?’.
அவள் தேம்பித் தேம்பி அழுதாள். இடுப்பில் நழுவிய குழந்தையை மார்போடு கட்டிக்கொண்டு, ‘அதை மட்டும் கேட்காதீர்கள் மன்னா’ என்று கண்கலங்கினாள்.
‘பெண்ணே! அஞ்சாதே உண்மையைச் சொல்’.
‘சொல்கிறேன் மன்னா! புருஷன் செத்துப் போயிட்டாலும் ராசாவுக்குக் கொடுத்த வாக்கை மீறக்கூடாது பாருங்க. அதனால என் தாய்ப்பாலை விற்று மூணு ஆளாக்கு நெய் வாங்கி தீபத்தை எரிய வச்சேன். ஒரு வாரமாய் தாய்ப்பால் வத்திப்போச்சு, திரு விளக்கு அத்துப்போச்சு. எங்களை மன்னிச்சிருங்க மகராசா’ என்று குழந்தையோடு தேரின் காலடியில் விழுந்தாள்.
நடந்ததை அறிந்த பெருமூச்சுவிட்ட மன்னன் ராஜராஜன் துடிதுடித்துப்போனான் .கண்கள் கலங்கியது தேகம் சிலிர்த்தது.
தேரைவிட்டு கீழிறங்கி தாயையும் குழந்தையையும் சேர்த்தெடுத்து ‘உன்னைப் போன்றவர்களால் தான் பெருமை அடைகிறது என் சோழப்பேரரசு. இன்று முதல் இந்தத்தாயை திருமஞ்சனப் பணிப்பெண்ணாக நியமிக்கின்றேன். அரண்மனை சிற்பியை அழைத்து *தாய்ப்பாலால் விளக்கெரித்த இவள் பெயரை கல் வெட்டில் பொறித்து விடுங்கள்’ என்றான்.*
வரலாறு மறக்கடிக்க பட கூடாது.
எனவே
*அதிகமாய் பகிருங்கள்..*
🙏🕉🙏🚩
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இப்போது 10 நிமிடங்களில் இலவச பான் கார்டைப் பெறலாம்! எப்படி விண்ணப்பிப்பது? pan card
Author: Infomas | பிப்ரவரி 26, 2020 |
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இப்போது 10 நிமிடங்களில் இலவச பான் கார்டைப் பெறலாம்! எப்படி விண்ணப்பிப்பது?
புதிய பான் கார்டைப் பெற நீங்கள் 2 பக்க விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை, மேலும் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை, ஏனெனில் வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, ஆதார் அட்டை உள்ள எவரும் ஆன்லைனில் உடனடி பான் கார்டைப் பெற அனுமதிக்கிறது. அதுவும் இலவசமாக. உடனடி இ-பான் கார்டு விண்ணப்ப படிவத்தில் உங்கள் ஆதார் எண்ணை மட்டுமே உள்ளிட வேண்டும், அதன்பிறகு உங்கள் இணைக்கப்பட்ட மொபைல் தொலைபேசி எண்ணில் OTP அனுப்பப்படும்.
ஒரு நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) விண்ணப்பதாரருக்கு PDF வடிவத்தில் வெறும் 10 நிமிடங்களில் உடனடியாக வழங்கப்படுகிறது.
இ-பான் கார்டு ஒரு நகலைப் போலவே சிறந்தது என்றாலும், வெறும் ₹ 50 க்கு மறுபதிப்புக்கு ஆர்டர் செய்வதன் மூலம் நீங்கள் விரும்பினால் லேமினேட் செய்யப்பட்ட பான் கார்டையும் பெறலாம்.
உடனடி பான் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
1) இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://www.incometaxindiaefiling.gov.in/e-PAN/index.html?lang=eng
2) இந்த பக்கத்தில் “புதிய பான் பெறு” (Get New PAN) என்பதைக் கிளிக் செய்க.
3) உங்கள் ஆதார்-இணைக்கப்பட்ட மொபைல் தொலைபேசியில் OTP ஐ உருவாக்க புதிய பான் கார்டு மற்றும் கேப்ட்சா குறியீட்டை ஒதுக்க உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
4) OTP ஐ சரிபார்க்கவும்.
5) ஆதார் விவரங்களை சரிபார்க்கவும்.
6) பான் கார்டு பயன்பாட்டிற்கும் உங்கள் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க உங்களுக்கு விருப்பம் இருக்கும்.
7) அந்த ஆதார் எண்ணின் e-KYC தரவு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் (UIDAI) பரிமாறிக்கொள்ளப்படுகிறது, அதன் பிறகு உங்களுக்கு உடனடி e-PAN வழங்கப்படும். முழு செயல்முறையும் முடிய 10 நிமிடங்களுக்கு மேல் ஆகாது.
8) “Check Status/ Download PAN” என்ற முகவரியில் ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் பான் பி.டி.எஃப் வடிவத்தில் பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் மின்னஞ்சல் ஐடி ஆதார் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்டால், உங்கள் மின்னஞ்சல் மூலம் PAN ஐ PDF வடிவத்தில் பெறுவீர்கள்.
புதிய பான் கார்டைப் பெறுவதற்கான முழு செயல்முறையும் இப்போது இலவசமாகவும் எளிதாகவும் காகிதமற்றதாகவும் மாறிவிட்டது. நீங்கள் எந்த ஆவணங்களையும் போர்ட்டலில் பதிவேற்றவும் தேவையில்லை.
இதற்கு முன்பு ஒருபோதும் பான் ஒதுக்கப்படாதவர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது, மொபைல் தொலைபேசி எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் DD-MM-YY வடிவத்தில் முழுமையான பிறந்த தேதி ஆதார் அட்டையில் கிடைக்கிறது. தவிர, உடனடி e-PAN கார்டு வசதி சிறார்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி வரவுசெலவுத் திட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பான் ஒதுக்கீடு செய்வதற்கான செயல்முறையை மேலும் எளிதாக்குவதற்கு, அரசாங்கம் ஒரு புதிய முறையைத் தொடங்கும் என்று அறிவித்ததை அடுத்து, இதன் கீழ் எந்தவொரு தேவையும் இல்லாமல் ஆதார் அடிப்படையில் ஆன்லைனில் பான் உடனடியாக ஒதுக்கப்படுகிறது.
*கொத்தமல்லி இலைச்சாற்றின் மகத்துவம்*
Author: Infomas | பிப்ரவரி 26, 2020 |
் இரண்டு நாட்களில் இறந்துவிடுவார் என மருத்துவரால் கைவிடப்பட்டு மரணத்தின் வாசலிலிருந்த தனது சித்தப்பாவை கொத்தமல்லி இலைச்சாறு கொடுத்து காப்பாற்றிய ஒரு அற்புதம்
*கொத்தமல்லி இலைச்சாற்றின் மகத்துவம்*
அரவக்குறிச்சி பெரியாஸ்பத்திரி வார்டில் ஓர் கிழிந்த துணிபோல படுத்திருந்தார் தாத்தா.
உழைத்து மெலிந்த தேகம். 84 வது வயதில் கல்லீரல் சுத்தமாய் பழுதாகி போய் மரணத்தின் நாட்களை மருத்துவமனையில் எண்ணி கொண்டிருந்தார்...!
ரவுண்ட்ஸ் வந்த சீஃப் டாக்டர் வீரமணி தாத்தாவின் கைநாடியை பிடித்து பார்த்துவிட்டு மேவாயை தடவியபடியே.... இன்னும் இரண்டு நாள்தான் தாங்குவார் சொந்த காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிடுங்க.
. வீட்டுக்கு எடுத்துட்டு போய்டுங்க என்று கூறியபடியே அவர் பிள்ளைகளின் பெருங்குரலெடுத்த அழுகையை காதில் வாங்கிக்கொள்ளாமல் அடுத்த நோயாளியை பார்க்க நகர்ந்தார்...!
ஆம்புலன்ஸில் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார் வீரமணி தாத்தா. அவர் மூச்சு எப்போது வேண்டுமானாலும் நின்று விடுவேன் என்று போக்கு காட்டியது
கட்டிலில் மூச்சுவிட சிரமப்பட்டபடி கண்மூடி படுத்திருந்தார் தாத்தா. தம் தங்கை முறையான தாத்தாவின் மகளிடம் விசாரித்தார் அக்கா...
" சாப்பாடு இறங்குதா..?"
"அப்பப்போ கூழாக ஏதாவது கொடுக்கிறோம். கொஞ்சமா உள்ளே போகுது"
"நான் ஒன்னு சொன்னா கேட்பியா தங்கச்சி"
"சொல்லுக்கா... நான் என்ன செய்யனும்...?"
"எப்படியும் இரண்டு நாளில் இறந்திடுவார்னு டாக்கடர் சொல்லிட்டாரு இல்ல. கடைசியா ஒரு முயற்சி செய்து பார்ப்போம்...
இன்னில இருந்து இந்த இரண்டு நாளும் வெறும் மல்லிச்சாறு மட்டுமே கொடுப்போம். அது கழிவுகளை வெளியேத்தி புது ரத்தத்தை ஊற வைக்கும். சித்தப்பா எழுந்து உட்காருவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!" சரோஜா அக்காவின் கண்களில் அத்தனை உறுதி.
அவர்கள் குடும்பத்தில் சரோஜா அக்கா மீது மிகுந்த மரியாதை உண்டு. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். அந்த குடும்பத்தின் ஆணிவேர் வீரமணி தாத்தா. அவர் இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்தால் அதுபோல வேறு சந்தோசம் உண்டா..?
அக்காவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டனர். வீட்டில் மல்லிச்சாறு தயாரானது. ஓர் எதிர்பார்ப்போடும், பரபரப்போடும் அங்கும் இங்கும் ஓடினர். தாத்தாவை மடியில் கிடத்தி மால்லிச்சாறை அவர் வாயில் சிறிது சிறிதாக புகட்டினர்.
இரண்டுநாள் முழுக்க மல்லிச்சாறு மட்டுமே..! இடையிடையே கொஞ்சமாய் பழச்சாறும்.
டாக்டர் விதித்த கெடு இன்றோடு முடிகிறது. நாளை விடியலில் தாத்தா உயிரோடு இருப்பாரா என்கிற பதைபதைப்பில் உறவினர்கள் எல்லாம் தாத்தாவையே சுற்றி வந்தனர்.
இரவு உறங்கி போனது...!
மூன்றாம் நாள் விடியலில் நெஞ்சு திக்... திக்.. என அடித்து கொள்ள சொந்தங்கள் தாத்தாவை நெருங்கி சென்றனர்.
கண்மூடி படுத்திருந்தவர்..... ஓர் இருமலோடு விழித்து கொண்டார்
ஓடு... மல்லிஜுஸ் எடுத்துட்டு வாங்க.. ஐயாவுக்கு கொடுப்போம். எங்கிருந்தோ குரல் ஒலித்தது....,
மீண்டும் ஓர் இருமல் இருமியபடி தாத்தா எழுந்து உட்கார்ந்தார்.
"ஏன் புள்ள என்ன பார்த்து அழுதுகிட்டு நிக்கித. எதுக்கு இம்புட்டுபேரு வந்திருக்காங்க" தன் மனைவியை கேள்வியோடு பார்த்தார் வீரமணி தாத்தா.
இந்த எண்பத்தாறு வயதிலும் ஆரோக்கியமாய் இருக்கிறார். நாம் பார்க்கசென்ற நேரம் மனிதர் கட்டிலில் ஒய்யாரமாய் படுத்திருந்தார். எவர் துணையுமின்றி எழுந்து நடமாடுகிறார்.
தொடர்ந்து..." இந்த மல்லிசாறை எல்லா ஏழை,பாளைகளும் குடிக்கோணும். டாக்டர் கிட்டபோயி ஆயிரகணக்குல செலவு பண்ணியும் குணமாகத என் நோய் இந்தமல்லிசாறால குணமாயிட்டுதே. எனக்கு இருந்த சுகர்நோயும் இப்ப இல்ல. மல்லிச்சாறு பத்தி எல்லா மக்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்
அமிர்த பானம் கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி?:
நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு,
தேங்காய் - 1 ,
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
சுத்தம் செய்த கொத்துமல்லி இலையுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.
இதன் கூட தேவையான அளவு தண்ணீர்,நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்.
இந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாது.
(1)வெறும் கொத்துமல்லி இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு,உப்பும்,மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்.
(2)கொத்துமல்லி இலைச்சாறுடன்,பசும்மோர், உப்பும் கலந்தும் அருந்தலாம்.
(3)கொத்துமல்லி இலைச்சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.
இதை தொடர்ந்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.
உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்.
வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கும்.
கல்லீரலை பலப்படுத்தும்.
பித்தம் கட்டுக்குள் இருக்கும்.
இதை தயார் செய்வது மிகவும் எளிதானது.
இதை அனைவரும் பருகலாம்,
தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்.
கொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும் , புதினாவையும் இதே போன்று சாறு தயார் செய்து உபயோகிக்கலாம்.
ஆனாலும் கொத்துமல்லி இலைச்சாறுதான் சிறந்தது.
ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020
கணுக்கால் உள்வளைவு ஊனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குணம் ஆக
Author: Infomas | பிப்ரவரி 02, 2020 |
இன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு நானும் என் மனைவி மற்றும் இளைய மகன் மூன்று பேரும் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று இருந்தோம்.
மருத்துவமனைக்கு செல்லும் முன்பு சிங்காநல்லூரில் உள்ள பிரபல சாந்தி சோஷியல் சர்விஸ் கேண்டினில் காலை உணவு சாப்பிட்டு விட்டு ஒரு சிக்னலில் நின்று கொண்டு இருந்தோம்,
அப்பொழுது என் வாகனத்திற்கு முன்பு ஒரு பெண் 3 வயதுள்ள தன் குழந்தையை மடியில் வைத்து கொண்டு தன் கணவருடன் சிக்னலில் இரு சக்கர வாகனத்தில் உக்காந்து கொண்டு இருந்தனர்,
அப்பொழுது என் வாகனத்திற்கு முன்பு ஒரு பெண் 3 வயதுள்ள தன் குழந்தையை மடியில் வைத்து கொண்டு தன் கணவருடன் சிக்னலில் இரு சக்கர வாகனத்தில் உக்காந்து கொண்டு இருந்தனர்,
அக்குழந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு சிரித்து கொண்டு இருந்ததை ரசித்து கொண்டு இருந்த வேளையில் அந்த குழந்தையின் இரண்டு கால்களில் ஒரு கால்கள் மட்டும் சற்று வித்தியாசமாக இருப்பதை கண்டேன்,,
நான் சற்று முன்னோக்கி சென்று அக்குழந்தையின் கால்களை சற்று உற்று பார்த்த பின் தான் தெரிந்தது அந்த குழந்தைக்கு ஒரு கால் ஊனம் என்று...
உடனே அந்த குழந்தையின் தந்தையிடம் சிக்னல் முடிந்தவுடன் வண்டியை சற்று ஓரமாக நிறுத்துங்கள் உங்கள் குழந்தையை பற்றி சிறிது பேசவேண்டும் என்று கூறியதும் அவரும் வண்டியை சற்று ஓரமாக நிறுத்தினார்..
முதலில் எங்களை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டு, பிறகு அவருடைய குழந்தையின் கால்களை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்,,
அந்த பெண் குழந்தை பிறக்கும் போதே ஒரு கால் ஊனமாக தான் பிறந்தது என்றும் கால்களை சரி செய்ய தனியார் மருத்துவமனையில் லட்ச ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர் எங்களால் அவ்வளவு பணம் செலவு செய்யும் அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்,, சரி இதெல்லாம் ஏன் கேக்கறீங்க என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்...
நான் என் மகனை அவரிடம் காண்பித்து என் மகனின் கால்கள் எப்படி உள்ளது என கேட்க, அவரும் நன்றாக தான் உள்ளது என்று கூறினார்..
பிறகு நான் என் மகனை பற்றிய விவரங்களை அவரிடம் கூற ஆரம்பித்தேன்,,
பிறகு நான் என் மகனை பற்றிய விவரங்களை அவரிடம் கூற ஆரம்பித்தேன்,,
என் மகனின் பெயர் அர்சத்,, பவானி அரசு மருத்துவமனையில் பிறக்கும் போதே இவனுக்கு இரண்டு கால்களும் ஊனம் உங்கள் மகள் போலவே தான் என் மகனுக்கும் கால்கள் ஊனமாக பிறந்தான்,,
இதுக்கு கணுக்கால் உள்வளைவு ஊனம்னு (clubfoot) சொல்லுவாங்க,, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து குணமாக்கிவிட்டோம் என்று கூறியதும் அவர் சற்று அதிர்ச்சி அடைந்து இதை எப்படி சரி பண்ணிங்க தெளிவா சொல்லுங்க நானும் என் மகளுக்கு சரி பண்ணனும்னு கேட்க ஆரம்பித்தார்..
மகன் ஊனமாக பிறந்து விட்டானே என்று நானும் உங்களை போல தான் மனவேதனையில் திகைத்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த வேளையில், என் மகன் பிறப்பதற்கு முன்பு ஒரு பதிவை வாட்ஸப் குழுவில் சேர் செய்தது நினைவுக்கு வந்தது,
அந்த பதிவை மீண்டும் தேடி பார்த்த பொழுது அது கணுக்கால் உள்வளைவு ஊனத்திற்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்ற பதிவு,,
நான் பகிர்ந்த பதிவு கடைசியில் எனக்கே தேவைப்பட்டது..
அந்த பதிவை மீண்டும் தேடி பார்த்த பொழுது அது கணுக்கால் உள்வளைவு ஊனத்திற்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்ற பதிவு,,
நான் பகிர்ந்த பதிவு கடைசியில் எனக்கே தேவைப்பட்டது..
அந்த பதிவில் இருந்த அலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசினேன்,, மறுமுனையில் பேசியவர்கள் குழந்தையை தூக்கி கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கூற, நானும் என் மனைவியும், பிறந்து 7 நாள் மட்டுமே ஆன இவனை தூக்கி கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தோம்,,
என் மகனை மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு கால் பாதங்களை வளைத்து மாவுகட்டு போட ஆரம்பித்தார்கள்,,
போடப்பட்ட மாவுகட்டுகளை அடுத்த வாரம் வரைக்கும் வைத்து இருக்கவேண்டும்,, பிறகு ஒரு வாரம் கழித்து மீண்டும் மாவுகட்டுகளை அவிழ்த்து புதிய மாவுகட்டுகளை கட்டுவார்கள்,, இப்படி ஒவ்வொரு மாவுகட்டுகளை கட்டும் பொழுதும் கால் பாதத்தின் மேல் பகுதி எலும்புகளை நேராக வளைத்து கட்டு கட்டுவார்கள்,,
வாரத்திற்கு ஒரு மாவுகட்டு,,
இப்படி 15 வாரம் பவானில இருந்து வந்து கட்டு போட்டு போவோம்,,
அப்புறம் 15 மாவுகட்டு முடிஞ்சதும் குழந்தையோட இரண்டு குதிங்கால் மேல் பகுதியிலும் அறுவைசிகிச்சை செய்து ஒரு வாரம் மருத்துவமனைல தங்கினோம்,,
அதுக்கு அப்புறம் ஒரு ஷூ கொடுப்பாங்க அதை தினமும் போடுகிட்டே வந்தோம்,, குழந்தைகள் வளர வளர ஷூ வும் இலவசமாவே மாத்தி கொடுதாங்க,, இப்படி 5 வயசு வரைக்கும் ஷூ போட்டு வந்த கண்டிப்பா குணம் ஆகிடும்,,
நாங்கள் இப்பொழுது 3 வருடங்
களாக சிகிச்சைக்கு வந்து கொண்டு இருக்கிறோம் இப்ப கூட நாங்க மருத்துவமனைக்கு செல்ல தான் வந்து இருக்கின்றோம் என்று சொல்லி முடிச்சதும் அவர் முகத்துல கொஞ்சம் சந்தோசத்துடன் இருந்தார்.. அவர் என் மகளின் கால்களை சரி செய்ய எனக்கு உதவுங்கள் என்று கேட்க நானும் அவரை அழைத்து கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றேன்,, அவர் மருத்துவரிடம் சிகிச்சைக்கான விளக்கங்களை அறிந்து கொண்டு தன் மகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவுசெய்து உள்ளார்..
இவரை போன்று சில பேர் இந்த கணுக்கால் ஊனத்திற்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற விவரம் தெரியாமல் உள்ளனர்,,
அவர்களுக்கான பதிவு தான் இது..
தற்பொழுது என் மகன் குணமடைந்து மற்ற குழந்தைகளை போலவே ஓடியாடி விளையாடுகிறான்..
இது போன்று கணுக்கால் உள்வளைவு ஊனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நீங்கள் காண நேர்ந்தால் எனக்கு தெரிவிக்கவும்..
சுபான் எஸ்.எம்.
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ அல்லது யாரேனும் ஹாக் செய்து விட்டாலோ நம் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை என்றால் நாம் நம் ஈமெயி...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...