*🏛அரசியல் சூழ்ச்சி 💪🏻* Political maneuvering | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil *🏛அரசியல் சூழ்ச்சி 💪🏻* Political maneuvering ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 26 நவம்பர், 2020

*🏛அரசியல் சூழ்ச்சி 💪🏻* Political maneuvering

*🏛அரசியல் சூழ்ச்சி 💪🏻* Political maneuvering



*மூன்று பெண்களை மையப்படுத்தி நகர்ந்ததுதான் இந்த நிர்பயா வழக்கு.......*


 *பாதிக்கப்பட்ட பெண் நிர்பயா, நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி, குற்றவாளியின் மனைவி புனிதா.. இந்த பெண்கள்தான் பல தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளனர்!*


*நிர்பயா என்பது ஒரு கற்பனை பெயர்... அதன் பொருள் பயம் அற்றவள் என்பது..*


*நண்பனுடன் சினிமா பார்த்துவிட்டு வரும்போதுதான் 5 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்...*



 *பலாத்காரத்தை எதிர்த்ததால், நிர்பயாவின் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் மனிதாபிமானம் பெயரளவுக்குகூட இன்றி, 5 பேரும் மிருகம் போல தாக்கி ரத்தம் வழிய அடித்தனர்...*


*கதற கதற பலாத்காரம் செய்தனர்...*


*அவரது நண்பரும் தாக்கப்பட்டு, இருவருமே நிர்வாணமாக்கப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டனர்."*


*ஐயாம் ஸாரி மம்மி.. என்னால இந்த வலி, வேதனையை தாங்கவே முடியவில்லை" இதுதான் நிர்பயாவின் கடைசி வார்த்தை..*


 *நிர்பயாவுக்கு தீவிர சிகிச்சை ஆஸ்பத்திரியில் நடந்த நேரம்.. ஒவ்வொரு குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு வந்ததும் அப்போதுதான்.*


*டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் நிர்பயாண மரண வாக்குமூலத்தில்*


*எனக்கு வாழணும்னு ஆசையா இருக்கு.. எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்.. குற்றவாளிகளை மட்டும் தப்பவிட்டு விடாதீர்கள்" என்றார். நிர்பயாவின் ஆசை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது!*


*அன்று தீர்ப்பை கேட்டதுமே குற்றவாளி முகேஷின் தாயார், நீதிபதிக்கு கை கூப்பி கண்ணீர் மல்க கருணை காட்டுமாறு கோரிக்கை விடுத்தார்..*


*பிறகு மனசு கேட்காமல் நிர்பயாவின் தாயாரிடம் வேகமாக ஓடினார்.. அவரது சேலையைப் பிடித்து பிச்சை கேட்பது "என் பையனை மன்னிச்சுருங்க... அவனோட உயிர் இப்ப உங்க கையில்தான். இரக்கம் காட்டுங்க" என்று அழுதபடி கெஞ்சினார்*


 *நிர்பயாவின் தாயார் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.*


 *ரொம்ப வலிக்குது மம்மி என்று அம்மாவிடம் ஈனகுரலில் அழுத நிர்பயாவின் வார்த்தைகள் அபபோது நினைவுக்கு வந்திருக்கவே செய்யும்... "*



*தெருவில் இனிப்புகளை வைத்தால் அதை நாய்கள் வந்து சாப்பிடதானே செய்யும்? நிர்பயாவின் பெற்றோர் அவரை எதற்காக ராத்திரி நேரத்தில் யாருடனும் வெளியே அனுப்புகிறார்கள்? குற்றவாளிகளின் வக்கீல் சர்மா கேட்ட கேள்வியும் நினைவுக்கு வந்து போயிருக்கவே செய்யும்!*


*பிறகு அமைதியாக சொன்னார், "எனக்கும் ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு நடந்ததை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா?*


*இந்த நீதிக்காகத்தான் நான் 7 வருஷமா காத்திருந்தேன்.." என்றார். ஒரு வயிறு துடித்தது... இன்னொரு வயிறு தவித்தது.. இருவரின் கண்ணீரால் கோர்ட்டே அந்த சமயம் மயான அமைதியுடன் காட்சி அளித்தது.*


*அநேகமாக இந்த 7 வருஷங்களில் ஆஷாதேவியின் பெரும்பாலான வார்த்தை அவங்களை தூக்குல போடுங்க என்பதுதான்..*


 *ஒவ்வொரு முறை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கும்போதும் ஆஷாதேவி துடித்த துடிப்பும், தவிப்பும் வார்த்தைகளில் அடைத்துவிட முடியாது..*


*அன்று ஆஷாதேவி அழுதது போலவே இன்றும் அழுதார்.*


 *ஆனால் நிறைய வித்தியாசம்! இந்த தாயின் ஆசையும் நிறைவேற்றப்பட்டுள்ளது!!*


*இதில் சம்பந்தமே இல்லாதவர் அக்‌ஷய் மனைவி புனிதா.. அப்பாவி பெண்.. அபலை பெண்.. கணவனை மலை போல நம்பியிருந்தவர்..*


*ஒருவேளை அக்‌ஷய் உயிருடன் இருந்திருந்தால் புனிதாவின் நிலைமை அதோகதி என்றுதான் சொல்ல வேண்டும்..*


 *தன் தாலியை காப்பாற்றி கொள்ள கோர்ட் வளாகத்தில் இந்த பெண்ணின் தவிப்பினை உணர முடிகிறது..*


*எங்கோ பிறந்து வளர்ந்து, ஒரு கழிசடைக்கு வந்து கழுத்தை நீட்டி தாலியை வாங்கி கொண்ட இந்த பெண்ணை நினைத்தால் பரிதாபத்தை தவிர எதுவுமே தோன்றவில்லை*



*புனிதாவாகட்டும், அக்‌ஷயாவின் அம்மாவாகட்டும், ஆஷாதேவியாகட்டும்.. இவர்கள் எல்லாருமே தாய்மார்கள்தான்.. 7 வருடமாக இவர்களின் தவிப்புகள், துடிப்புகள், முயற்சிகள், பதறல்கள், கதறகல்கள் எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துவிட்டன...*



*ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை உண்டு பண்ணி உள்ளனர்.. இவர்களின் கண்ணீர் ஏதோ ஒரு கற்புக்குரிய பாடத்தை தந்திருக்கிறது..*


 *இவை யாவுமே தாய்மையின் வெளிப்பாடுதான்.. இந்த தாய்மையும் ஒரு பெண்மை என்பதை ஆண்கள் உணர்ந்தாலே பாதி குற்றங்கள் குறைந்து விடும்...*


 *இல்லையென்றால் நம் கண்ணதாசன் சொன்னது போலதான்... 'கூக்குரலாலே கிடைக்காது; அது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது; அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது.*

Popular Posts

Facebook

Blog Archive