பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 1 ஜனவரி, 2020

எலுமிச்சை துண்டுகளை தூங்கும் போது வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தூங்கும் போது பக்கத்தில் #எலுமிச்சை துண்டுகளை வையுங்கள்! நடக்கும் அதிசயம் இதோ!

எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அல்லவா?
அந்த வகையில் அதிக மருத்துவ சக்தி கொண்ட எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால் நடக்கும் அதிசயங்கள் இதோ!

எலுமிச்சை துண்டுகளை தூங்கும் போது வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

► சிலருக்கு இரவில் தூங்கும் போது மூக்கடைப்பு பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையை தடுக்க, இரவில் படுக்கும் போது, ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால், மூக்கடைப்பு நீங்கி, சுவாசிக்கும் திறன் மேம்படும்.
► எலுமிச்சை காற்றில் உள்ள அசுத்தத்தை உறிஞ்சி, சுத்தமான காற்றை வழங்குவதுடன், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உறிஞ்சி, சுத்தமான காற்றினை சுவாசிக்க உதவுகிறது.
► இரவில் படுக்கும் போது அருகில் ஒரு துண்டு எலுமிச்சையை வைத்துக் கொண்டு தூங்கினால், அதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால் உடல் மற்றும் மனம் அமைதியாகி, மன அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படும்.
► எலுமிச்சையில் இருந்து வெளிவரும் நறுமணம் நமது உடம்பில் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீராக்குகிறது. எனவே படுக்கும் போது எலுமிச்சை துண்டுகளை வைத்திருப்பது மிகவும் நல்லது.
► எலுமிச்சை ஒரு நல்ல இயற்கை பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. ஏனெனில் இந்த எலுமிச்சை துண்டை அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதால், அதிலிருந்து வரும் நறுமணம், பூச்சிகள் நம்மை அண்டாமல் தடுக்கிறது.
► இரவில் படுக்கும் போது ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால், இரவு முழுவதும் அதன் காற்றினை சுவாசித்து, மறுநாள் காலையில் உடல் புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பதை உணரக்கூடும்.
► எலுமிச்சை பழத்தில் இருந்த வெளிவரும் நறுமணம், மூளையில் செரடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, மனநிலையை சந்தோஷமாகவும், நேர்மறையான எண்ணங்களுடனும் இருக்க உதவுகிறது.
(

நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி.

நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார்.  விடிவில்லை. 

முதல்வர் ராஜாஜியிடம் முறையிட்டார்.  
ஒன்றும் நடக்கவில்லை. 
காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார்.  உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர். 

மிக விரிவான விஞ்ஞானபூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார். 

தில்லி சென்று பிரதமர் நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார். 

காகிதங்களைப் புரட்டியவர் கையை விரித்தார் ..

" இதெல்லாம் சாத்தியமில்லை.." 

"ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர் அனுபவமுள்ள ஒரு பொறியாளர். இந்த திட்டத்தை மறுக்க இரண்டு காரணங்கள்தான் உள்ளன. 

ஒன்று இந்த நாட்டில் பொறியியல் படிப்பு தரமாக இல்லை.  அல்லது இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தகுதி அரசியல்வாதிகளான நமக்கு இல்லை.." 

கேம்ப்ரிட்ஜில் படித்த அறிவாளியை கிழிகிழியென கிழித்துப் போட்டார் கைநாட்டு பேர்வழி, 

கை சுத்தம் .. பிரதமராவது, பெரிய தலைவராவது ,. ..

( உள்துறை செயலாளரைப் பார்த்து நடுங்குகிறவர்கள், ஊழல் செய்து மாட்டிக் கொண்டு கைகால் பிடித்துவிடும் திராவிடான்களுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை ) 

அடுத்தமுறை பொறியாளருடன் நேருவைச் சென்று சந்தித்தார், விளக்கினார். முதலீடு 150 கோடி என்றார் 

"திட்டம் ஓகே.. நிதியில்லையே.. தமிழக அரசு நடத்தலாம்..." 

"அரசின் ஆண்டு வருமானம் 150 கோடி .. 
எங்களால் எப்படி...." 

" நிலக்கரியை வெளியே கொண்டுவர மூன்றாண்டுகள் ஆகும் என்கிறார். ஆண்டுக்கு 50 கோடி போடுங்க..."

முடிவெடுத்தார் தமிழக முதல்வர் தமிழர் காமராசர். என்ன ஒரு மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம். தமிழ்நாடுதானே காமராசருக்கு குடும்பம். 

1954 ல் 50 கோடி ஒதுக்கினார். பணிகள் தொடங்கப்பட்டன. 

அடுத்த வருடம் 50 கோடி. 

1956 ல் கடைசி தவணையைக் கொடுத்துவிட்டு தவிக்கத் தொடங்கினார். 

பிள்ளை பெண்டாட்டிகளுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற இன்றைய திராவிட கவலையல்ல. 

மக்கள் வரிப்பணமாச்சே.. மத்திய அரசு கேள்வி கேட்குமே ...! 

சுரங்கப் பணிகள் முடிவடைந்து, நிலக்கரியை வெட்டியெடுத்து வெளியே கொண்டு வரும் நாளில்.... 

முதல்வர் நெய்வேலி வந்தார். சுரங்கத்தில் நின்றார். 

அதோ.. 

நீரும் நிலக்கரியும் கலந்து வழியும் கனிம வளத்தை தலையில் சுமந்தபடி தொழிலாளிகள் வருகின்றனர். 

ஓடினார் முதல்வர்.... 

மகனுக்கும், மத்தியில் இலாக்கா வாங்கவா.. பேரனுக்கு சலுகை கேட்டா..? 

தமிழ் மண்ணின் வளம்.. தமிழர் நலம் அல்லவா தலையிலிருந்து கறுப்பு தங்கமாக வழிகிறது ? 

தாவியணைத்தார் அந்த தொழிலாளியை... கரியை அள்ளி கைகளால் முகர்ந்தார். ஆனந்தக் கூத்தாடினார். 

வெள்ளை கதர் சட்டை , கறுப்பாகி மின்னியது. 

இன்று ஆண்டுக்கு லாபம் 2000 கோடிகள்...!

இந்த பதிவை படித்தபோது என்னையுமறியாமல் என் கண்கள் நனைந்தன.

இப்படியும் ஒரு மனிதர் இவரன்றி பிறந்ததுமில்லை இனி பிறக்கபோவதுமில்லை😢
ஆனால் இருக்கும் வரை அவர் அருமை தெரியவில்லை. 
அண்டங்காக்கை என்று அவரது தோற்றத்தை ஈனத்தனமாக கிண்டலடித்த பேடிகள்! ஸ்விஸ் பேங்கில் பணம் வைத்துள்ளார் என நாகூசாமல் பொய் சொன்ன பொறுக்கிகள்!! இன்றுவரை அனுபவிக்கின்றோம் அந்த பாவத்தை!

படித்த பதிவு பகிரவும்🙏

அம்மா ! ! ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ அம்மா ஒரு வரம் ! !

"வீட்ல சும்மா தான இருக்க"
எல்லோரும் கூறுகின்ற இந்த வார்த்தையை இப்பொழுது குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..

" நீ சும்மா தான மா இருக்க..
இது செஞ்சி குடுத்திடு மா..."
'எல்லாரும் சொல்றது போல ஒரு நாள் சும்மா இருந்தா என்ன'ன்னு தோனுச்சு.
வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பிட்டாங்க.

அவரவர்க்கு தேவையான உணவுகளை சமைத்து கொடுத்து விட்டேன்.
இன்றைக்கு சும்மா இருப்போம் என்ன தான் ஆகும் பாப்போம்.
மாலை கணவரும், பசங்களும் வீட்டிற்கு திரும்பினார்கள்.

"அம்மா பசிக்குது மா..
எதாவது எடுத்துட்டு வா மா,"
" எனக்கும் தலைவலிக்குது ஒரு காபி போட்டு தா மா", என்று சொல்லிக் கொண்டே உள்ள நுழைந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
வாசல் முழுவதும் குப்பையால் நிறைந்து இருக்கிறது.

வீட்டின் உள்ளே சென்றால் காலையில் செல்லும் பொழுது இரைத்த பொருட்கள் எல்லாம் அனைத்தும் கிழே இருக்கின்றன.
காலையில் துடைத்த ஈரமான துண்டுகள் அனைத்தும் நாற்காலியில் கூளமாக இருக்கின்றன.

ஷுபாலிஷ் செய்யும் டப்பா திறந்தே இருக்கு.
தலைக்கு தடவும் ஜெல்லும் ஓபன் பண்ணி இருக்கு.
பசங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

அவர்கள் புத்தகங்கள் ஆங்காங்கே இருக்கின்றன.
விளையாட்டு பொருட்கள் இரைந்து கிடக்கின்றன.
சீருடைகள் தோய்க்காமல் அப்படியே போடப்பட்ட இடத்தில் இருக்கின்றன.
இவ எங்க தான் போனான்னு சமையல் அறைக்குள் சென்று பார்த்தால், பாத்திரங்கள் கழுவாமல் நாற்றம் அடித்து கொண்டு இருக்கின்றன.

'எங்க தான் போனாலோ.. உடம்பு சரி இல்லையோ?'
ரூமிற்கு சென்றால், இரவு உபயோகபடுத்திய தலையணை, போர்வை எல்லாம் மடித்து வைக்காமல் இரைந்து கிடக்கின்றன.
'சரி பாத்ரூமில் இருப்பாள் கதவு தட்டி பாக்கலாம்'னு திறந்தா, காலையில் போட்ட சோப் டப்பா முழுவதும் தண்ணீரில் முழுகிக் கரைந்து போய் தரை முழுவதும் கொழ கொழனு ஆகிடுச்சு.

அழுக்கு துணிகள் அசிங்கமாய் தொங்கி கொண்டு இருந்தன.
ஒன்றும் புரியாமல் பதற்றத்துடன் மாடியில் உள்ள அறைக்குள் சென்றார்கள்.
கையில் ஒரு நாவல் புத்தகம் ஒன்றுடன்,  நாற்காலியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்தி கொண்டு இருந்தாள்.

"என்னடி ஆச்சு உனக்கு ?
வீடு என் இப்படி இருக்கு? அம்மா என்ன ஆச்சு மா உனக்கு?"
பதட்டமான கேள்விகள்.
"நீங்க எல்லோரும் தான் சொல்லிட்டு போனீங்க, 'வீட்ல சும்மா தான இருக்க'ன்னு.
அதான் சும்மா இருக்கலாம்னு!!
கணவனுக்கு தன் தவறு உணர்ந்தது.
இந்த வார்த்தையை சொல்வது தவறு.
அவ எதுவும் செய்யவில்லை என்றால் வீடு வீடாகவே இருக்காது.
"என்னை மன்னித்து விடு" என்று கூறினார்.
பிள்ளைகளும் தம் தவறை உணர்ந்து "அம்மா மன்னிச்சிடு மா.இனி அப்படி சொல்ல மாட்டோம். நீ இல்லைனா வீடு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுகிட்டோம்."

நான் சொல்வதால் தான் என் பசங்களும் இந்த வார்த்தையை அவ கிட்ட சொல்லி கஷ்டபடுத்தறாங்கனு அவருக்கு புரிந்தது.
இனி எப்பொழுதும் தன் மனைவியை பிள்ளைகளிடமோ, வெளி ஆட்களிடமும் தாழ்த்தி பேசமாட்டேன் என்று மனதிற்குள் ஒரு முடிவு எடுத்தார்.

"நீ இங்கயே இரு நா போய் உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன்" கணவர் கிளம்பினார்.

பசங்களும் "நாங்க உனக்கு ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரோம் மா நீங்க வெயிட் பண்ணுங்க மா".

"யாரும் எதுவும் செய்ய வேண்டாம். எல்லோரும் போய் டிவி பாருங்க. நான் பத்து நிமிடத்தில் உங்களுக்கு கேசரி செய்து தரேன் சாப்பிடுங்க" என்றாள். 
மனதில் சந்தோஷத்துடன் சமையல் அறைக்கு சென்றாள்.
இது தான் அம்மா ! ! ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ அம்மா ஒரு வரம் ! !

Tribute to all mother who stays back in the house as a backbone to the family. — with

இயற்கை ஒருபோதும் தவறு செய்வதுமில்லை. தன் கடமையைச் செய்யத் தவறுவதுமில்லை.

#கொஞ்சம் இதை முழுவதுமாக படியுங்கள்

இப்படிச் சேகரித்தால் 10 வருடங்கள் ஆனாலும் மழைநீர் கெடாது!" - `நமக்கு நாமே’ ஐடியா சொல்லும் இளைஞர்

``வருங்காலத்தில் சாப்பிட நல்ல சாப்பாடு கிடைக்கும். எல்லோரும் பயணிக்கவும் சொந்த கார் இருக்கும். ஆனால், பருக சொட்டு நீர் கிடைக்காது" என்று அபாயச் சங்கை ஊதத் தொடங்கியிருக்கிறார்கள் உலகளாவிய சூழலியாளர்கள். அதற்கு, அச்சாரம் சொல்லும்விதமாக தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் ஒரு சொட்டு நீர்கூட இல்லாமல் மக்கள் வெளியேறும் கொடுமை நடக்கிறது. இந்தியாவிலும் அந்த நிலை வரும் காலம் வெகுதூரமில்லை. இந்நிலையில், ``மழைநீரைச் சேமித்தால் பத்து வருடங்கள் வரை அதை வைத்துப் பருகலாம். இங்கே ஏற்படவிருக்கும் குடிநீர்ப் பஞ்சத்தைத் தடுக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி" என்று அடித்துச் சொல்கிறார் கருப்பசாமி. நம்மாழ்வாரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான இவர், சிவகாசியில் உள்ள தனது வீட்டில் மழைநீர் சேகரிப்பைச் செய்திருக்கிறார். 

கரூர் மாவட்டத்தில் உள்ள நம்மாழ்வார் துயில் கொள்ளும் வானகத்துக்கு வந்த கருப்பசாமியைச் சந்தித்துப் பேசினோம்.

`` `இயற்கை ஒருபோதும் தவறு செய்வதுமில்லை. தன் கடமையைச் செய்யத் தவறுவதுமில்லை. மனிதர்கள்தாம் இயற்கைக்கு எதிராகத்
கருப்பசாமி
தொடர்ந்து செயல்பட்டு, பின்பு பிரச்னை வரும்போது இயற்கைமீது குறைசொல்லும் தவற்றைச் செய்கிறார்கள்'ன்னு அய்யா நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அதனால்தான், நான் அவரை முதன்முறையாகச் சந்தித்த 2009 ம் வருடத்திலிருந்து இயற்கையை விட்டு விலகாத, இயற்கையைச் சிதைக்காத வாழ்வை வாழ்ந்து வருகிறேன். விருதுநகர் மாவட்டம், சிவகாசிதான் எனக்குச் சொந்த ஊர். வருங்காலத்தின் மிகப்பெரிய பிரச்னையா உலகம் முழுக்க ஏற்படவிருப்பது தண்ணீர்ப் பிரச்னைதான். அதனால்தான், எனது வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பைக் கட்டமைத்துள்ளேன். 2013 ம் ஆண்டு சிவகாசியில் வானகம் மற்றும் தேன்கனி, இயற்கை வாழ்வியல் அமைப்பினர் ஒருங்கிணைப்பில் நம்மாழ்வார் ஐயா தலைமையில் இயற்கை வாழ்வியல் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் திருவாரூர் `மழைநீர்' வரதராஜன் ஐயா அவர்களும் கலந்துகொண்டார். அப்போது அவர் வீட்டின் மேற்கூரையில் பெய்யும் மழைநீரைச் சேகரிப்பது குறித்து தனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்தார்.

அப்போது அவர், `தண்ணீர்ப் பிரச்னை என்று சொல்வது அறியாமை. இயற்கை நமக்கு அளவில்லா தண்ணீரைக் கொடுத்திருக்கிறது; கொடுத்துக்கொண்டும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தும் அளவுக்கு மனிதனின் அறிவும் அறிவியலும் பிரமாண்டமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், அதைச் செயல்படுத்தும் அளவுக்கு நம்மிடம் பொறுமை இல்லை. இது மட்டும்தான் இப்போதைய பிரச்னை' என்றார் வரதராஜன். எனக்குச் சுருக்கென்று உறைத்தது. எவ்வளவு பெரிய உண்மை. அதோடு அவர், `வெளிக்காற்றும், வெப்பமும் உள்ளே செல்லாமல் இருந்தால்10 ஆண்டுகளானாலும் இந்தத் தண்ணீர் கெட்டுப்போகாது'ன்னு சொன்னார். அப்போதே நான் வீடு கட்டும்போது, மழைநீர் சேகரிப்பு அமைப்பை அமைக்கணும்னு முடிவு பண்ணினேன். எல்லோரையும் மழைநீர் அமைப்பை அமைக்கச் சொல்லி வலியுறுத்தத் தொடங்கினேன். ஏனென்றால், தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிக்க வேண்டிய நிலைமை வரும் என்று 20 வருடங்களுக்கு முன்பு யாரேனும் நினைத்துப் பார்த்திருப்போமா?. மழை நீர் சேகரிப்புதான் இதற்குச் சரியான மாற்று. சில ஆயிரங்கள் செலவழித்து மழை நீரைச் சேகரித்தால், வருங்காலத் தலைமுறைக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச்சென்ற பெரும் மனத் திருப்தி கிடைக்கும்.

கேப்டவுன் வெறும் ஆரம்பம் மட்டும்தான். உலகின் பல பெரு நகரங்களும் இந்த நிலைக்குச் சில வருடங்களில் வரும். இந்தத் தகவல் பலரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இனி இயற்கையை அழிப்பதைத் நிறுத்திவிட்டு, மழைநீரை முறையாகப் பயன்படுத்தி இயற்கைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான், நான் சிவகாசியில் கட்டியுள்ள வீட்டில் மழைநீர் சேமிப்பு அமைப்பை அமைத்து முடித்துள்ளேன். 7000 லிட்டர் கொள்ளளவு கொண்ட அமைப்பு இது. சிறிதளவும் காற்று புகாதவாறு அமைத்துள்ளதால், பத்து வருடங்கள் கூட இதில் சேமிக்கப்படும் தண்ணீர் கெட்டுப் போகாது.

எங்கள் வீட்டில் செய்துள்ள அளவின் அடிப்படையைப் பகிர்கிறேன். வீட்டின் மேற்கூரையின் அளவைப் பொறுத்து, ஒரு வருடத்துக்கு வீட்டுக்குத் தேவையான மழைநீரைச் சேகரிப்பதற்கான பெரிய கொள்ளளவு தொட்டிகள் தயாரித்துக்கொள்ளவும். பின்னர்..

1. வடிகட்டிக்கான தொட்டியை, 4 முதல் 5 தட்டுகள் ( சல்லடையைத் தாங்கும் தாங்கிகள் வைக்க ) இருக்குமாறு செய்து கொள்ளவும். அதன் உயரம் குறைந்தது 1 அடியாக இருக்க வேண்டும்.
2. அதன்பின், துருப்பிடிக்காத சல்லடையை ( பிளாஸ்டிக்) வைத்து, அதன் மேல் வடிகட்டி வலை ஒன்று ( பிளாஸ்டிக் கொசுவலை அல்லது நைலான் சல்லடை) வைத்துக் கொள்ளவும்.
3. அதன் மேல் சிரட்டைக்கரித் துண்டுகளை (Activated Carbon) குறைந்தது 4 அங்குலம் அளவுக்கு இட்டு நிரப்பிக் கொள்ளவும்.
4. பின் அடுத்த தட்டில் மறுபடியும் சல்லடையை வைத்து, அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து மறுபடியும் 4 அங்குலம் அளவுக்குக் கூழாங்கற்கள், ஜல்லிக் கற்கள் வைத்து நிரப்பவும்.
5. அதன் பின் அடுத்த தட்டில் மறுபடியும் சல்லடையை வைத்து அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து மறுபடியும் 4 அங்குலம் அளவுக்கு ஆற்று மண் வைத்து நிரப்பவும்.
6. கடைசித் தட்டில் சல்லடையை வைத்து, அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து விட்டால் முடிந்தது வேலை.
7. அதன் மேல் மழை நீர் வரும் குழாயைச் சிறு சிறு துவாரங்கள் இருக்குமாறு தயார் செய்யவும். இதன் மூலம் தண்ணீரின் வேகம் அதிகரித்தால், தண்ணீர் ஓரிடத்தில் விழுந்து மண் அரிப்பு ஏற்படாமல், பரவலாகத் தண்ணீர் வந்து வடிகட்டப்படும்.
8. வெளிக்காற்றும், வெப்பமும் உள்ளே செல்லாமல் மழைநீர் சேமிக்கப்படும் தொட்டியை வடிவமைத்தோமேயானால், 10 ஆண்டுகளானாலும் இந்தத் தண்ணீர் கெட்டுப்போகாது.

இந்த முறையில்,தண்ணீர்ப் பற்றாக்குறையை நமக்கு நாமே செலவில்லாமல் தீர்த்து, ஆரோக்கியமான குடிநீரை நம் எதிர்கால சந்ததிகளுக்கு உறுதிப்படுத்துவோம். இனி நம்மாழ்வார் ஐயா கூறியபடி, தண்ணீரை நிலத்தில் தேடாமல் வானத்தில் தேடுவோம்.
அதுதான், எதிர்காலத்தில் மிரட்டவிருக்கிற குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரே வழி. வீட்டுக்கு வீடு இந்த அமைப்பை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று முடித்தார்.

முழங்கால் வலிக்கு இத பண்ணுங்க - நல்ல பதிவுகளை பகிர்வோம்

வைரம் #பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று #போகர் கூறினார்.
உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!

#முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்....
எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ......
பிரண்டையில் உள்ள மிகையான #சுண்ணாம்பு சத்து(#கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ......

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....
இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....
நல்ல பதிவுகளை பகிர்வோம்

நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.

நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரியவரும், அதிர்ச்சி..?

பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.
சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது.

அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.

நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்
அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும்.
இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணபடுத்தி உள்ளனர்

எவ்வாறு செய்யலாம்..?

காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பாருங்கள். அறிவியல் ரீதியாக என்ன நடக்கிறது..?

அந்த எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருள்..அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அதை குணபடுத்த பார்க்க வேண்டும்..

அதுவே மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் உங்களுக்கு பித்த நோய் இருப்பதாக பொருள்..

சிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப்போல் அங்கொன்று இங்கொன்றாக நின்றுகொண்டிருந்தால் கபம் அதிகமாக இருக்கிறதென்று பொருள்.

அதேபோல் எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் நோய் விரைவில் குணமடையும் என்பதாக பொருள்
எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாத் தாமதமாகும்.

உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுப்பது நல்லது
அதுவே எண்ணெய்த்துளி சிதறினாலோ சிறுநீருக்குள் அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த முடியாது.மிகவும் சிரமமான நிலை என்று அர்த்தம்..
நன்றிகளும்

பிரியங்களும்.

எது சிறந்த ஸ்நாக்ஸ் தெரியுமா?

சாப்பிடும் அரைமணி நேரம் முன்னரும் சாப்பிட்டு அரைமணி நேரம் பிறகும் கடலைமிட்டாய் சாப்பிட்டால் உமிழ்நீர் நன்கு சுரக்கும்

எது சிறந்த ஸ்நாக்ஸ் தெரியுமா?

வணக்கம் இன்று ஸ்னாக்ஸ் என்ற பெயரில் எதை எதையே வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் அது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று கூட யோசிப்பதில்லை! அதுமட்டுமல்ல முந்திரி பாதாம் பிஸ்தா இவற்றில்தான் சத்து அதிகம் என்றும் நினைக்கின்றோம். உண்மையில் உடலுக்கு அனைத்து நன்மைகளையும் அள்ளி தரும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய எளிய விலை குறைவான ஸ்னாக்ஸ் ஒன்று உள்ளது. அது நம்ம கடலைமிட்டாய் தான்.

இதில் கடலையும் வெல்லமும் சேர்ந்து ஒரு அருமையான சுவையான மற்றும் பல மருத்துவ நன்மைகளை நமக்கு அள்ளிக் கொடுக்கிறது. தொடர்ந்து இறுதிவரை பாருங்கள் உங்களுக்கே புரியும்.

பொதுவாக கடலையில் பித்தம் இருந்த போதும் அதனுடன் வெல்லம் சேர்க்கப்படும் பொழுது கடலை கூறிய பித்த சேர்க்கையை சீர் செய்துவிடும். அதுமட்டுமல்ல கடலையும் வெல்லமும் சேர்ந்து புரதம் இரும்பு செலினியம் மற்றும் பல சத்துக்களை கொண்ட ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் ஆக உருப்பெறுகிறது.

பொதுவாக கடலை மிட்டாயில் சேர்க்கப்படும் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட் நார்ச் சத்தும் கரையும் நல்ல கொழுப்பு

புரோட்டீன்
வைட்டமின்கள்
இரும்புச்சத்து
கால்சியம்
துத்தநாகம்
மாங்கனீஸ்
பாஸ்பரஸ்
பொட்டாசியம்
மற்றும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.

அதேபோன்று வெல்லத்தில் பல்வேறு சத்துக்களும் இரும்பு சத்தும் கால்சியமும் அபரிமிதமாக உள்ளது. மேலும் நிலக்கடலையில் உள்ள விட்டமின் பி உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது தசைகளின் வலிமைக்கும் இது உதவுகிறது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல இதிலுள்ள விட்டமின் பி 3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு நினைவாற்றலை அதிகரிக்க உதவும். எனவே கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.

அதேபோன்று நிலக்கடலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனே அன் சாச்சுரேட் போலிக் அமிலம் போன்றவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது. அந்தவகையில் கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது இந்த நன்மைகளை இயல்பாகவே கிடைத்துவிடும். அதுமட்டுமல்ல நிலக்கடலையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் தான் உள்ளது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் நிலக்கடலையில் உள்ளது.

அதாவது இரைச்சி உணவுகளுக்கு நிகரான சத்துக்கள் இதில் கிடைக்கிறது. மேலும் வெல்லத்துடன் சேர்ந்து இதன் மருத்துவ நன்மைகள் மேலும் அதிகரிக்கிறது. அதேபோன்று நிலக்கடலையில் ட்ரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. இந்த செரட்டோன் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. எனவே இந்த கடலை மிட்டாயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அவசியம் சாப்பிட வேண்டும்.

அதேபோன்று நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியம். கருப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள் நீர்கட்டிகள் ஏற்படாதது. கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். அதிலும் இவர்கள் கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது அதன் பலன் இரட்டிப்பு அடையும்.

அடுத்து நிலக்கடலையில் உள்ள பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் உதவுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக்கொள்ளலாம். முக்கியமாக நிலக்கடலையில் உள்ள சக்திகள் ஆண்கள் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது. அந்த வகையில் இந்த கடலை மிட்டாய் அனைவருக்குமே மிகவும் சிறந்தது.

அதேபோல் நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. மேலும் இரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இது மிகுந்த நார்சத்து உள்ளது என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. பொதுவாக பாதாம் பிஸ்தா முந்திரிப்பருப்புகளில்
தான் சத்துக்களை விட நிலக்கடலையில் சத்துக்கள் மிக அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

அதனால்தான் இது ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இதனுடன் வெல்லம் சேருவதால் நன்மைகள் நமக்குக் இரட்டிப்பாக கிடைக்கிறது. எனவே கெட்ட கொழுப்பில்லாத கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் அனைவருமே தினமும் சாப்பிட்டு வந்தால் பல உடல்நல நன்மைகள் எளிதாகப் பெற்றுவிட முடியும். எனவே நமது பாரம்பரிய உணவான கடலை மிட்டாயை இனி அடிக்கடி சாப்பிடுங்கள் நோய் இல்லாத வாழ்வை பெறுங்கள்.

வன்னி மரம் ஓர் சிறப்பு பார்வை

அவிட்டம் - செவ்வாய்

கும்பம் - சனி
வன்னி மரம் ஓர் சிறப்பு பார்வை

வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல்அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது.
வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று சொல்வார்கள்.எப்படி என்றால், அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால், தினசரி வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி அந்த வேலையாட்களுக்கு கொடுப்பாராம்.
அவர்கள் எந்த அளவிற்குஉழைத்தார்களோ அந்த அளவிற்கு அது பொன்னாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம்.கடினமாக வேர்வை சிந்திஅனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. 

கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது. அப்படியொரு சக்தி இந்தவன்னி மரத்திற்கு உண்டு.இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையானவன்னி மரம் இருக்கிறது. அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும்.
வன்னிக் காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும். ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விதத்தில் இருக்கவேண்டும்.நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும்.

இந்தியப் பாலைவனங்களின் தங்க மரம்’ எனச் சிறப்பிக்கப்படுவது வன்னி மரம். பாலைவனங்களிலும் வானிலை அதிகம் வறண்டிருக்கும் பகுதியிலும் தாக்குப்பிடித்து வளரக் கூடிய பசுமை மாறாத மரம் வன்னி. இதன் அனைத்துப் பகுதிகளுமே பயன்படுவதால், ‘கற்பகதரு’ என்றும் சொல்வார்கள்.சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம் (PROSOPIS SPICIGERIA LINN) திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் பாடல்:வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர்தூவி நம்பாவென்ன நல்கும் பெருமான் உறைகோயில் கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும் மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே வன்னி மரத்தைப் பற்றி ரிக்வேதம், மகாபாரதம் மற்றும் ராமாயணத்திலும் கூறப்பட்டிருக்கின்றது.
மார்ப்புச் சளியையும் இந்த வன்னிக்காய் பொடிஎடுக்கும். இந்த வன்னி இலையை அம்மியில் அரைத்து அப்படியே புண்இருக்கும் இடத்தில் கட்டினால் அப்படியே சரியாகிவிடும். எல்லா மரத்தையும் கரையாண் அறிக்கும். ஆனால் இதை மட்டும் கரையாண் தொடாது. நெருங்கவே முடியாது. அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த மரத்தினுடைய அமைப்பு எவ்வளவு வலிமையானது என்று.பல ஆலயங்களில் தலவிருட்சமாக இருப்பதே இந்த வன்னி மரம்தான். விருதாச்சலத்தை எடுத்துக்கொண்டால் வன்னி மரம்தான் தலவிருட்சம். இராம பிராண் இராவணை நோக்கி போர் தொடுக்கப் போகும்முன்பாக வன்னி மரத்தை தொட்டு வணங்கி வலம் வந்து சென்றதாக ஐதீகம். அதேபோல, வள்ளிக் குறத்தியை மணப்பதற்காக முருகன் வன்னி மர வடிவில் காட்சியளித்ததாகவும் ஐதீகம்.

அதேபோல, பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் செல்வதற்கு முன்பாக நிராயுதபாணியாக இருக்க வேண்டுமல்லவா, அப்பொழுது அவர்களுடைய ஆடை, அணிகலன்கள், ஆயுதங்கள் அனைத்தையும் ஒரு பெரியதுணியில் வைத்துக் கட்டி, மரஉறி தறித்து கிளம்புவதற்கு முன்பாக, வன்னி மரத்தடியில் வைத்துச் சென்றதாகவும் ஐதீகம். அப்படியானால், இது ஒரு பாதுகாப்பிற்கு உரிய மரம், சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரம் என்றஅதன் தன்மை நமக்குத் தெரிகிறது.வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும்.
உமா தேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.வன்னிமரம் விநாயப்பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களில் அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகில் உள்ள சாத்தனூர், பாசிகுளம் விநாயகர் சாஸ்தாவுக்கு அக்னி சொரூபமாக வன்னிமர வடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது.

வன்னிமர இலையை வட மொழியில் சமிபத்ரம் என்று கூறுவார்கள்.இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும்.விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும்.வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விஷேசம்.
நவக்கிரங்களில் இது சனி பகவான் (SATURN PLANET) தொடர்பு கொண்டது.பெண் தெய்வம் நீலாதேவிக்குப் படைக்கப்படுகிறது.விருத்தாசலத்திலுள்ள விருதகிரீஸ்வரர் கோவிலிலுள்ள வன்னி மரத்தை பக்தர்கள் 9 முறை சுற்றி வந்து மரத்தின் தண்டில் நூலைக் கட்டி நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். இதனால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். 

சொத்து சுகம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர்.இம்மரத்தின் பட்டையைத் துண்டு செய்து சாப்பிடுகின்றனர். இதனால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்று நம்புகின்றனர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள விநாயகபுரம் ஒட்டநேரியிலுள்ள அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயத்தில் வன்னி மரத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. 

சனி பகவான், நீலாதேவி பெண்அம்மன், காக வாகனத்தில் கருப்பு நிற ஆடை அணிவித்து எள் தானியத்துடன்,நவரத்தினத்தில் நீலக்கல் பதித்து, வன்னி மரத்தின் அடியில் மேற்கு திசையைநோக்கி மகரம், கும்ப ராசியில், இந்த ஆலயத்தில் சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன.மராட்டிய போர் வீரர்கள் போருக்குப் புறப்படும் முன் வன்னிமர இலைகளைப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு புறப்படும் பழக்கமிருந்தது. வன்னிமரத்தைச் சுற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை பிறக்கும்.
**********
ஹரி ஓம் நமச்சிவாய
காவன் காத்தாயி சரணம்.
x

" http" மற்றும் "https "* என்னும் வார்த்தைகள் வெப்சைட்டின் ஆரம்பத்தில் பார்க்கிறோம் அல்லவா? இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன?

படியுங்கள் நண்பர்களே.

*" http" மற்றும் "https "* என்னும் வார்த்தைகள் வெப்சைட்டின் ஆரம்பத்தில் பார்க்கிறோம் அல்லவா? இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன?
பாதுகாப்பிற்காக அறியவேண்டிய முக்கிய தருணம்,

இதை அறிய 32 லட்சம் டெபிட் கார்டுகள் பறிகொடுத்துள்ளோம்.
இருந்தபோதும் வித்தியாசம் என்னவென்று சிலர் அறிந்திருப்பீர்கள்.

*_அறியதவருக்கு இப்பதிவு...._*

நம் டெபிட் கார்டின் பாதுகாப்பு பற்றிய அறிகுறி தான் "http" மற்றும் "https" இவற்றின் வித்தியாசம்.

"http" என்பது "Hyper Text Transfer  Protocol" என்பதைக் குறிக்கும்.
"s" என்பது இணைந்தால்,  "Secure" என்பதைக் குறிக்கும். இணையதளத்தில் நாம் பார்த்தால் முதல் வார்த்தை "http://" என்றுதான் வரும்.

இதன் பொருள் தங்கள் இணையதளம் பாதுகாப்பற்ற இணைய முகவரியில் தங்களை இணைத்துள்ளது என்பதே.. இது தங்கள் கணினியின் மொழிகளை
தாங்கள் உள்நுழைந்த இந்த இணையமுகவரி மூலம் ஒட்டுக்கேட்கவும் வகை செய்யும். இப்படிப்பட்ட இணையமுகவரியில் தாங்கள் நுழைந்து பூத்தி செய்யும் தனிப்பட்ட விண்ணப்பங்களை பிறர் தாராளமாக பார்க்க முடியும்.
     
எனவே தங்கள் கிரெடிட் கார்டு எண்களையோ பாஸ்வேர்டுகளையோ,
இந்த "http//" இணையமுகவரியில் தயவு செய்து பதிவிடாதீர்கள்.!
அதே சமயம் தங்கள் இணைய முகவரி "https://" என ஆரம்பித்தால், தங்கள் கணினி பாதுகாக்கப்பட்ட இணையமுகவரியில் உங்களை நுழைத்துள்ளது என அறியுங்கள்.

இதிலிருந்து நமது தகவல்கழை ஒட்டுக்கேட்கவோ சேகரிக்கவோ முடியாது.
இந்த S என்ற ஒற்றை எழுத்து சேர்வதன் பாதுகாப்பும், நம்பகத் தன்மையும் S இல்லாத இணையமுகவரி இரண்டுக்கும் உள்ள வித்தியாசமும் தற்போது தாங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்!

இனி எந்த இணைய முகவரிக்காவது உங்கள் கிரெடிட் கார்டு எண் பதிவிட வேண்டும் என்றால், முதலில் இந்த வித்தியசத்தை கவனித்துவிட்டு, பிறகு பதிவிடுங்கள்.

எந்த இணைய முகவரியைத் தேடும் போதும், முதலில் இணைய களம் எதில் முடிகிறது எனப் பார்க்கவும்.  (Eg: ".com"  or ".org", ".co.in", ".net"  etc).* இவற்றின் முன் உள்ள பெயர் மட்டுமே இணைய களப்பெயர்.
     
.Eg: "http://amazon.diwali -festivals.com" என எடுத்துக் கொள்வோம்.
இதில் ".com" என்பதற்கு முன்னால் உள்ள "diwali-festivals" ("amazon" என்பது அல்ல) என்பதுதான் அந்த இணையகளத்தின் முகவரி. எனவே இது "amazon.com" இணையதளத்தைச் சேர்ந்தது அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது "diwali-festivals.com" எனும், நாம் இதுவரை அறியாத ஓர் இணைய களத்தைச் சேர்ந்தது.

இதே வழியில் வங்கித் திருட்டுக்களையும் தாங்கள் கண்டறிய முடியும்.
தங்கள் வங்கியுடனான இ-சேவையைத் தொடங்கும் முன்னர், மேலே கூறியது போல், ".com" எனும் வார்த்தயை ஒட்டி, அதன் முன்னால், உங்கள் குறிப்பிட்ட வங்கியின் பெயர் உள்ளதா எனமுதலில் கவனியுங்கள். Eg: "icicibank.com" என்பது icici வங்கியைச் சார்ந்தது;

ஆனால் , "icicibank.'வேறு ஏதோ வார்த்தை'.com" என வந்தால், அது iciciவங்கியுடையது அல்ல. 

அந்த‌ _"வேறு ஏதோ வார்த்தையுடையது.

_இது பார்க்க சாதாரண விஷயமாகத் தோன்றும்.
ஆனால் இந்தத் தவறால் பணம் இழந்தவர்கள் பலர்._
தயவு செய்து பிறருக்கும் அனுப்புங்கள்.

*_தவறிலிருந்து நம் மக்கள் விழிப்புணர்வு பெற்று வாழட்டும்._*
நன்றி

பிறந்த குழந்தைக்கு பயன்படுத்தும் பொருட்களில் இருந்து #பிளாஸ்டிக் இல்லா உலகம் படைக்க புத்தாண்டில் உறுதியேற்போம்.💪💪

பிறந்த குழந்தைக்கு பயன்படுத்தும் பொருட்களில் இருந்து 
#பிளாஸ்டிக் இல்லா உலகம் படைக்க புத்தாண்டில் உறுதியேற்போம்.💪💪

✅குழந்தைகளுக்கு அரிச்சுவடி சொல்லிக் கொடுக்கும் பொழுதே,  
மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக்கை பற்றியும் சொல்லிக் கொடுங்கள்.

✅நாளைய தலைமுறைக்கு 
நெகிழி தாக்கம் இல்லாத உலகை விட்டுச் செல்வோம்.

✅முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது.

✅ஆறு மாதத்திற்கு பிறகு இதர உணவுகளோடு 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம்.

✅மாட்டுப்பால் ஒரு வயது வரை கண்டிப்பாக கொடுக்க கூடாது.

✅மாட்டுப்பால் அல்லது பவுடர் பால் கொடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போது பால் டப்பாவில் கொடுக்காமல் பாலாடை சங்கு அல்லது டம்ளரில் (குவளை) கொடுத்துப் பழகுங்கள்.

✅போர்வெல் எனும் பாதாளத்திற்குள் தவறி விழுந்து இறந்த சுஜித்திற்காக நாடே வருத்தப்பட்டது.

ஆனால் பாட்டில் பால் எனும் பாதளத்திற்குள் பெற்றோர்களாலே தள்ளப்பட்டு வாந்திபேதி,நிமோனியா வால் பலியாகும் சுஜித்துகள் ஏராளம்.

விழித்திடுவோம் தமிழா💪💪

#no_plastic #no_bottle_feed #breastfeed
#wbw #newborn_care #தாய்ப்பால் 
#நலவாழ்வு

திங்கள், 30 டிசம்பர், 2019

தமிழர்கள் தமிழைத் தமிழாய் அறிந்து கொள்ள இப்பதிவு........

நேற்று ஒரு காணொளி கண்டேன். 
அதில் (கோவையில்) நம் தமிழ் மக்களிடம் தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துகள் என கேட்க... 
ஆளாளுக்கு ஆண், பெண், படித்தோர்
என்ற பாகுபாடின்றி 216,253,265,280 என்றும்... வல்லினம், இடையினம், மெல்லினம் என்றால் என்னவென்றே தெரியாது என்றும் கூறினர். 

https://www.facebook.com/error404tamil/videos/2436613433266941/

இதனைக் கேட்டதும் எனக்கு ஒரு புறம் கோபம்... மறுபுறம் இதைக்கூட தெரியாமல் இருக்கின்றனரே என்ற ஆதங்கமும் ஏற்பட்டது. ஆகவே தமிழர்கள் தமிழைத் தமிழாய் அறிந்து கொள்ள இப்பதிவு........

தமிழில் உள்ள மொத்த எழுத்துகள் 247 ஆகும்.

அதாவது,

உயிர் எழுத்துகள் 12
மெய் எழுத்துகள் 18
உயிர்மெய் எழுத்துகள் 216
ஃ என்கிற ஆய்த எழுத்து 1

ஆக மொத்தம் 247 எழுத்துகள் தமிழில் உள்ளன.

உயிரெழுத்துகள் 12

உயிரெழுத்துகள் என்றால் என்ன ?
உயிரெழுத்துகள் என்பவை மொழிக்கு உயிராகி நின்று இயங்குபவை.

அவை,
அ, இ, உ, எ, ஒ என்கிற ஐந்து எழுத்துகள் குறுகி ஒலிக்கும் குற்றெழுத்துகளாகவும்,
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஓள என்கிற ஏழு எழுத்துகள் நீட்டி ஒலிக்கும் நெட்டெழுத்துகளாகவும் உள்ளன.

மெய்யெழுத்துகள் 18

மெய்யெழுத்துகள் என்றால் என்ன ?
மெய்யெழுத்துகள் என்பவை மொழிக்கு உடம்பாகி நின்று இயங்குபவை.

அவை,

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்கிற 18 எழுத்துகள் ஆகும்.

இந்தப் 18 எழுத்துகளையும் இதே வரிசையில் நினைவில் நிறுத்துவது என்பது கடினமானது. இந்தப் 18 எழுத்துகளையும் நன்கு தமிழ் தெரிந்தவரும்கூட வரிசையாக நினைவில் வைத்துச் சொல்லுவாரா என்பது வினாக்குறியானதே.

எனவே
இந்தப் 18 எழுத்துகளை எளிமையாக நினைவில் நிறுத்த
அவற்றின் பிறப்பிடங்களை வைத்து இப்பொழுது வரிசைப் படுத்துவோம்.

உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் 216.
அதாவது உயிர் எழுத்துகள் 12 x மெய் எழுத்துகள் 18 = 216.

அதாவது க்+அ = க... இது போல்.

கசட தபற - என்பவை வல்லின எழுத்துகள்
யரல வழள - என்பவை இடையின எழுத்துகள்
ஙஞண நமன - என்பவை மெல்லின எழுத்துகள்.

இந்த அடிப்படையில் இவ்வெழுத்துகளை நினைவில் வைத்தால் அது எளிமையாகும்.

அதற்கான பாடல் இதோ...

கசட தபற வல்லினமாம்
யரல வழள இடையினமாம்
ஙஞண நமன மெல்லினமாம்
தமிழால் நாமும் ஓரினமாம்.

கசட தபற, யரல வழள, ஙஞண நமன என்கிற பதினெட்டு எழுத்துகளை ஒலிக்கப் பழகிய பிறகு,

ஒவ்வொரு எழுத்தின் தலையிலும் புள்ளி வைத்தால் எப்படி ஒலிக்க வேண்டும் என்று கரும்பலகையில் எழுதிக்காட்டி பயிற்றுவிக்க வேண்டும்.

க தலைமேல் புள்ளி இருந்தால் க்
ச தலைமேல் புள்ளி இருந்தால் ச்
த தலைமேல் புள்ளி இருந்தால் த்
ப தலைமேல் புள்ளி இருந்தால் ப்

இந்த முறையில் க முதல் ன வரையுள்ள 18 எழுத்துகளின் தலைமேல் புள்ளி இருந்தால் எப்படி ஒலிக்க வேண்டும் என்று பயிற்சி தரவேண்டும். இந்தப் பதினெட்டு ஒற்றெழுத்துகள் தான் மாணவர்களுக்குப் பிரச்சனையாக உள்ளன. எனவே இந்தப் 18 எழுத்துகளை பொறுமையாகச் சொல்லிக் கொடுத்துப் பதிய வைக்க வேண்டும்.

அடுத்ததாக உள்ளவை

உயிர்மெய்யெழுத்துகள் 216

உயிர்மெய்யெழுத்துகள் என்றால் என்ன ?

முன்பு குறிப்பிட்ட உயிரெழுத்துகள் 12 ம், மெய்யெழுத்துகள் 18 ம் இணைந்து உருவாகிய எழுத்துகள் உயிர்மெய்யெழுத்துகள் எனப்படும்.

எடுத்துக்காட்டாக

க் என்கிற மெய்யெழுத்தும் அ என்கிற உயிரெழுத்தும் இணைந்து
க என்கிற உயிர்மெய்யெழுத்து ஆகிறது ( க் + அ = க )

ச் என்கிற மெய்யெழுத்தும் அ என்கிற உயிரெழுத்தும் இணைந்து
ச என்கிற உயிர்மெய்யெழுத்து ஆகிறது ( ச் + அ = ச )

இவ்வாறு உயிர்மெய் எழுத்துகள் 18 ம் உயிரெழுத்துகள் 12 ம் இணைந்து

18 X 12 = 216 உயிர்மெய்யெழுத்துகள் உருவாகின்றன.

இந்த 216 எழுத்துகளையும் நினைவில் நிறுத்த இந்தப் பாடலைச் சொல்லிக் கொடுத்தாலே போதும்.

க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ......

க எழுத்தைப் போலவே பிற எழுத்துகளுக்கும் பாடிப்பழகவும். ச, ல, ழ, ள, ர, ற, ந, ண, ன.........

தமிழ் கற்பிப்பதன் தொடக்க நிலையாக இந்த மூன்று பாடல்களையும் நம் மழலையர்களுக்கு இசையோடு அறிமுகப்படுத்திப் பாடப் பயிற்சி தந்தால் மழலையர்கள் எழுத்துகளை எப்படி ஒலிப்பது என்ற முறையை எளிமையாகக் கற்றுக் கொள்வார்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=1416065755217449&id=1262493460574680

இச்சுட்டியை சொடுக்கி... #ஜெத்தா_முத்தமிழ்ச்_சங்கத்துடன் இணைந்து பயணியுங்கள்.

https://www.facebook.com/JeMSJeddah/?referrer=whatsapp

தஞ்சை இனியவன் எ
ஜாஹிர் ஹூஷேன், ஜெத்தா.
28-12-2019 - 10:55:10

சனி, 14 டிசம்பர், 2019

🤔🤔*மீண்டும் #காங்கிரஸ்_கட்சி_ஆட்சி ஏன் வேண்டும்???.. துல்லியமான விபரம்*

🤔🤔
*மீண்டும் #காங்கிரஸ்_கட்சி_ஆட்சி ஏன் வேண்டும்???.. துல்லியமான விபரம்* 

*ஒவ்வொரு முறையும் பிரதம மந்திரி மோடி மேடையில் கடந்த 60 வருடங்களாக காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை, ஒன்றுமே செய்யவில்லை என்று முழங்குவார்...*

*இதுதான் அவருக்கு பதில்..... 👇🏻*

*இதை எழுதியது ஜூலியஸ் ரெபைரோ, ஓய்வு பெற்ற IPS அதிகாரி, முன்னாள் DGP, மஹாராஷ்டிரா.* 

*ஒரு சாதாரண இந்திய பிரஜையாகிய நான் சொல்லிய இவைகள் அவர்களுக்கு போய் சேர வேண்டும்.*

*மோடிஜி, இப்படி சொல்லுவதை நிறுத்தி, 60 வருடங்களில் என்ன சாதித்தோம் என்பதை பாருங்கள்,*

*இந்திய பிரஜைகள் எல்லாரும் முட்டாள்கள் இல்லை என்பதை முதலில் உணருங்கள்.* 

*நீங்கள் பிரதான் மந்திரியாக இருக்கும் நம் இந்தியாவை 200 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலேயன் ஆட்சி செய்தான்.*

*இந்தியர்கள் அனைவரும் அவனுக்கு அடிமைகளாகத்தான் இருந்தார்கள்.* 

*1947ல் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சி ஆரம்பித்தபோது, ஆங்கிலேயன் துடைத்து வைத்துவிட்டுப்போன பூஜ்யமான பொருளாதாரம்.*

*ஆங்கிலேயன் விட்டுப்போன குப்பைகளைத்தவிர வேறு ஏதுமில்லை.*

*ஒரு பின் தயாரிக்கக்கூட எவ்விதமான வசதியையும் அவன் விட்டுப்போகவில்லை.*

*இந்தியா முழுவதுமாக 20 கிராமத்தில் மட்டுமே மின்சார வசதி.*

*20 அரசர்களுக்கு மட்டுமே தொலைபேசி.*

*குடிதண்ணீர் கிடையாது.*

*நாடு முழுதும் 10 சிறிய அணைக்கட்டுகள்.*
 
*ஒரு மருத்துவமனையும் கிடையாது.*

*ஒரு கல்வி நிறுவனம் கிடையாது,*

*விவசாயத்திற்கு நீர் வசதி, பயிர்களுக்கு பூச்சி மருந்து எதுவுமே கிடையாது.*

*வேலைகள் கிடையாது.*
*பசி பஞ்சம்தான் நாட்டில். பிஞ்சுகுழந்தைகள்கொத்துக்கொத்தாக மரணம்.*

*எல்லையில் மிக சிறிய அளவில் இராணுவ அதிகாரிகள்,*
*4 விமானங்கள், 20 பீரங்கிகள்,நாட்டின் நான்கு எல்லைகளும் திறந்த நிலை.*

*குறைவான அளவில் சாலைகள் மற்றும் பாலங்கள்.*
*காலியான கருவூலங்கள்.*

*இந்த நிலையில்தான் நேரு பதவியேற்றார்...* 

*60 வருடங்கள் கழித்து இந்தியா?????*

*உலகில் மிகப்பெரிய இராணுவ சேவை.* 

*ஆயிரக்கணக்கில் போர் விமானங்கள், பீரங்கிகள்,* *லட்சக்கணக்கான தொழில்நுட்ப ஸ்தாபனங்கள்,*

 *அனைத்து கிராமங்களிலும் மின் வசதி,* 

*நூற்றுக்கணக்கான மின்சார உற்பத்தி நிலையங்கள்,*

*இலட்சக்கணக்கான கிலோ மீட்டர்கள் சாலைகள் மற்றும் பாலங்கள்,*

*புதிய இரயில் நிலையங்கள்,*

 *ஸ்டேடியங்கள்,*
 
*சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள், அனைத்து பிரஜைகள் இல்லங்களில் தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி.*

*இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வேலைசெய்யகட்டமைப்பு, வங்கிகள், பல்கலைக்கழகங்கள்,*
*AIIMS, IIMS,அணு ஆயுதங்கள், நீர்மூழ்கி கப்பல்கள்,  அணு ஆயுத ஆராய்ச்சி நிறுவனங்கள்,* 

*விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி நிலையம், பொதுத்துறை நிறுவனங்கள்.*

*பல வருடங்களுக்கு முன்பே இந்திய இராணுவம் லாஹுர் வரை சென்று, பாகிஸ்தான் நாட்டை இரண்டாக ஆக்கியது,*

*அப்போது ஒரு லட்சத்திற்கும் மேலான பாகிஸ்தான் நாட்டவர்கள்  நம்மிடம் சரணடைந்தது,* 

*இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்கள் மற்றும் கனிம வளங்களை ஏற்றுமதி செய்தது,*

*வங்கிகள் அனைத்தையும் தேசிய உடைமை ஆக்கியது இந்திரா காந்தி.*

*கணினி அறிமுகம். அதன் மூலம் உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் அதிக வேலை வாய்ப்புகள்.* 

*மோடிஜி நீங்கள் ப்ரதான் மந்திரி ஆனது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மூலம்....* 

*நீங்கள் ஆட்சி அமைக்கும்போது இந்தியா பொருளாதார நாடுகளின் உலக அளவில் முதல் 10ல்...* 

*இதை தவிர GSLV, மங்கள்யான், மெட்ரோ ரெயில், மோனோ ரயில்,  பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்,*

*ப்ரித்வி ஏவுகணை,அக்னி ஏவுகணை, நாக் ஏவுகணை,*
*அணு ஆயுதங்கள் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள்.....*
*இவைகள் அனைத்தும் நீங்கள் பிரதமராவதற்கு முன்பே சாதிக்கப்பட்டு விட்டது.*

*தயவுசெய்து நீங்கள் மக்களிடம் வந்து 60 வருடங்களில் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லாதீர்கள்.* 

*கடந்த நான்கு ஆண்டுகள், 6 மாதங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லி வாக்கு கேளுங்கள்.* 

*பெயர்கள் மாற்றம்,சிலை அரசியல், மாட்டு அரசியல்,* 

*தோல்வியுற்ற பண மதிப்பு இழப்பு (demonetization), அனுபவில்லாமல் செயல்பட்ட GST, மக்களை வெயிலிலும், மழையிலும் வரிசையில் நிற்க வைத்து அவர்களது பணத்தை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளியது,*

 *பாஜக எதிர்கட்சியாக இருக்கும்போது எதிர்த்த  வெளிநாட்டு நேரடி பண முதலீடுகள்,
இப்போது வெட்கமில்லாமல் ஆதரிப்பது....* 

நாட்டை அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் விற்றது,
அம்பானியின் இரண்டு மாத கம்பெனிக்கு ரஃபேல் விமான ஆர்டரை கொடுத்து....
இந்திய நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் ஐ செயலிழக்க செய்தது, BSNL நிறுவனத்தை மூடுவதற்கு அம்பானியின் ஜியோ மூலமாக செயல்படுவது....

குருட் ஆயில்
(கச்சா எண்ணெய்) மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்போது, பெட்ரோலும் டீசலும், எரிவாயுவையும்
அதிக விலைக்கு விற்குமளவிற்கு வரிகள்....

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருந்த
ஏழை, நடுத்தர மக்களின் பணமான
ரூ 1771 கோடிகளை, மினிமம் பேலன்ஸ் வைக்காமல் இருப்பதாக சொல்லி தண்டத்தொகை... 

சப்கே சாத்,
சப்கோ விகாஸ் யாருக்கு என்றால்
அமித்ஷா, அவரின் மகன் சவுரியா தோவல், அம்பானி, அதானி, பாபா ராம்தேவ் பதஞ்சலி குழுமம் மற்றும் பாஜகவின் ஸ்பான்சர்கள்.

கங்கை நதியை தூய்மைப்படுத்த
ரூ 3000 கோடிகள்.... கங்கையில் குளிக்க செல்லும் ஒவ்வொருவருக்கும் தெரியும் இந்த பணம் எங்கே என்று????? 

*இது காங்கிரஸ் கட்சிக்கு விளம்பரமல்ல....* 
*நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவனுமில்லை.*

*நான் விபரங்கள் தெரிந்த சாதாரண இந்திய குடிமகன்.* 

*ஒவ்வொரு முறையும்60 ஆண்டுகள்* *ஒன்றுமேநடக்கவில்லை என்று சொல்லும்போது என்னுடைய பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது.....*

*படித்ததில் பிடித்தது*

செவ்வாய், 3 டிசம்பர், 2019

சப்பாத்தி சாப்பிட்டா வெய்ட் குறையுமாமே டாக்டர் ?

~சப்பாத்தி சாப்பிட்டா வெய்ட் குறையுமாமே டாக்டர் ?
நெஜமாவா?

எங்க அப்பாவுக்கு சுகர் இருக்கு. 10 வருஷமா டெய்லி ராத்திரி 4 சப்பாத்தி சாப்புடுறார்... ஆனாலும் சுகர் குறையல.

சரி...சப்பாத்தி பத்தி இன்னைக்கு பாப்போம்.

சப்பாத்தி ல என்ன இருக்கு??

கோதுமை.

இன்னும் தெளிவா சொல்லப்போனா குட்டை கோதுமை (Atta)

சப்பாத்தி சாப்பிட்டா எப்டி சார் எடை குறையும்-ன்னு நெனைக்குறீங்க !!

~அதுல கலோரி கம்மி டாக்டர்.

இல்லைங்க.

~அதுல கார்போஹைட்ரேட் கம்மி டாக்டர்

அதுவும் இல்லைங்க.

சரி...இப்போ நாம எப்பவும் சாப்பிடுற அரிசி சாதத்தையும்,சப்பாத்தியையும் எடுத்துப்போம்.

*ஒரு Bowl அரிசி சாதத்துல இருக்க கலோரி - 281
*4 சப்பாத்தியில் உள்ள கலோரி - 360

*ஒரு Bowl அரிசி சாதத்துல இருக்க
கார்போஹைட்ரேட்-62 கிராம்
*4 சப்பாத்தியில் உள்ள கலோரி - 69 கிராம்.

ஆக மொத்தம் அரிசியை விட சப்பாத்தியில கலோரியும் அதிகம்,கார்போஹைட்ரேட் உம் அதிகம்.

அப்புறம் எப்டி இந்த சப்பாத்தி சாப்பிடுற கலாச்சாரம் உருவாச்சு ??

1980கள் ல உடல் பருமனும்,நீரிழிவு நோயும் தலை தூக்க ஆரம்பிச்சதும்,மக்கள் மேற்கொண்ட உணவு முறை தான் இந்த சப்பாத்தி.

அதாவது நம்ம வீடு இருக்கு...அதுல பாயோ,வெறும்தரையிலோ படுத்து தூங்குறப்ப ஜம்முன்னு தூங்குவோம்..ஏன்னா நமக்கு பழக்கப்பட்ட இடம்.

இதுவே வேற யார் வீட்டுலயோ நமக்கு நம்ம பஞ்சு மெத்தையே குடுத்தாலும் தூக்கம் வராது.

அதே கான்செப்ட் தான் இங்கேயும்.

ரொம்ப நாளா அரிசி சோறே சாப்பிட மக்களுக்கு,சப்பாத்தி ன்னு ஒன்னு குடுத்தா கம்மியா அளவோட சாப்பிடுவாங்க ன்னு அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த சப்பாத்தி கலாச்சாரம்...ஆனா நம்ம ஆளுங்க வட இந்தியர்களை காட்டிலும் 10-12 சப்பாத்தி ன்னு வெளுத்து வாங்குராங்க.

சப்பாத்தி ன்னு சொன்னதும் நமக்கு யார் நியாபகம் வர்றது.

அதே தான்.."பஞ்சாபி சிங் ஹே".

பஞ்சாபி ல இருக்க சிங் எல்லாருக்கும் சப்பாத்தி தான் நமக்கு அரிசி மாதிரி.

ஆனா விஷயம் தெரியுமா பாஸ்....இந்தியாவிலேயே அதிக உடல் பருமனால் அவதிப்படும் மாநிலம் நம்ம சிங் சகோஸ் இருக்க பஞ்சாப் தான்.

அப்புறம்,இந்த சப்பாத்தி ல GLUTEN ன்னு ஒரு பொருள் இருக்கு...ரொம்ப கெடுதல் உடலுக்கு...வயிறு சம்மந்தப்பட்ட கெடுதல்கள்,Celiac Disease,Leaky Gut Syndrome,மூட்டு சம்மந்தப்பட்ட Reactive Arthritis ன்னு சகலத்தையும் வர வெச்சிடும் இந்த Gluten.

சொல்லப்போனா இட்லி சாப்பிடுறவன விட 4 சப்பாத்தி சாப்பிடுறவனுக்கு தான் உடல் நிலை பாதிக்கும்...சுகர் ஏறும்.மூட்டு வலி,வயிற்றுப்போக்கு ன்னு எல்லாம் வரும்.

குறைவான மாவுச்சத்து மட்டும் தான் ஆரோக்கியமான வாழ்வியலுக்கு திறவுகோல்.
சப்பாத்தி ல அது இல்லவே இல்லை.

அதனால சப்பாத்தி வெறும் சப்பை தான்.

நன்றி❣️

Dr.Aravindha Raj.

#BETTER_HEALTH_FOR_BETTER_LIFE

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்தா என்ன பண்றது..?" ங்கிறது ஒருத்தங்க கேட்ட கேள்வி...

#Danger_devil

"நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்தா என்ன பண்றது..?" ங்கிறது  ஒருத்தங்க கேட்ட கேள்வி... 

கற்பா, உயிரா னு பாக்கும் போது உயிர் பெரிசு. விட்ருங்க போகட்டும் என்பது போல பல வழிகாட்டல்கள்.... 

ஆனா போலீஸ கூப்பிடலாமே னு ஒரு பின்னூட்டம் கூட கண்ணுல படல...

போகட்டும் என்ன பண்றது. போலீஸ்னாலே கிளைமாக்ஸ் முடிஞ்சுதான் வருவாங்க அப்டீங்குற எண்ணம் மக்களுக்குள்ள இருந்திட்டே இருக்கு.

சரி விஷயத்துக்கு வருவோம்.

இந்த மாதிரி சமயத்துல என்ன பன்றது?

ஒன்னு நீங்க 100 க்கு டயல் பண்ணி எந்த சூழ்நிலையா இருந்தாலும் சொல்லலாம். "100 கால் எங்களுக்கு High priority duty" முதல்ல அத அட்டன் பண்ணீட்டுதான் வேற எந்த டியூட்டியா இருந்தாலும் பாக்கனும். அதிக பட்சம் 10-15 நிமிடங்கள்ள போலீஸ் அங்க இருக்கும்.

சரி, பேச முடியாத சூழல் துறத்துறானுங்க. நீங்க ஓடுறீங்கனே வச்சுக்குவோம். Play store la " Kavalan SOS" னு ஒரு ஆப் இருக்கு கண்டிப்பா எல்லோரோட போன்லயும் இருக்க வேண்டிய ஆப். இதுல உங்க சொந்தக்காரங்க போன் நம்பர் 5 எண்ணம் ஸ்டோர் பண்லாம்.

இந்த ஆப் ஓப்பன் பண்ணுனா ரெட் கலர்ல ரவுண்டா ஒரு வட்ட சிகப்பு நிற பொத்தான் டிஸ்ப்ளேயோட சென்டர்ல தெரியும். அதுல SOS னு பெரிசா எழுதிருக்கும். இத நீங்க ஆபத்து காலங்கள்ல ப்ரஸ் பண்ணும் போது உங்க சொந்த காரங்களுக்கு மட்டுமில்ல சென்னையில இருக்குற கண்ட்ரோல் ரூம், டிஸ்ட்ரிக்ட் கண்ட்ரோல் ரூம், பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேசன், ரோந்துல இருக்குற காவலர்கள், ஹை- வே பேட்ரோல், பைக் - பேட்ரோல் எல்லாருக்கும் நீங்க ஆபத்துல இருக்கீங்க னு 15 செகண்ட்ஸ்க்குள்ள மேசேஜ் போகும். அது மட்டுமில்ல இது GPS based. 
ஆபத்துல இருக்குறவங்கள எங்களால டிராக் பண்ணி ஸ்பாட்டுக்கு போக முடியும். ரொம்ப சீக்கிரமா உங்களுக்கு உதவி கிடைக்கும். 

இதெல்லாம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த எவ்வளவோ விளம்பரம் பண்ணியும் பெரிசா விழிப்புணர்வு இல்ல.

களத்துல வேலை பார்க்குற எங்களுக்குதான் இதனால எத்தனை உயிரை பாதுகாத்துருக்கோம் னு தெரியும்.

So, பெண்கள் கண்டிப்பா இந்த ஆப் அ டவுண்லோட் பண்ணி வச்சுக்கங்க. ஆபத்து காலங்கள்ள உதவும். எப்பனாலும் உதவிக்கு காவல்துறையை கூப்பிடுங்க. யாரு வந்தாலும் வரலைனாலும் போலீஸ் நாங்க வந்து நிற்போம். காவல்துறை எப்பவுமே உங்கள் நண்பன்தான்.

நன்றி

#Mohamed_Asarudeen..

App link👇👇👇

https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kavalansos

வெள்ளி, 29 நவம்பர், 2019

அதிர்ச்சியான_தகவல்-என்ன இது #அஸ்பர்டேம்?என்ன இது #அசேசல்பேம்_பொட்டாசியம்?

என்ன இது #அஸ்பர்டேம்?
என்ன இது #அசேசல்பேம்_பொட்டாசியம்?

#அதிர்ச்சியான_தகவல்...மற்றும் மீள்பதிவு...

ஆங்கில இந்து பேப்பரை படித்தேன் பக்கம் 5ல் கோக்க கோலா முழுப்பக்க விளம்பரம் இருந்தது. ஒரே ஒரு டப்பா (கீழே உள்ளது) படத்துக்கு எதுக்கு ஒரு பக்கத்துக்கு விளம்பரம் என உற்றுநோக்கினால் கீழே நான்கு வரிகளில் சின்னதாய் சில விபரங்கள், அவைகள் கீழ் வருமாறு....

☎ terms and conditions:
contains no fruit added flavours artificial sweeteners.

☎ this carbonated water contains an admixture of #aspartame and #acesulfame_potassium. not recommended for children. 

என்ன இது #அஸ்பர்டேம்?
என்ன இது #அசேசல்பேம்_பொட்டாசியம்?

#குழந்தைக்கு உகந்தது அல்ல என்று வேறு இருந்தது! சரி என இணையத்தில் தேடிப்பார்த்தேன்.

🔇🔇இந்த இரு #இராயணங்களின் பக்கவிளைவுகள் சாதாரண #தலைவலி முதல் மிகக்கொடிய #புற்றுநோய் வரை நம் உடலில் ஏற்படுத்தக்கூடியது என்றும் அதோடு பல்வேறு நோய்கள், உடல் உபாதைகள் ஏற்படுத்தக்கூடியது எனப் பட்டியல் நீண்டது!🔕

பலமுறை நானே எழுதியுள்ளேன் குளிர்பானங்கள் பூச்சிமருந்துகளுக்கு சமம் என நண்பர்களோடு திரையரங்கு சென்றால் கூட அங்கு #குளிர்பானம் வாங்கினால் அதன் தீங்கை எடுத்துச்சொன்னால் நம்மை தான் ஏதோ வேற்றுகிரக வாசிகள் போல பார்க்கின்றனர்....!!!

விவசாயத்துக்கு தண்ணி இல்ல,குடிக்க நிலத்தடி தண்ணி கிடையாது கேன் தண்ணி தான், இவ்வளவு பிரச்சனை நாட்டுக்கு! பல நோய் பிரச்சனை உடலுக்கு!

முடிந்த வரை பகிரவும் பலருக்கு இது புரியட்டும்!!!

Popular Posts

Facebook

Blog Archive