திங்கள், 4 ஆகஸ்ட், 2014
Object Oriented என்பது தமிழில் ‘பொருள் சார்ந்த’ அல்லது ‘பொருள் நிமித்த’என்ற பொருளில் வரும். கணிப்பொறி இயலில்
லேட்டஸ்ட் இதுதான். இதில் ஆப்ஜெக்ட் ஓரியண்டட் டிசைன் (Object
Oriented Design), ஆப்ஜெக்ட் ஓரியண்டட் லாங்குவேஜ் (Object Oriented
Language) என்பதெல்லாம் இப்போது பரவலாக பேசபடுகிறது.
கணிப்பொறியில் முன்பெல்லாம் புரோகிராம் (Program) எழுதும்பொழுது
ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டே போனார்கள். ஆனால் அதில் ஒழுங்கு
முறை ஏதும் இல்லாது இருக்கும். இதனால் பெரிய பெரிய புரோகிராம்கள்
எழுதும்போதும், அதை திருத்தும்போதும், குறிப்பிட்ட இடத்தில் உள்ள பிழைகளைக
கண்டறியவும்(find errors), மாற்றியமைக்கவும் மிகவும் சிரமத்துக்கு
உள்ளானார்கள்.
விளக்கமாக கூறுவதெனில் ஒரு பெரிய புரோகிராம் ஒன்றில் ஒரு இடத்தில்
ஏற்படுத்தப்படும் தவறானது அந்த முழு புரோகிராமையும்
(ஆணைத்தொடர்)பாதிக்கும். அதனால் பெரிய புரோகிராம் ஒன்றில் திருத்தம்
செய்வது என்பது மிகவும் கடினமானதாக இருந்தது.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு, கணிப்பொறிக்கு உண்டான ஆணைகளை சிறிய
சிறிய பகுதிகளாக மாட்யுல்களாப் (Module) பிரித்து எழுதுகிறார்கள். இந்த
மாட்யுல்கள் அனைத்தையும் முழுமையானவை,
சுயாட்சிபெற்றவை. அதாவது இவை
தன்னிச்சையாக இயங்க கூடியவை.
இந்த மாட்யுல்களில் மாற்றம் ஏற்படுத்தினால்
அது ஆணைத்தொடரின் மற்ற மாட்யுல்களைப் பாதிக்காது. இவ்வாறு அமைத்த
மாட்யுல்கள்களையே ஆப்ஜெக்ட் (Object) என்று கூறுவார்கள்.
இவை மற்ற மாட்யுல்களோடு தொடர்பு கொள்ளும். ஒரு ஆணைத் தொடர் தனிப்பட்டு
இயங்காமல் அதற்குண்டான தகவல்களையும் சேர்த்துத்தான் இயங்க வைப்பார்கள்.
இந்த இணைப்புக்கு ஆப்ஜெக்ட் என்று பெயர். ஒரு மாணவனிடம் ஒரு வேதியியல்
செய்முறையைச் செய்யச் சொல்லி அதற்கான குறிப்புகள் அனைத்தையும்
வரிசைப்படுத்தி எழுதிக் கொடுப்பதைப் போன்று, ஆணைத் தொடர்களின்
செய்முறையையும் ப்ரோஷீஜர் (procedure) அதற்கேற்ற தகவல்களையும் ஒன்றாக ஒரு
பொருளாகப் பார்ப்பது ஆப்ஜெக்ட் ஓரியண்டட் டிசைனின் முக்கியமான சித்தாந்தம்
இதற்கேற்ற பொருத்தமான மொழிகளும் இருக்கின்றன. அவை ஸ்மால் டாக் (small talk), சி ப்ளஸ் ப்ளஸ் (c++) மொழிகள்.
கணிப்பொறியின் மூலம் எதிர்காலத்தில் சாதிக்க நினைப்பவர்கள் கட்டாயம் இவைகளை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
நன்றி நண்பர்களே..!
- தங்கம்பழனி
Program என்றால் என்ன? ஓர் எளிய விளக்கம்.
Author: Infomas | ஆகஸ்ட் 04, 2014 |
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில்
ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்
ஆணைத்தொடர், ஆணைத் தொகை, கட்டளைப் பட்டியல் அல்லது நிரல் என அர்த்தம்
ஏற்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு கணிப்பொறியின் செயலை, நடத்தையைக் கட்டுப்படுத்த இந்த ஆணைத்தொடர்கள் (Program) பயன்படுகின்றன.
ஒரு கணிப்பொறியை பாட்டுப்பாட வைக்கவோ, அச்சிடவோ அல்லது பில்
தயாரிக்கவோ கொடுக்கப்படும் வெவ்வேறு ஆணைத் தொகுப்புகளைத்தான் ப்ரோகிராம்
(Program) என்பர்.
இந்த ஆணைகள் அல்லது ஆணைத்தொடர்கள், அல்லது கட்டளைகள் கணினியால்
புரிந்துகொள்ளக்கூடிய எந்த ஒரு மொழியிலும் (Computer Language) இருக்கலாம்.
(கணினி மொழி கற்க கணினி மொழிகளைக் கற்க ஆர்வமுள்ளவரா நீங்க? என்ற இப்பதிவு உங்களுக்கு உதவும். )
இந்த ஆணைகளை எழுதுபவர்களுக்கு ‘புரோகிராமர்’ (Programmer) என்று
பெயர். தமிழில் இவர்களை ஆணையர் எனவும் அழைக்கலாம். தற்காலத்தில்
கணினிகளுக்கான ஆணைத்தொகுப்புகள் எழுதுபவர்களுக்குத்தான் அதிக ஊதியம்
கிடைக்கிறது. அதுவும் சிஸ்டம் ப்ரோகிராம் எழுதுபவர்களுக்குத்தான் அதிக
சம்பளம்.
சிஸ்டம் புரோகிராம் (System Program) என்பது கணினிகளைச் செயல்படுத்த
உள்ள கருவிகளைப் போன்று செயல்பட உருவாக்கும் நிரல்களாகும். உதாரணமாக
‘ஆப்பரேட்டிங் சிஸ்டம்’ (Operating System). ‘கம்பைலர்’ (Compiler) போன்ற
ஆணைத்தொடர்கள் சிஸ்டம் புரோகிராம் வகையைச் சார்ந்தது.
மற்றொன்று அப்ளிகேஷன் புரோகிராம். இந்த அப்ளிகேஷன் புரோகிராமை வைத்து
கணினியைக் கணக்குப் போட வைக்கலாம். ஒரு நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கான
சம்பளப் பட்டுவாடாவை நடத்தலாம். இந்த வகை புரோகிராம்கள் Application
Programs எனப்படுகிறது.
ஆக புரோகிராம்களில் இரண்டு வகை உள்ளது. ஒன்று சிஸ்டம் புரோகிராம். மற்றொன்று அப்ளிகேஷன் புரோகிராம்.
இனி புரோகிராம் என்றால் நிகழ்ச்சி நிரல்தானே என்று கேட்கலாம்
நீங்கள்.. ஆம். புரோகிராம் என்பதை நிகழ்ச்சி நிரல் என்றும் கூட சொல்லலாம்.
காரணம்.. ஒவ்வொரு நிகழ்வையும், ஏற்கனவே தன்னகத்தே நிரல்களாகவும் நிரல்
தொகுப்புகளாகவும் கொண்டிருப்பதால் அவற்றை புரோகிராம் அல்லது நிகழ்ச்சி
நிரல் அல்லது நிரல் என அழைப்பதிலும் தவறில்லை. அனைத்திற்குமே பொருள்
ஒன்றுதான்..
நன்றி
- தங்கம்பழனி.
(How to backup Android Application? ) ஆண்ட்ராய்ட் கோப்புகளை பேக்கப் செய்வது எப்படி?
Author: Infomas | ஆகஸ்ட் 04, 2014 |
(How to backup Android Application? )
ஆண்ட்ராய்ட் வகைப் போன்கள் தற்பொழுது அதிக பயன்பாட்டுக்கு
வந்துவிட்டன. ஒவ்வொருவரின் கையில் ஏதாவது ஒரு மாடல் ஆண்ட்ராய்ட் மொபைல்
(New Model Android Smartphone) உள்ளது. ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் தங்களுடைய
ஆண்ட்ராய்ட் போனில் வகை வகையான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கூகிள் பிளே
ஸ்டோர் மூலம் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். அவற்றில்
சில அப்ளிகேஷன்கள் இலவசமாகவும், சில அப்ளிகேஷன்களை கட்டணம் செலுத்தியும்
பெற்றிருக்கலாம்.. அவ்வாறு பெற்ற அப்ளிகேஷன்களை பேக்கப் செய்து பாதுகாப்பது
எப்படி? ஏன் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் பேக்கப் எடுக்க வேண்டும்
என்பதையும், அதனால் என்ன நன்மை என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
ஆண்ட்ராய் மொபைலில் உள்ள அப்ளிகேஷன்களை ஏன் பேக்கப் செய்ய வேண்டும்?
(Why should do backup Android applications in mobile?)
உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு பார்மட்
செய்யும் நிலை நேரலாம். அதுபோன்ற சூழ்நிலையில் ஆண்ட்ராய்ட் போனை பார்மட்
(Android phone format) செய்யும்பொழுது மொபைலில் உள்ள ஆண்ட்ராய்ட்
அப்ளிகேஷன்களை பேக்கப் செய்ய வேண்டியது வரும். அதனால் கட்டாயம் பேக்கப்
எடுப்பது நல்லது.
ஆண்ட்ராய்ட் போனில் உள்ள அப்ளிகேஷ்னகளை பேக்கப் எடுக்கவில்லை என்றால் என்ன நிகழும்?
(What happens if you do not take the Android Phone application backup?)
ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பேக்கப் எடுக்காமல் போனை பார்மட்
செய்யும்பொழுது மீண்டும் கூகிள் பிளே ஸ்டோரில் (Google Play Store) தேவையான
அப்ளேகேஷன்களை ஒவ்வொன்றாக தரவிறக்க வேண்டியது வரும். இதனால் உங்களுடைய
நேரம், பணம், இணையப் பயன்பாட்டுக்கான கட்டணம் ஆகியவைகளைச் செலவிட
வேண்டியிருக்கும்.
இதுபோன்று மீண்டும் புதிதாக உங்கள் மொபைலில் உள்ள ஆண்ட்ராய்ட்
அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்யாமல், உங்கள் போனில் உள்ளதையே ஒரு பேக்கப்
எடுத்து வைத்து மீண்டும் பயன்படுத்தலாம். அதாவது, ஆண்ட்ராய்ட்
அப்ளிகேஷன்களை அப்படியே apk.exe கோப்புகளாக பேக்கப் எடுத்து உங்களுடைய
மொபைலிலுள்ள மெமரிகார்டில் சேமித்துவைத்து, மொபைல் பார்மட் முடிந்த பிறகு
மீண்டும் அவற்றை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும்.
ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பேக்கப் எடுக்க உதவும் மென்பொருள்:
(Software for to take Android application backup:)
ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பேக்கப் எடுக்கப் பயன்படும் மென்பொருள் ES
File explorer . இது ஒரு பைல்மேனேஜர் மென்பொருளாகும். உங்கள் ஆண்ட்ராய்ட்
மொபைலிலிருந்தே கூகிள் ஸ்டோர் சென்று ES File explorer மென்பொருளைத்
தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம்.
மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவிப் பயன்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய முகவரி: Download and Install ES File explorer file manager
மேற்கொண்ட இணைப்பை கிளிக் செய்து ES File Explorer File Manager உங்களுடைய Android Mobile-ல் நிறுவிக்கொள்ளுங்கள்.
ஆண்ட்ராய் போனில் அப்ளிகேஷன்களை பேக்கப் எடுக்கும் வழிமுறைகள்.
- ES File Explorer File Manager – ஐ ஆண்ட்ராய்ட் போனில் திறந்துகொள்ளுங்கள்.
- தோன்றும் விண்டோவில் app mgr என்ற ஐகானை தொடவும்.
- தொட்டவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுடைய ஆண்ட்ராய் போனில் இருக்கும் அப்ளிகேஷன்கள் தோன்றும். அதில் நீங்கள் பேக்கப் செய்ய வேண்டிய அப்ளிகேஷனை தொடர்ச்சியாக இரண்டு வினாடிகள் அழுத்தியவாறு இருங்கள்.
- இப்பொழுது புதியதாக Operations என்ற விண்டோ திறக்கும். அதில் select all , uninstall, backup, shortcut, detail என்ற வசதிகள் காட்டப்படும். அதில் பேக்கப் என்பதை தொடவும்.
- இனி நீங்கள் விரும்பிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் பேக்கப் எடுக்கப்பட்டிருக்கும்.
- அவ்வாறு பேக்கப் எடுக்கப்பட்ட அப்ளிகேஷனானது குறிப்பிட்ட அப்ளிகேஷ்ன் பெயரோடு(———-.appk was backed up successfully (/sdcard/backups/apps) )என உங்களுக்கு காண்பிக்கும். அதாவது உங்களுடைய android apps ஆனது SD கார்டில் பேக்கப்/அப்ஸ் (backup/apps) என்ற கோப்புறையில் சேமிக்கப்பட்டிருக்கும் என்ற தகவலே அது.
இதுபோன்று உங்களுக்குத் தேவையான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்
முழுவதையும் இந்த முறையில் உங்களுடைய மெமரிகார்டில் பேக்கப் எடுத்து
வைக்கலாம். இவ்வாறு எடுத்து வைத்த பேக்கப் அப்ளிகேஷன்களை நிறுவ உங்களுக்கு
இணைய இணைப்பு தேவையில்லை. இணையக்கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமும்
ஏற்படாது. மேற்கண்ட செயல்கள் அனைத்தையும் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் மூலமே
செய்துவிடலாம்.
பேக்கப் எடுத்த பைல்களை மீண்டும் நீங்கள் மீண்டும் பயன்படுத்த
முடியும். மற்றவர்களுக்கு பயன்படும் என்றால் அந்த பேக்கப் பைல்களை
அவர்களுக்கும் கொடுத்து உதவலாம். தேவைப்படும்பொழுதெல்லாம் வேண்டிய
அப்ளிகேஷன்கள் உங்களுடைய மெமரி கார்டிலிருந்தே நிறுவிக்கொள்ள முடியும்.
இனி நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலை தயக்கமின்றி பார்மட் செய்யலாம்.
நன்றி.
இம்மென்பொருளைப் பயன்படுத்தும் வழிமுறைகளை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்.
- தங்கம்பழனி
ஆண்ட்ராய்ட் மொபைலில் Offline Google Translate வசதி…
Author: Infomas | ஆகஸ்ட் 04, 2014 |
Google Translate வசதி ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு
நேரடியாக மாற்ற உதவும் ஒரு வசதியாகும். இந்த வசதியை இலவசமாக Google நமக்கு
வழங்குகிறது. இந்த வசதியை தற்பொழுது ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் பயன்படுத்த
முடியும்.
தற்பொழுது ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பயன்படுத்தும்
விதமாக புதிய வெர்சன் ஆண்ட்ராய்ட் டிரான்ஸ்லேட் அப்ளிகேஷனை (New Version
Android Offline Translate apps) வெளியிட்டுள்ளது கூகிள். அதாவது நாம்
ஆன்லைனில் இருக்கும்பொழுது உலக மொழிகளிலிருக்கும் வார்த்தைகளை ஒரு
மொழியிலிலிருந்து மற்றொரு உலக மொழிக்கு மாற்றம் செய்யமுடியும். இது
நமக்குத் தெரியும்.
தற்பொழுது இந்த Android Translate Apps – ன் புதிய வெர்சனில், ஆன்லைனில் மட்டும் அல்லாமல் ஆப்லைனிலும் இருமொழிகளுக்கிடையே மொழிமாற்றம் செய்துகொள்ள முடியும்.
இந்த வசதியை இணைய இணைப்பு இல்லாமலே (without internet connection)
பயன்படுத்த முடியும் என்பதுதான் இந்த புதிய ஆன்ட்ராய்ட் டிரான்லேட்
அப்ளிகேஷனின் சிறப்பு.
ஐம்பது உலக மொழிகளில் இவ்வசதியைப் பயன்படுத்த முடியும் என கூகிள் அறிவித்திருக்கிறது.
இனி இணைய இணைப்பே இல்லாமல் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எளிதாக Google Translate -ஐப் பயன்படுத்தி உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலிலேயே மொழிமாற்றம் செய்துகொள்ள முடியும்.
இந்த New Version Android Offline Translate apps தரவிறக்கும் செய்ய இங்கு கிளிக் செய்யவும். : Download Android Offline Translate apps
முக்கிய குறிப்புகள்:
இந்த வசதியை நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஆப்லைனில் பயன்படுத்துவதற்கு, மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய மொழிகளை Offline Languages க்கு மாற்றி, மொழிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.
Voice Speech translate மூலமும் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்ற இவ்வசதியைப் பயன்படுத்த முடியும்.
இவ்வசதியை நீங்கள் பயன்படுத்த உங்களுடைய ஆண்ட்ராய்போனில் Android 2.3 அல்லது அதற்குப் பிறகு வெளிவந்த புதிய ஆண்ட்ராய்ட் வர்சன் மென்பொருள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
நன்றி.
தற்பொழுது இந்த Android Translate Apps – ன் புதிய வெர்சனில், ஆன்லைனில் மட்டும் அல்லாமல் ஆப்லைனிலும் இருமொழிகளுக்கிடையே மொழிமாற்றம் செய்துகொள்ள முடியும்.
ஐம்பது உலக மொழிகளில் இவ்வசதியைப் பயன்படுத்த முடியும் என கூகிள் அறிவித்திருக்கிறது.
இனி இணைய இணைப்பே இல்லாமல் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எளிதாக Google Translate -ஐப் பயன்படுத்தி உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலிலேயே மொழிமாற்றம் செய்துகொள்ள முடியும்.
இந்த New Version Android Offline Translate apps தரவிறக்கும் செய்ய இங்கு கிளிக் செய்யவும். : Download Android Offline Translate apps
முக்கிய குறிப்புகள்:
இந்த வசதியை நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஆப்லைனில் பயன்படுத்துவதற்கு, மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய மொழிகளை Offline Languages க்கு மாற்றி, மொழிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.
Voice Speech translate மூலமும் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்ற இவ்வசதியைப் பயன்படுத்த முடியும்.
இவ்வசதியை நீங்கள் பயன்படுத்த உங்களுடைய ஆண்ட்ராய்போனில் Android 2.3 அல்லது அதற்குப் பிறகு வெளிவந்த புதிய ஆண்ட்ராய்ட் வர்சன் மென்பொருள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
நன்றி.
- தங்கம்பழனி.
லேப்டாப்பை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்..!
Author: Infomas | ஆகஸ்ட் 04, 2014 |
கணினி யுகத்தில் நாம் வாழ்கிறோம்.. ஒவ்வொருவரிடத்திலும் மொபைல், கணினி
போன்றவைகள் அத்தியாவசியமான பொருட்களாக மாறிவிட்டது. ஒவ்வொரு நிமிடமும்
கணினியைப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகின்றன.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் லேப்டாப்..
லேப்டாப் தனிப்பட்ட முறையில் வாங்கிப் பயன்படுத்தி வரும் அதே வேளையில்
படிக்கும் மாணவர்களுக்காக அரசும் இலவசமாக லேப்டாப்களை வழங்கி வருகிறது.
ஆக, லேப்டாப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகமாகிக்கொண்டே உள்ளது என்பதில் சந்தேகமில்லை..
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில் மிக எளிதாக எடுத்துச் சென்று
பயன்படுத்த முடிவதால் மேசைக் கணினிகளில் பயன்பாடு வெகுவாக
குறைந்துவருகிறது.. லேப்டாப் பயன்பாடு அதிகரிக்கும் அளவிற்கு அதை
பராமரிப்பில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை..
நன்கு பராமரிக்கப்படும் லேப்டாப் விரைவில் பழுதடைவதில்லை..
பராமரிப்பில்லாமல் பயன்படுத்தும் லேப்டாப் விரைவில் பழுதடைந்துவிடும்.
அவ்வாறு விரைவாக லேப்டாப் பழுதடையாமல் இருக்கச் செய்வதற்கான பயனுள்ள
வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்.
மடிக்கணினி திரைப் பாதுகாப்பு:
கணினியில் மிக முக்கியமானதொரு பாகம் கணினித் திரைதான்.. அதில்
பார்த்துதான் அனைத்தை வேலைகளையும் மேற்கொள்கிறோம். கணினித் திரையை சுத்தமாக
வைத்திருக்க மெல்லிய ‘சில்க்’ துணிகளைப் பயன்படுத்தலாம்.. அல்லது அதற்கென
இருக்கும் Screen Cleaning Liqued பயன்படுத்தி காட்டனால்
துடைத்தெடுக்கலாம்.
தவிர்க்க வேண்டியவை:
கரடு முரடான துணிகளையோ, அல்லது வெறும் கைகளையோ பயனபடுத்தி துடைக்க
கூடாது. இதனால் கணினித் திரையில் கீரல் விழும், கைத்தடங்கள் அதில்
பதிந்துபோகும். மேலும் அழுத்தமாக துடைப்பதால் கணினித் திரைக்கு சேதம்
ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
தூசி மற்றும் ஈரப்பதம்:
பொதுவாகவே அனைத்து கணினிகளும் தூசி மற்றும் ஈரப்பதத்தால்
பாதிக்கபடுகின்றன. குறிப்பாக பயணங்களின்போது லேப்டாப்பை பயன்படுத்தக்கூடிய
இடம் நல்ல காற்றோட்டமான சூழ்நிலையாக இருக்க வேண்டும்.. அதோடு அங்கு
ஈரப்பதம் இல்லாம் சாதாரண சூழ்நிலையாக இருக்க வேண்டும்.. தொடர்ந்து ஈரப்பதம்
மற்றும் காற்றோட்டமில்லாத இடங்களில் லேப்டாப் கணினியை பயன்படுத்தும்போது
அதனால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
ஆண்டி வைரஸ் ரொம்ப முக்கியம்:
வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதும் நம் கடமை. பல ஆயிரம்
மதிப்பு வாய்ந்த மடிக் கணினியை பாதுகாக்க ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து
நல்லதொரு ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் வாங்குவது தவறில்லை. அதனால் நல்லதொரு
ஆன்டி வைரஸ் சாப்வேர் ஒன்றை வாங்கி இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். அவ்வாறு
கட்டண வைரஸ் தடுப்பு மென்பொருளை பயன்படுத்தும்பொழுது வைரஸ்
தாக்குதல்களிலிருந்து உங்களுடைய லேப்டாப்பிற்கு முழுமையான பாதுகாப்பு
கிடைக்கிறது.
உணவுப் பொருட்களை தவிருங்கள்:
மடிக் கணினியைப் பயன்படுத்திக்கொண்டே சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள்
சாப்பிடுவதோ, டீ, கூல்டிரிங்ப் போன்ற பான வகைகளை அருந்துவதோ கூடாது..
அவ்வாறு செய்வது உங்கள் லேப்டாப்பிற்கு நீங்களே உருவாக்கும் ஆபத்து..
லேப்டாப் பேக்:
வெளியில் பாதுகாப்பாக லேப்டாப்பை எடுத்து வைக்க தகுந்த லேப்டாப்
பேக்கைப் பயன்படுத்துங்கள். லேப்டாப்பின் அளவிற்கு தகுந்த மாதிரியான
போதுமான அளவில் லேப்டாப் பேக் இருக்க வேண்டும். முதுகில் மாட்டிச் செல்ல
ஏதுவான லேப்டாப் பேக் லேப்டாப்பை பாதுகாப்பாக கொண்டு செல்ல உதவும்.
ஹபர்னேட் நிலை:
பணிக்கு இடையே சிறுது நேரம் அவசகாசம் எடுத்துக்கொள்ளும் நிலையில்,
(உதாரணமாக உணவு எடுத்துக்கொள்ள செல்வதற்கு முன்பு, தொலைபேசியில் அதிக நேரம்
பேசும் சூழல்) உங்கள் லேப்டாப்பை ஹைபர்னேட் நிலையில் வைப்பது சிறந்தது..
இதனால் அதிக மின்சாரம் சேமிக்கப்படுவதுடன் லேப்டாப்பும் பாதுகாக்கப்படும்.
தொடர்ச்சியான பயன்பாட்டை தவிருங்கள்:
தொடர்ச்சியாக மடிக்கணினியை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
அதிகபட்சமாக 8 மணி நேரம் வரைக்கும் தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.. எட்டு
மணி நேரத்திற்கும் அதிகமாக இடைவிடாமல் கணினியை பயன்படுத்திக்கொண்டே
இருந்தால் விரைவில் மடிக் கணினி வெப்பமடைந்துவிடும். இதனால் விரைவிலேயே
கணினியின் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளது.
ஃபையர் வால் பாதுகாப்பு:
பொதுவாக எல்லா மடிக்கணினிகளிலும் ஃபையர்வால் நிறுவப்பட்டே விற்பனைக்கு
வருகிறது. ஃபையர்வால் பாதுகாப்பு மிக முக்கியம். கணினியின் தலைமைக்
காவலனாக இது செயல்படுகிறது.. எந்த வகையிலும் உங்கள் கணனி சேதாரமாகாமல்
இருக்க இது பயன்படுகிறது. உங்கள் கணினியில் பையர்வால் இல்லையெனில் தனியாக
வாங்கியோ அல்லது இணையத்தில் தரவிறக்கம் செய்தோ உங்கள் கணினியல்
நிறுவிக்கொள்ளுங்கள்.
பரிசோதனை:
வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களுடைய லேப்டாப்பை சர்வீஸ் செய்வது
நல்லது.. அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் லேப்டாப்பை கொடுப்பது
புத்திசாலித்தனம்.
லேப்டாப் மேடை:
வீடுகள், மற்றும் அலுவலகங்களில் லேப்டாப்பை பயன்படுத்தும்பொழுது,
அதற்கென தயாரிப்பட்ட மேடைகளைப் பயன்படுத்துங்கள். தற்பொழுது லேப்டாப்
ஸ்டேன்டுகள் பலவிதங்களில் கிடைக்கிறது. அதனால் லேப்டாப் சூடேறுவதை
குறைப்பதோடு, பயன்படுத்தவும் எளிதாக இருக்கும்.
நன்றி.
- தங்கம்பழனி
Computer Error பிரச்னையா?
Author: Infomas | ஆகஸ்ட் 04, 2014 |
நீங்கள் Computerக்கு புதியவரா? உங்கள் கணினியில் ஏதேனும் பிழை
ஏற்பட்டு Error Message தோன்றியிருக்கும்.. ஆனால் அது என்ன Error Message,
எதற்காக அந்த மெசேஜ் காட்டுகிறது உங்களால் கூற முடியவில்லையா?அதற்கான
தீர்வை தேடி கூகிள் முதலான தளங்களில் தேடியும், உங்களுக்கு குழப்பமே
மிஞ்சுகிறதா? கவலை வேண்டாம்.. உங்களுக்கு உதவ ஒரு Super Useful Website
உள்ளது. இந்த தளத்தில் Computerல் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வை
தருகிறது.
இணையதள முகவரி : http://www.errorhelp.com/
இந்த தளம் மற்றத் தளங்களைப் போலல்லாமல் நீங்கள்
கூறும் பிரச்னைகளுக்கு ஏற்றவாறு, Error Help செய்கிறது. எந்த பிரச்னை
என்றாலும் அதற்கு சரியான தீர்வைத் தேடி தருகிறது.
அந்த தளத்தில் உள்ள Search பெட்டியில் நீங்கள் உள்ளிடும்
பிரச்னைகளுக்கான தீர்வை வழங்கும் இணையதளங்களையும் காட்டுகிறது.. இதற்கு
முன்பு பயனாளர்கள் இத்தளத்தில் உள்ளிட்ட கணினி குறித்த பிழைச்
செய்திகளையும், அதற்கான தீர்வை வழங்கிய விபரங்களையும் வரிசைப்படுத்திக்
காட்டுகிறது.
ஏற்கனவே அங்குள்ள இத்தகைய தொகுப்பில் உங்களுடைய பிரச்னை ஒன்றாக
இருந்தால் நீங்கள் அதையே தீர்வாக பயன்படுத்திக்கொள்ள முடியும். பெரும்பாலான
பிரச்னைகள் அனைத்தையும் ஏற்கனவே இதில் உள்ளடக்கி உள்ளதால் இந்த பகுதியும்
உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் தேடும் கணினி பிரச்னைக்கான தீர்வு இத்தளத்தில் இல்லையெனில்
விரைந்து அதுகுறித்த தகவல்களை நாற்பத்தெட்டு மணி நேரத்தில் தேடித் தருவதாக
உறுதியளிக்கின்றனர்.. 99.9 சதவிகித கணினி பிழைகளை இத்தளத்தின் மூலமாகவே
கண்டறிந்து, அதற்கான தீர்வையும் பெற்றுவிடலாம்..
இந்த தகவல்கள்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்..
நன்றி
- தங்கம்பழனி.
ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014
மைக்ரோசாப்டின் இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்..!
Author: Infomas | ஆகஸ்ட் 03, 2014 |
Microsoft Security Essentials ஒரு மிகச்சிறந்த வைரஸ்
எதிர்ப்பு மென்பொருளாகும். இது மைக்ரோசாப்ட் தளம் இலவசமாக வழங்கும்
மென்பொருளாகும்.இம்மென்பொருளைத் தரவிறக்க : Download Microsoft Security Essentials
இந்த வைரஸ் எதிருப்பு மென்பொருள் உங்கள் கணினியை Virus, Spyware, மற்றும் Malicious Software களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கிறது.
மிகச்சிறந்த கட்டமைப்புடன், பயன்படுத்துவதற்கு எளிதான இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.
இம்மென்பொருள் உங்கள் கணினிகளுக்கு மிகச்சிறந்த Real-Time Protection -ஐ கொடுக்கிறது.
நீங்கள் கணினியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும்பொழுது, பிண்ணனியில் இம்மென்பொருள் இயங்கி உங்களுடைய கணினிக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது.
தேவையானோர் கீழிருக்கும் தரவிறக்கச் சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து, கணினியில் நிறுவிப் பயன்பெறுங்கள்.
குறிப்பு: Original Windows Operating System பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இம்மென்பொருள் பயன்படும்.
இம்மென்பொருளைத் தரவிறக்க : Download Microsoft Security Essentials
நன்றி: http://windows.microsoft.com

இந்த வைரஸ் எதிருப்பு மென்பொருள் உங்கள் கணினியை Virus, Spyware, மற்றும் Malicious Software களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கிறது.
மிகச்சிறந்த கட்டமைப்புடன், பயன்படுத்துவதற்கு எளிதான இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.
நீங்கள் கணினியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும்பொழுது, பிண்ணனியில் இம்மென்பொருள் இயங்கி உங்களுடைய கணினிக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது.
தேவையானோர் கீழிருக்கும் தரவிறக்கச் சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து, கணினியில் நிறுவிப் பயன்பெறுங்கள்.
குறிப்பு: Original Windows Operating System பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இம்மென்பொருள் பயன்படும்.
இம்மென்பொருளைத் தரவிறக்க : Download Microsoft Security Essentials
நன்றி: http://windows.microsoft.com
- தங்கம்பழனி
Tagged with:
microsoft security essentials
Wish you happy Friendship day
Author: Infomas | ஆகஸ்ட் 03, 2014 |
Wish you happy Friendship day
Please give your SUPPORT To My Pages...
http://infomaszz.blogspot.in/
https://www.facebook.com/infomaszz
Nokia செல்பேசியில் சில பயன்மிக்க ரகசிய குறியீடுகள்..!!
Author: Infomas | ஆகஸ்ட் 03, 2014 |
Nokia செல்பேசியில் சில பயன்மிக்க ரகசிய குறியீடுகள்..!!
|
|
உங்கள் செல்பேசியின் IEMI எண்ணை அறிய
|
*#06#
|
உங்கள் செல்பேசியின் Firmware Version ஐ அறிய
|
*#0000#
|
உங்கள் செல்பேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவர (Factory Settings)
|
*#7780#
|
உங்கள் தகவல்களை அழித்து கைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுருவதற்கு
|
*#7370#
|
Bluetooth முகவரியை அறிய (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்)
|
*#2820#
|
WiFi MAC முகவரியை அறிய (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்)
|
*#62209526#
|
Warrenty, Counter,Life Time தகவல்களை பெற
|
*#92702689#
|
EFR ஐ activate செய்ய (தரமான அலையை பெற.. பேட்டரி விரைவாக சக்தியை இழக்கும்).
|
*3370#
|
EFR ஐ Deactivate செய்ய (இதன் மூலம் சாதரண அலையை பெற முடியும். பேட்டரி சாதாரணமாக இயங்கும்.)
|
*3370#
|
செவ்வாய், 29 ஜூலை, 2014
ஆண்ட்ராய்ட் கிட்காட் 4.4
Author: Infomas | ஜூலை 29, 2014 |
ஆண்ட்ராய்ட் என்பது ஸ்மார்ட்போன்களின் இயக்கப் பயன்படும் இயங்குதளம். இது கூகிள் நிறுவனத்தாரின் தயாரிப்பு ஆகும்.
ஆண்ட்ராய்ட் பல்வேறு காலகட்டடங்களில் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பாக
கிடைத்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு புதிய பதிப்பிலும் முந்தைய பதிப்பில்
உள்ள குறைகளை களைந்து மேலதிக வசதிகளைப் பெற்றிருக்கும்.
அந்த வகையில் புதிய ஆண்ட்ராய்ட் 4.4 கிட்-காட் இயங்குதளம் தற்பொழுது மொபைல்களில் பயன்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது.
ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் சிறப்பு:
ஆண்ட்ராய்ட் 4.4. கிட்காட் பதிப்பின் முக்கியமான சிறப்பம்சமே மிகக்
குறைந்தளவு ரேம் (512 RAM) வசதி உள்ள ஸ்மார்ட் போன்களிலும் பயன்படுத்த
முடியும் என்பதே.
இதற்கு முன்பு வெளியான ஆண்ட்ராய்ட் பதிப்புகளைப் பொறுத்தவரை,
பயன்படுத்ததும் போன் புதியதாகவும், அதிக மெமரி வசதி கொண்டதாகவும் இருக்க
வேண்டும். ஆனால் இப்புதிய ஆண்ட்ராய்ட் கிட்காட் பதிப்பில் அவ்வாறில்லை.
அதனால் இப்புதிய பதிப்பை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வெகுவாக
அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மிக குறைந்தளவு மெமரி கொண்ட போன்களிலும், சமீபத்தில் வெளியாகி
பயனர்களை கவர்ந்த ஸ்மார்ட் வாட்ச், கூகிள் ஸ்மார்ட் கிளாஸ் போன்ற
உபகரணங்களிலும் இப்பதிப்பைப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் தகவல்கள்.
ஆண்ட்ராய்ட் 4.4. கிட்காட் – சிறப்பம்சங்கள்:
- ஓ.கே கூகிள் (OK Google): இந்த வசதியின் மூலம் Google Voice Application -ஐ இயக்கமுடியும். OK Google என்று சொன்னாலே போதும் இந்த அப்ளிகேஷன் செயல்பாட்டிற்கு கிடைக்கும். மொபைலை தொடவேண்டிய அவசியமே இல்லை.
- ஸ்மார்ட் காலர் ஐடி (Smarter Caller ID): ஸ்மார்ட் போனில் உள்ள கான்டாக்ட் லிஸ்டில் இல்லாத நம்பரிலிருந்து போன் அழைப்பு ஏதாவது வந்தால், ஏற்கனவே அந்த எண் கூகிள் மேப்பில் இருப்பின் அதைப்பற்றிய விபரங்களை காட்டும்.
- ஹேங்அவுட் அப்ளிகேஷன் (Hangout app): இந்த வசதியின் மூலம் ஏற்கனவே கூகிள் ஹேங் அவுட், கூகிள் டாக் மூலம் உங்களுக்கு நண்பர்கள் அனுப்பிய அரட்டை கச்சேரி SMS, MMSகளை ஆகியவற்றைப் பார்க்க முடியும்.
- வீடியோ ரெகார்டர் (Video Recorder): இந்த வசதியின் மூலம், மொபைல் ஸ்கிரீனை ரெக்கார்ட் செய்ய முடியும். மொபைலில் நாம் மேற்கொள்ளும் செயல்களை அப்படியே வீடியோவாக பதிவுசெய்துகொள்ள முடியும். அதாவது கணினியில் Screen Recording செய்வது போல…
- உணர்வுவெளிப்படங்கள் (Emoticons): கோபம், சிரிப்பு, துயரம் என நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தப் பல்வேறு வகையான படங்களைப் பயன்படுத்தும் வசதி இது.
- மிக குறைந்த ரேம் (512 MB RAM): மேலே சொன்னபடி மிக குறைந்த ரேம் வசதியில் இயங்கும் ஆண்ட்ராய்ட் மாடல் ஸ்மார்ட்போனிலும் இதைப்பயன்படுத்த முடியும். இப்புதிய பதிப்பில் ஆண்ட்ராய்ட் பின்னணியில் இயங்கும் பல்வேறு சேவைகளை நீக்கியிருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது.
உங்களது மொபைல்களில் ஆண்ட்ராய்ட் கிட்காட் பதிப்பைப் பயன்படுத்த முடியுமா என்பதைத் தெரிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யயவும்.
இந்த லிஸ்டில் இல்லாத மொபைல்களுக்கும் ஆண்ட்ராய்ட் பதிப்பை பெற
முடியும். அதற்கு அந்த மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்ட்ராய்ட் 4.4.
பயன்படுத்துவதைப் பற்றி அறிவிக்கும் வரை இப்பதிப்பை பயன்படுத்த முடியாது.
பொதுவாகவே மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் சமீபத்தில் வெளியிட்ட புதிய மாடல்
ஸ்மார்ட் போன்களுக்ககு மட்டுமே ஆண்ட்ராய்ட் 4.4. பயன்படுத்தும் வசதியை
அளிக்கும்.
சமீபத்தில் வெளியான கூகிள் நெக்சஸ் 5 மொபைல், Google Nexus 4, Google
Nexus 7, HTC One, Samsung Galaxy S4 போன்ற புதிய கிட்காட்டிற்கு முந்திய
ஆண்ட்ராய்ட் பதிப்பை பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளட்களுக்கு
இப்புதிய பதிப்பை பயன்படுத்த முடியும். அதற்கான அறிவிப்பு வெகு விரைவில்
வெளிவரும்.
இப்புதிய ஆண்ட்ராய்ட் பதிப்பைப் பற்றி கூகிள் சீனியர் வைஸ்
பிரசிடென்ட் சுந்தர் பிச்சை கூறியதாவது: “Now you have one version of the
operating system which will run across all versions of Android
smartphones. Google’s Android software kit-kat runs on 80 percent of the
world’s smartphones “.
நன்றி: அப்துல்பாசித் (பிளாக்கர் நண்பன்)
ஞாயிறு, 27 ஜூலை, 2014
இனி கூகிள் பிளஸிலிருந்து ட்விட்டருக்கு ட்விட் செய்யலாம்
Author: Infomas | ஜூலை 27, 2014 |
ஒவ்வொரு முறையும் நாம் Google + மற்றும் twitterல் தனித் தனியாக தான் செய்திகளை பதிவு செய்கிறோம். ஆனால் இனி Google + பயனாளர்கள் Google +ல் இருந்தே எளிதாக tweet செய்யலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு நீட்சி உள்ளது. நண்பர்கள் வட்டத்தை சேர்ப்பதிலும் மதிப்பு கூட்டு சேவைகள் கொடுப்பதிலும் Google + தற்போது பல புதுமைகளை செய்து வருகிறது. அந்த வகையில் இனி Google +ல் இருந்தே எளிதாக tweet செய்ய ஒரு நீட்சி வந்துள்ளது. இத்தளத்திற்கு சென்று Get Google +, Tweet என்ற button அழுத்தினால் நம் உலாவியில் எளிதாக நிறுவலாம்.
இனி நம் உலாவியில் Google + திறந்தால் முகப்பில் twitter icon இருக்கும்.இதை அழுத்தி நாம் எளிதாக tweet செய்யலாம், ஒரே நேரத்தில் tweet செய்யப்படும் நம் செய்திகள் twitter மற்ற்றும் Google +லும் tweet செய்யப்பட்டிருக்கும். Internet Explorer, Mozilla Firefox மற்றும் Google Chrome உலாவிகளுக்கும் துணைபுரிகிறது.
இணையதள முகவரி:http://crossrider.com/install/529-google-tweet
823 தொலைக்காட்சிகளை இணையத்தில் இலவசமாக காண . . .
Author: Infomas | ஜூலை 27, 2014 |
இணையதளங்களில் டிவி நிகழ்ச்சிகளைப்
பார்க்க பல இணைய த
ளங்கள் இருந்தாலும்
சில தளங்கள் ஆன் லைன் மூலம் பார்க்க கட்டண ம் வசூலிக்கின்றனர் ஆனால் எந்த
கட் டணமும் இல்லாமல் இலவசமாக ஆன் லைன் மூலம் உலக நாடுகளில் இருக் கும் 823
டிவி சேனல்களையும் பார்க்க லாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.நம்
கணினி மூலம் உல கத்தில் அனைத்து நாடுகளிலும் பல மொழிகளிலும் இருக்கும் 823
டிவி சேனல்களையும் ஒரேதளத்தில்
இருந் து கண்டு ரசிக்கலாம் இதைப்பற்றித்தா ன் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://www.tvweb360.com/பிரத்தியக சாப்ட்வேர்களோ அல்லது இன்டர்நெட் இல்லாமல் வோர்ட் டாகுமென்டை “PDF” ஆக மாற்ற
Author: Infomas | ஜூலை 27, 2014 |

*********************************************************************************
இன்று PDF என்று சொல்ல படுகின்ற “Portable Document Format “ என்னும் வகை கோப்புகளை நாம் வெகுவாக பயன்படுத்துகிறோம் .நாம் செய்த ஒரு டாகுமெண்டை வேறு யாரும் திருத்தம் செய்யாமல் இருக்க “PDF“ வகை கோப்புகள் நமக்கு உதவியாக இருக்கிறது .
சரி இப்போது ஒரு டாகுமெண்டை Word இல் தட்டச்சு செய்து முடித்த பின்,அதை PDF ஆக save செய்ய முடியுமா என்றால் ? முடியும் .இதற்கென பிரத்தியக சாப்ட்வேர்களோ அல்லது இன்டர்நெட் இணைப்போ தேவை இல்லை .
1.கீழே கொடுக்கபட்டுள்ள லிங்குக்கு செல்லுங்கள்
2.பிறகு “ Download ” என்று கிளிக் செய்தால்,அடுத்த பக்கத்திற்கு செல்லும்
3.அங்கு “No thanks and Continue” கிளிக் செய்தால்,915 kb அளவுள்ள ஒரு சிறிய Exe தரவிறக்கம் செய்யப்படும் .
4.தரவிறக்கம் செய்யப்பட்ட Exe இன்ஸ்டால் செய்து முடித்த பின் வோர்ட் 2007 அல்லது அதற்கு மேல் உள்ள பதிப்புகளை திறந்துகொள்ளுங்கள்.
5.இப்போது “Save As” என்ற option சென்றால் PDF என்று வரும் .அதை கிளிக் செய்தால் போதும் .உங்கள் வோர்ட் டாகுமென்ட் “PDF” ஆக மாறிவிடும் .
http://www.microsoft.com/en-in/download/details.aspx?id=9943
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் ஷேர் & லைக் செய்யுங்கள்
சனி, 26 ஜூலை, 2014
New Social Network--www.bubblews.com
Author: Infomas | ஜூலை 26, 2014 |
பேஸ்புக்கிறகு போட்டியாக வந்துள்ள புதிய வலைப்பின்னல் சேவை பபில்யூஸ் http://www.bubblews.com பற்றி
தெரிந்து கொள்ளுங்கள். செல்வாக்கில் பேஸ்புக் பக்கம் நெருங்க
முடியாவிட்டாலும் கூட கருத்தாக்கத்தில் இந்த தளம் பேஸ்புக்கிற்கு சவால்
விடுகிறது.
அதாவது தனக்கு வரும் விளம்பர வருவாயை பயனாளிகளுடன் பகிர்ந்து கொள்வதாக
சொல்கிறது. இந்த தளத்தில் உறுப்பினராகி கருத்துக்களை பகிர்ந்து கொண்டால்
அதன் மீது வரும் ஒவ்வொரு கிளிக்கிற்கும் , கிடைக்கும் ஒவ்வொரு
பின்னுட்டத்திற்கும் ஒரு பென்னி ( காசு) தருவதாக் சொல்கிறது. எல்லாம்
சேர்த்து 50 டாலர் வந்தவுடன் அனுப்பி வைக்கப்படுமாம். நிச்சயம் இது ஒருவரை
பணக்காராரக ஆக்காது, ஆனால் ஒரு சில டாலர்கள் வர வாய்ப்புண்டு.
இணைய உலகில் இப்போது இந்த தளம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதே போல போன்சோமீ https://play.google.com/stor/apps/details?id=com.bonzovideollc.BonzoVideo&hl=en
எனும்
செயலி வீடியோ பார்த்தால் ,பகிர்ந்து கொண்டால் விளம்ப்ர வருவாயை பகிர்ந்து
கொள்வதாக சொல்கிறது. இவை அள்ளிக்கொடுக்காமல் போகலாம், ஆனால் பயனாளிகளுடன்
வருவாய் பகிர்வு என்பது இணையவாசிகளை வைத்து பணம் சம்பாதிக்க மட்டுமே
நினைக்கும் நிறுவனங்களில் இருந்து மாறுபட்ட கருத்தாக்கம் தானே. பார்க்கலாம்
இவை எந்த அளவுக்கு வரவேற்பு பெறுகின்றன என்று!.
நன்றி--விகடன்
பேஸ்புக் பற்றி வியக்க வைக்கும் புள்ளி விவரங்கள்.
Author: Infomas | ஜூலை 26, 2014 |
மொபைலை நம்பினோர் கைவிடப்படார்.
- முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் நிறுவனர் மார்க்
ஜக்கர்பர்கிடம் கேட்டால் இப்படி தான் சொல்வார். அதுவும் சந்தோஷமாகவே
சொல்வார். ஏனெனில் மொபைல் மூலம் விளம்பர வருவாய் தான் பேஸ்புக்கிற்கு
அள்ளிக்கொடுத்திருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட பேஸ்புக்கின் இரண்டாம்
காலாண்டு நிதி நிலை முடிவுகள் படி பேஸ்புக்கின் வருவாய் 2.91 பில்லியன்
டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டின் இணையான காலாண்டு வருவாயான 1.81 பில்லியன் டாலரை விட இது
61 சதவிதம் அதிகம் என்பது மட்டும் அல்ல, இதில் 62 சதவீதம் அதாவது 1.66
பில்லியன் டாலர் மொபைல் மூலமான விளம்பர வருவாயாகும். ஆக மொபைல்
வாரிக்கொடுத்ததால் பேஸ்புக் வருவாயை அள்ளியிருக்கிறது.
இதில் விஷேசம் என்ன என்றால், பங்குச்சந்தையால் கணிகப்பட்ட வருவாயை விட
பேஸ்புக்கின் வருவாய் அதிகமாக இருப்பது தான். விளைவு பேஸ்புக்குன் பங்கு
விலையும் உயர்ந்திருக்கிறது. காலாண்டு முடிவு வெளியான அன்று பேஸ்புக்கின்
பங்கு விலை 74 டாலருக்கு மேல் இருந்தது. இது வெறும் எண்ணிக்கை அல்ல; பங்கு
விலை அடிப்படையில் பேஸ்புக் நிறுவனத்தின் சந்தை மதிப்பை கணக்கிட்டால் 190
பில்லியன் டாலர் வருகிறது.
இது மின்வணிக முன்னோடியான அமேசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பான 165 பில்லியன் டாலரை விட அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஒரு
கட்டத்தில் பழைய ஜாம்பவனான ஐ.பி.எம் நிறுவனத்தின் சந்தை மதிப்பையும்
பேஸ்புக் மிஞ்சியதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு ஐ,பி.எம் மீண்டும்
முந்திவிட்டது.ஆனாலும் கூட ஆப்பிள், கூகிள் மற்றும் ஐ.பி.எம்
நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தில் பேஸ்புக் இருக்கிறது.
அது மட்டும் அல்ல, இந்த ஒரு நாள் பங்கு உயர்வு பேஸ்புக் நிறுவனர்
ஜக்கர்பர்கின் 1.6 பில்லியன் டாலர் அளவு உயர்த்தி 33 பில்லியன் டாலருக்கு
கொண்டு சென்றது. ஒரு கணக்கு படி கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஜக்கர்பர்க் 16
வது இடத்தில் இருக்கிறார். கூகிள் நிறுவனர்கள் செர்ஜி பிரயன் மற்றும் லாரி
பேஜ் 17 மற்றும் 18 வது இடத்தில் இருக்கின்றனர். ஆக ஜர்க்கர்பர்க் , கூகிள்
நிறுவனர்களையும் முந்தியிருக்கிறார். அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசுக்கு 20
வது இடம். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் (கேட்ஸ்) தான் முதலிடத்தில்
இருக்கிறார். ஆனால் டேவிட் கிர்க்பேட்ரிக் என்பவரோ , ஜக்கர்பர்க் உலகின்
முன்னணி கோடிஸ்வராரக வருவர் என கணித்திருக்கிறார்.
இவர் பேஸ்புக் தொடர்பான தி பேஸ்புக் எபெக்ட் புத்தகத்தை எழுதியவர்.
இருந்தும் கேட்சை முந்த பேஸ்புக் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.
பேஸ்புக்கின் சந்தை மதிப்பு 190 பில்லியன் டாலர் உயர்ந்திருப்பதை
சுட்டிக்காட்டி, ஆப்பிள் நிறுவனம் இந்த நிலையை அடைய பல ஆண்டுகள் ஆனது,
கூகிளுக்கு 5 ஆண்டுகள் ஆனது பேஸ்புக்கோ இரண்டு ஆண்டுகளில்
சாத்திதிருக்கிறது என்று வர்ணிக்கப்படுகிறது.
சரி, இப்போது பேஸ்புக்கின் மொத்த பயனாளிகள் என்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
1.32 பில்லியன் !. ஜூன் மாத கணக்கு படி தினமும் பேஸ்புக்கை 829
மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். அமெரிக்கர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு
40 நிமிடம் பேஸ்புக்கில் செலவிடுகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
செல்போனில் இருந்து 654 மில்லியன் பேர் தினமும் ஒரு முறையேனும் பேஸ்புக்
உள்ளே நுழைகின்றனர். வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக பேஸ்புக் புதிய
வழிகளை தேடிக்கொண்டிருக்கிறது. வாட்ஸ் அப்பை வளைத்து போட்டது, மெய்நிகர்
நிறுவனமான ஆக்குலஸ் ரிப்டை பெருந்தொகைக்கு வாங்கியது எல்லாம் இதற்காக தான்.
இவை தவிர ஆளில்லா விமாங்கள் மூலம் உலகில் இணையம் இல்லா பகுதிகளுக்கு
இணையத்தை கொண்டு செல்வது போன்ற திட்டங்களையும் பேஸ்புக் வைத்திருக்கிறது.
நன்றி---விகடன்.com
|
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ அல்லது யாரேனும் ஹாக் செய்து விட்டாலோ நம் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை என்றால் நாம் நம் ஈமெயி...
-
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வள...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...