சனி, 6 நவம்பர், 2021
உங்கள் Cryptocurrency-யை பாதுகாப்பாக வைப்பது எப்படி?
உங்கள் Cryptocurrency-யை பாதுகாப்பாக வைத்திருக்க 6 சிறந்த வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
கிரிப்டோகரன்சிகள் சந்தையில் தோன்றியதிலிருந்து, அவை பல தொழில்களை சீர்குலைத்துள்ளன. இருப்பினும் Bitcoin, Ethereum மற்றும் பிற பிரபலமான நாணயங்களில் மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
பணம் இருக்கும் இடத்தில் எப்போது வேண்டுமானாலும் திருட்டு நடக்கலாம். அதற்கு கிரிப்டோகரன்சி மட்டும் விதிவிலக்கு அல்ல. பணத்தை கையிலும் பையிலும் வைத்திருக்கும்போது மட்டுமல்ல, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்ப இணையத்திலும் இப்போது ஹாக்கிங் என்ற பெயரில் திருட்டு நடக்கிறது. யார் எடுத்தார் என்பது கூட தெரியாமல் நம் பணம் காணாமல் போய்விடும்.
இப்போது திருடர்கள் கிரிப்டோ நாணயங்களையும், அது தொடர்பான தளங்களில் வைத்திருக்கும் பணத்தையும் திருட ஆரம்பித்துவிட்டனர்.
கிரிப்டோகரன்சிகள் பல வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த நிதி சொத்து. ஆனால் அவை மிகவும் பயனுள்ளதாக இருந்தபோதிலும், அவை அபாயங்கள் இல்லாமல் இல்லை - உங்கள் private Keys இழப்பு, கணினி செயலிழப்பு மற்றும் திருட்டு ஆகியவை உங்கள் நாணயங்களை நிரந்தரமாக வெற்றிடமாக மாற்றிவிடும்.
உங்கள் Private Keys என்பது உங்கள் கிரிப்டோகரன்சி வாலட்டுக்கான அணுகலை வழங்கும் முக்கியமான தகவலாகும். தொலைந்து போகாமல் அல்லது திருடப்படாமல் பாதுகாக்க, அவற்றை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பது அவசியம்.
உங்கள் கிரிப்டோகரன்சியை எவ்வாறு பாதுகாப்பது?
கிரிப்டோகரன்சிகள் வேகத்தை அதிகரித்து வருகின்றன, ஆனால் அவை அபாயங்களுடன் வருகின்றன. Bitcoin, Etherium, Litecoin போன்றவற்றின் மதிப்பு தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருக்கும். கிரிப்டோகரன்சியை வர்த்தகம் செய்யும் போது உங்கள் ஆன்லைன் வாலட்டை பாதுகாக்க பல வழிகள் உள்ளன. உங்கள் வாலட்டை பாதுகாக்க உதவும் சில குறிப்புகள் இங்கே உள்ளன.
1-வலுவான கடவுச்சொல் (Password) மூலம் உங்கள் கிரிப்டோகரன்சி வாலட்டைப் பாதுகாக்கவும்:
பல சேவைகளில், குறிப்பாக கிரிப்டோகரன்சி சேவைகளில் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டாம். பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்வது முக்கியம். இரண்டு காரணி அங்கீகாரத்தை (two-factor authentication) செயல்படுத்துவதை உறுதிசெய்து, சேவை மீறப்பட்டால் உங்கள் கடவுச்சொற்களை தவறாமல் மாற்றவும். password manager-ஐ பயன்படுத்துவது இந்த செயல்முறையைத் தானியங்குபடுத்துவதற்கும் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் உதவும்.
2- ஆன்லைன் வாலட்களில் அதிக கிரிப்டோவை வைக்க வேண்டாம்:
கிரிப்டோகரன்சியை ஆஃப்லைனில் வைத்திருப்பதே அதைச் சேமிப்பதற்கான சிறந்த வழியாகும். ஹேக்கர்கள் சமீபகாலமாக ஓன்லைன் வாலட்களை குறிவைத்து வருகின்றனர், எனவே நுகர்வோர் தாங்கள் எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஆஃப்லைன் சேமிப்பகம் சிறந்த வழி, அதைச் செய்வதற்கு hardware wallet ஒரு சிறந்த கருவியாகும். ஒரு பாதுகாப்பானது, மேலும் அதை பயன்படுத்த எளிதானது - USB வழியாக அதை கணினி அல்லது தொலைபேசியில் செருகவும், பிறகு உங்கள் நாணயத்தை மாற்றவும்.
3- எந்த நம்பகத்தன்மையற்ற கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை (cryptocurrency exchange) நம்புவதைத் தவிர்க்கவும்:
நீங்கள் கிரிப்டோகரன்சி சந்தையில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால், யாரை நம்புவது மற்றும் யாரிடமிருந்து ஓடுவது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் Ethereum அல்லது வேறு ஏதேனும் கிரிப்டோ நாணயத்தை வாங்குவதற்கு முன் Trustpilot இல் மதிப்புரைகளைச் சரிபார்ப்பது ஒரு நல்ல தொடக்கத் தளமாகும்.
4- உங்கள் mobile traffic-ல் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்:
கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், Phishing campaigns மோசமாகிவிடும். ஃபிஷிங்கைத் தவிர, தீங்கிழைக்கும் பயன்பாடுகள் உங்கள் மொபைல் சாதனத்திற்கான அணுகலைப் பெறலாம் மற்றும் உங்கள் உள்நுழைவுச் சான்றுகளைத் திருடலாம். நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கலாம், ஆனால் இந்த தீங்கிழைக்கும் மொபைல் பயன்பாடுகள் நீங்கள் என்ன தட்டச்சு செய்கிறீர்கள் அல்லது உங்கள் திரையில் படங்களை எடுக்கலாம். உங்கள் மொபைல் சாதனத்திலும் வைரஸ் தடுப்பு மென்பொருளை (antivirus software) வாங்குவது நல்லது.
5- உங்கள் private key-ஐ பகிர்வதைத் தவிர்க்கவும்:
Private key என்பது ஒரு பயனரின் டிஜிட்டல் நாணயத்திற்கான அணுகல் குறியீடாகும். உங்கள் தனிப்பட்ட விசையை உங்கள் பயனர் பெயராகவும், உங்கள் பொது முகவரியை உங்கள் மின்னஞ்சல் முகவரியாகவும் கருதுங்கள். உங்கள் private keyயை வேறு யாரேனும் அணுகினால், அவர்கள் உங்களின் அனைத்து கிரிப்டோகரன்ஸிகளையும் திருடலாம். அதனால்தான் இந்தத் தகவலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம், அதை யாருடனும் பகிர வேண்டாம். தகவல் கசிவு அல்லது ஹேக் தாக்குதல்களைத் தவிர்க்க ஒரு துண்டு காகிதத்தில் அதனை குறித்து கொள்வது சிறந்தது.
6- வழங்குநர்கள் வழங்கும் வாலட்களில் இருந்து ஓடிவிடுங்கள்:
மூன்றாம் தரப்பினரால் கட்டுப்படுத்தப்படும் சேவையகங்களில் தனிப்பட்ட விசைகளை ("வாலட்") சேமிக்கும் முறை ஒரு பெரிய பாதுகாப்பு அபாயமாகும். உங்கள் நாணயங்களின் தலைவிதி வேறொருவரின் கைகளில் உள்ளது என்று அர்த்தம். யாரேனும் தங்கள் சேவையகங்களில் ஒன்றை அணுகினால், அவர்கள் அவற்றை தொலைதூரத்தில் காலி செய்யலாம். யாராவது உள்ளே நுழைந்தால், அவர்கள் எல்லாவற்றையும் திருடலாம். மற்றும் அதை திரும்ப பெற வழி இல்லை.
Cryptocurrency மிகவும் பிரபலமான நிலையில், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் கெட்ட எண்ணம் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடுமையான பாதுகாப்பு நெறிமுறையைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் கிரிப்டோகரன்சி சொத்துக்களைப் பாதுகாக்கவும், மோசடி செய்பவர்களிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கவும் மற்றும் சாத்தியமான இழப்புகளிலிருந்து பாதுகாப்பாகவும் இருக்க முடியும்.
சனி, 3 ஏப்ரல், 2021
தா.பாண்|டியன் - கம்யூனிஸ்ட் கட்சி - D.Pandiyan life History - Communist party
Author: Infomas | ஏப்ரல் 03, 2021 |
உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் தாவீது (டேவிட்) - நவமணி தம்பதிக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் தா.பாண்|டியன் (18.5.1932). அந்தக் காலத்தில் கல்விச் சேவை செய்வதற்காக கிறிஸ்தவ மிஷனரி தொடங்கிய பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தனர் பாண்டியனின் பெற்றோர். காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளியில் ஆரம்பக்கல்வி. பின்னர், உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் பாண்டியன்.
மேடையில் கன்னிப்பேச்சு சிறந்த பேச்சாளர். உசிலம்பட்டியில் 8-ம் வகுப்பு படித்தபோது அவரைக் கேட்காமலேயே பேச்சுப் போட்டியில் சேர்த்துவிட்ட ஆசிரியர், “உன் அப்பா வாத்தியார்தானே, அவரை எழுதித் தரச் சொல்லிப் பேசு” என்று சொல்லிவிட்டார். தந்தையோ, “படிக்கிற வயசுல மேடையேறுன யாரும் உருப்பட்டதில்லை” என்று சொல்லிவிட்டார். உரை எழுதிக் கொடுத்து பயிற்சியும் தந்தவர் அண்ணன் தா.செல்லப்பா. பிற்காலத்தில் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் இவர். ஒருகட்டத்தில் “நீயே போட்டிக்குத் தயாராகு” என்று அண்ணன் தந்த ஊக்கத்தில் சிறந்த பேச்சாளராக உருவானார் பாண்டியன். காரைக்குடி கம்பன் கழகத்துக்கும் இதில் பெரும் பங்குண்டு.
துடிப்பான மாணவர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இன்டர்மீடியட் சேர்ந்தபோதே (1953) கட்சியிலும் சேர்ந்துவிட்டார். மாணவர் பேரவைத் தேர்தலிலும் வெற்றி. பின்னர், அதே கல்லூரியில் ஆங்கில ஆசிரியரான பிறகு, கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டினார். 1957 தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் புனைப்பெயரில் அவர் பேச, ஒரு பத்திரிகையில் உண்மையான பெயர் வந்துவிட்டது. வேலையை ராஜினாமா செய்யச் சொன்னார் கல்லூரி முதல்வர்.
அந்நேரம் பார்த்து பாண்டியனை அழைத்த அழகப்பா கல்லூரி நிறுவனரான அழகப்பச் செட்டியார், “தலைமறைவாக இருந்துகொண்டே போலீஸிடம் சிக்காமல் அரசியல் நடத்துகிற சாமர்த்தியசாலிகள் அல்லவா கம்யூனிஸ்ட்டுகள்... நீ இப்படி மாட்டிக்கொண்டாயே?” என்றார். கூடவே, லண்டனில் தான் சட்டம் படித்த போது வாங்கிய மார்க்ஸ் எழுதிய புத்தகங்களை தா.பா.விடம் கொடுத்தார் செட்டியார். “நம் கல்லூரியில் மாணவர் பேரவைத் தலைவராக வென்ற எந்த மாணவனும், ‘அரியர்’ வைக்காமல் தேர்ச்சி பெற்றதில்லை. நீ இரண்டிலும் வென்றாயல்லவா... அதற்குத்தான் இந்தப் பரிசு!” என்று ஆச்சரியப்பட வைத்தார்.
தாமதமாக உணர்ந்த பேரன்பு! தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக, இரண்டு வயதில் தந்தையை இழந்த ஜாய்சி என்ற பெண்ணை தா.பா.வுக்குத் திருமணம் செய்துவைத்தார் அப்பா தாவீது. பாண்டியனுக்கு டேவிட் ஜவஹர் என்ற மகனும், அருணா, பிரேமா ஆகிய மகள்களும் உள்ளனர். வெகுசீக்கிரமே, கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளரானதால் வேலையை விட்டுவிட்டு சென்னைக்குப் போய்விட்டார் தா.பா. அரசியலுக்காக சென்னையில் சட்டம் படித்தவர், நீதிமன்றத்துக்குச் செல்லாமல் ‘ஜனசக்தி’யில் கட்டுரை எழுதுவது, பொதுக்கூட்டம் என்று இயங்கிவந்தார். காரைக்குடியில் பள்ளி ஆசிரியையாக இருந்த தனது மனைவி அனுப்பிவைத்த சம்பளத்திலேயே இவரது ஜீவனம் நடந்தது. “திருமணமான புதிதில் அவளது சின்ன எதிர்பார்ப்பான பூவைக் கூட நான் வாங்கிக் கொடுத்ததில்லை. பட்டது போதும் என்று 2012-ல் மறைந்துவிட்டாள். இப்போது அவளது படத்துக்குப் பூச்சூடி கடனைத் தீர்க்கிறேன்” என்கிறார் பாண்டியன்.
தலைசிறந்த ஜனநாயகவாதி! இந்த உலகத்தை மீட்க ஒரே ஒரு கட்சியால்தான் முடியும் என்றெல்லாம் கருத மாட்டார். மாற்றுக் கட்சிகள், தலைவர்களின் கொள்கைகளையும் மதிப்பவர். ஆரம்பகால கம்யூனிஸ்ட் கட்சியினர், திகவை ‘திராவிடர் கலகம்’ என்று இழிவுபடுத்தி வந்த காலத்திலேயே பெரியாரைப் புகழ்ந்துபேசி கட்சியின் கண்டனத்துக்கு உள்ளானவர். எந்தக் கட்சி எங்கே பொதுக்கூட்டம் போட்டாலும் முதல் ஆளாகப்போய்விடுவார். அண்ணாவை அவரது மேடையிலேயே எதிர்த்துப் பேசியிருந்தாலும், 1967-ல் திமுக வெற்றிவிழா சென்னை கடற்கரையில் நடந்தபோது, பார்வையாளர் வரிசையில் போய் உட்கார்ந்து கவனித்தவர். இப்போதும்கூட திராவிடக் கட்சிகளின் ஆட்சியை விமர்சிக்கிறபோது, அவற்றின் சாதனைகளைச் சொல்லாமல் மறைப்பதில்லை.
கைகொடுத்த ‘கை’! கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, தோழர் டாங்கே, கல்யாணசுந்தரம் போன்றோர்களோடு சேர்ந்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய பாண்டியன், 1983 முதல் 2000-ம் வரையில் அதன் மாநிலச் செயலாளராக இருந்தார். சட்டமன்றத்துக்கு 6 முறை, நாடாளுமன்றத்துக்கு 3 முறை என்று மொத்தம் 9 தேர்தல்களில் போட்டியிட்ட தா.பாண்டியன் ஒருமுறைகூட தன் கட்சி சின்னத்தில் வென்றதில்லை. ஆனால், தனிக்கட்சி நடத்திவந்த காலகட்டத்தில் வடசென்னையில் கை சின்னத்தில் போட்டியிட்டு இருமுறை எம்.பி.யாகியிருக்கிறார்.
மும்முறை செயலாளர்! 2000-ல், ஐககவைக் கலைத்துவிட்டு தாய்க்கட்சியில் மீண்டும் இணைந்தார். 2005-ல், கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மும்முறை அப்பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்பட்டவர், 2015 வரையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். இளம் வயதிலேயே கட்சியின் தேசியக்குழு உறுப்பினரான அவர், இப்போதும் அப்பொறுப்பில் தொடர்கிறார்.
செத்துப் பிழைத்தவர்! சிறந்த மொழிபெயர்ப்பாளர்.
இந்திரா காந்தி தொடங்கி ராஜீவ் காந்தி வரையில் பலரது பேச்சுக்களை மேடையில் மொழிபெயர்த்திருக்கிறார். 1991 மே 21-ல் குண்டுவெடிப்பில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தின்போது அவருக்குப் பின்னால் இருந்த தா.பா.வும் தூக்கிவீசப்பட்டார். பத்திரிகையில் வெளியான இறந்த 19 பேர் பட்டியலில் முதலில் இவரது பெயரும் இடம்பெற்றது. போலீஸ் அதிகாரிகளும் வீட்டுக்கு போன் செய்து பாண்டியன் இறந்ததாகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், சென்னை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு அதிசயமாக உயிர்பிழைத்தார் தா.பா. அங்கேதான் ராஜீவின் உடல் வைக்கப்பட்டிருந்தது என்பதால், அந்த மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்டக் காரணமாக இருந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால், ஈழத்தமிழர்களின் உரிமைக்காக நெடுமாறனுடன் சேர்ந்து தொடர்ந்து குரல் கொடுத்தார்.
பிடிவாதக்காரர்! சென்னை துறைமுகத்தில் தினக்கூலித் தொழிலாளர்கள் 58 பேர் நீதிமன்றத்தை நாடி, 1992-ல் பணி நிரந்தர உத்தரவு பெற்றனர். அதை ஏற்காமல் அப்போதைய இயக்குநர் மேல்முறையீடு செய்ததால், அதைக் கண்டித்து காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருந்தார் தா.பா. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த, இவரது கூட்டணியில் இருந்த அதிமுகவும், காங்கிரசும் கேட்டுக்கொண்டும் தன் பிடிவாதத்தைக் கைவிடவில்லை.
கடைசியில், வழக்கை வாபஸ் பெற்று 58 பேரையும் பணிநிரந்தரம் செய்தது துறைமுகக் கழகம். எளிமையிலும் பிடிவாதம். இப்போதும்கூட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.
எழுத்தாளர் தா.பா.! 1962-ல் ‘ஜனசக்தி’யில் எழுத ஆரம்பித்தவர், இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் ‘சவுக்கடி' என்ற புனைப்பெயரில் இவர் எழுதிய கட்டுரைகளுக்குக் கட்சி எல்லையைத் தாண்டியும் வாசகர்களுண்டு. சுய கட்சி விமர்சனத்தில் இவரை மிஞ்சிய சமகாலப் பொதுவுடமைவாதி யாருமில்லை. 16 ஆண்டு காலம் 'ஜனசக்தி' ஆசிரியராக இருந்த இவர் இதுவரையில் 13 சிறு வெளியீடுகள், 8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். அதில் ‘மேடைப்பேச்சு’, ‘பொதுவுடமையரின் வருங்காலம்’ நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை!
தனிநபர் வரலாறு! தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவருக்கு (ஜீவா) சிலை வைத்தபோது, அந்தக்கு ழுவின் தலைவராக இருந்தவர் தா.பா. “தனிநபர்களைவிட இயக்கமே பெரிது” என்று சொல்லும் கம்யூனிஸ்ட் கட்சியில், “தனிநபருக்கும் வரலாற்றில் இடமுண்டு” என்று வாதிடும் துணிச்சலுக்கு மறுபெயர்தான் தா.பா.!
D.Pandiyan life History - Communist party
சனி, 13 பிப்ரவரி, 2021
ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்! - Top Facts about elephants
Author: Infomas | பிப்ரவரி 13, 2021 |
ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்!
"ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்க சார்? மிஞ்சிப்போனா ஒரு 5 கிலோ? எவ்ளோ தண்ணி குடிப்பீங்க? ரொம்ப அதிகமா ஒரு 8 லிட்டர்? நீங்க சாப்பிடுறதுனால, உங்களைத் தவிர வேற யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கா சார்..?"
யானைகள் அப்படி என்ன பெரிதாக செய்துவிடுகிறது என்று கேட்கும் அறிவாளிகளுக்கு இதைவிட எளிமையாக பதிலளிக்க முடியவில்லை. யானைகள் மிக எதார்த்தமான குழந்தைகள். யானை எனும் பேருயிரியின் மீதான நம் காதல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
"ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும் சார். ஒரு யானை, ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் சார். சராசரியா அதனோட உடல் எடையில இருந்து 5 சதவிகித உணவை சாப்பிடும். ஒரு நாளைக்கு ஒரு யானை 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். இந்த 250 கிலோ உணவுங்கிறதுல, 10 சதவிகிதம் விதைகள் இருக்கும். அதாவது 25 கிலோ விதைகள், குச்சிகள் இருக்கும். அதுல கடைசிக்கும் கடைசியா 10 கிலோ விதைகளும் குச்சிகளும் திரும்ப மண்ணுல விதைக்கப்படும். நினச்சுப் பாருங்க, ஒவ்வொரு யானையும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 கிலோ விதைகளை விதைக்குது சார்! எண்ணிக்கையில சொல்லணும்னா, சராசரியா ஒரு யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகளை விதைக்குது…"
அந்தப் பேருயிரிகளின் பிரமிக்கவைக்கும் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறதா?
500 விதைகளில் குறைந்தது 100 விதைகளாவது முளைத்துவிடும். இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான். அப்படியென்றால், ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. வருடத்திற்கு 36 ஆயிரத்து ஐநூறு மரங்கள். மொத்தமாகப் பார்த்தால் ஒரே ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளரக் காரணமாகிறது. மீண்டும் சொல்கிறோம், இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான்!
இன்னும் ஆச்சரியங்கள்!
"இப்போ இவ்வளவு சாப்பிடணும்னா அது எவ்வளவு பயணம் செய்யணும்? இப்போவெல்லாம் நம்மளால இந்த இத்துனூண்டு உடம்ப தூக்கிட்டு 10 கிலோமீட்டர்கூட சேர்ந்தாப்பொல நடக்க முடியல. ஆனா ஒரு யானையால ஒரு நாளைக்கு 190 கிலோமீட்டர் நடக்க முடியும்னு ஆய்வுகள் சொல்லுது. சராசரியா ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டர் தூரம் யானைகள் நடக்கும். அதுவும் 4-5 மணி நேரத்துல."
அப்படியென்றால் சராசரியாக மணிக்கு 15 லிருந்து 20 கிலோமீட்டர் வேகம். யானைகள் இவ்வளவு வேகமாக நடக்குமா என்று வியப்பா இன்னொரு தகவல். யானைகள் மிக வேகமாக ஓடும். யானைகள் துரத்தினால் மனிதர்களால் ஓடித் தப்பிக்க முடியாது. மனிதர்களைவிட 2 மடங்கு வேகத்தில் யானைகள் ஓடும்.
ஏன் 4-5 மணிநேரம் மட்டுமே நடக்கின்றன? மற்ற நேரங்களில் என்ன செய்யும்?
"சாப்புடும்..."
அவ்வளவு நேரமுமா?
"ஒரு நாளைக்கு 12 - 18 மணி நேரம் சாப்பிட்டுகிட்டே இருக்கும் சார்."
அப்போ தூக்கம்?
"யானைகள் இரண்டு மணிநேரம் மட்டுமே தூங்கும்."
யானைகள் இவ்வளவு பிரமிப்பானவையா?
"இன்னொரு சுவாரஸ்யமான தகவல். எந்த பாலூட்டிகளைவிடவும் அதிகமான பேறு காலம் கொண்டவை யானைகள்தான் சார். 22 மாசம்!"
காடுகளின் மூத்த தாய் யானைகள்தான். பழங்காலத்திற்கும் இன்றைய நவீன உலகுக்கும் உள்ள ஆதி உயிர்த் தொடர்புச் சங்கிலியின் எச்சம் இந்த யானைகள்தான்..
சொல்லக் கூடாதவை - சொல்ல வேண்டியவை - Mention and Not mention to Others
Author: Infomas | பிப்ரவரி 13, 2021 |
சொல்லக் கூடாதவை :
1.படிக்கிலன்னா உருப்படாம போய்டுவ.
2.உழைக்கிலன்னா பிச்சைதான் எடுக்கனும்.
3.பணம் இல்லாட்டி ஒரு நாய் உன்னை மதிக்காது.
4.நீ எல்லாம் எச்சில் இலை எடுக்கவும் எச்சில் தட்டு கழுவதான் லாயக்கு.
5.இந்த வாட்டி பரிட்சைல பாஸாகலன்னா ஸ்டெய்ட்டா எருமை மாடு மேய்க்கதான் உன்னை அனுப்ப போறேன்.
( எருமை மாடு மேய்ப்பது அவ்வளவு எளிதான விஷயமா?)
6.காசு பணம் இல்லன்னா சொந்தக்காரங்க மதிக்க மாட்டாங்க.
(எல்லா உறவுகளுமே அப்படித்தான் இருக்கிறார்களா?)
7.அப்பா அம்மா செத்ததுக்கு அப்புறம் நீ பிச்சைதான் எடுக்கப் போற.
8.வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊர் அடக்கும்.
9.பணம் என்ன மரத்திலா காய்க்கிறது ?
10.உன்னோட திமிருக்கு நீ அழிஞ்சிதான் போகப் போற.
சொல்ல வேண்டியவை :
1.படிச்சா நல்லா வாழலாம்.படிச்சா வாழ்க்கையில முன்னுக்கு வரலாம்.
2.உழைத்தால் நிறைய சம்பாதிக்கலாம்.
3.நிறைய பணம் சம்பாதித்தால் மதிப்புடன் வாழலாம்.
4.படிச்சி முன்னுக்கு வந்து விட்டால் நாலு பேருக்கு வேலை கொடுக்கலாம்.
5.நீ இந்த பரிட்சைலயும் பாஸாய்டுவ.
எல்லா பரிட்சைலயும் பாஸாய்டுவ எனக்கு உன் மேல அந்த நம்பிக்கை இருக்கு.நீ நல்லபடியா மேல வரமுடியும்.
6.காசு பணம் வந்ததுக்கு பிறகும் எல்லா உறவுகளையும் ஒரே மாதிரி மதிப்பா நடத்தனும்.
7.அப்பா அம்மா நான் சாதிச்சிட்டேன்
என்று சொல்லனும்.
8.படித்து ஊர் மெச்ச வாழும் உறவுகள் மற்றும் நண்பர்கள் பட்டியலை பிள்ளைகளிடம் காட்டுங்கள்.
9.உழைப்பின் மூலமாக வரும் பணத்தின் மதிப்பை புரிய வைக்க வேண்டும்.
10.உன்னோட திறமைக்கு நீ ரொம்ப சீக்கிரமா முன்னுக்கு வர முடியும்.
சொல்ல கூடாதவை.சொல்ல வேண்டியவை வரிசை எண்படி ஒவ்வொன்றையும் பொருத்தி ஒரு முறை படிக்கவும்.
சொல்ல கூடாதவை பட்டியலில் உள்ள வாசகங்களை அன்றாடம் பெரும்பாலான வீடுகளில் உச்சரிக்கப்படுவதை நாம் கேட்கிறோம்.
ஏன் சார் இப்படி என்றால் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காகதான்
நான் இப்படி பேசுகிறேன் என்ற பதில் கிடைக்கிறது.
ஆனால் எப்படி ஆகக் கூடாது என்று நாம் நினைக்கிறோமோ அப்படி ஆகி நின்ற பிறகுதான் நாம் எங்கே என்ன தவறு செய்தோம் என்று யோசிக்க தொடங்குகிறோம்.
எப்படி ஆக வேண்டும் என்று நினைக்கும் நினைப்பை விட எப்படி ஆகக் கூடாது என்று அதிகமாக நினைப்பதால் மற்றவர்களை அவ்விதம் ஆகி விடக்கூடாது என்று அறிவுறுத்தும் விஷயம் மட்டுமே நடந்து முடிந்து விடுகிறது.
எந்த விஷயத்தை இது நடக்கக் கூடாது என்று பய உணர்வுடன் சிந்திக்கிறோமோ அந்த பய உணர்வு ஆழ்மனதில் நடக்க விரும்பாத விஷயத்தை ஆழமாக பதியும்படி செய்து விடுகிறது.
பெரும்பாலான பிள்ளைகள் தேர்வுகளில் தோற்பதற்கு படிக்கிலன்னா நீ உருப்பட மாட்ட என்ற பெற்றோரின் தொடர்ச்சியான மிரட்டல் நான் உருப்படாமல் போய் விடுவேனா என்ற அச்ச உணர்வை பிள்ளைகளின் ஆழ்மனதில் ஆழமான எண்ணமாக பதிந்து அப்படியே அவர்கள் உருப்படாமல் போய் விடுகிறார்கள்.
படிப்பு மட்டுமல்ல வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் எதிர்மறையான விளைவுகளை உதாரணம் காட்டாமல் எந்த விஷயத்தை செய்தாலும் அதில் இருந்து கிடைக்க இருக்கும் நற்பலன்களை திரும்ப திரும்ப வலியுறுத்தி கூறுவதன் மூலமாக பிள்ளைகள் நல்ல மன வலிமையையும் நம்பிக்கையும் அடைவார்கள்.
உன்னால் முடியும்.எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கிறது.நீ திறமைசாலி உனக்கு அது மிகவும் எளிதான விஷயம்.இதை செய்வதன் மூலமாக நீ வெற்றி பெற முடியும் உனக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.
சமூகத்தில் நீ பெரிய புகழுடன் வாழ அற்புதமான வாய்ப்பு உனக்காக காத்திருக்கிறது.
இது போன்ற வாக்கியங்கள் அறிவுரை கூறுபவர் பெறுபவர் இருவருக்கும் நல்ல நம்பிக்கையும் சாதனை செய்ய உத்வேகத்தையும் ஏற்படுத்தும் வாக்கியங்கள் ஆகும்.
நம்முள் நினைக்கும் எண்ணங்களையும் பிறரிடம் பேசும் வார்த்தைகளையும் நற் பலன்களை அளிக்கக் கூடிய நேர்மறை வார்த்தைகளை உச்சரிப்போம். வார்த்தைகளால் புது வாழ்வை துவக்குவோம்.

world Important Days - *உலகின் முக்கிய தினங்கள் :-
Author: Infomas | பிப்ரவரி 13, 2021 |
*உலகின் முக்கிய தினங்கள் :-
÷÷÷÷÷÷÷ ÷÷÷÷÷÷ ÷÷÷÷÷÷÷÷
*ஜனவரி*
=========
01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம்.
05 - உலக டீசல் எந்திர தினம்
06 - உலக வாக்காளர் தினம்
08 - உலக நாய்கள் தினம்
09 - உலக இரும்பு தினம்
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
29- இந்திய செய்தித்தாள்கள் தினம்
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம்
*பிப்ரவரி*
÷÷÷÷÷÷÷÷
01 - உலக கைப்பேசி தினம்
03 - உலக வங்கிகள் தினம்
14 - உலக காதலர் தினம்
15 - உலக யானைக்கால் நோய் தினம்
19 - உலக தலைக்கவச தினம்
24 - தேசிய காலால் வரி தினம்
25 - உலக வேலையற்றோர் தினம்
26 - உலக மதுபான தினம்
28- தேசிய அறிவியல் தினம்
*மார்ச்*
======
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்
29 - உலக கப்பல் தினம்
*ஏப்ரல்*
÷÷÷÷÷÷
01 - உலக முட்டாள்கள் தினம்
02 - உலக ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம்
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
15 - உலக பசும்பால் தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
*மே*
÷÷÷÷
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
09 - உலக கணிப்பொறி தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
18 - உலக டெலஸ்கோப் தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
27 - உலக சகோதரர்கள் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
30 - உலக முதிர்கன்னிகள் தினம்
31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்
*ஜீன்*
÷÷÷÷
01 - உலக டயலசிஸ் தினம்
02 - உலக ஆப்பிள் தினம் (Apple Sys)🛏🛏🛏
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
10 - உலக அலிகள் தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
25 - உலக புகையிலை தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்
*ஜீலை*
======
01 - உலக மருத்துவர்கள் தினம்
08 - உலக யானைகள் தினம்
10 - உலக வானூர்தி தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
14 - உலக மஞ்சள் தினம் (Turmeric)
16 - உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை)
*ஆகஸ்ட்*
========
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
19 - உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம்
29 - உலக தேசிய விளையாட்டு தினம்
30 - மாநில விளையாட்டு தினம்
*செப்டம்பர்*
÷÷÷÷÷÷÷÷÷÷
05 - ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
06 - ஹிந்தி தினம்
07 - பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி)
08 - உலக எழுத்தறிவு தினம்
10 - உலக பேனா தினம்
12 - உலக மின்சார தினம்
13 - உலக மாலைக்கண் நோய் தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
20 - உலக எழுத்தாளர்கள் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
25 - உலக எரிசக்தி தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்
28 - உலக எரிமலை தினம்
29 - உலக குதிரைகள் தினம்
*அக்டோபர்*
==========
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்
*நவம்பர்*🛏
÷÷÷÷÷÷÷÷÷
14-குழந்தைகள் தினம்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்
27 - உலக காவலர்கள் தினம்
28 - உலக நீதித்துறை தினம்
*டிசம்பர்*🛏🛏
÷÷÷÷÷÷÷÷
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
15 - உலக சைக்கிள் தினம்
23 - விவசாயிகள் தினம்
25 - திருச்சபை தினம்💐💐💐💐💐💐💐💐💐💐
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021
சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது
Author: Infomas | பிப்ரவரி 07, 2021 |
சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது
*தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்
*திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.
*Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.
தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
*இன்னும் கல்யாணம் ஆகலயா?*
*குழந்தைகள் இல்லையா?*
*இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?*
*ஏன் இன்னும் Car வாங்கவில்லை?*
இது நமது பிரச்சினை இல்லைதானே!"
*தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!
நண்பருடன் Taxiயில் சென்றால. *இம்முறை இயலாவிட்டால் மறுமுறை* நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.
*மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்*. மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.
*அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்*. அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.
*நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்*. அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.
யார் உதவினாலும் பாரபட்சமின்றி *நன்றி சொல்லுங்கள்*.
. பொதுவில் புகழுங்கள். *தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்*.
*உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.*
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.
*யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்*. அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.
*யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்*. அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். *விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.
*நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்*.
*கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்*.
நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் *சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்*. அவர்களாகவே சொன்னால் தவிர.
தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், *Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்*. கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.
யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக *வலிய போய் தலையிடாதீர்கள்.*
வியாழன், 21 ஜனவரி, 2021
முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை - old Generation - Tamil Generation
Author: Infomas | ஜனவரி 21, 2021 |
தவளை கத்தினால் மழை.
🌝 அந்தி ஈசல் பூத்தால்அடை மழைக்கு அச்சாராம்.
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.
🌝 தை மழை நெய் மழை.
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.
🌝 வெள்ளமே ஆனாலும்
பள்ளத்தே பயிர் செய்.
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.
🌝 களர் கெட பிரண்டையைப் புதை.
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
🌝 நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு.
🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்.
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்.
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை.
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
🌝 உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ.
🌝 அகல உழவதை விட
ஆழ உழுவது மேல் .
🌝 புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு.
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
🌝 ஆடு பயிர் காட்டும்
ஆவாரை கதிர் கட்டும்.
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்.
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.
🌝 தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம்.
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.
🌝 சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்.
🌝 விதை பாதி வேலை பாதி.
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை.
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
🌝 கோப்பு தப்பினால்
குப்பையும் பயிராகாது.
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்.
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்.
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.
#உழவே_தலை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.
கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும்.
இனி பணத்தைச் சாப்பிட
முடியாது என்பது!!
ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.
நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது...
#முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..
அனைவரும் அறிந்துகொள்ளுங்கள்
old Generation - Tamil Generation
புதன், 20 ஜனவரி, 2021
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி
Author: Infomas | ஜனவரி 20, 2021 |
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி
நீங்கள்
1.டீன் ஏஜ் பருவத்தினரா ?
2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாதவரா ?
3.செக்ஸ் வீடியோவுக்கு அடிக்ட் ஆனவரா ?
4.அதீத காம சிந்தனை வயப்படுபவரா ?
5..உங்கள் ஆன்மீக வாழ்வு காமத்தால் தடை படுகிறதா ?
6.நீங்கள் துறவியா ?
அப்படி என்றால் நீங்கள் அனுதினமும் உண்ண வேண்டிய ஞான மூலிகை அம்மான் பச்சரிசி
சிகப்பு அம்மான் பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி சூரணம் செய்து கொதிக்க வைத்த அரை டம்ளர் பாலில் அரை ஸ்பூன் கலந்து காலை இரவு சாப்பிட்டு வரவும்.
அம்மான்பச்சரிசி உங்கள் ஆண்மை பலத்தை குறைக்காது அதனால் பயப்பட வேண்டாம்
விந்து உற்பத்தியை அதிகரிக்கும்
சிறுநீரில் விந்து கழிதலை கட்டுப்படுத்தும்
நீர்த்துப்போன விந்துவை கெட்டிப்படுத்தும்
ஆகமொத்தம் தாது விருத்தி தாது பலத்தை உண்டாக்கும்
இப்படிப்பட்ட அம்மான் பச்சரிசியின் அற்புதமான செய்கை என்னவென்றால்
மனதில் உள்ள காம எண்ணத்தை தணிக்கும் அற்புத மருந்து
அம்மான் பச்சரிசி சாப்பிட சாப்பிட படிப்படியாக காமவெறி குறைந்துகொண்டே வரும்
மனதளவில் காமம் உங்களை ஆக்கிரமிப்பு செய்யாது
நமது உடலில் ஆண்மைத்தன்மை குறையவும் செய்யாது மாறாக அதிகரிக்கும்.
பெண்களுக்கு அதிக பால் சுரக்கவும் உதவுகிறது. வெள்ளை அம்மான் பச்சரிசி.
சிவப்பு சிறம் கொண்ட அம்மான் பச்சரிசி தாமிர சத்து அதிகம் கொண்டது.
கீரையாக வைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
பீனியல் கிளான்ட் சுரப்பியை வலுவடைய வைத்து காபி,டீ ஆகிய போதை வஸ்து மேல் நாட்டத்தை குறைக்கும் அம்மான் பச்சரிசி மூலிகை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
தவறாமல் பகிர்வோம்.
செவ்வாய், 19 ஜனவரி, 2021
பா.ஜ.க 4 வருட ஆட்சி. - BJP - Modi
Author: Infomas | ஜனவரி 19, 2021 |
பா.ஜ.க 4 வருட ஆட்சி.
கீழே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலம்.......
1-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்
11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
20- பலுசிஸ்தான் தலையீடு
21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம்
28-மேக் இன் இந்தியா
29-டிஜிட்டல் இந்திய திட்டம்
30-அணு உலை
31-புல்லட் ரயில்
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம்
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி
51-வியாபம்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 2000 கோடி
55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல்
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
_90 ஆதார் அட்டை குழாறுபடிகள்-
(அதிக நண்பர்களைக்
கொண்டவர்கள் பகிர்ந்தால்
தகவல் பலரை சென்றடைய உதவும்.
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வள...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...