பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 22 நவம்பர், 2019

தேர்தல் ஆணையம் யார் கையில் ?

*தேர்தல் ஆணையம் யார் கையில்.* ?
______________________

 *தமாங், சசிகலா..* 
_________________

6 *ஆண்டு தேர்தல் தடை* *அம்போ... சசிகலா முதல்வர்* *ஆவார் எப்படி? பி.ஜே.பி போட்ட பாதை அப்படி!*

இந்தக் கட்டுரையை லில்லி தாமஸிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

நான்காம் வகுப்பு படிக்கும் போதே தன் பெயருக்கு முன்னால், `வழக்கறிஞர் லில்லி தாமஸ்' எனப் போட்டுக்கொண்டவர் அவர். பின்னாளில் அதைச் சாதித்தும் காட்டியவர். கோட்டயத்தைச் சேர்ந்த லில்லி தாமஸ், சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண். அரசியலில் குற்றப் பின்னணியினரை ஒழிக்க 86-ம் வயதிலும் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார் லில்லி தாமஸ்.


`அரசியல்வாதிகள் கிரிமினல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், அவர்கள் மேல்முறையீடு செய்யும் அவகாசம் முடியும் வரையிலோ அல்லது மேல்முறையீடு செய்தால் அதன் இறுதித்தீர்ப்பு வரும் வரையிலோ பதவியில் தொடர முடியும்’ என்றது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 (4). இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தித்தான் தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் கிரிமினல் குற்றவாளிகள் `மக்கள் பிரதிநிதி'களாக வலம் வந்தார்கள். `இந்தச் சட்டப் பிரிவு 8 (4) அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது. இந்தப் பிரிவு செல்லாது' என அறிவிக்கக்கோரி பொதுநல வழக்கு போட்டார் லில்லி தாமஸ். அந்த வழக்கில்தான், `அப்பீல் மனு முடியும் வரை காத்திருக்கக் கூடாது. கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற உடனேயே எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் பதவி ரத்தாகும்’ என அரசியல்வாதிகளின் தலையில் 2013-ம் ஆண்டு இடியை இறக்கியது சுப்ரீம் கோர்ட்.

இந்தத் தீர்ப்பால் எம்.பி பதவி இழந்த முதல் அரசியல்வாதி ரஷீத் மசூத். அவரைத் தொடர்ந்து லாலு, ஜெகதீஷ் சர்மா, நம்ம ஊர் செல்வகணபதி, ஜெயலலிதா, பாலகிருஷ்ணரெட்டி என அடுத்தடுத்து  அரசியல்வாதிகளின் பதவிகள் பறிபோயின.

பதவி இழந்த லாலு, ஜெயலலிதா, செல்வகணபதி, பாலகிருஷ்ண ரெட்டி ...
இப்படி சிறைக்குப் போகும் அரசியல்வாதிகள் தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகு, ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது. `தண்டனை பெற்றவர்கள், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே பதவியில் தொடர்வதற்கான தகுதியை இழப்பதோடு, தண்டனை முடிந்தபிறகும் அடுத்த ஆறாண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது' என்கிறது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்.

` *ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது' என்கிற கூர் தீட்டப்பட்ட கத்தியை இன்றைக்கு சிக்கிம் முதல்வருக்காக* *மழுங்கடித்துவிட்டது தேர்தல் ஆணையம்.* 

பவன் குமார் சாம்லிங்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு சிக்கிம் சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்கும் மேல் முதல்வராகக் கோலோச்சிக்கொண்டிருந்த `சிக்கிம் ஜனநாயக முன்னணி' தலைவர் பவன் குமார் சாம்லிங்கை வீழ்த்தி, `சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா'வின் தலைவர் பிரேம் சிங் தமாங் முதல்வரானார். முதல்வரானாரே தவிர, தமாங் எம்.எல்.ஏ ஆகவில்லை. அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ ஆனால்தான், அவரால் முதல்வராக நீடிக்கமுடியும்.

ஆனால், அதிலும் ஒரு சிக்கல். 
முன்பு தமாங் அமைச்சராக இருந்த காலத்தில், அதாவது 1996-97-ம் ஆண்டு கறவை மாடுகள் வழங்கும் திட்ட ஊழலில் சிக்கி, ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார் தமாங். தண்டனை அனுபவித்து, 2018 ஆகஸ்ட் 10-ம் தேதிதான் சிறையிலிருந்து வெளியே வந்தார். அன்றிலிருந்து அவர் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. பிறகு எப்படி முதல்வரானார் என்கிற கேள்விக்கு விடை தேட வேண்டியதில்லை.

சிக்கிம் சட்டசபைத் தேர்தலில் `சிக்கிம் ஜனநாயக முன்னணி' 15 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது. 

`` *ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலங்களில் கட்சியைக் கைப்பற்று"* 

என்கிற சூத்திரத்தை சிக்கிமிலும் செய்தது பி.ஜே.பி. தேர்தல் முடிந்த இரண்டே மாதத்தில் `சிக்கிம் ஜனநாயக முன்னணி'யின் 10 எம்.எல்.ஏ-க்கள் திடீரென பி.ஜே.பி-யில் ஐக்கியமானார்கள். இதனால் பவன்குமார் சாம்லிங்கின் `சிக்கிம் ஜனநாயக முன்னணி' எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.

அதிகாரங்களைக் குவித்து வைத்திருக்கும் மத்திய பி.ஜே.பி ஆட்சியின் ஆசி, தமாங்குக்குத் தாராளமாகக் கிடைத்தது. 

விளைவு தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளிக்கிறார் தமாங். `ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது என்ற சட்டத்திருத்தம் 2003-ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டது. முன்னதாக நடந்த வழக்குக்கு, பின்னர் நிறைவேற்றிய சட்டத்தைக் கொண்டு தண்டனை விதிக்க முடியாது. 

ஆறு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது செல்லாது’ என மனுவில் குறிப்பிடுகிறார். தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுக்கொண்டு, தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை 13 மாதங்களாகக் குறைத்து உத்தரவு பிறப்பிக்கிறது. இதன் மூலம் கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் நின்று, தமாங் வெற்றி பெறுகிறார் . *முதல்வராகத் தொடர்கிறார்* 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவுக்கு இது சாபக்கேடு. தேர்தலில் போட்டியிட முடியாத ஒருவரை அதிலிருந்து விடுவித்து மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம். சிக்கிம் இடைத்தேர்தலுக்காக தமாங்கும் மோடியும் கூட்டணி போட்டனர். அதற்காகத் தேர்தல் ஆணையத்தின் மூலம் கைம்மாறு நடத்தப்பட்டிருக்கிறது.

 *அரசியலில் `கிரிமினல்' கலப்பதை எதிர்ப்பதில் தான்தான் `முன்னோடி' எனக் காட்டிக் கொண்ட பி.ஜே.பி-யின்* *முகத்திரை தமாங் விவகாரத்தில் கிழிந்து* *தொங்குகிறது* .
 *தமாங்குக்கு பதவிப்* *பிரமாணம் செய்து* *வைக்கிறார் கவர்னர்* ..

சிக்கிம் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமாங் போட்டியிடவில்லை. ஆனால், தேர்தலில் அவரது கட்சி வெல்கிறது. அவருடைய கட்சி எம்.எல்.ஏ-களால் முதல்வராக தேர்வு செய்யப்படுகிறார் தமாங். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் உள்ள போதுதான், தேர்தல் கமிஷன் தமாங்குக்கு சலுகை காட்டுகிறது. 

இந்த இடத்தில் இந்தியாவே திரும்பிப் பார்த்த ஜெயலலிதா வழக்கை கவனத்திலே எடுத்துக்கொள்ளவில்லை சிக்கிம் கவர்னரும், தேர்தல் ஆணையமும்.

டான்சி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. நான்கு தொகுதிகளில் தாக்கல் செய்த ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் அன்றைக்கு நிராகரிக்கப்பட்டன. தேர்தலில் அ.தி.மு.க. வென்று, ஆட்சியைப் பிடித்தது. கவர்னராக இருந்த பாத்திமா பீவி ஜெயலலிதாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் பாய்ந்தது.

தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஜெயலலிதாவுக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது தவறு.     எம்.எல்.ஏ ஆக முடியாத ஒருவர் எப்படி முதல்வர் ஆக முடியும்?' எனச் சொல்லி ஜெயலலிதாவின் முதல்வர் பதவியை 2001 செப்டம்பர் 21-ம் தேதி பறித்து உத்தரவிட்டது நீதிபதி பரூச்சா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச். இதனால், ஜெயலலிதா அமைச்சரவையே கவிழ்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்தது.

` *ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது* *செல்லாது' என 18 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உரக்கச்* *சொன்ன விஷயம், சிக்கிம் கவர்னருக்கும் தேர்தல்* *கமிஷனுக்கும் கொஞ்சம்கூட உரைக்கவில்லை* *என்றால் இவர்கள் எல்லாம் ஜனநாயகத்தின்* *காவலர்களா... அல்லது குற்றவாளிகளுக்குத்* *துணை போகும் ஏவலர்களா என்று கேள்வி எழுப்புகிறான்* *இந்த தேசத்தின் வாக்காளன்* .

சிக்கிம் முதல்வராக தமாங் பதவியேற்ற தேதி 2019 மே 27. அதாவது, தமாங் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்ட காலம் அது. சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிடக்கூடத் தகுதியில்லாத தமாங்கை, ஆளுநர், முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லுமா? அவர் முதலமைச்சராகத் தொடர்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பது அரசியல் தெரியாத பத்தாம் வகுப்பு மாணவனுக்குக்கூட தெரிந்த உண்மை, அரசியல் அறிந்த சட்டம் தெரிந்த சிக்கிம் ஆளுநருக்குத் தெரியாதா... ஆள்வோருக்கு புரியாதா... மத்திய அரசு, தேர்தல் ஆணையம், நீதித்துறை, ஆளுநர் மாளிகை என அனைத்து அதிகார அமைப்புகளும் வாய் மூடிவிட்டன.

 *`பி.ஜே.பி-யின் கண்ணசைவுக்குத் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது'* என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிரூபிப்பது போலத்தானே இருக்கிறது தமாங் விவகாரம். தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஒருவருக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததே தவறு. கவர்னர் மூலம் அந்த தவற்றையும் செய்துவிட்டு, அந்த முதல்வர், தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாகத் தடைக்காலத்தைக் குறைத்துவிட்டு அந்த முதல்வரோடு கூட்டணி அமைத்து இடைத் தேர்தலையும் சந்திக்கிறது பி.ஜே.பி.

 *லில்லி தாமஸ் மேட்டருக்கு வருவோம்.*

 அவர் போட்ட வழக்கால்தான் `அப்பீல் மனு முடியும் வரை காத்திருக்கக்கூடாது. கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளின் எம்.பி., எம்.எல்.ஏ பதவிகள் உடனடியாக ரத்தாகும்’ என 2013 ஜூலை 10-ம் தேதி தீர்ப்பு எழுதியது உச்சநீதிமன்றம். இதனால் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மேல் முறையீடு செய்வதற்கு முன்பே பதவியை இழக்கும் அபாயம் உருவானது. இந்தத் தீர்ப்பு வெளியான நேரத்தில் மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

உச்சநீதிமன்றம் இப்படி கடிவாளம் போட்டதும் கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளும் ஒருமித்த குரலுடன் எதிர்ப்பு தெரிவித்தன. 2013 ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாகச் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்கள். சுப்ரீம் கோர்ட் உத்தரவை, பயனற்றதாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது மன்மோகன் சிங் அரசு. அதற்குக் காரணம் அன்றைக்கு லோக்சபா எம்.பி.,க்கள், 543 பேரில், 162 பேர் மீது குற்ற வழக்குகள் இருந்தன. மாநில எம்.எல்.ஏ.,க்கள் 4,032 பேரில், 1,258 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன.

மக்கள் பிரதிநிதி'களைப் பாதுகாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்தார்கள். அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை 2013 ஆகஸ்ட் 13-ம் தேதி தாக்கல் செய்தது மன்மோகன் சிங் அரசு. அதில், `இந்தத் தீர்ப்பு, அரசியல் ரீதியாகப் பழிவாங்கவே பயன்படும். அப்பீல் மனு நிலுவையில் இருக்கும்போதே பதவியைப் பறித்துவிட்டால், அப்பீல் மனுவில் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால், அவரால் மறுபடியும் பதவியைப் பெற முடியாது. ஒருவர் எப்போது பதவி பறிப்புக்கு ஆளாவார் என்று சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் உள்ளது. அதை நீதிமன்றம் எடுத்துக் கொள்ளக்கூடாது. இதுபோன்ற அரசியல் சட்ட விவகாரங்களை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது தவறு. அதிக நீதிபதிகளைக்கொண்ட அரசியல் சட்ட அமர்வுதான் விசாரிக்க வேண்டும். தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்' எனச் சொன்னது.

மறு சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், `தண்டனை பெற்ற, எம்.பி. எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளைப் பறிக்கலாம் என, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு சரியானதுதான். நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், எந்தத் தவறும் இல்லை. மிகவும், அலசி ஆராய்ந்து அளிக்கப்பட்ட தீர்ப்பு அது. இந்த விஷயத்தில், மறு பரிசீலனைக்கே இடமில்லை' என 2013 செப்டம்பர் 3-ம் தேதி திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து, அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றது மன்மோகன் சிங் ஆட்சி. நீதிமன்ற உத்தரவையும் மீறி, குற்றப் பின்னணி எம்.பி., எம்.எல்.ஏ-களை காப்பாற்றும் மன்மோகன் சிங் அரசின் அவசரச் சட்டத்துக்கு அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த பி.ஜே.பி கடுமையாக எதிர்த்தது. `அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக் கூடாது' எனச் சொல்லி 2013 செப்டம்பர் 27-ம் தேதி அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்ட பி.ஜே.பி தலைவர்கள் அன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, வலியுறுத்தினார்கள். அந்தச் சந்திப்புக்குப் பிறகு பேட்டி அளித்த அத்வானி, ``தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் அவசரச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது'' எனக் கர்ஜித்தார். அந்தக் கட்சிதான் இன்றைக்கு தமாங் விஷயத்தில் அரசியல் சாசனத்தையே துச்சமெனத் தூக்கி வீசியிருக்கிறது.

மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்குக் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் குரல் ஒன்று எழுந்தது. அது ராகுல் காந்தியின் குரல். பி.ஜே.பி தலைவர்கள் எல்லாம் ஜனாதிபதியைச் சந்திக்கப் போனபோது திடீரென்று டெல்லி பிரஸ் கிளப்புக்கு விஜயம் செய்தார் ராகுல் காந்தி.

நீண்ட நேரம் பிரஸ் மீட் நடத்தப்போவதில்லை. நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதைச் சொல்லிவிட்டு, என் வேலையைப் பார்க்கப்போகிறேன்'' என்று சொன்ன ராகுல் காந்தி, ``கிரிமினல் பின்னணி உள்ள மக்கள் பிரதிநிதிகளைப் பாதுகாக்கக் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டம் முட்டாள்தனமானது. அதைக் கிழித்து குப்பையில் எறியுங்கள்'' என்றார் ஆவசேமாக. காங்கிரஸ் ஆட்சிக்குள்ளேயே `சேம் சைடு கோல்' போட்ட தருணம் அது. அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் அனுப்பினார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி ஆக்ரோஷமாகக் கர்ஜித்த நேரத்தில், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா வாஷிங்டன்னில் உள்ள ஹோட்டலில் தூங்கிக்கொண்டிருந்தார். அவரின் கருத்தை அறிய ஊடகத்தினர் அங்கே குவிந்தனர். ``எழுப்பப்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து, நான் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்துப் பரிசீலிக்கப்படும்'' என அறிக்கை விட்டார் மன்மோகன். ஆனால், பி.ஜே.பி-யோ இதை `ஒரு அரசியல் நாடகம்' என அன்றைக்கு வர்ணித்தது. ``சுயமரியாதை இருந்தால் பிரதமர் மன்மோகன் சிங் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'' என்றார் அன்றைக்கு ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அருண் ஜேட்லி.

வெங்கையா நாயுடுவோ, ``ராகுல் காந்தி சொல்வது போல முட்டாள்தனமான அரசின் பிரதமர் மன்மோகன்சிங் பதவியில் தொடரலாமா? பதவியிலிருந்து விலகி தனது தன்மானத்தை வெளிப்படுத்த வேண்டும்'' என்றார். ``பிரதமரையும் அவரது கேபினட்டையும் 'நான்சென்ஸ்' எனக்கூறுகிறார் ராகுல் காந்தி. தனக்குச் சுயமரியாதை இருக்கிறது என்பதைக் கொஞ்சம்கூட வெளிப்படுத்தாமல் அமைதி காக்கிறார் மன்மோகன் சிங். பிரதமருக்குக் கொஞ்சமாவது சுய மரியாதை இருக்க வேண்டாமா'' எனக் கேள்வி எழுப்பினார் நிதின் கட்கரி

அன்றைக்குக் காட்டிய `ஆக்ரோஷம்' எல்லாம் இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்ததும் `வேஷம்' ஆகிவிட்டது.

நரேந்திரமோடி மட்டும் சும்மா இருந்திருப்பாரா... பி.ஜே.பி. பிரதமர் வேட்பாளராக அன்றைக்கு அறிவிக்கப்பட்டிருந்த மோடி என்ன சொன்னார் தெரியுமா... 2013 செப்டம்பர் 2-ம் தேதி டெல்லியில் நடந்த விகாஸ் கூட்டத்தில் பங்கேற்ற மோடி, `` *டெல்லியில் அம்மா ஒரு பக்கம் ஆட்சி புரிகிறார், மகன் ஒரு* *பக்கம் ஆட்சி நடத்துகிறார். ஒரு ஆட்சிக்குள் பல ஆட்சிகள் நடக்கிறது.* *காங்கிரஸ் கட்சியே நமது பிரதமரை மதிப்பதில்லை. பிறகு ஷெரீப் எப்படி* *மதிப்பார்... ராகுல் காந்தி நான்சென்ஸ் என்றபோது பிரதமர் மன்மோகன்சிங் மறுப்பு* *தெரிவிக்கவில்லை.* *நீங்கள் காங்கிரஸின் பட்டத்து இளவரசன் தலைமையில் செயல்பட விரும்புகிறீர்களா...* *அல்லது இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் கீழ் செயல்பட* *விரும்புகிறீர்களா?'' எனக் கேள்வி எழுப்பினார் மோடி.*

அந்த மோடிதான் இன்றைக்குப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தமாங்குக்கு ஆதரவாக அரசியல் சாசனத்தையே தூக்கி எறிகிறார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, லாலு, ரஷீத் மசூத், ஜெகதீஷ் சர்மா ஆகியோரின் எம்.பி பதவிகள் பறிக்கப்பட்ட போது அன்றைக்கு பி.ஜே.பி வரவேற்றுக் கொண்டாடியது. ஆனால், ஆட்சியில் அமர்ந்ததும் தமாங்கைப் போற்றுகிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தலை பி.ஜே.பி எதிர்கொண்டபோது குஜராத் காந்தி நகர் பிரசாரக்கூட்டத்தில் பேசிய மோடி, `` *அரசியல், குற்றவாளிகள் மயமாவது வருத்தத்தை* *அளிக்கிறது. அரசியலைக் குற்றவாளிகளின்* *பிடியிலிருந்து விடுவிப்பேன்* .

 *பி.ஜே.பி ஆட்சிக்கு* *வந்தால், குற்றம் புரிந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஓராண்டுக்குள் சிறைக்கு* *அனுப்பப்படுவார்கள். பி.ஜே.பி-யினராக இருந்தாலும் அவர்கள்* *மீதும் நடவடிக்கை பாயும். குற்றவாளிகளின்* *பிடியிலிருந்து* *அரசியலை விடுவிக்க எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்''* என்றார்.

வென்று ஆட்சியில் அமர்ந்து ஐந்தாண்டுகள் ஓட்டியும் விட்ட மோடி, அடுத்து வந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் வென்று மீண்டும் பிரதமரானார். அந்தத் தேர்தலில் பி.ஜே.பி சார்பில் நிறுத்தப்பட்ட 433 வேட்பாளர்களில் 175 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். பி.ஜே.பி களமிறக்கிய வேட்பாளர்களில் 40 சதவிகிதத்தினர் கிரிமினல் பின்னணியினர். மோடி போட்டது அத்தனை பொய் வேஷம்.

வழக்கு தொடர்பாக ஒருவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று விதிக்கப்படும் கால அளவைக் குறைக்கவோ, ரத்துசெய்யவோ 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 11-வது பிரிவின் கீழ், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இருக்கிறது. உண்மைதான். அதைத்தான் தேர்தல் ஆணையம் பயன்படுத்தியிருக்கிறது என வாதம் வைக்கப்பட்டாலும் நியாயமான அணுகுமுறையா இது? பி.ஜே.பி கூட்டணிக் கட்சிக்காக தமாங்குக்குத் தரப்பட்ட சலுகையைக் காட்டி ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்களும் சிறைக்குப் போய்விட்டு வந்தவர்களும் அரியணையில் அமர்வார்கள்.

 *மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் தரம் இன்னும்* *மேம்படுத்தப்பட வேண்டும்...*

 ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும்... குற்றப்பின்னணியினர் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்... நீண்ட ஆண்டுகளாகப் பேசப்பட்டு வரும் தேர்தல் சீர்திருத்தங்கள் அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதையெல்லாம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குழி தோண்டி புதைத்துவிடலாம்.

தமாங்கைப் பின்பற்றி தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தமது அரசியலை பி.ஜே.பி ஆடத் தொடங்கலாம். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் நான்கு ஆண்டு தண்டனை அனுபவித்து வரும் சசிகலா 2021 பிப்ரவரியில்தான் விடுதலை ஆக வேண்டும். ஏற்கெனவே அனுபவித்த சிறை நாள்கள், நன்னடத்தைக் காரணங்களால் 2020 ஜூலையிலேயே சசிகலா வெளியே வரலாம். அதிலிருந்து அவர் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனாலும் சசிகலா தேர்தலில் போட்டியிடுவார். காரணம் தமாங் ஏற்படுத்தியுள்ள முன்னுதாரணம். பி.ஜே.பி. ஆட்சி போட்டுக் கொடுத்த பாதை.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது 1995-ம் ஆண்டு. அது போதாது? `

ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது என்ற சட்டத்திருத்தம் 2003-ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டது. 1995-ம் போடப்பட்ட வழக்குக்குப் பிறகு நிறைவேற்றிய சட்டத்தைக்கொண்டு தண்டனை விதிக்க முடியாது. ஆறு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது செல்லாது’ எனத் தேர்தல் ஆணையத்தின் கதவுகளைத் தட்டுவார் சசிகலா. அதிகார வர்க்கத்தின் ஆசி இருந்தால் முதல்வர் நாற்காலியில்கூட வந்து அமர்வார்.

 *ஜனநாயகத்தின் ஆணிவேர்களைக் காப்பவர்கள் லில்லி தாமஸ்கள்தான்.* *அதைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லி அரியணையில் அமரும் ஆட்சியாளர்கள் அல்ல.*

 *ஆய்வுக்கு ........*

திங்கள், 18 நவம்பர், 2019

நீங்கள் 10அடிக்கு 10 அடிஅறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா?

நீங்கள் 10அடிக்கு 10 அடி
அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா?

அப்படியானால் அவசியம் படியுங்கள்....

சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? - எப்படி தடுப்பது ?

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி ), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள்.

பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.

அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.

பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.

விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.

மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது 

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விசயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

ஞாயிறு, 17 நவம்பர், 2019

NEET மோசடி - தமிழ்நாடு

NEET  மோசடி - தமிழ்நாடு

5 ஆண்டுளுக்கு ஒரு மருத்துவருக்கு செலவிடப்படும் தொகை ரூ.1.24 கோடிகள்

மாநில அரசின் மொத்த மருத்துவ இடங்கள்:
3,698

இத்தனை மருத்துவர்களை உருவாக்க 5 ஆண்டுகளுக்கான செலவு : 4,920.32 கோடிகள்

அதாவது, ஆண்டொன்றிற்கு சுமார் 984 கோடிகள் நமது வரிப்பணத்தில் இருந்து மருத்துவப் படிப்பிற்காக செலவிடப்படுகிறது.

தற்போது NEET கொண்டு வந்து தமிழக மாணவர்களின் இடங்களை வெளிமாநில & வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்குவதால்,

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் சுமார் 984 கோடிகள் தமிழ்நாட்டு மக்களுக்குப் பயன்படாமல் ஆண்டுதோறும் தாரைவார்க்கப்படுகிறது.

என்ன மக்கா புரிஞ்சுச்சா!!!!

நடைபயிற்சியின் வகைகளும் - பயன்களும்

@@# நடைபயிற்சியின் வகைகளும் - பயன்களும்@@

நடைபயிற்சி என்றால் என்ன?

🚶 நடைபயிற்சி (walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும்.

🚶 நடைபயிற்சியில் மூன்று வகைகள் உண்டு.

மெதுவாக நடப்பது :

🚶 எப்போதும் நடக்கும் சாதாரண வேகமின்றி, சிரமமின்றி நடப்பதாகும்.

🚶 இந்த வகை நடைபயிற்சி உடல் வலி மற்றும் சோர்வுகளை போக்கும்.

🚶 உடம்பில் உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.

🚶 உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்ற நடையாகும்.

பவர் வாக்கிங் :

🚶 கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது.

🚶 இப்படி வேகமாக நடப்பதால் உடம்பில் உள்ள கழிவுகள் எரிக்கப்பட்டு வியர்வை அதிகம் வெளியேறி உடல் சுத்தமாகும்.

🚶 தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று தன்னம்பிக்கையை அளிக்கும்.

🚶 இந்த பவர் வாக்கிங் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற நடையாகும்.

ஜாகிங் :

🚶 நடக்கும் முறையில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு மிதமாக, மிக மிக மெதுவான ஓட்டமாக மாறும்.

🚶 அதனால் நிறைய ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் சென்று ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்திற்கு அனுப்புகிறது.

🚶 அதேசமயம் தேவையில்லாத கழிவுப்பொருட்களை வெளியேற்றி உடம்பில் உள்ள ஓவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும்.

🚶 தினசரி 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஜாகிங் செய்யலாம்.

🚶 இளைஞர்கள் 1 மணி நேரமும், 30-40 வயதினர் 45 நிமிடங்களும், அதற்கு மேற்பட்ட வயதினர் 20 நிமிடங்களும் நடக்கலாம்.

நடைபயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் :

🚶 சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைய உதவுகிறது.

🚶 இரத்த ஓட்டம் சீரடையும்.

🚶 நரம்பு தளர்ச்சி நீங்கி, நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.

🚶 நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.

🚶 அதிகப்படியான கலோரிகள் எரிக்க உதவுகிறது.

🚶 நரம்புகளை உறுதியாக்குகிறது.

🚶 எலும்பு மூட்டு செயல்பாடுகளை எளிமையாக்குகிறது.

🚶 எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.

🚶 உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.

🚶 கெட்ட கொழுப்புச்சத்தின் அளவை குறைக்கிறது.

🚶 மாரடைப்பு - சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைத்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.

🚶 உடல் மற்றும் மனச்சோர்வினை குறைக்கிறது.

🚶 நன்கு தூங்கிட உதவுகிறது.

🚶 கண் பார்வையை செழுமைபடுத்துகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் - Tirupathur District

Image may contain: plant, text, nature and outdoor



சந்தனமும் , ஜவ்வாதும் மணக்கும் எங்கள்
திருப்பத்தூர் மாவட்டம்.

#திருப்பத்தூர்மாவட்டம்.

பத்து திருத்தலங்களை கொண்ட ஊர் திருப்பத்தூர் (திரு+பத்து+ஊர் )

ஆசியாவிலேயே அதிகம் சந்தனம் விளையும்  ஜவ்வாது மலை காடுகள் உள்ளது எங்கள் திருப்பத்தூர் மாவட்டம்.


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு படித்த இசுலாமிய கல்லூரி உள்ள வாணியம்பாடி.

ஏழைகளின் ஊட்டி என்று போற்றப்படும் ஏலகிரிமலை இருப்பதும் இங்கேதான்.

உலகத்திலேயே முதன்முதலாக விண்கல் விழுந்து இறந்த மனிதனும் எங்கள்  ஊர் (நாட்றம்பள்ளி  காமராஜ்)  தான்.

உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவில் பாடிய முதல் பாடல் எழுதிய ஆம்பூர் அடுத்த மிட்டாளம். நேதாஜி.

500 படங்களுக்கு மேல் சண்டை பயிற்சி அளித்த ஆர்.எஸ்.பாபு பிறந்த ஆம்பூர்.

பிரபல "நாயுடு ஹால் "முதலாளியின் சொந்த ஊர் ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு (எ) காந்திநகர்.
 
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மாமியார் ஊர் திருப்பத்தூர்.

நக்ஸலைட்டுகளை அழிப்புப் போரில் 7 போலீசார் இறந்து தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமையை சேர்த்த திருப்பத்தூர்.

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தன் மகன் பேரரறிவாளனை மீட்க நீதி போராட்டம் நடத்தி வரும் பாசத்தாய் அற்புதம்மாள் வாழ்ந்து வரும் சோலையார்பேட்டை.

கவிக்கோ அப்துல் ரகுமானும், கவியருவி அப்துல் காதரும் பேராசிரியர்களாக பணியாற்றிய வாணியம்பாடி இசுலாமிய கல்லூரி.

தமிழ் வளர்த்த மதுரைக்கும், காரைக்குடிக்கும் போட்டியாக முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிமாநில ஆளுநர்கள், அயல் நாட்டு அமைச்சர்களை அழைத்து வந்து ஆண்டு தோறும் "முத்தமிழ் மன்றம் விழா "நடத்தி தமிழ் வளர்க்கும் வாணியம்பாடி.

 ராஜ் டி.வி.யில அகடவிகடம் நடத்துற V.L.பாஷ்கர்ராஜ்  எங்க ஊரு வாணியம்பாடிதான்.

நடிகர் சந்தானத்துக்கு அத்தை ஊரும் எங்க  ஆம்பூர்தான்.

குளித்து மகிழவும் , கொண்டாட்டம் போடவும் "ஜலகாம்பாறை " நீர்வீழ்ச்சி.

ஆசியாவின் மிகப்பெரிய வான் தொலைநோக்கி உள்ள ஆலாங்காயம் அடுத்த காவனூர்.

திருக்குறள் தெளிவுரை தந்த டாக்டர்.மு.வரதராசன் பணியாற்றிய திருப்பத்தூர்.

டால்மியாபுரத்தை கல்லக்குடியாக்கும் போராட்டத்தில் கலைஞர்.மு.கருணாநிதியோடு இரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த ஆலாங்காயம் அடுத்த முல்லை சத்தியின் ஊர்.

சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத்துக்கும் மாமியார் ஊர் திருப்பத்தூர்.

முன்னாள் தமிழக முதல்வர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா பெரும்பாலான ஆடைகள் தந்து அழகு பார்த்த எம்.ஜி.நாயுடு பிறந்த ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு (எ) காந்திநகர்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் மனைவி பிரேமலதா படித்த ஆம்பூர்

உலக பெரும் பணக்காரன் புரூனே சுல்தான் வீட்டில் சம்பந்தம் வைத்தவர்கள் ஆம்பூர்க்காரர்கள்.

1000 ஆண்டுகளுக்கு முந்தைய வர்ண பூச்சு ஓவியங்கள் இன்று வரை அழியாமல் காட்சி தரும் ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள அரும்பாவி மலை என்னும் ஆர்மா மலை.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு பிரியாணி செய்து போட விமானத்தில் போய் வந்த பக்காத்தியும் (பிரியாணி செய்பவரை எங்க ஊருல அழகா பக்காத்தினுதான் கூப்பிடுவோம்)  எங்கள் ஆம்பூர்தான்.

உலகின் 100 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு காலணிகளை ஏற்றுமதி செய்யும் மாவட்டம்.

தமிழ்நாட்டிலேயே 400 ஆண்டுகளுக்கு முன்னரே கலைமகளாம் சரஸ்வதிக்கு கோவில் கட்டப்பட்ட ஆலயம் உள்ள ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊட்டல் கோவில்.

தனித்தமிழ் இயக்கத்துக்கு தன்னையே அர்ப்பணித்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கொஞ்சம் காலம் பயின்றதும், ஆசிரியராக பணியாற்றியதும் (ஆம்பூர் ) வேலூர் மாவட்டம்.

தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய ரயில் விபத்து நடந்த வாணியம்பாடி.

பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தவர்களும் எங்க ஊர் (ஆம்பூர்) தான்.

அண்மை காலத்தில் அதிகமாய் ஆன்மீக பக்தர்கள் வந்து வணங்கும் ஆம்பூர் ஆஞ்சநேயர் கோவில்.

**அருண்பிரசாத்**

வெள்ளி, 8 நவம்பர், 2019

#கர்மா_வலியது....

#கர்மா_வலியது....

மறைந்ந பிரதமர் இந்திராவால்
சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சிபெற்றார்.
ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார்..

ஆனால்...
ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார்.
சஞ்சய்காந்தி விமானவிபத்தில் மாண்டார்.

ஸ்டாலினும் சசிகலாவும் 
30 வருசமா முதல்வர் கனவில்
இருந்தாங்க... 
ஆனால்...
ஓபிஎஸ், ஈபிஎஸ் முதல்வர்கள் ஆகி பிரபலமானார்கள்...

எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும் போதே...

ராஜீவும், பிரபாகரனும் தங்களின் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள் ..
அதுவும் வேரொருவரால்
கொல்லப்பட்டார்கள்...

ஈவேரா விநாயகர் சிலையை 
கல் என கூறி தூக்கி ஏறிந்தார்... 
ஆனால்... 
தனது சிறுநீரகத்தில் உருவான 
கல்லை கூட தூக்கி எறிய முடியாமல் 
மூத்திர வாளியோடு சுற்றித்திரிந்தார்...

ஜெயலலிதா சிறைக்கு போகனும்னு கருணாநிதியும்....
கருணாநிதி சாகணும்னு ஜெயலலிதாவும் நினைத்தார்கள்...

கருணாநிதி விருப்பப்படி
ஜெயலலிதா சிறைசென்றபோது 
அதை உணரும் நிலையில் 
கருணாநிதி இல்லை.

ஜெயலலிதா விருப்பப்படி
கருணாநிதி  இறந்த போது ஜெயலலிதாவே உயிருடன் இல்லை.

மெத்த படித்த மன்மோகன் சிங், சோனியாவின் கருத்துக்கு பொம்மையாய் ஆடினார் ... . 
ஆனால்...
ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு உலகமே ஆடுகிறது...

விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே 
அடக்கி ஆள முயல்கிறார்கள்...
ஆனால் ...
பூமி நாளுக்கு நாள் மனித வாழ்வுக்கு உகந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறது.

கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவது இல்லை... 

உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றத் 
தவறுவதே இல்லை.

நீ ஆசைப்படலாம் 
தேர்தல்ல நின்னு 
எம்எல்ஏ ஆயிடலாம்னு.
ஆனால் வேட்புமனு 
தாக்கல்செய்யும்
நேரம் பார்த்து 
உனக்கு ஓட்டு இருக்காது..

ஆனால்.. 
ஓட்டுபோடும் நேரத்தில் 
உனக்கு ஓட்டு இருக்கும்.

இந்தப் அரசியலே வேண்டாம்
நாம ஆன்மீகவாழ்க்கைக்குப்
போயிடலாம்னு நீ நினைக்கலாம்.
ஆனால்
உன்னைக் கூப்பிட்டுத்தான்
திரும்பத் திரும்பப் பதவியைக் கொடுத்து அழகு பார்ப்பாங்க மக்கள்..

உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒரு வடிவில் உங்களிடமே 
சேர்த்து விடும் மிகச்சிறந்த நிர்வாகிதான் கர்மா.

யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது.

கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு 
நமக்கே வருகிறது என்பதை 
புரிந்து கொள்வோம்
கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில் 
நன்மையை மட்டுமே விதைப்போம்.
நல்லவர்களாக வாழ்வோம்.

கெட்டவன் 
தானே தன் அழிவை 
தேடிக் கொள்கிறான்.
அவனோடு உங்களை 
கொஞ்சம்கூட ஒப்பிட்டுப்
பார்க்க வேண்டாம்.

பாவமன்னிப்பு' என்ற மதச்சடங்கு, 
இந்து மதத்தில் இல்லாதது 
ஏன் தெரியுமா?

பாவங்கள் மன்னிக்கப்படுமானால், பாவிகள், தைரியசாலிகள் ஆகிவிடுவர்.
இந்துமதம் பாவத்தின் அளவுக்கு தண்டனையை விதிக்கிறது; 
பாவம் உணரப்படும் போது, 
குறைந்தபட்ச தண்டனை கொடுத்து மன்னிக்கிறது.
ஆனால், அப்படி ஒரு மன்னிப்பை வழங்குவதற்கு இங்கே யாரையும் நியமிக்கவில்லை.

இந்த விஷயங்களை நேரடியாக இறைவனே கவனிக்கிறான்.

#கர்மா_வலியது...

ஏன் “ #நாய்கள்”மட்டும் எங்கும் உள்ளது..?????

ஏன் “ #நாய்கள்”மட்டும் எங்கும் உள்ளது..?????

உங்கள் வீட்டில் மனக்க மனக்க சமையல் தயாராகிகொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றி சுற்றி ஏன் வருகிறது?????

வீட்டிற்க்குள் இருந்து யாராவதும் வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறு பங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..????

சாலையோர கடையிலோ தள்ளு வண்டிகடையிலோ நீங்கள் திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும் போது கல்லை தவிற வேறெதாவதும் வந்து விழாதா என வெறித்து வெறித்து பார்த்து ஏன் இடையூறு செய்கிறது..????

#குறிஞ்சி , #முல்லை என நகர்ந்து #மருதநிலத்திற்க்கு மனிதகுலம் இடம்பெயருகிறது.மருத நிலத்தில் ஆற்றங்கரையோரம் வயல்களை உருவாக்குகி வேளாண்மை செய்து தனக்கான உணவை தானே உற்பத்திசெய்கிறது.

குகையில் வாழ்ந்து பழகியவன் வீடுகட்டி வாழ பழகுகிறான்.சிந்து சமவெளி மனித நாகரீகம் பிறக்கிறது.காடுகளில் இருந்து வந்த மனிதன் இன்று நாகரீக, பொருளாதார, சிந்தனை,அறிவியல்,குற்ற வழர்ச்சியில் உச்சத்தை எட்டிவிட்டான்.

“#நாய்களுக்கும்_இதற்க்கும்_என்ன_சம்மந்தம்” என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மூளையில் கசிந்திருக்கும்.
சொல்கிறேன்….

ஆதிமனிதன் முதன் முதலில் மருத நிலம் நோக்கி வரும்போதும் அவன் மட்டும் வரவில்லை.தனக்கு பயன்படகூடிய தன்னால் அடக்கி ஆளக்கூடிய காட்டு விலங்குகலான #ஆடு,#மாடு உள்ளிட்ட விலங்குகளையும் தன்னோடு அழைத்தே வந்தான்.

அவற்றுள் முதன்மையான விலங்கினம் “நாய்”.”ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய் தான்”.
மனிதன் social animal ( சமூக விலங்கு) என்றால் நாய் கிட்டத்தட்ட semi social animal ஆகிவிட்டது.

உங்களோடு அதற்கு பேச மட்டும் தான்தெரியாது. உங்கள் மொழியை புரிந்து கொள்ளும்,.நீங்கள் பேசுவதை புரிந்து கொள்ளும்,.உங்கள் நண்பர் யார் பகைவர் யார் என தெரியும்,....

உங்கள் வண்டியின் சத்தத்தை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே கணித்து வாலாட்ட தெரியும்.உங்கள் குழந்தை அழுதால் ஓடிவந்து சன்னல் ஓரத்தில் அவ்,….அவ்,…அவ்,…என சினுங்கத்தெரியும்.

உங்கள் வீட்டு வாண்டுகள் அடித்தால் திருப்பி தாக்காமல் விளையாட்டு காட்ட தெரியும்.உங்கள் வீட்டில் அக்காவோ தங்கச்சியோ அவள் வரைந்த கோலத்தை மிதித்து திட்டுவாங்கியிருக்கும் ஆனால் அவள் திருமணமாகி சென்றுவிட்டால் மூலையில் படுத்து கவலைப்படும்.

வெளியூருக்கு போய் வந்த நம் அப்பா வை பார்ததும் முன்னங்கால்களை தூக்கி மாரில் வைத்து தாடையை நக்கும்.வாலை ஆட்டிக்கொண்டு மளிகை கடைக்கு அம்மாவோடு கூடவே போய்ட்டு வரும்.

உங்களுக்கு யாரின் மூலமாவதும் தீங்கா?..ஒரு கை பார்த்துவிடும்.இவை அத்தனையையும் செய்ய அடைக்களமாக ஒரு வீடு எல்லா நாய்களுக்கும் கிடைப்பதில்லை.

ஆயிரம் வெளிநாட்டு நாய்கள்  இருப்பினும் நம்
#நாட்டுநாய்களுக்கு இடாகுமா???

கண்ணீருடன் எல்லா தாயுக்கும் சமர்ப்பனம்....

கண்ணீருடன்  எல்லா தாயுக்கும் சமர்ப்பனம்....

பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ்.

""ஏன் இப்படி பயந்து சாகறீங்க?'' என்று எரிந்து விழுந்தாள் அவன் மனைவி சத்யா.

""இல்லை... அம்மாவுக்கு இது பெரிய ஷாக்காய் இருக்கும்''

""இதப்பாருங்க... மாமியாரைப் பார்த்துக்கலாம். அது என் டியூட்டி. ஆனா, மாமியாரோட மாமியாரைப் பார்த்துக்கறதெல்லாம் டூ மச்...''

அவன் ஒன்றும் சொல்லாமல் மவுனமாய் இருந்தான்.

""அடுத்த வாரம் அனுப்பனும்ன்னா இப்பவே சொன்னாத் தான் அவங்களுக்குப் பேக் பன்ன டைம் கிடைக்கும். சைக்காலஜிக்கலா தயாராகவும் முடியும். கிழவி இப்ப கோவிலுக்குப் போயிருக்கா. அதனால, இப்பவே போய் உங்க அம்மாவிடம் சொல்றீங்க, நீங்க''

மனைவியிடம் வழக்கம் போல் தலையசைத்தான் சதீஷ். தயக்கத்துடன் ஹாலில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த அம்மா முன் சோபாவில் உட்கார்ந்தான்.

புத்தகத்திலிருந்து பார்வையை எடுத்து மகனைப் பார்த்தாள் ஜானகி.

""அம்மா... நான் பாட்டி பேரை முதியோர் இல்லத்தில் பதிவு செஞ்சிருக்கேன், அட்வான்சும் கொடுத்துட்டேன்''

ஜானகியின் கையில் இருந்த புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது. அவள் அதிர்ச்சியுடன், ""என்னடா சொல்றே?'' என்றாள்.

தர்ம சங்கடத்துடன் தங்கள் அறைக் கதவு அருகே நின்ற சத்யாவைப் பார்த்தான் சதீஷ். அவள், "தைரியமாய் பேசுங்கள்' என்று சைகை காண்பித்தாள்.

கீழே விழுந்த புத்தகத்தை மேஜை மீது வைத்து அதைப் பார்த்தபடியே சொன்னான் சதிஷ்...
""இவ்வளவு வருஷமாய் பாட்டியை நாம பார்த்துகிட்டாச்சும்மா, இனிமேயும் பார்த்துக்கறது கஷ்டம்மா''

""பாட்டி நல்லாத் தானே இருக்காங்க அவங்கள பார்த்துக்கிறதில் கஷ்டம் என்னடா இருக்கு?''
அவன் பதில் சொல்லவில்லை.

தன் கோபத்தை அப்படியே விழுங்கிக் கொண்டு சொன்னாள் ஜானகி...

""சதீஷ் என் சித்தி (என் அப்பாவின் இரண்டாவது மனைவி) கொடுமைக்காரின்னு, உன்னை பிரசவிக்க பாட்டி, எங்க வீட்டுக்குக் கூட என்னை அனுப்பாம தானே பிரசவம் பார்த்தவங்கடா''

""அதுக்காக தான் அப்பா செத்தப்பறம் கூட அவங்களை வெளியே அனுப்பாம நீயே இத்தனை வருஷம் பார்த்துகிட்டியேம்மா...''

""உன்னோட பி.ஈ., படிப்புக்கு பீஸ் கட்ட தன்கிட்ட இருந்த கடைசி நகையைக் கூட வித்தவங்கடா அவங்க''

""அதுக்காக தான் மாசா, மாசம் முதியோர் இல்லத்தில் ஆயிரத்து 500 ரூபாய் கட்ட ஒத்துக்கிட்டேன்மா''

""நாம இருக்கறப்போ ஒரு அனாதை மாதிரி அவங்களை ஏண்டா அங்க சேர்க்கணும்?''

""பாட்டிக்கு நாம மட்டும் இல்லையேம்மா. அத்தை கூட இருக்கா இல்லையா? வேணும்ன்னா, பெத்த பொண்ணு கூட கொஞ்ச நாள் இருக்கட்டுமே...''

""அவ அவங்களுக்கு ஒரு வேளை சோறு ஒழுங்கா போட மாட்டாடா''

""அது தெரிஞ்சு தான் முதியோர் இல்லத்தில் சேர்க்க நாங்க முடிவு செஞ்சோம்''

"பொறுமையாக இரு' என்று தனக்குள் பல முறை சொல்லிக் கொண்டு மகனைக் கேட்டாள் ஜானகி...

""பாட்டியால உங்களுக்கு என்னடா தொந்தரவு? ஏன் அனுப்ப முடிவு செஞ்சீங்க?''

தங்கள் அறைக் கதவைப் பார்த்தான் சதீஷ். உள்ளே போயிருந்தாள் சத்யா.
வேறு வழியில்லாமல் உண்மையை அவன் சொன்னான்...
""பாட்டி இங்க இருக்கறது சத்யாக்கு பிடிக்கலைம்மா''

மகனை அருவெறுப்புடன் பார்த்தாள் ஜானகி. அவளுக்குள் ஏற்பட்ட பூகம்பம் அடங்க சிறிது நேரம் பிடித்தது.
பின் உடைந்த குரலில் மகனிடம் சொன்னாள்...

""சதீஷ் நல்லா யோசிடா... இது சரியில்லைடா''

""நாங்க நல்லா யோசிச்சாச்சும்மா''

மவுனமாக கண்களை மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தாள் ஜானகி.

"உனக்கு அவங்க கிட்டே சொல்ல கஷ்டமாய் இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். பக்குவமாய் நானே அவங்க கிட்ட சொல்றேன்மா''

ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தாள் ஜானகி.

சிறுவயதிலேயே தாயை இழந்து சித்தியிடம் பல கொடுமைகளை அனுபவித்த ஜானகி, தன் திருமணத்திற்குப் பிறகு மாமியார் விசாலத்திடம் ஒரு தாயையே பார்த்தாள். சூது, வாது தெரியாத, நேசிக்க மட்டுமே தெரிந்த விசாலமும் தன் மருமகளை மகளாகவே பாவித்தாள்.

ஜானகியின் நாத்தனார் கிரிஜா, தன் தாயைப் போல யதார்த்தமானவளாக இருக்கவில்லை. அவள் ஜானகியைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் தன் தாயிடம் சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறாள் ஜானகி.

அப்போதெல்லாம், "சும்மா வாயிற்கு வந்தபடி பேசாதேடி' என்று மகளை விசாலம் அடக்கினாளே தவிர, என்றுமே அது பற்றி அவள் மருமகளிடம் விசாரித்தது கூட கிடையாது. மகள், மருமகளின் பிரசவத்தை தான் ஒருத்தியே பார்த்துக் கொண்டாள்.

ஒரு விபத்தில் கணவன் அற்ப ஆயுசில் இறந்து போகும் வரை ஜானகியின் வாழ்வு சந்தோஷமாகவே இருந்தது. அண்ணனின் சாவிற்கு வந்த கிரிஜா, தன் தாயைத் தன்னுடன் அனுப்பி விடுவரோ என்று பயந்து பிணத்தை எடுத்த மறுகணம் அங்கிருந்து மாயமாகி விட்டாள்.

பெரிய சேமிப்போ, சொத்தோ இல்லாத அவர்கள் குடும்பத்திற்கு உதவ உறவினர்கள் யாரும் இருக்கவில்லை நிராதரவாக நின்ற ஜானகிக்கு, அவள் மன உறுதியும், அவளது ருசியான சமையலும் கை கொடுத்தன. அவள் ஒரு கல்லுரிக்கு அருகே மெஸ் ஒன்றை ஆரம்பித்தாள். மாமியாரும், மருமகளும் ஓடாய் உழைத்தனர்.

சில வருடங்களுக்குப் பிறகு விசாலத்தின் முதுமை அவளை உழைக்க ஒத்துழைக்கவில்லை. மாமியாரை உட்கார வைத்து ஜானகி ஒருத்தியே மெஸ்ஸை நடத்தினாள்.

"உனக்கு நானும் பாரமாய் இருக்கேன் ஜானகி' என்று புலம்பினாள் விசாலம்.

"சும்மா பாரம், கீரம்ன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க அத்தை. என்னை பிறந்த வீட்டுக்குக் கூட அனுப்பாம நீங்களே பிரசவம் பார்த்தீங்க. அப்போ நீங்க என்னைப் பாரம்ன்னு பார்த்தீங்களா'

"ஒரு பிரசவத்தைப் பார்த்ததைப் பத்தி நீ இன்னும் பேசறே... என் பொண்ணுக்கு மூணு பிரசவம் பார்த்தேன். பெத்து வளர்த்த தாயை இப்ப அவ எட்டிக் கூட பார்க்க மாட்டேன்ங்கிறா'

விசாலம் என்ன சொன்னாலும் ஜானகிக்கு மாமியார் ஒரு பாரமாய் தோன்றவில்லை. விசாலம் வெற்றிலை பாக்கு சாப்பிட்டுக் கொண்டும், பக்கத்து வீட்டு லட்சுமிப் பாட்டியிடம் பழங்கதைகள் பேசிக் கொண்டும் உட்கார்ந்திருக்க, சிரமம் சிறிதும் தோன்றாமல் கடுமையாய் உழைத்து குடும்பத்தை நடத்தினாள் ஜானகி.

சதீஷ் கல்லுரிக்குப் போகும் வரை அந்த மெஸ் வருமானம் அவர்களுக்குப் போதுமானதாகவே இருந்தது. அவன் என்ஜினியரிங் சேர்ந்த பிறகு தான் பற்றாக்குறை ஏற்பட்டது. மாமியாரும், மருமகளும் தங்கள் நகைகளை எல்லாம் விற்று சதீஷைப் படிக்க வைத்தனர். அவன் பி.ஈ., முடித்து அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்த போது, மெஸ்ஸை அவர்கள் மூடினர்.

பல ஆசிரியர்களும், மாணவர்களும் உண்மையாகவே வருத்தப்பட்டனர். அவ்வளவு ருசியான சமையல் வேறு எங்கும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று பின்பு ஜானகியைச் சந்திக்கும் போதெல்லாம் கூறினர்.

சதீஷிற்கு திருமணமாகும் வரை அவர்கள் குடும்பம் சுமுகமாகவே இருந்தது. அவன் மனைவி சத்யா ஒரு வங்கியில் வேலை பார்த்தாள். அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே உரத்த குரலில், "டி' போட்டுப் பேசும் பாட்டி விசாலத்தைப் பிடிக்கவில்லை. வீட்டுக்கு வந்த அவளது சிநேகிதிகளின் எதிரிலும் அதே போலப் பேசியது அவளுக்கு பெருத்த அவமானமாக இருந்தது.

ஒரு வேலையும் செய்யாமல், ஒரு பைசாவிற்கும் பிரயோஜனம் இல்லாமல் தண்டமாக இருக்கும் விசாலத்தை, "சுத்த நியூசன்ஸ்' என்று அவள் கணவனிடம் சொல்லாத நாளில்லை.

ஒருமுறை ஏதோ ஒரு வேலையை விசாலத்திடம் சத்யா சொல்ல, அந்த வேலையைத் தானே செய்து விட்டு தன் மருமகளிடம் சொன்னாள் ஜானகி...

"அவங்க காலத்தில் அவங்க வேணும்ங்கிற அளவு வேலை செஞ்சிருக்காங்க. இனிமே உனக்கு ஏதாவது செய்ய ணும்ன்னா நீ என்கிட்டே சொல்லு. நான் செய்யறேன். இந்த வயசான காலத்தில் அவங்க கிட்டே நாம வேலை வாங்கக் கூடாது' அதிலிருந்து ஜானகி இருக்கையில் விசாலத்திடம் பேசுவதை தவிர்த்தாள் சத்யா.

அவர்கள் புதிய வீட்டுக்கும், பக்கத்து வீதியில் இருந்த லட்சுமிப் பாட்டி தினமும் விசாலத்திடம் பேச வருவதை நிறுத்தவில்லை. அந்தக் கிழவியைப் பார்த்தாலும் சத்யாவிற்குப் பிடிக்கவில்லை. தனக்குப் பிடிக்காததை எல்லாம் ஜானகி இல்லாத போது அவள் விசாலத்திடம் முகத்தில் அடித்தாற் போல சொல்லத் துவங்கினாள்.

விசாலம் சப்தமாய் பேசுவது, வெற்றிலை பாக்கு போடுவது, லட்சுமி பாட்டி அவர்கள் வீட்டுக்கு வருவது எல்லாம் ஒரு காலத்தில் நின்று போயின. சத்யா இருக்கும்போது தானிருக்கும் அறையை விட்டு வெளியே வரக் கூடப் பயந்தாள் விசாலம். ஆனாலும், சத்யாவின் வெறுப்பு ஏனோ குறையவில்லை.

விசாலம் வாய்விட்டு ஒன்றும் சொல்லா விட்டாலும், ஜானகிக்கு எல்லாம் தெரிந்து தானிருந்தன. ஏதோ ஒரு கைதியைப் போல அடங்கி, ஒடுங்கி, பயந்து வாழும் தன் அத்தையைப் பார்க்க அவளுக்கு வேதனையாக இருந்தது.

இன்று சதீஷ் திடீரென்று முதியோர் இல்ல குண்டை போடுகிறான். பிடிக்கவில்லை என்ற வெற்றுக் காரணம் சொல்லி நெருங்கிய சொந்த, பந்தங்களை இவர்களால் எப்படி உதறித் தள்ள முடிகிறது என்பது தான் அவளுக்கு விளங்கவில்லை.

கோவிலிலிருந்து விசாலம் வந்ததும் பாட்டியை சோபாவில் உட்கார வைத்து, மெல்லிய குரலில் சிறிது நேரம் பேசினான் சதீஷ். அவள் அறைக்கு வந்த போது பத்து வயது கூடியது போலத் தளர்ந்திருந்தாள். அந்த முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைத் தாங்கும் சக்தி ஜானகிக்கு இருக்கவில்லை.

நிறைய நேரம் பேசாமல் கட்டிலில் பிரமை பிடித்தது போல உட்கார்ந்திருந்தாள் விசாலம். பின்பு மருமகளிடம் சொன்னாள்...

""பரவாயில்லை அவன் என்னை நடுத்தெருவில் விட்டுடலியே... பணம் குடுத்து ஒரு இடத்தில் தங்கத் தானே வைக்கிறான்... என்ன பிரச்னைன்னா நான் இத்தனை நாள் உன் நிழல்லேயே இருந்துட்டேனா ஜானு, உன்னை விட்டு பிரியறதுன்னா மனசுக்கு ரொம்பவே கஷ்டமாய் இருக்குடி''

கண்களில் பெருகிய நீரைக் காண்பிக்க விரும்பாமல் முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டாள் ஜானகி. அன்றிரவு அவளும், விசாலமும் உறங்கவில்லை. முதியோர் இல்ல வாழ்க்கையை எண்ணி விசாலம் பயந்து கொண்டிருந்தாள் என்றால், ஜானகியோ வேறு பல சிந்தனைகளில் இருந்தாள். மறுநாள் காலை சீக்கிரமாகவே சமையலை முடித்து வெளியே போன ஜானகி, மாலை மகனும், மருமகளும் வருவதற்கு சற்று முன் தான் வந்தாள்.

""ஏண்டி ஜானு இவ்வளவு நேரம்? எங்கே போயிட்டே? நான் என்னென்னவோ நினைச்சு பயந்தே போயிட்டேன்,'' என்ற விசாலத்தைப் பார்த்து அவள் புன்னகை செய்தாளே ஒழிய பதில் ஏதும் சொல்லவில்லை.

அன்று இரவு கீழே உட்கார்ந்து தங்கள் இருவருடைய துணிமணிகளையும் சூட்கேஸ்களில் அடுக்கிய ஜானகியை கட்டிலில் உட்கார்ந்திருந்த விசாலம் திகைப்புடன் பார்த்தாள்...

""என் துணிமணியை எடுத்து வைக்கிறது சரிதான் உன்னோடதை ஏண்டி ஜானு எடுத்து வைக்கிற?''

""உங்களை விட்டுட்டு நான் எப்படி அத்தை தனியாய் இருப்பேன். சாப்பிட்டா, எனக்குத் தொண்டையில் சோறு இறங்குமா? அதனால, நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான் இங்கிருந்து போறோம்''

""என்னடி சொல்றே ஜானு? நீயும் என் கூட முதியோர் இல்லத்துக்கு வர்றியா?''

""இல்லை அத்தை நாம் முதியோர் இல்லத்துக்குப் போகப் போறதில்லை. நான் பழையபடி மெஸ் ஆரம்பிக்கப் போகிறேன். நாம ரெண்டு பேரும் நம்ம அந்தப் பழைய வீட்டுக்கே போகப் போகிறோம்''

விசாலம் அதிர்ச்சியில் இருந்து மீள சிறிது நேரம் தேவைப்பட்டது. பின் அவள் கண்கள் கலங்க சொன்னாள்...

""ஜானு, என் ராசாத்தி, வேண்டாண்டி... எனக்காக நீ இந்தப் பைத்தியக்காரத்தனம் செஞ்சுடாதே. நான் உன்னை விட்டுப் போய் ரொம்ப நாள் இருக்க மாட்டேண்டி. சீக்கிரமே செத்துடுவேன்.

""என்னோட இந்தக் கொஞ்ச நாள் கஷ்டத்துக்காக நீ இந்த முடிவு எடுத்துடாதேடி... நீ, இது நாள் வரைக்கும் எனக்கு செஞ்சதுக்கே நான் ஏழு ஜென்மத்துக்கு உன் கால் செருப்பாய் இருந்தாக் கூட உன் கடன் தீர்க்க முடியாதுடிம்மா...''

மாமியாரின் காலடியில் வந்து உட்கார்ந்த ஜானகி பாசத்துடன் அவளைப் பார்த்தாள்...

""உங்களுக்காக நான் இந்த முடிவெடுத்தேன்னு யார் சொன்னது? அத்தை... எனக்கு இப்ப உழைக்கத் தெம்பிருக்கு. அதனால தான் என்னைக் கூட வச்சிருக்காங்க. ஒரு நாள் நானும், உங்க மாதிரி ஓய்ஞ்சுடுவேன். அப்போ, எனக்கும் முதியோர் இல்லம் தான் போக வேண்டி வரும்.

""அது புரிஞ்சு இப்ப நான் முழிச்சுகிட்டேன். அதான், இந்த முடிவு. நல்ல வேளையா, அந்த மெஸ் வீடு இப்ப காலியாத்தான் இருக்கு. நான் மெஸ் ஆரம்பிக்கப் போறேன்னு அங்கே சொன்னதும், சந்தோஷமா அந்தக் காலேஜ் வாத்தியாருங்க, பசங்க எல்லாம் சேர்ந்து பேசி அட்வான்ஸ் கூட கலெக்ட் பண்ணி என்கிட்ட கொடுத்துட்டாங்க.

""அத்தை... நமக்குப் பெரிய செலவில்லை உடுக்க துணி, இருக்க கூரை, வயித்துக்கு சோறு இதைத் தவிர வேற என்ன வேணும் சொல்லுங்க. மீதமாகிற காசை நான் சேர்த்து வைக்கப் போறேன். என் கடைசி காலத்தில் நான் முதியோர் இல்லம் போக வேண்டி வந்தாக் கூட என் சொந்தக் காசில் போய் இருக்க ஆசைப்படறேன்...''

""உன்னையெல்லாம் சதீஷ் அப்படிக் கை விட்டுட மாட்டான் ஜானு. அவன் நல்லவன்டி''

""சுயமாய் முடிவெடுக்கவும், செயல்படவும் முடியாதவங்க, நல்லவங்களா இருந்தாலும் பிரயோஜனம் இல்லை அத்தை'' 

தாங்க முடியாத துக்கத்துடன் மருமகளை வெறித்துப் பார்த்தாள் விசாலம்.

""அத்தை... எல்லாத்துக்கும் மேல நாம நம்ம வீட்டில் சுதந்திரமாய் இருக்கலாம் நீங்க சப்தமாய் பேசலாம். வெத்திலை, பாக்கு போடலாம் லட்சுமி பாட்டியோட மணிக்கணக்கில் பேசலாம்''

மருமகள் சொல்லச் சொல்ல, அவளைக் கட்டிக் கொண்டு நிறைய நேரம் அழுதாள் விசாலம். அதற்குப் பிறகு பேச அவளுக்கு வார்த்தைகள் இருக்கவில்லை.

மறுநாள் கால்டாக்சிக்குப் போன் செய்து விட்டு மகனிடம் தன் முடிவைச் சொன்னாள் ஜானகி.

அவன் எரிமலையாக வெடித்தான்...

""அம்மா, உனக்குப் பைத்தியம் பிடிச்சுடுச்சா? உனக்கென்ன இப்ப வேலை பார்கிற வயசா?''

""நான் இங்கே மட்டும் சும்மாவா உட்கார்ந்திருக்கேன்?''

""அம்மா நான் அந்த முதியோர் இல்லத்தில் பாட்டிக்காக அட்வான்ஸ் கூட கொடுத்துட்டேன்''

தங்கள் சூட்கேஸ்களை எடுத்து டாக்சி டிரைவரிடம் கொடுத்து விட்டு மகனிடம் சொன்னாள் ஜானகி...

""அது வீணாப் போகாதுடா அப்படியே வச்சிருக்கச் சொல்லு. 
30 வருஷம் கழிச்சு நீங்க போறப்ப உபயோகமாகும்''

""திடீர்ன்னு இப்படிக் கிளம்பினா எப்படி? நான் வேலைக்கு வேற ஆள் கூட ஏற்பாடு செய்யலை'' என்றாள் சத்யா.

பதில் பேசவில்லை ஜானகி. அதிர்ச்சியிலிருந்து மீளாத மகனையும், திகைப்பில் ஆழ்ந்த மருமகளையும் பொருட்படுத்தாமல், தன் மாமியாரை கைத் தாங்கலாய் பிடித்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் ஜானகி.

எத்தனை நாட்கள் தான் இலையானது இலையாகவே இருக்கும்...
சருகாகுமல்லவா?  சுமந்த போது நம்மை பாரமாக நினைக்காத தெய்வத்தை  பாரமாக நினைப்பது  எவ்வளவு கொடுமையானது...
தாயிடம் பேச்சுத்திறமையால் தர்க்கம் செய்யாதீர்கள்....
ஏனென்றால்...அவள் தான்  உனக்கு  பேசவே கற்றுக்கொடுத்தவள்.....
தாயைத்  தவிர்க்க  நினைக்கும் படிப்பாளிகள், தாயை  இழந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.....
  வாழும்தெய்வம் அது.  ....
     நாம் நன்றாக  இருக்கவேண்டும்  என நினைக்கும் ஒரே உயிர்  அது.....
.கண்ணீரோடு....
.நம்.....தாய்களுக்கு சமர்ப்பனம்...!

ஞாயிறு, 3 நவம்பர், 2019

பார்த்தீனியா..வெளிநாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்தபோது இந்தியாவிற்கு திட்டமிட்டே கலந்து விடபட்டவிஷ விதை..

பார்த்தீனியா..

வெளிநாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்தபோது இந்தியாவிற்கு திட்டமிட்டே கலந்து விடபட்டவிஷ விதை..

ஒரு பூவிலிருந்து ஆயிரக்கணக்கானாவிதைகள் காற்றில் பரவுகிறது.. ஒருமுறை முளைத்தால் அதன் வீரியம்கால் நூற்றாண்டுவரை நீடிக்கும்..

இந்த பார்த்தீனியம் வீட்டை சுற்றி வளர்ந்து கிடந்தால் குழுந்தைகளுக்குதீராத சளி,பெரியவர்களுக்குதும்மல் போன்ற பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த விஷ செடியை பரப்பியதே நம் பாரம்பரிய கொழிஞ்சி செடியை அழிப்பதற்காதத்தான்..

இந்த விஷச்செடியை அழிக்க களைக்கொல்லியை நம் விவசாயிகள் தெளிக்கின்றனர்..

அப்படி தெளிக்கும் போது அழிவது கொழிஞ்சி மற்றும் வரப்புகளில் இருக்கும் அருகம்புல் போன்றைவையும்தான்..

இப்படி தொடர்ச்சியாக களைக்கொல்லிகளை தெளித்து வந்தால் வரப்புகளில் இருக்கும் அருகம்புல் அழிந்து வரப்பு வழுவை இழந்துமழை பொழியும் போது வரப்பு மண்ணையும் மழை நீருடன் அடித்துக்கொண்டு   போய்விடுகிறது..

மாறாக பார்த்தீனியம் இந்த களைக்கொல்லிகளால் விதைகள் வீரியம் பெற்று ஆரோக்கியமாக வளர்கிறது..

பத்து லிட்டர் தண்ணீரில் ஐந்து கிலோ கல் உப்பை கரைத்து பிறகு பூ பிடித்திருக்கும் பார்த்தீனிய செடி மீது தெளித்தால் அது முற்றிலும் கருகிவிடுவதுடன் அதனுடைய விதைகளும் வீரியம் இல்லாமல் போய்விடுகிறது..

ஒரு கிலோ உப்பு பத்து ரூபாய் என்பதால் இதற்கு செலவும் குறைவு..

வேறு எதுவும் இதனுடன் கலக்கத்தேவையில்லை..

தெளித்து அடுத்து ஒரு மணி நேரத்தில் காய்ந்து விடுகிது.

அடுத்த சில தினங்களில் முற்றிலும் காய்ந்து விடுகிறது..

முடிந்த வரை பகிரவும்.

நன்றி.

சமைக்காமல் சாப்பிடக்கூடிய காய் கறிகளை பற்றி பார்ப்போம்.

சமைக்காமல் சாப்பிடக்கூடிய காய் கறிகளை பற்றி பார்ப்போம். 

காய்கறிகள் நல்லது எனத் தேடித் தேடி சாப்பிடுபவர்கள் உண்டு. 
காய்கறி எனக்கு வேண்டாம் என்பவர்களும் உண்டு. 

சிலருக்கு காய்கறிகளைச் சமைக்காமல் உண்ண பிடிக்கும். சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை வேகவைக்கும் போது அதிலுள்ள சத்துக்கள் பாதி வெளியேறிவிடும். 

அதேநேரம் எல்லா காய்கறிகளையும் சமைக்காமல் உண்ண முடியாது. 

ஏதாவது ஒரு காய்கறி யாவது சமைக்காமல் உண்டு வருவது நமக்குத் தேவையான சத்துக்களை பெற உதவும். 

அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் சமைக்காமல் உண்ணக்கூடிய பட்டியலை பார்க்கலாம்.

முட்டைக்கோஸ்.:
சத்துக்கள்.: 
ஃ போலிக் அமிலம், வைட்டமின் சி,கே, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்துள்ளன.

பயன்கள்.:
அல்சர் என்கிற வயிற்றுப்புண்களை குணமாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆன்ட்டிபயாட்டிக்காக செயல்பட்டு புற்றுநோய் செல்கள் வளர்ச்சி தடுக்கிறது. சக்தி மிகுந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்டது. இதில் உள்ள உயரம் பாலிபினால் ரத்தம் நோய்களை தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கிறது. நார்ச்சத்து நிறைந்தது என்பதால் செரிமான பிரச்சனையை தவிர்க்கும். உடல்எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது.

கவனிக்க.:
கரும்புள்ளி அதிகம் உள்ள, இலைகள் அரித்து, சேதமாகி இருப்பவற்றை தவிர்க்க வேண்டும்.

வெங்காயம்.:
சத்துக்கள்.: 
வைட்டமின் பி6, பயோடின், ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி, பொட்டாசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து நிறைந்துள்ளது.

பயன்கள்.:
காய்ச்சலை குணமாக்க பயன்பட்டு வந்தது, குடலில் ஏற்படும் தொற்றுகள், பித்தக்கற்கள், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினையின் போது பச்சையாக எடுத்துக் கொண்டால் அதிக பயன்தரும்.

உட்புண்ள் குணப்படுத்த வல்லது. புற்றுநோய் மற்றும் இதய நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

கவனிக்க.:
அடிபட்ட கறையாக உள்ள, கரும்புள்ளிகள் அதிகமாக வெங்காயத்தை தவிர்க்க வேண்டும்.

தக்காளி.:
சத்துக்கள்.:
பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, சி கே நிறைவாக உள்ளன.

பயன்கள்.:
உடனடியாக சத்துக்களை அளிப்பதிலும், உடலிலுள்ள நச்சுக்களை அகற்றுவதில் சிறப்பாக செயல்படுகிறது. இதில், லைகோபீன் என்ற ஆன்டி ஆக்ஸிடன் உள்ளது. இதயத்தில் செயல்திறனை மேம்படுத்துகிறதுஶ்ரீ சருமத்தை பொலிவாக்குகிறது. முடி வளர்ச்சிக்கு உதவுகிறது எலும்புகளை வலுவாக்கிறது உடலுக்கு தேவையான கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி நோய் தடுப்பானாக செயல்படுகிறது.

கவனிக்க.: 
புள்ளிகள் உள்ள தக்காளிகளை தவிர்ப்பது நல்லது.

வெள்ளரிக்காய்.:
சத்துக்கள்.:
பொட்டாசியம், வைட்டமின் சி, கே, பி, பயோடின்.

பயன்கள்.:
நீர்ச்சத்து நிறைந்தது என்பதால் நச்சுக்கள் வெளியேறும். சருமத்தின் ஆரோக்கியம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்திறனை மேம்படுத்தும். குறைந்த கலோரி கொண்டது என்பதால் உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு உதவும். மனப் பதற்றம் மற்றும் மன அழுத்தம் இருக்கும் போது மனதை அமைதிப்படுத்தும். ஒரு கப்பல் வெள்ளரிக்காயில், ஒரு நாளைக்கான வைட்டமின் கே சத்துக்களை முழுமையாகப் பெறலாம். கால்சியத்தை உடல் பயன்படுத்த ஏற்ற வேதியல் மாற்றதை செய்து எலும்புகளை உறுதிப்படுத்தும் முக்கிய பணி செய்கிறது. புற்றுநோய் செல்களை தடுக்கும் குக்குர்பைடாசின் என்கிற வேதிப்பொருள் இதில் உள்ளது.

கவனிக்க.:
மஞ்சள் புள்ளிகள் கொண்டவை, பெரிய அளவு வெள்ளரி முத்திய விதைகள் கொண்ட வெள்ளரிகளை தவிர்க்க வேண்டும்.

கேரட்
சத்துக்கள்.:
வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலேட் நிறைந்தது.

பயன்கள்.:
பார்வைத்திறன் கூர்மையாக்கும். துருவிய கேரட் தீக்காயங்களை விரைவில் ஆற்ற உதவுகிறது. கல்லீரலுக்கு நல்லது இதில் உள்ள பீட்டா கரோட்டின் வளர்சிதை மாற்றங்கள் சிறப்பான முறையில் நடைபெற உதவுகிறது. முதுமையை தாமதப்படுத்தும். சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

கவனிக்க.:
வெடிப்பு விழுந்த கேரட்டுகளை தவிர்த்து, ஈரப்பதம் இருக்கும் கேரட்டுகளை உண்ணவேண்டும். கேரட்டை வெந்நீரில் சில நிமிடங்கள் போட்டு எடுத்து அதன் பிறகு சாப்பிடுவது நல்லது.

திங்கள், 28 அக்டோபர், 2019

யார்_கண்டுபிடித்தது_மூன்று_வேளை_நேரத்துக்கு_சாப்பிடணும்_என்று.????

#யார்_கண்டுபிடித்தது_மூன்று_வேளை_நேரத்துக்கு_சாப்பிடணும்_என்று.????

விழிப்புணர்வுபதிவு.....

#உலகின்_முதல்_மனிதன் #NON_Vegetarian தான் இதை யார் மறுக்கிறீர்கள்???

இன்று நாம் உண்பது போல....

காலை இட்லி/ தோசை 
மதியம் மூன்று தட்டு சாதம் 
இரவு கொத்து பரோட்டா
என்றா #ஆதிமனிதன் சாப்பிட்டான்...???

விடியற்காலை எழுந்து நம்மைப்போன்று டீ/காபி குடித்து விட்டு வேலையைத் தொடங்கும் பழக்கமெல்லாம் அவனிடம் இருக்கவில்லை.. 

காலை எழுந்ததும் தன் குழுவுடன் சேர்ந்து ஆயுதங்களை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் வேட்டைக்கு செல்வான். 

வேட்டையாடுவது அவ்வளவு எளிதல்ல. வேட்டையாடிய விலங்கை எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவதற்குள் சூரியன் மறைந்து விடும்..

சூரியன் அடங்குமுன் உறங்கச் சென்றுவிட்டான்.

ஆகவே ஆதிமனிதன் உண்டது தினமும் ஒரு வேளை உணவு மட்டுமே என்பது தெரிகிறது. 

ஆதிமனிதர்களின் உணவுப்பழக்க வழக்கங்களை அப்படியே இன்றளவும் தொடர்ந்து வரும் பழங்குடி இனங்களை ஆராய்ந்து பார்த்தால்,

நம்மை தாக்கும் #நீரிழிவுநோய் / #உயர்ரத்தஅழுத்தம்/ #இதயநோய்கள் பற்றி இன்னும் அறியாமலே வாழ்கின்றனர். 

இன்றும் ஆப்பிரிக்காவில் வாழும் #மசாய் எனும் பழங்குடியின மக்கள் தினமும் முழு கொழுப்பு #பால், #முட்டை , #இறைச்சி போன்ற கொழுப்பு மட்டுமே அதிகமாக உண்டு வாழ்கின்றனர். 

நமக்கு வந்த நோய்களான #சுகர்/ #ப்ரஷர் / #இதயகுழாய்_அடைப்பு / பி.சி.ஓ.டி 
யாவும் அவர்களை அண்டவில்லையே ஏன்?????????

இட்லி தோசை சாப்பிடும் நம்மால் வேட்டை மிருகங்களான சிங்கங்களை அவ்வளவு எளிதாக எதிர்கொள்ளமுடியுமா??

உணவில் இருக்கிறது அத்தனையும்.

அவனது வாழ்க்கை முறையில் நமக்கு கிடைக்கும் பாடம் ,தினமும் ஒரு வேலை மட்டுமே முழுக்கொழுப்பு உணவுகளே அவன் உண்டான்..

நாம் மூன்று வேளையும் உணவு உண்டே ஆக வேண்டும் என்று ஏதாவது எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத விதி ஏதும் இருக்கிறதா ?? இல்லை....

நமது தேவைக்கு ஏற்ப , பசிக்கு ஏற்ப உணவு உண்டால் போதுமானது. அது நிச்சயம் மூன்று வேளை உணவாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

#கார்போஹைட்ரேட்டை பிரதான உணவாக உண்ணும் நமக்கு ஒவ்வொரு நான்கு மணிநேரத்திற்கும் ஒருமுறை பசி எடுக்கிறது. 

அதற்கு நடுவிலும் பலருக்கு பசி எடுக்கிறது . அதை அடக்க இருக்கவே இருக்கிறது நொறுக்குத் தீனிகள். 

ஆனால் கொழுப்புணவை பிரதானமாக உண்ட நம் முன்னோருக்கு தினமும் ஒரு வேளை உணவே போதுமானதாக இருந்திருக்கின்றது. 

#உதாரணம் : மாமிசப்பச்சினிகளான சிங்கங்களை எடுத்துக்கொள்ளுங்கள். 

ஒரு சிங்கம் தனக்கு உணவாய் மான்/ஆடு/மாடுகளை உண்ணும்.

ஒருமுறை உணவுண்டால் அதற்கு மீண்டும் பசி எடுக்க பல நாள் ஆகிறது. 

பசி அடங்கிவிட்டால் மீண்டும் பசி வரும் வரை அது வேட்டைக்குச் செல்லாது. 

நமது இயற்கைப்படி ,கொழுப்புணவு வயிற்றுக்கும் உடலுக்கும் நிறைவாக இருக்கிறது. 

மாவுச்சத்து வயிற்றுக்கு நிறைவாய் இருப்பதில்லை. 
அதனால் மீண்டும் மீண்டும் பசி எடுக்கிறது. 
பசியெடுத்தால் மனிதன் தலைகால் புரியாமல் உண்கிறான்.

#எடைகூடுகிறது. 
#நோய்கள்_தானாய்_வருகிறது...

வியாழன், 10 அக்டோபர், 2019

கப் காஃபி விற்பனை செய்யும் சாம்ராஜ்யத்தின் ராஜா...இந்த சித்தார்த்தா...

150 வருடங்களாக காபி எஸ்டேட் வைத்து வாழ்ந்த செல்வ செழிப்பான குடும்பம்...Born with Golden Spoon..... அதிலிருந்து வந்து.. ஒரு ஜெர்மானிய காஃபி அவுட்லெட் செயின் கண்டு inspire ஆகி , நாமும் நம் நாட்டில் அப்படி ஆரம்பித்தால் என்ன என யோசித்து..

1994ல் பெங்களூரில் முதல் அவுட்லெட் ஆரம்பித்தார், with a tag line
"A Lot Can Happen Over A Cup Of Coffee"...
அது அப்படியே வளர்ந்து...இந்தியா முழுவதும் இருநூறு நகரங்களில்...1850 கஃபே காபி டே CCD அவுட்லெட் வைத்த one of the most powerful indian business men , இந்த சித்தார்த்தா... இதல்லாமல் வெளிநாட்டிலும் சில நகரங்களில் அவுட்லெட் உண்டு...

2017-18 ஆம் ஆண்டு total revenue மட்டும் 530 கோடி ரூபாய்..
இருபதாயிரம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்..
ஆறு நாடுகளில், ஒரு நாளைக்கு 18 கோடி கப் காஃபி விற்பனை செய்யும் சாம்ராஜ்யத்தின் ராஜா...இந்த சித்தார்த்தா...

வாழ்க்கையில் தொழிலில்... தோற்று விட்டேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு... ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
5000 ரூபாய் கடன் வாங்கிய விவசாயியும் தற்கொலை செய்து கொள்கிறார்... பல கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தின் ராஜா வும் தற்கொலை செய்து கொள்கிறார்.

இங்கே பணம் தான் எல்லாமே என நினைக்கும் அனைவருக்குமான சம்மட்டி அடி இது !

After the game , the King and the pawn go into the same Box என ஒரு கூற்று உண்டு
இதை உணர தான் நமக்கு ஒரு வாழ்க்கையே தேவை படுகிறது...
இந்த நிலையற்ற வாழ்வில்... நாம் அந்த கொஞ்ச நேரத்தில் செய்யும் அலப்பறைகள் தான் எத்தனை எத்தனை... வஞ்சம்..சூது... பித்தலாட்டம்.. துரோகம்.. வன்மம்.. மற்றவர்களை சுலபமாக காய படுத்துவது.... இத்தியாதி இத்தியாதி..

பாபா திரைப்படத்தில் ரஜினி சொல்லும் ஒரு டயலாக்...

" ... இதெல்லாம் பந்தா.. எவன் அப்பன் வீட்டு சொத்து ... வேஸ்ட்... மேலேர்ந்து அழைப்பு வந்தா போயிடணும்...."
இது தான் நிதர்சனம்.. ரஜினி பட டயலாக் களில் எனக்கு மிகவும் பிடித்தது ‌.
ஆயிரமாண்டுக்கு முன் நம் தமிழ் மறை கூறியதும் அதான்...
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

வாழ்க்கை
மகத்தானது... விசித்திரமானது... விவரிக்க முடியாதது... மிக சிறியது...நிவையற்றதும் கூட.
இருக்கும் வரை நாமாக நம்பகமாக தீயவை தூக்கி எறிந்து நல்லதை மட்டும் சுமந்து செல்வோம்.‌..அந்த பாரம் தான் விட்டு செல்லும் போது மிக சுலபமாக இறக்கி வைக்க முடியும்.

நன்றி சித்தார்த்தா....

 For all your good deeds in the Indian Entrepreneurship World...and For all the worthy lessons you've left behind .
RIP Sidhdhartha.

ஒரே செக்குக்கு ரெண்டு இடத்தில் ஃபைன் GST- கொடுமை

#அன்று நிதி அமைச்சர் புறநானூற்றிலிருந்து மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் பேசியதின் விளக்கம்:

#இன்று உங்களுக்கு ரத்தக்கொதிப்பு ஜாஸ்தியாகி ஆஸ்பத்திரிக்குப் போனீங்களாமே...

அப்படி என்ன பிரச்னை...?"

ஒருத்தன் எனக்கு 1000 ரூபாய்க்கு 'செக்' குடுத்தான். வாங்கி பேங்க்ல போட்டேன்....

சரி.....
அது கையெழுத்து சரியில்லேன்னு ரிட்டர்ன் ஆகிப் போச்சு...
சரி....

பேங்க்லேருந்து மெசேஜ் குடுத்தான், 354 ரூபாய் பிடிச்சிக்கிட்டோம்னு. அதென்ன 354 ரூபாய்னு பேங்க்ல போய் கேட்டேன்...
என்ன சொன்னாங்க...?

300 ரூபாய் ரிட்டர்ன் சார்ஜூ, 54 ரூபாய் GST ன்னான்.
அடப்பாவிகளா...
நீ டென்ஷனாயிடாமக் கேளு...
300 ரூபாயே பெரிய கொள்ளை.
அதுக்கு GST வரி வேறயான்னு நான் டென்ஷனாகி, செக் குடுத்த பார்ட்டிக்குப் போன் பண்ணினேன்...

என்னாச்சு...
அவன் உடனே வந்து 1000 ரூபாய குடுத்துட்டான். குடுத்துட்டு அவன் சொன்னான்....எனக்கு 472 ரூபாய பிடிச்சிட்டாங்க சார்னு...
எப்படி...?
அவன் பேங்க்ல 400 ரூபாய் ரிட்டர்ன் சார்ஜாம். அதுக்கு 18%  GST 72 ரூபாய். ஆக...472 ரூபாயாம்...

அட் அநியாயமே...
1000 ரூபாய் வரவு செலவுல ஒரு சிறு தவறுக்கு  ரெண்டு பேருக்கும் அபராதம் 926 ரூபாய்.

ஒரே செக்குக்கு ரெண்டு இடத்தில் ஃபைன் வித் ரெண்டு GST. இதுக்கு பேரு டிஜிடல் தேசமாம், நாடு முழுதும் ஒரே வரியாம். நம்மள எவ்வளவு கூமுட்டை ஆக்குறாங்கன்னு நினைச்சு நினைச்சு பிரஷ்ஷர் 190க்கு போயிருச்சு.  அதான் ஆஸ்பத்திரிக்கு போயி செக் பண்ணிட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு வர்றேன்...

சரி..சரி...டென்ஷனாகாதீங்க...ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க...நான் போயி பெட்ரோல் போட்டுக்கிட்டு வந்துடறேன்....லேட்டானா ரேட்டை ஏத்திப்புடுவானுங்க பாவிப் பசங்க....

இதைத்தான் அன்றே பிசிராந்தையார்
புறநானூறு பாடலிலே பாடியிருக்கிறார் போலும்...
அப்பாடலினை படித்து பார்த்தால் தான் அதன் அர்த்தம் விளங்கும், 
இதோ அப்பாடல்,
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

பாடியவர்: பிசிராந்தையார்
புறநானூறு_184

இதன் விளக்கம்:
மிகச் சிறிய பரப்பளவு கொண்ட நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், அதனை யானை  பல நாட்களாக  உண்ணும்.
ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.
அதுபோல, ஒரு நாட்டின் தலைவன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.
ஆனால், நாட்டை ஆள்பவன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத பரிவாரங்களின் தூண்டுதலோடு, ஆரவாரமாக, ஈவு இரக்கமில்லாமல், அநியாயமாக வரியை திரட்ட விரும்பினால் யானை புகுந்த நிலம் போல தானும் கெட்டு தன் நாட்டையும் கெடுப்பான்.
இப்போது புரிகிறதா...!!!!
நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசிகள் என்று...!
தற்போது இந்த பதிவுதான் அதிகம் பரவுகிறது.
நாமும் பரவ விடுவோம்!

ஞாயிறு, 7 ஜூலை, 2019

கிரிக்கெட் விளையாடி பணம் சம்பாதிக்கலாம் Google Pay வழியாக

கிரிக்கெட் விளையாடி பணம் சம்பாதிக்கலாம் Google Pay வழியாக



Google Pay latest version of the app has a Play Cricket Game was based upon your Score you will get various Scratch Cards. 
How To Play Tez Shots
  1. Download the Google Pay App, if you are a first time user. And, complete the registration process.
  2. Click on this Tez Shots link to start the game.
  3. Click on the Play Button and start making runs. Just tap on the display for batting.
  4. Keep on paying to score more and check the milestones for details.
  5. Check your Scratch Cards and the amount will be transferred directly to your Bank Account.

Rewards Start from 100 Points, you will get the First reward activated when your Total Score reaches 100 and the next Milestone is 500 and this goes onto 5000+ score. 



So Score BIG & Get the Rewards. Press the Bat icon at the right time & score high. You can Play unlimited times & WIN BIG Download Latest version of Google Pay App From Playstore now >> ENTER HERE

Just head over to this link and it will take you directly to the game.


Game is only available on Android app version 34.0.001_RC01 or above. Upgrade to the latest version to play.  




This is a limited-time promotion and Google reserves the right to end it at any time without notice You can play as many times as you like during the promotion period. Your total score is the sum of runs in all the games that you played. If you exit the game before it ends, the score for that game will not be added to the total score. 

Whenever you reach a total score that is indicated as a milestone in the game, you will earn a locked scratch card. 

To unlock the scratch card and earn the reward, you must successfully complete the qualifying transaction assigned to the locked scratch card during the offer period as mentioned in the terms and conditions.

சனி, 29 ஜூன், 2019

மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது

மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது


 இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வளருமே தவிர கட்டுக்குள் வராது 

இந்த நோயின் ஆரம்ப நிலையை அறியமுடியாது ஒரளவுக்கு இரத்தத்தில் கலந்த பிறகு கண் மஞ்சளாக மாறும் உள்ளங்கை மஞ்சளாக மாறும் வயிற்றின் மேல்பகுதி அடிக்கடி வலிக்கும் சிறுநீர் மஞ்சலாக வரும்  இரத்த பரிசோதனையில் மிக தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம்

 இதை சரி செய்ய புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள கானபேட்டை ஊரில் நாட்டு மருந்து தரப்படுகிறது

 இந்த ஊரை கடுக்காய்பட்டி கடியாப்பட்டி கரியாபட்டி என சொல்கிறார் இந்த ஊரின் அருகில் உள்ள பெரிய ஊர் கடியாப்பட்டி நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வானளாவிய அரண்மனை வீடுகள் உள்ள ஊர் கடியாபட்டி இந்த ஊரை கடந்து 2 கி மீட்டர் சென்றால் கானபேட்டை ஊரில் அழகுகோனார் ஆகியோர் நாட்டு மருந்து  தருகின்றனர்螺

 புதன் சனிகிழமைகளில் எந்த காரணத்தை கொண்டும் மருந்து தருவதில்லை
 மஞ்சள்காமாலை நோய் எப்படி முத்திபோய் இருந்தாலும் மிக சிறந்த டாக்டர்களால் கைவிட பட்டாலும் இவரை நம்பி போகலாம் நிவர்த்தி கிடைக்கும் காலை 6 மணிமுதல் 10 மணிக்குள் மருந்து தருகிறார்கள் வெயில் வந்த பிறகு மருந்து தருவது நிறுத்தபடுகிறது

☘ ஒரு நபருக்கு 401 ரூபாய் மட்டும் கட்டணம் பெற படுகிறது மருந்நு கொடுத்த 1 மணி நேரம் கழித்து அவரது தோட்டத்தில் குளித்தவுடன் அவர்கள் சார்பாக இலவசமாக உப்பு இல்லாத பொங்கல் சர்க்கரை சாப்பிட தருவார்கள் குடிக்க 20 ரூபாய்க்கு பசும்பால் தருவர்கள் 

மற்ற பத்தியம் எதை சாப்பிட ௯டாது எதை சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாக சொல்வார்கள் 

குறிப்பு மஞ்சள்காமாலை நோய் எப்படி முத்திபோய் இருந்தாலும் இங்கு சரிசெய்யபடுகிறது மருந்து சாப்பிட்ட பிறகு 3 மாதம் மது நாட்டுகோழி பிராய்லர் கோழி தேங்காய் தேங்காய் எண்ணெய் மாம்பழம் கருவாடு  போன்றவற்றை தவிர்க்க வேண்டும் தலைக்கு நல்லண்னை மட்டும் தடவலாம்

மருந்து சாப்பிட்ட அன்று  மதியம் 12 மணிக்கு மேல் காய்ச்சல் வரும் 2 மணிக்கு தலைவலி  ஏற்படும் 4 மணிக்கு தலைவலி மிக அதிகமாக இருக்கும் எந்த மாற்று மருந்தும் எடுத்துகொள்ள ௯டாது வாந்தி ஏற்படும் நாம் குடித்த நாட்டு மருந்து உடம்பில் அனைத்து பாகத்திற்கும் சென்று மஞ்சள்காமாலையின் கழிவுகளை வாந்தியாக வெளிகொண்டு வரும் வாந்தி வருவது நல்லதுக்கே வாந்தி அதிகமாக வந்தால் தண்ணீர் குடிப்பதை நிறுத்தவும்  2 அல்லது 3 முறை வாந்தி நின்றவுடன் தலைவலி காய்ச்சல்  குறைந்து விடும் 

மறுநாள் காலை நல்லண்ணை தலைக்கு உடம்பிற்கு தேய்த்து குளித்து நாம் எந்தவிதமான உணவையும் எடுத்துகொள்ளலாம் தேங்காய் தேங்காய் என்னை நாட்டுகோழி பிராய்லர் கோழி மாம்பழம் குறிப்பாக சரக்கு மது பான்பாராக் ஹான்ஸ் ஆகியன தவிர அனைத்து காய்கறி சாம்பார் சாப்பிடலாம் 10 நாட்களுக்கு பிறகு ஆசையாக இருந்தால் ஆட்டுகறி எடுத்துகொள்ளலாம் 

 மஞ்சள் காமாலை வரமால் இருக்க பிராய்லர் நாட்டுகோழி தவிர்க்க வேண்டும் தொடர்ந்து அடிக்கடி நல்லண்னை தேய்த்து குளிக்க வேண்டும் தினமும் மது அருந்தினால் மஞ்சள் காமாலை நிச்சயம் ஏற்படும் மொத்தத்தில் உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்து கொண்டால் மஞ்சள்காமாலை நோயை தவிர்க்கலாம் 

மருத்துவரின் செல் நம்பர் காலை 11 மணிக்கு மேல் தொடர்பு கொள்ளவும்
 *அழகுகோனார்  94435 78856பலருக்கும் பயன்படும் இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள் *⊰⊰⊰⊰எ⊱⊰ண்⊱⊰ண⊱⊰ம்⊱⊱⊱⊱ ⊰போ⊱⊰ல்⊱ ⊰வா⊱⊰ழ்⊱⊰வு⊱• ⊰•*

Popular Posts

Facebook

Blog Archive