வெள்ளி, 24 ஜூன், 2016
நாம் பேஸ்புக் தளத்தில் இல்லாதிருப்பினும் Firefox ஊடாக பேஸ்புக் Friend Request, Messages, மற்றும் Notification களை நம்மால் கண்காணிக்க முடியும்.
Author: Best Buy Offers | ஜூன் 24, 2016 |
facebook தளத்தில் நாம் இல்லாதிருப்பினும் facebook இன் Friend Request, Messages, மற்றும் Notification களை நம்மால் கண்காணிக்க முடியும்.
ஞாயிறு, 19 ஜூன், 2016
தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவது எப்படி?
Author: Infomas | ஜூன் 19, 2016 |
Team Viewer என்றால் என்ன?
மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும், அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.
இதை தரவிறக்க இங்கே செல்லவும் >>Team Viewer 7.0
இப்போது இதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.
எப்படி இதை பயன்படுத்துவது?
Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ ஓபன் செய்யவும்.
உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை, இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.
நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போதுவிண்டோவில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.
இதில் இரண்டு வசதிகள் உள்ளன. இரண்டாவது File Transfer என்பது File களை Transfer செய்ய முடியும் . இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும், உங்களுக்கு/ அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும்.
உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password ஐ மாற்ற Teamviewer ஓபன் செய்து Refresh போன்ற பட்டன் (Password க்கு அடுத்து) கிளிக் செய்து வைக்கலாம். சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே பட்டனில் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம்.
இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால்உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமேசெயல்பட வைக்க முடியும்.
இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் ஓபன் செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவைஇல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer க்கும்.
இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது, 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும்.
இதைப் பயன்படுத்த கட்டாயத் தேவைகள் என்ன?
முக்கியமாக இரண்டு கணினிகளிலும்Team Viewer இருக்க வேண்டும், அதே சமயம் இணைய இணைப்பு மிக மிக அவசியம்.
Computer Tips & Tricks
குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?
Author: Best Buy Offers | ஜூன் 19, 2016 |

பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். எப்படியோ, இப்போதாவது உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டோமே. அதுவே போதும்.
வெள்ளி, 10 ஜூன், 2016
New Facebook Messanger பேஸ்புக் மெசெஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி!
Author: Best Buy Offers | ஜூன் 10, 2016 |



USB-AV எனும் இலவச Anti-Virus Program மிகவும் ஒரு பயனுள்ள மென்பொருள்.
Author: Best Buy Offers | ஜூன் 10, 2016 |
USB-AV எனும் இலவச Anti-Virus Program

- Pentium 2 Processor
- 64 MB RAM
- 18 MB of free hard disk space
How to Conver Video to GIF : 300 இற்கும் மேற்பட்ட Video வகைகளை Gif வடிவத்திற்கு மாற்றும் அருமையான மென்பொருள்.
Author: Best Buy Offers | ஜூன் 10, 2016 |

இந்த மென்பொருள் மூலம்
- 300 க்கும் மேற்பட்ட வீடியோ வகையினை Gif வடிவத்திற்கு மாற்றலாம்.
- பெறப்படும் Gif இன் Frame Size ஐ எமக்கு தேவையான அளவில் மாற்றிக்கொள்ளலாம்.
- வீடியோ இன் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் வெட்டி எடுத்து அதனை Gif வடிவத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.

Memory History அன்று தொடக்கம் இன்று வரை கணணி சேமிப்பகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (விளக்கப்படம் மூலம்.)
Author: Best Buy Offers | ஜூன் 10, 2016 |
சனி, 4 ஜூன், 2016
Childs Good Touch, Bad Touch-"மிக முக்கியமான அருமையான விழிப்புணர்வு பதிவு" - படித்து பகிருங்கள்
Author: Infomas | ஜூன் 04, 2016 |
"மிக முக்கியமான அருமையான விழிப்புணர்வு பதிவு" - படித்து பகிருங்கள்
குழந்தைகளுக்கு குட் டச்,பாட் டச் (Good Touch, Bad Touch) பற்றி ..முக்கிய விஷயங்கள். பாலியல் சார்ந்த பிரச்சனைகள் ஐந்தில் ஒரு குழந்தைக்கு நடக்கிறது.
1.குழந்தைகளிடம் அண்டர் வேர் ரூல் பற்றி தெளிவாக விளக்க வேண்டும்..லிங்க் கொடுத்து இருக்கிறேன்..குழந்தைகளிடமும் சொல்லி கொடுங்கள்..அவர்களின் பள்ளிக்கும் சொல்லுங்கள்.
2.உடல் எனபது தனிப்பட்டவரின் உடமை..அதில் அத்து மீற யாருக்கும் உரிமை இல்லை.தாய்,தந்தை கூட சில வயது வரைதான்.
3.எந்த உறுப்பையும் அதன் பெயர் சொல்லி விளக்க வேண்டும்.
4.உள்ளாடை அணியும் பகுதிகள் யாராலும் தொடப்பட்ட கூடாது.அங்கு யாரவது கை வைத்தால் உடனே "No "சொல்ல கற்று கொடுக்கவேண்டும்.உடனே உதவிக்கு யாரையாவது கூப்பிட வேண்டும்.
5.நம்பிக்கையான நபர்கள் என்று தாய் அல்லது தந்தை இல்லை குடும்பத்தில் நெருக்கமானவர்களை கூறி அவர்களிடம் உடனே விஷயத்தை கூற சொல்லி கொடுக்க வேண்டும்.
6.நம்பிக்கையான நபர் குடும்பத்தின் வெளியிலும் ஒருவர் இருக்க வேண்டும்.சில விஷயங்களை குழந்தைகள் குடும்பத்தில் சொல்ல தயக்கப்படும்..அல்லது வெளியில் நடக்கும் விஷயங்களை அவரிடம் சொல்லலாம்.அவர் பள்ளி ஆசிரியை அல்லது நெருக்கமான நண்பர் என்று இருக்கலாம்..
7.குழந்தைகளின் மேல் பாயும் காமுகர்கள் (pedophile ) குழந்தைகளுக்கு நெருக்கமான சூழலில் இருந்தே கண்டுபிடிக்கமுடியாதபடி செயல்படுவார்கள்.பெரும்பாலும் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள்,அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்,வேலை செய்பவர்கள்....எனவே குழந்தைக்கு விழிப்புணர்வு மிக முக்கியம்.
8.முதலில் குழந்தைக்கு பரிசுகள் வாங்கி தன் வசப்படுத்த முயற்சிப்பார்கள்.எனவே குழந்தைக்கு பரிசு வாங்கி கொடுபவர்கள் எல்லாம் மிக அனபுடையவர்கள் என்று நாம் போதிக்க கூடாது.அது ஆழமாக தவறான புரிதலாக மாறும்.
9.குழந்தையை யாருக்கும் முத்தம் கொடுக்க சொல்லியோ,கட்டி பிடிக்க சொல்லியோ வற்புறுத்த கூடாது.அது சரி என்று வாதம் செய்ய கூடாது.மாமா எத்தனை ஆசையா இருக்கார்..போய் முத்தம் கொடு என்று கூறக்கூடாது.
10.அவர்களுக்கு ரகசியத்தை எப்படி வெளிபடுத்த வேண்டும் ..யாரிடம் சொல்லவேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.
11.டிரைவர் போன்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது மடியில் குழந்தைகளை வைத்து கொண்டு வண்டி ஓட்ட அனுமதிக்க கூடாது.
12.யார் எது கொடுத்தாலும் வீட்டில் வந்து கூறும் இனிமையான சூழல் வீட்டில் இருக்கவேண்டும்.பயம் இருக்க கூடாது.நேருக்கு நேர் பேச..மனதை திறந்து பேசும் சூழல் வேண்டும்.
13.தனது உடலில் அத்துமீற யாருக்கும் உரிமை இல்லை என்று தெரியவும்,அப்படி யாரவது செய்தால் எதிர்ப்பை வெளிப்படுத்தி அந்த இடத்தை விட்டு விலகவும் தெரிந்திருக்க வேண்டும்.
14.அவர்கள் குழந்தைகளை மிரட்டுவார்கள்..அம்மா ,அப்பாவை கொன்றுவிடுவேன்..உன் தவறுகளை சொல்லிவிடுவேன் என்று...யார் மிரட்டினாலும் உண்மைகளை கூற இன்னொரு நம்பிக்கையான நபர் ஒருவர் குடும்பத்தை தவிர தேவை.
15.குழந்தைகள் இதை போன்ற விஷயங்களை கூறினால் உடனே கோபப்படுவதோ இல்லை அழுவதோ கூடாது.அம்மாவை வருத்தப்படுவார்கள் என்று விஷயங்களை மறைக்க முயற்சி செய்யலாம்.
16.நான் கொடுத்த படத்தில் வெள்ளை பகுதிகள் பாதுகாப்பு பகுதியாகவும்..மஞ்சள் பகுதிகள் அடுத்த வகையுலும் சிவப்பு பகுதிகள் யாராலும் தொடக்கூடாத பகுதிகளாக படத்தை காட்டி விளக்கினால் எளிதாக புரியும்.
17.ஒவ்வொரு வயது குழந்தைக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு சொல்லி கொடுக்கவேண்டும்.அதே சமயம் மிக சிறிய குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லி கொடுக்க வேண்டும்.இல்லாவிடில் மறந்து விடுவார்கள்.
18.இந்த வீடியோ உங்கள் பள்ளியுள்ளும்,வீட்டிலும் போட்டு காட்டலாம்.ஷேர் செய்யலாம்.http://www.youtube.com/watch?v=yA_Oe5JWf4k
19.குறிப்பிட்ட இந்த லிங்க்கை படித்து கற்பிக்கலாம் .ஆழ்ந்து படிக்கவும். http://www.underwearrule.org/howto_en.asp.
http://www.underwearrule.org/source/text_en.pdf
20.குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு நம்மை சேர்ந்தது என்று ஒவ்வொரு பெற்றோரும்,மற்றோரும் உணர வேண்டும்.அந்த பொறுப்புடன் நடந்து கற்பிக்க வேண்டும்.
நன்றி : Kirthika Tharan.
Thanks to Discovery - தமிழால் இணைவோம்
Author: Infomas | ஜூன் 04, 2016 |
இன்று தமிழ் மொழியை வளர்க்காமல் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் பல தமிழக தொலைகாட்சிகளில் நடுவிலே ஒரு அயல் நாட்டு தொலைக்காட்சி தமிழ் மொழியைஅதன் அடிநுனியில் இருந்து மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது . இந்த தொலைக் காட்சியை பார்த்து மற்ற அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளும் வெட்கி தலை குனிய வேண்டும் .ஆம் இந்த டிஸ்கவெரி தமிழ் தொலைக்காட்சி நாம் இழந்த, பழக்கத்தில் இல்லாத பல அரிய சொற்களை அறிவியல் தமிழில் மிக நேர்த்தியாக நம் மக்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
இவர்களின் தமிழ் சொல்லாடல் நம்மை வியக்க வைக்கிறது .
ஒளிக் கோபுரம்,
சதுப்பு நிலங்கள்,
தாழ் நிலங்கள் ,
அகழ்வு உந்து ,
சம ஈர்ப்பு விசைகள்,
மின் ஆற்றல்கள், என பல அருமையான தமிழ் மொழி பெயர்ப்புகள்.ஆங்கிலமும் தமிழும் கலந்துகலந்து நம்மை எரிச்சல் உண்டாக்கும் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு நடுவில் இந்த அலைவரிசை நமக்கு தேனமுது .இவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துவதோடு நம் குழந்தைகள் , குடும்பத்தினர் அனைவரையும் இந்த தொலைக்காட்சியை பார்க்கச் செய்து அறிவியலையும் தமிழையும் ஒருங்கே கற்போம், கற்பிப்போம். இதை உங்கள் நண்பர்களிடமும் பகிருங்கள் தோழர்களே!!!
-Esakki Muthu
-► தமிழால் இணைவோம்
திங்கள், 30 மே, 2016
How to Remove undeletable files in windows using cmd ? உங்களது கணனியில் அழிக்க முடியாமல் எரர் வரும் பைல்-களை அழிப்பது எப்படி?
Author: Best Buy Offers | மே 30, 2016 |
ஏற்கனவே எமது தளத்தில் நீங்கள் கணனியில் நிறுவி இருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் சரியாக தொழிட்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள ஒரு உபாயத்தை கூறி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
ஆகவே இவ்வாறான சூழலில் வைரஸ் காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களால் நமது கணனியில் இருக்கும் சில பைல்களை அழிக்க முடியாமல் போகும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். அவ்வாறான நேரத்தில் எந்தவிதமான மென்பொருளையும் உபயோகிக்காமல் எமக்கு தேவையானகுறித்த பைல்-ஐ அழிப்பது எப்படி என்று பார்ப்போம்.
இந்த வேலையை செய்து கொள்ள நாம் கணனியில் இருக்கும் CMD-ஐ பயன்படுத்த போகிறோம். ஆகவே கணனியில் இருக்கும் CMD மூலம் அழிக்க முடியாமல் இருக்கும் பைல்-களை அழிப்பது எப்படி என்று பார்ப்போம்.
இவ்வாறான சந்தர்ப்பமொன்றில் முதலாவதாக உங்களது கணணியை ஒரு முறை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு குறித்த பைல்-ஐ அழிக்க முயற்சித்து பாருங்கள். அது வெற்றிபெறாவிட்டால் அடுத்த படிமுறைக்கு செல்லுங்கள்.
உங்களது கணனியில் ஸ்டார்ட் மெனுவிற்கு சென்று cmd-ஐ ரைட் கிளிக் செய்யுங்கள். அடுத்து "ரன் ஏஸ் எட்மினிஸ்டேடர்" என்பதை தெரிவு செய்து cmd-யை ஆரம்பியுங்கள்.

அடுத்து உங்களது கணனியில் cmd ஆரம்பிக்கப்படும்.
அதிலே DEL /F /Q /A C:\\Users\\உங்கள் யூசர்நேம்\\பைல் இருக்கும் இடம் (லொகேஷன்)\\அழிக்க வேண்டிய பைலின் பெயர்.
இவ்வாறு டைப் செய்து என்டர் பட்டன்-ஐ அழுத்துங்கள். இப்போது குறித்த பைல் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் டிலீட் செய்யப்பட்டு விடும். உதாரணமாக : DEL /F /Q /A C:\\Users\\Tech\\Desktop\\Test.txt
ஆகவே இந்த இலகுவான முறை மூலம் உங்களது கணனியில் குறிப்பிட்ட எதோ ஒரு காரணத்தினால் அழிக்க முடியாமல் இருக்கும் பைல்-ஐ அழித்து விட முடியும்.
Share this
www.masinfom.blogspot.com
How to find Silent Mode Phone தொலைந்து போன ஆன்ராயிடு போன் சைலண்ட் மோட்டில் இருக்கிறதா? மெசேஜ் அனுப்பி ரிங் செய்ய வைப்போம்.
Author: Best Buy Offers | மே 30, 2016 |
ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் அல்லது திருட்டு போனால் மிக இலகுவாக ட்ரேக் செய்து திருடியது யார் என்று போடோவுடன் தெரிந்து கொள்வது எப்படி என்பது பற்றிய பதிவு எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
போனை யாரவது திருடினால், திருடியது யார் என்று போட்டோவுடன் தெரிந்து கொள்ள வேண்டுமா?
திருட்டை விடுங்கள்..! நமது போனை நாமே எங்கேயாவது வைத்து விட்டு தேடும் போது சில வேலையில் போன் சைலன்ட் மோட்-இல் இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் போன் ரிங் ஆகினாலும் கூட, போன் இருக்கும் இடத்தை தேடிக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வோம். ஆகவே இன்றைய பதிவில் உங்கள் ஸ்மார்ட் போன் சைலன்ட் மொட்-இல் இருந்தாலும் கூட எப்படி ரிங் செய்ய வைத்து மிக இலகுவாக போன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
இதில் இருக்கும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், நாம் குறித்த ஒரு குறும் செய்தியை எமது போனுக்கு அனுப்பியே, போன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள போகிறோம்.
போன் சைலண்ட்-இல் இருக்கும் போது குறும்செய்தி அனுப்பி ரிங் செய்ய வைப்பது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் சைலண்ட்-இல் இருக்கும் போனை ரிங் செய்யவைக்க கூடிய ஆன்ராயிடு செயலியை பெற்றுகொல்லுன்கள்.அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, உங்களுக்கு தேவையான வாசகம் ஒன்றை டைப் செய்து Set என்பதை கிளிக் செய்யுங்கள்.



Share this
www.masinfom.blogspot.com
வியாழன், 26 மே, 2016
Memory Card உங்களது மெமரி கார்ட் போனில் Detect ஆகவில்லையா ? சரி செய்வது எப்படி?
Author: Infomas | மே 26, 2016 |
இவ்வாறு எமது ஸ்மார்ட் போனில் முக்கிய பங்கை வகிக்கும் இந்த மெமரி கார்டு-கள் பற்றியது தான் இன்றைய பதிவு.
சில வேளைகளில் எம்முடைய ஸ்மார்ட் போனில் குறிப்பிட்ட ஒரு மெமரி கார்டு-ஐ நிறுவும் போது குறிப்பிட்ட மெமரி கார்டு-ஐ ஸ்மார்ட் போனால் கண்டுபிடித்து கொள்ள முடியவில்லை என்ற பிழைச்செய்தி வரும்.
இவ்வாறு உங்களுடைய மெமரி கார்டு-ஐ ஸ்மார்ட் போன் Detect செய்ய முடியாத சந்தர்ப்பமொன்றில் எப்படி மெமரி கார்டு-ஐ சரி செய்து மறுபடியும் ஸ்மார்ட் போனில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்ய வைப்பது என்று பார்ப்போம்.

உங்களுடைய ஸ்மார்ட் போனை Off செய்து மெமரி கார்டு -ஐ போனில் இருந்து அகற்றுங்கள்.
இப்போது மெமரி கார்டு-ஐ கார்ட் ரீடர் ஒன்றின் மூலம் கணனியுடன் இணையுங்கள்.
உங்களது மெமரி கார்டு ரீடர் உங்களது கணனியில் தோன்றும் வரை காத்திருங்கள்.
மெமரி கார்டு-ஐ கணணி ஏற்றுக்கொண்டதும் My Computer-இற்கு சென்று மெமரி கார்டு-க்கான எழுத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
மெமரி கார்டு-ஐ கணனியில் இருந்து திறக்க முயற்ச்சிக்க வேண்டாம்.
அடுத்து உங்களது கணனியில் CMD-யை ஆரம்பியுங்கள்.
அதிலே கீழே காட்டி இருப்பது போல் டைப் செய்யுங்கள்.
chkdsk h: /r
உங்களுடைய மெமரி கார்டு-இன் எழுத்து, h என்பதுடன் replace செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
டைப் செய்த பின்னர் Enter பட்டன்-ஐ அழுத்துங்கள்.
இப்போது உங்களது மெமரி கார்டு -இல் Error செய்திகளை திருத்துவதட்கான ஸ்கேன் நடைபெறும்.
ஸ்கேன் முடிவடையும் வரை பொறுத்திருங்கள்.
![]() |
Add caption |
ஸ்கேன் முடிவடைந்த பின்னர் உங்களது மெமரி கார்டு-ஐ கணனியில் இருந்து அகற்றி மறுபடியும் உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவி பாருங்கள். இப்போது உங்களுடைய மெமரி கார்டு ஆனது எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் ஸ்மார்ட் போனில் வேலை செய்யும்.
எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களின் ஊடாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
English Blog ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ Please Visit: www.masinfom.blogspot.com █ ▇ ▆ ▅ ▄ ▂
Whatsapp Message வாட்ஸ்அப் மெசேஜ்-களை பாதுகாக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய வசதி
Author: Infomas | மே 26, 2016 |
அந்த வகையில் அண்மையில் வாட்ஸ்அப்-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தடித்த மற்றும் வளைந்த எழுத்துக்கள் மூலம் செட் செய்யும் வசதியை குறிப்பிடலாம். இந்த வசதியுடன் சேர்த்து, மேலும் பல்வேறு வசதிகளுடன் அண்மையில் வாட்ஸ்அப்-இல் அறிமுகமாகிய விடயங்களை பற்றி எமது தளத்தில் ஏற்கனவே பதிவொன்று எழுதப்பட்டது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறியிருந்தால், கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
வாட்ஸ்அப்-இல் அறிமுகமாகி இருக்கும் புதிய வசதிகள்
இவ்வாறு பயனுள்ள பல வசதிகளை அறிமுகப்படுத்தி வந்த வாட்ஸ்அப் நிறுவனம், தற்போது வாட்ஸ்அப் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட சிறந்ததொரு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதாவது வாட்ஸ்அப் என்க்ரிப்சன் எனப்படும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

( Encrypted )என்க்ரிப்சன் என்றால் என்ன?
என்க்ரிப்சன் எனப்படுவது, நாம் குறித்த ஒருவருக்கு அனுப்பும் செய்தி வெறும் டெக்ஸ்ட் வடிவத்திலேயே செல்லாமல், இரகசிய குறியீடுகளாக மாற்றப்பட்டு அனுப்பப்படுவதாகும்.
ஆகவே குறித்த செய்தி ஒன்றை நாம் மற்றுமொருவருக்கு அனுப்பும் போது, அந்த செய்தி குறித்த நபரை சென்றடையும் வரை யாராலும் ஹேக் செய்து தெரிந்து கொள்ள முடியாது.
உதாரணமாக நாம் எமது வாட்ஸ்அப் மூலம் எமது நண்பர் ஒருவருக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பும் போது, குறித்த மெசேஜ்-ஐ நடுவில் இருந்து யாரேனும் ஹேக் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. குறித்த ஹேகர், எமது மெசேஜ்-ஐ ஹேக் செய்து விட்டால், நேரடியாக அவரால் எம்முடைய மெசேஜ்-ஐ வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் எமது மெசேஜ் என்க்ரிப்சன் செய்யப்படுவதால், எமது மெசேஜ்-ஐ யாரேனும் ஹேக் செய்தாலும் அவர்களால் குறித்த மெசேஜ் என்ன என்று வாசித்து தெரிந்து கொள்ள முடியாது. ஏன் என்றால், எம்முடைய மெசேஜ் வெறும் எழுத்துகளாக இல்லாமல் சிறப்பு குறியீடுகளாக காணப்படுவதே இதற்கு காரணம் ஆகும்.
இந்த என்க்ரிப்சன் வசதியை தான், தற்போது வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ஆகவே இனி நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு வாட்ஸ்அப் மெசேஜ்-உம் சிறந்ததொரு பாதுகாப்பு முறை மூலம் பாதுகாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வசதியை பெற்றுக்கொள்வது எப்படி?
இந்த வசதியை உங்களது வாட்ஸ்அப் கணக்கில் செயற்படுத்த, உங்களது வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்திடுங்கள்.
அப்டேட் செய்ததும், உங்களுடைய வாட்ஸ்அப் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று, அங்கே Account என்பதில் Security என்பதை தெரிவு செய்யுங்கள்.

இந்த மெனு-வில் உங்களது வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் அழைப்புக்களை (கால்) என்க்ரிப்ட் செய்வதற்கான வசதி காணப்படும்.
ஆகவே இனி நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்-உம் என்க்ரிப்ட் செய்யப்பட்டே அனுப்பப்படும்.
இதுவரை வாட்ஸ்அப்-இல் அறிமுகமாகி உள்ள வசதிகளில், இந்த புதிய வசதி மிக முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Blog ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ Please Visit: www.masinfom.blogspot.com █ ▇ ▆ ▅ ▄ ▂
Whatsapp Gold is Fack வாட்ஸ்அப் பயனர்கள் அவசியம் அறிய வேண்டியது!
Author: Best Buy Offers | மே 26, 2016 |

தற்பொழுது வாட்ஸ்அப் கோல்ட் பதிப்பு வெளியாகி உள்ளது. இது பிரபலங்களால் பயன்படுத்தப்படும் சேவையாகும். தற்பொழுது உங்களாலும் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும். வாட்ஸ்அப் கோல்ட் மூலம் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள முடிவதுடன் தாம் தவறுதலாக அனுப்பிய செய்திகளையும் அழிக்க முடியும்.

Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ அல்லது யாரேனும் ஹாக் செய்து விட்டாலோ நம் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை என்றால் நாம் நம் ஈமெயி...
-
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வள...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...