ஞாயிறு, 22 நவம்பர், 2020
முகமூடியின் பக்க விளைவுகள்?
----------------------------------------
மாஸ்க் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும். நீங்கள் அதை நீண்ட நேரம் அணிந்தால், கவனம் செலுத்துங்கள்…
1 = இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைகிறது.
2 = மூளையில் ஆக்ஸிஜன் குறைகிறது.
3 = நீங்கள் பலவீனமாக உணர ஆரம்பிக்கிறீர்கள்.
4 = மரணத்திற்கு வழிவகுக்கும்.
*ஆலோசனை*
--------------
A = நீங்கள் தனியாக இருக்கும்போது அதை அணிய வேண்டாம். முகமூடி அணிந்த ஏ.சி.யுடன் என் காரில் நிறைய பேரை நான் இன்னும் பார்க்கிறேன். அறியாமை அல்லது கல்வியறிவின்மை?
பி = இதை வீட்டில் பயன்படுத்த வேண்டாம்.
சி = நெரிசலான இடத்தில் மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது மட்டுமே இதைப் பயன்படுத்தவும்.
டி = அதன் பயன்பாட்டைக் குறைக்கவும், பெரும்பாலும் உங்களை கூட்டத்திலிருந்து பிரிப்பதன் மூலம்.
இ = எப்போதும் இரண்டு முகமூடிகளை வைத்திருங்கள்
ஒவ்வொரு 4-5 மணி நேரத்திலும் மாற்றங்களைச் செய்யுங்கள்.
எஃப் = முகமூடிகளை நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம்
*பத்திரமாக இருக்கவும் !!*
இந்த தகவலை உங்களிடம் வைத்திருக்க வேண்டாம். இதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வழங்குங்கள்…
*உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகிறேன்.* 🙏
*தேர்தல் ஆணையம் யார் கையில்.* ? Election Commission
Author: Infomas | நவம்பர் 22, 2020 |
*தேர்தல் ஆணையம் யார் கையில்.* ?
6 *ஆண்டு தேர்தல் தடை* *அம்போ... சசிகலா முதல்வர்* *ஆவார் எப்படி? பி.ஜே.பி போட்ட பாதை அப்படி!*
இந்தக் கட்டுரையை லில்லி தாமஸிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
நான்காம் வகுப்பு படிக்கும் போதே தன் பெயருக்கு முன்னால், `வழக்கறிஞர் லில்லி தாமஸ்' எனப் போட்டுக்கொண்டவர் அவர். பின்னாளில் அதைச் சாதித்தும் காட்டியவர். கோட்டயத்தைச் சேர்ந்த லில்லி தாமஸ், சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண். அரசியலில் குற்றப் பின்னணியினரை ஒழிக்க 86-ம் வயதிலும் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார் லில்லி தாமஸ்.
`அரசியல்வாதிகள் கிரிமினல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், அவர்கள் மேல்முறையீடு செய்யும் அவகாசம் முடியும் வரையிலோ அல்லது மேல்முறையீடு செய்தால் அதன் இறுதித்தீர்ப்பு வரும் வரையிலோ பதவியில் தொடர முடியும்’ என்றது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 (4). இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தித்தான் தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் கிரிமினல் குற்றவாளிகள் `மக்கள் பிரதிநிதி'களாக வலம் வந்தார்கள். `இந்தச் சட்டப் பிரிவு 8 (4) அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது. இந்தப் பிரிவு செல்லாது' என அறிவிக்கக்கோரி பொதுநல வழக்கு போட்டார் லில்லி தாமஸ். அந்த வழக்கில்தான், `அப்பீல் மனு முடியும் வரை காத்திருக்கக் கூடாது. கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற உடனேயே எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் பதவி ரத்தாகும்’ என அரசியல்வாதிகளின் தலையில் 2013-ம் ஆண்டு இடியை இறக்கியது சுப்ரீம் கோர்ட்.
இந்தத் தீர்ப்பால் எம்.பி பதவி இழந்த முதல் அரசியல்வாதி ரஷீத் மசூத். அவரைத் தொடர்ந்து லாலு, ஜெகதீஷ் சர்மா, நம்ம ஊர் செல்வகணபதி, ஜெயலலிதா, பாலகிருஷ்ணரெட்டி என அடுத்தடுத்து அரசியல்வாதிகளின் பதவிகள் பறிபோயின.
பதவி இழந்த லாலு, ஜெயலலிதா, செல்வகணபதி, பாலகிருஷ்ண ரெட்டி ...
இப்படி சிறைக்குப் போகும் அரசியல்வாதிகள் தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகு, ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது. `தண்டனை பெற்றவர்கள், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே பதவியில் தொடர்வதற்கான தகுதியை இழப்பதோடு, தண்டனை முடிந்தபிறகும் அடுத்த ஆறாண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது' என்கிறது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்.
` *ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது' என்கிற கூர் தீட்டப்பட்ட கத்தியை இன்றைக்கு சிக்கிம் முதல்வருக்காக* *மழுங்கடித்துவிட்டது தேர்தல் ஆணையம்.*
பவன் குமார் சாம்லிங்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு சிக்கிம் சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்கும் மேல் முதல்வராகக் கோலோச்சிக்கொண்டிருந்த `சிக்கிம் ஜனநாயக முன்னணி' தலைவர் பவன் குமார் சாம்லிங்கை வீழ்த்தி, `சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா'வின் தலைவர் பிரேம் சிங் தமாங் முதல்வரானார். முதல்வரானாரே தவிர, தமாங் எம்.எல்.ஏ ஆகவில்லை. அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ ஆனால்தான், அவரால் முதல்வராக நீடிக்கமுடியும்.
ஆனால், அதிலும் ஒரு சிக்கல்.
முன்பு தமாங் அமைச்சராக இருந்த காலத்தில், அதாவது 1996-97-ம் ஆண்டு கறவை மாடுகள் வழங்கும் திட்ட ஊழலில் சிக்கி, ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார் தமாங். தண்டனை அனுபவித்து, 2018 ஆகஸ்ட் 10-ம் தேதிதான் சிறையிலிருந்து வெளியே வந்தார். அன்றிலிருந்து அவர் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. பிறகு எப்படி முதல்வரானார் என்கிற கேள்விக்கு விடை தேட வேண்டியதில்லை.
சிக்கிம் சட்டசபைத் தேர்தலில் `சிக்கிம் ஜனநாயக முன்னணி' 15 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது.
`` *ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலங்களில் கட்சியைக் கைப்பற்று"*
என்கிற சூத்திரத்தை சிக்கிமிலும் செய்தது பி.ஜே.பி. தேர்தல் முடிந்த இரண்டே மாதத்தில் `சிக்கிம் ஜனநாயக முன்னணி'யின் 10 எம்.எல்.ஏ-க்கள் திடீரென பி.ஜே.பி-யில் ஐக்கியமானார்கள். இதனால் பவன்குமார் சாம்லிங்கின் `சிக்கிம் ஜனநாயக முன்னணி' எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.
அதிகாரங்களைக் குவித்து வைத்திருக்கும் மத்திய பி.ஜே.பி ஆட்சியின் ஆசி, தமாங்குக்குத் தாராளமாகக் கிடைத்தது.
விளைவு தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளிக்கிறார் தமாங். `ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது என்ற சட்டத்திருத்தம் 2003-ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டது. முன்னதாக நடந்த வழக்குக்கு, பின்னர் நிறைவேற்றிய சட்டத்தைக் கொண்டு தண்டனை விதிக்க முடியாது.
ஆறு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது செல்லாது’ என மனுவில் குறிப்பிடுகிறார். தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுக்கொண்டு, தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை 13 மாதங்களாகக் குறைத்து உத்தரவு பிறப்பிக்கிறது. இதன் மூலம் கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் நின்று, தமாங் வெற்றி பெறுகிறார் . *முதல்வராகத் தொடர்கிறார்*
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவுக்கு இது சாபக்கேடு. தேர்தலில் போட்டியிட முடியாத ஒருவரை அதிலிருந்து விடுவித்து மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம். சிக்கிம் இடைத்தேர்தலுக்காக தமாங்கும் மோடியும் கூட்டணி போட்டனர். அதற்காகத் தேர்தல் ஆணையத்தின் மூலம் கைம்மாறு நடத்தப்பட்டிருக்கிறது.
*அரசியலில் `கிரிமினல்' கலப்பதை எதிர்ப்பதில் தான்தான் `முன்னோடி' எனக் காட்டிக் கொண்ட பி.ஜே.பி-யின்* *முகத்திரை தமாங் விவகாரத்தில் கிழிந்து* *தொங்குகிறது* .
*தமாங்குக்கு பதவிப்* *பிரமாணம் செய்து* *வைக்கிறார் கவர்னர்* ..
சிக்கிம் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமாங் போட்டியிடவில்லை. ஆனால், தேர்தலில் அவரது கட்சி வெல்கிறது. அவருடைய கட்சி எம்.எல்.ஏ-களால் முதல்வராக தேர்வு செய்யப்படுகிறார் தமாங். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் உள்ள போதுதான், தேர்தல் கமிஷன் தமாங்குக்கு சலுகை காட்டுகிறது.
இந்த இடத்தில் இந்தியாவே திரும்பிப் பார்த்த ஜெயலலிதா வழக்கை கவனத்திலே எடுத்துக்கொள்ளவில்லை சிக்கிம் கவர்னரும், தேர்தல் ஆணையமும்.
டான்சி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. நான்கு தொகுதிகளில் தாக்கல் செய்த ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் அன்றைக்கு நிராகரிக்கப்பட்டன. தேர்தலில் அ.தி.மு.க. வென்று, ஆட்சியைப் பிடித்தது. கவர்னராக இருந்த பாத்திமா பீவி ஜெயலலிதாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் பாய்ந்தது.
தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஜெயலலிதாவுக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது தவறு. எம்.எல்.ஏ ஆக முடியாத ஒருவர் எப்படி முதல்வர் ஆக முடியும்?' எனச் சொல்லி ஜெயலலிதாவின் முதல்வர் பதவியை 2001 செப்டம்பர் 21-ம் தேதி பறித்து உத்தரவிட்டது நீதிபதி பரூச்சா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச். இதனால், ஜெயலலிதா அமைச்சரவையே கவிழ்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்தது.
` *ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது* *செல்லாது' என 18 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உரக்கச்* *சொன்ன விஷயம், சிக்கிம் கவர்னருக்கும் தேர்தல்* *கமிஷனுக்கும் கொஞ்சம்கூட உரைக்கவில்லை* *என்றால் இவர்கள் எல்லாம் ஜனநாயகத்தின்* *காவலர்களா... அல்லது குற்றவாளிகளுக்குத்* *துணை போகும் ஏவலர்களா என்று கேள்வி எழுப்புகிறான்* *இந்த தேசத்தின் வாக்காளன்* .
சிக்கிம் முதல்வராக தமாங் பதவியேற்ற தேதி 2019 மே 27. அதாவது, தமாங் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்ட காலம் அது. சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிடக்கூடத் தகுதியில்லாத தமாங்கை, ஆளுநர், முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லுமா? அவர் முதலமைச்சராகத் தொடர்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பது அரசியல் தெரியாத பத்தாம் வகுப்பு மாணவனுக்குக்கூட தெரிந்த உண்மை, அரசியல் அறிந்த சட்டம் தெரிந்த சிக்கிம் ஆளுநருக்குத் தெரியாதா... ஆள்வோருக்கு புரியாதா... மத்திய அரசு, தேர்தல் ஆணையம், நீதித்துறை, ஆளுநர் மாளிகை என அனைத்து அதிகார அமைப்புகளும் வாய் மூடிவிட்டன.
*`பி.ஜே.பி-யின் கண்ணசைவுக்குத் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது'* என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிரூபிப்பது போலத்தானே இருக்கிறது தமாங் விவகாரம். தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஒருவருக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததே தவறு. கவர்னர் மூலம் அந்த தவற்றையும் செய்துவிட்டு, அந்த முதல்வர், தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாகத் தடைக்காலத்தைக் குறைத்துவிட்டு அந்த முதல்வரோடு கூட்டணி அமைத்து இடைத் தேர்தலையும் சந்திக்கிறது பி.ஜே.பி.
*லில்லி தாமஸ் மேட்டருக்கு வருவோம்.*
அவர் போட்ட வழக்கால்தான் `அப்பீல் மனு முடியும் வரை காத்திருக்கக்கூடாது. கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளின் எம்.பி., எம்.எல்.ஏ பதவிகள் உடனடியாக ரத்தாகும்’ என 2013 ஜூலை 10-ம் தேதி தீர்ப்பு எழுதியது உச்சநீதிமன்றம். இதனால் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மேல் முறையீடு செய்வதற்கு முன்பே பதவியை இழக்கும் அபாயம் உருவானது. இந்தத் தீர்ப்பு வெளியான நேரத்தில் மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
உச்சநீதிமன்றம் இப்படி கடிவாளம் போட்டதும் கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளும் ஒருமித்த குரலுடன் எதிர்ப்பு தெரிவித்தன. 2013 ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாகச் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்கள். சுப்ரீம் கோர்ட் உத்தரவை, பயனற்றதாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது மன்மோகன் சிங் அரசு. அதற்குக் காரணம் அன்றைக்கு லோக்சபா எம்.பி.,க்கள், 543 பேரில், 162 பேர் மீது குற்ற வழக்குகள் இருந்தன. மாநில எம்.எல்.ஏ.,க்கள் 4,032 பேரில், 1,258 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன.
மக்கள் பிரதிநிதி'களைப் பாதுகாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்தார்கள். அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை 2013 ஆகஸ்ட் 13-ம் தேதி தாக்கல் செய்தது மன்மோகன் சிங் அரசு. அதில், `இந்தத் தீர்ப்பு, அரசியல் ரீதியாகப் பழிவாங்கவே பயன்படும். அப்பீல் மனு நிலுவையில் இருக்கும்போதே பதவியைப் பறித்துவிட்டால், அப்பீல் மனுவில் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால், அவரால் மறுபடியும் பதவியைப் பெற முடியாது. ஒருவர் எப்போது பதவி பறிப்புக்கு ஆளாவார் என்று சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் உள்ளது. அதை நீதிமன்றம் எடுத்துக் கொள்ளக்கூடாது. இதுபோன்ற அரசியல் சட்ட விவகாரங்களை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது தவறு. அதிக நீதிபதிகளைக்கொண்ட அரசியல் சட்ட அமர்வுதான் விசாரிக்க வேண்டும். தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்' எனச் சொன்னது.
மறு சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், `தண்டனை பெற்ற, எம்.பி. எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளைப் பறிக்கலாம் என, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு சரியானதுதான். நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், எந்தத் தவறும் இல்லை. மிகவும், அலசி ஆராய்ந்து அளிக்கப்பட்ட தீர்ப்பு அது. இந்த விஷயத்தில், மறு பரிசீலனைக்கே இடமில்லை' என 2013 செப்டம்பர் 3-ம் தேதி திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இதனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து, அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றது மன்மோகன் சிங் ஆட்சி. நீதிமன்ற உத்தரவையும் மீறி, குற்றப் பின்னணி எம்.பி., எம்.எல்.ஏ-களை காப்பாற்றும் மன்மோகன் சிங் அரசின் அவசரச் சட்டத்துக்கு அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த பி.ஜே.பி கடுமையாக எதிர்த்தது. `அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக் கூடாது' எனச் சொல்லி 2013 செப்டம்பர் 27-ம் தேதி அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்ட பி.ஜே.பி தலைவர்கள் அன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, வலியுறுத்தினார்கள். அந்தச் சந்திப்புக்குப் பிறகு பேட்டி அளித்த அத்வானி, ``தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் அவசரச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது'' எனக் கர்ஜித்தார். அந்தக் கட்சிதான் இன்றைக்கு தமாங் விஷயத்தில் அரசியல் சாசனத்தையே துச்சமெனத் தூக்கி வீசியிருக்கிறது.
மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்குக் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் குரல் ஒன்று எழுந்தது. அது ராகுல் காந்தியின் குரல். பி.ஜே.பி தலைவர்கள் எல்லாம் ஜனாதிபதியைச் சந்திக்கப் போனபோது திடீரென்று டெல்லி பிரஸ் கிளப்புக்கு விஜயம் செய்தார் ராகுல் காந்தி.
நீண்ட நேரம் பிரஸ் மீட் நடத்தப்போவதில்லை. நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதைச் சொல்லிவிட்டு, என் வேலையைப் பார்க்கப்போகிறேன்'' என்று சொன்ன ராகுல் காந்தி, ``கிரிமினல் பின்னணி உள்ள மக்கள் பிரதிநிதிகளைப் பாதுகாக்கக் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டம் முட்டாள்தனமானது. அதைக் கிழித்து குப்பையில் எறியுங்கள்'' என்றார் ஆவசேமாக. காங்கிரஸ் ஆட்சிக்குள்ளேயே `சேம் சைடு கோல்' போட்ட தருணம் அது. அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் அனுப்பினார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி ஆக்ரோஷமாகக் கர்ஜித்த நேரத்தில், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா வாஷிங்டன்னில் உள்ள ஹோட்டலில் தூங்கிக்கொண்டிருந்தார். அவரின் கருத்தை அறிய ஊடகத்தினர் அங்கே குவிந்தனர். ``எழுப்பப்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து, நான் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்துப் பரிசீலிக்கப்படும்'' என அறிக்கை விட்டார் மன்மோகன். ஆனால், பி.ஜே.பி-யோ இதை `ஒரு அரசியல் நாடகம்' என அன்றைக்கு வர்ணித்தது. ``சுயமரியாதை இருந்தால் பிரதமர் மன்மோகன் சிங் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'' என்றார் அன்றைக்கு ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அருண் ஜேட்லி.
வெங்கையா நாயுடுவோ, ``ராகுல் காந்தி சொல்வது போல முட்டாள்தனமான அரசின் பிரதமர் மன்மோகன்சிங் பதவியில் தொடரலாமா? பதவியிலிருந்து விலகி தனது தன்மானத்தை வெளிப்படுத்த வேண்டும்'' என்றார். ``பிரதமரையும் அவரது கேபினட்டையும் 'நான்சென்ஸ்' எனக்கூறுகிறார் ராகுல் காந்தி. தனக்குச் சுயமரியாதை இருக்கிறது என்பதைக் கொஞ்சம்கூட வெளிப்படுத்தாமல் அமைதி காக்கிறார் மன்மோகன் சிங். பிரதமருக்குக் கொஞ்சமாவது சுய மரியாதை இருக்க வேண்டாமா'' எனக் கேள்வி எழுப்பினார் நிதின் கட்கரி
அன்றைக்குக் காட்டிய `ஆக்ரோஷம்' எல்லாம் இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்ததும் `வேஷம்' ஆகிவிட்டது.
நரேந்திரமோடி மட்டும் சும்மா இருந்திருப்பாரா... பி.ஜே.பி. பிரதமர் வேட்பாளராக அன்றைக்கு அறிவிக்கப்பட்டிருந்த மோடி என்ன சொன்னார் தெரியுமா... 2013 செப்டம்பர் 2-ம் தேதி டெல்லியில் நடந்த விகாஸ் கூட்டத்தில் பங்கேற்ற மோடி, `` *டெல்லியில் அம்மா ஒரு பக்கம் ஆட்சி புரிகிறார், மகன் ஒரு* *பக்கம் ஆட்சி நடத்துகிறார். ஒரு ஆட்சிக்குள் பல ஆட்சிகள் நடக்கிறது.* *காங்கிரஸ் கட்சியே நமது பிரதமரை மதிப்பதில்லை. பிறகு ஷெரீப் எப்படி* *மதிப்பார்... ராகுல் காந்தி நான்சென்ஸ் என்றபோது பிரதமர் மன்மோகன்சிங் மறுப்பு* *தெரிவிக்கவில்லை.* *நீங்கள் காங்கிரஸின் பட்டத்து இளவரசன் தலைமையில் செயல்பட விரும்புகிறீர்களா...* *அல்லது இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் கீழ் செயல்பட* *விரும்புகிறீர்களா?'' எனக் கேள்வி எழுப்பினார் மோடி.*
அந்த மோடிதான் இன்றைக்குப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தமாங்குக்கு ஆதரவாக அரசியல் சாசனத்தையே தூக்கி எறிகிறார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, லாலு, ரஷீத் மசூத், ஜெகதீஷ் சர்மா ஆகியோரின் எம்.பி பதவிகள் பறிக்கப்பட்ட போது அன்றைக்கு பி.ஜே.பி வரவேற்றுக் கொண்டாடியது. ஆனால், ஆட்சியில் அமர்ந்ததும் தமாங்கைப் போற்றுகிறது.
2014 நாடாளுமன்றத் தேர்தலை பி.ஜே.பி எதிர்கொண்டபோது குஜராத் காந்தி நகர் பிரசாரக்கூட்டத்தில் பேசிய மோடி, `` *அரசியல், குற்றவாளிகள் மயமாவது வருத்தத்தை* *அளிக்கிறது. அரசியலைக் குற்றவாளிகளின்* *பிடியிலிருந்து விடுவிப்பேன்* .
*பி.ஜே.பி ஆட்சிக்கு* *வந்தால், குற்றம் புரிந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஓராண்டுக்குள் சிறைக்கு* *அனுப்பப்படுவார்கள். பி.ஜே.பி-யினராக இருந்தாலும் அவர்கள்* *மீதும் நடவடிக்கை பாயும். குற்றவாளிகளின்* *பிடியிலிருந்து* *அரசியலை விடுவிக்க எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்''* என்றார்.
வென்று ஆட்சியில் அமர்ந்து ஐந்தாண்டுகள் ஓட்டியும் விட்ட மோடி, அடுத்து வந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் வென்று மீண்டும் பிரதமரானார். அந்தத் தேர்தலில் பி.ஜே.பி சார்பில் நிறுத்தப்பட்ட 433 வேட்பாளர்களில் 175 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். பி.ஜே.பி களமிறக்கிய வேட்பாளர்களில் 40 சதவிகிதத்தினர் கிரிமினல் பின்னணியினர். மோடி போட்டது அத்தனை பொய் வேஷம்.
வழக்கு தொடர்பாக ஒருவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று விதிக்கப்படும் கால அளவைக் குறைக்கவோ, ரத்துசெய்யவோ 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 11-வது பிரிவின் கீழ், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இருக்கிறது. உண்மைதான். அதைத்தான் தேர்தல் ஆணையம் பயன்படுத்தியிருக்கிறது என வாதம் வைக்கப்பட்டாலும் நியாயமான அணுகுமுறையா இது? பி.ஜே.பி கூட்டணிக் கட்சிக்காக தமாங்குக்குத் தரப்பட்ட சலுகையைக் காட்டி ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்களும் சிறைக்குப் போய்விட்டு வந்தவர்களும் அரியணையில் அமர்வார்கள்.
*மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் தரம் இன்னும்* *மேம்படுத்தப்பட வேண்டும்...*
ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும்... குற்றப்பின்னணியினர் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்... நீண்ட ஆண்டுகளாகப் பேசப்பட்டு வரும் தேர்தல் சீர்திருத்தங்கள் அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதையெல்லாம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குழி தோண்டி புதைத்துவிடலாம்.
தமாங்கைப் பின்பற்றி தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தமது அரசியலை பி.ஜே.பி ஆடத் தொடங்கலாம். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் நான்கு ஆண்டு தண்டனை அனுபவித்து வரும் சசிகலா 2021 பிப்ரவரியில்தான் விடுதலை ஆக வேண்டும். ஏற்கெனவே அனுபவித்த சிறை நாள்கள், நன்னடத்தைக் காரணங்களால் 2020 ஜூலையிலேயே சசிகலா வெளியே வரலாம். அதிலிருந்து அவர் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனாலும் சசிகலா தேர்தலில் போட்டியிடுவார். காரணம் தமாங் ஏற்படுத்தியுள்ள முன்னுதாரணம். பி.ஜே.பி. ஆட்சி போட்டுக் கொடுத்த பாதை.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது 1995-ம் ஆண்டு. அது போதாது? `
ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது என்ற சட்டத்திருத்தம் 2003-ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டது. 1995-ம் போடப்பட்ட வழக்குக்குப் பிறகு நிறைவேற்றிய சட்டத்தைக்கொண்டு தண்டனை விதிக்க முடியாது. ஆறு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது செல்லாது’ எனத் தேர்தல் ஆணையத்தின் கதவுகளைத் தட்டுவார் சசிகலா. அதிகார வர்க்கத்தின் ஆசி இருந்தால் முதல்வர் நாற்காலியில்கூட வந்து அமர்வார்.
*ஜனநாயகத்தின் ஆணிவேர்களைக் காப்பவர்கள் லில்லி தாமஸ்கள்தான்.* *அதைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லி அரியணையில் அமரும் ஆட்சியாளர்கள் அல்ல.*
*ஆய்வுக்கு ........*
திங்கள், 16 நவம்பர், 2020
*தேனின் வகைகளும் பயன்களும்*
Author: Infomas | நவம்பர் 16, 2020 |
*இயற்கையே சிறந்த மருத்துவர்*
*தேனின் வகைகளும் பயன்களும்*
தேன் உடலின் ஒவவோர் உறுப்புக்கும் ஊட்டத்தை அளிக்கக்கூடியது. அதனால்தான் தேனை அமிர்தத்துக்கு நிகராகச் சொல்கின்றனர்.
தேனின் வகைகள்
எந்தப் பூவில் இருந்து தேன் எடுக்கப்படுகிறதோ, அந்தப் பூவின் தன்மையைப் பொருத்து தேனின் தன்மையும் குணமும் மாறுபடும். அதற்குக் காரணம் அதன் மகரந்த போலன்.
நாவல், வேம்பு, முருங்கை, மா, தும்பை, பூர்க்கு, புளியம், துளசி, பூண்டு மற்றும் வெங்காரமது போன்ற 300-க்கும் அதிகமான தேன் வகைகள் உள்ளன. பொதுவாக, தேனை நல்ல தூக்கம், தொண்டைக்கட்டு, உடல் எடை, மேனி அழகு, வயிற்றுப்புண், கொப்புளம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம்.
சித்த மருத்துவத்தில் தேன் கிடைக்கக்கூடிய இடத்தைப் பொருத்து, தேனை ஐந்தாகப் பிரிக்கின்றனர்.
மலைத் தேன்: மலைகளில் கிடைப்பது. அனைத்து மருந்துகளுடனும் சேர்த்துப் பயன்படுத்தலாம். குறிப்பாக, கண் நோயைக் குணப்படுத்தக்கூடியது.
கொம்புத் தேன்: மரத்தில் கிடைப்பது. வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.
பொந்துத் தேன்: மரப்பொந்துகளில் கிடைப்பது. எடை சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.
புற்றுத் தேன்: மலைப் புற்றுகளில் கிடைப்பது. குழந்தைகளுக்கு வாந்தி, விக்கலை நிறுத்தப் பயன்படும்.
மனைத் தேன்: வீடுகளில் கிடைப்பது. முடி சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கும்.
தேனில் உள்ள நீர் அளவு குறையும்போது, தேன் கற்கண்டு உருவாகும். தேன் கற்கண்டு (டெரிஜியம்) கண்புரை மற்றும் கண்சதை வளர்வதைத் தடுக்கும்.
பாலுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும், தூக்கம் அதிகரிக்கும்.
பால், பாசிப்பயறு மற்றும் தயிரைத் தேனுடன் சேர்த்து முகத்தில் பூசிவர முகப் பொலிவு கூடும்.
கிரீன் டீ உடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், தூக்கம் வருவதைத் தடுக்கலாம்.
தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, தலையில் தடவி, ஓரு மணி பின் குளிக்க,முடிக் கொட்டுதல் நிற்கும்.
தேனை, சுண்ணாம்புடன் சேர்த்துப் பத்து போட்டால், வலி, வீக்கங்கள் குறையும்.
தூதுவளைச் சாறு, தேன் சேர்த்துக் குடிக்க, சளியைக் குணப்படுத்தும்.
கேரட், தேன் சேர்த்துச் சாப்பிட்டால், ரத்தசோகைப் போகும்.
தேங்காய்ப்பாலுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.
பார்லி அரிசிக் கஞ்சியைத் தேனுடன் சேர்த்துச் சாப்பிட, அல்சர் குணமாகும்.
தேனுடன் ஆமணக்கு 15 மி.லி சேர்த்துச் சாப்பிட, குழந்தைகளுக்கு சிறுநீர் பிரிவது சீராகும்.
பூண்டு, தேனைச் சேர்த்துச் சாப்பிட்டால், தொண்டைப் புண் சரியாகும்.
தேனை வெந்நீர் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், வயிற்றுப்போக்கு
சரியாகும்.
துளசி, தும்பை மற்றும் தேனை சிறிது சிறிதாய் சேர்க்க, மூச்சுத் திணறல் குறையும்.
இரண்டு டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு
பலன் தரும்.
தேன், மிளகுடன் சேர்ந்துச் சாப்பிட, தொண்டைக் கரகரப்பு நீங்கும்.
பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், நல்ல சக்தி உண்டாகும்.
பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட, நல்ல தூக்கம் வரும். இதயம் பலம் பெறும்.
40 வயதைக் கடந்தவர்கள், நீர் அல்லது பாலுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால்,
கால்சியம் சத்தின் அளவு கூடும்.
தேனை, தீப்புண்களின் மீது தடவிவர புண்கள் ஆறும்.
ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், நல்ல தூக்கம் வரும்.
நெல்லிக்காய் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இன்சுலின் சுரக்கும்.
எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இருமல் குணமாகும்.
இஞ்சிச் சாற்றுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், பித்தம் தீரும்.
ரோஜாப்பூ, கல்கண்டு, தேன் கலந்து சாப்பிட்டால், உடல் வெப்பம் தணியும்.
மாதுளை மனப்பாகு – மூன்று மாத கர்ப்பிணிகள், மாதுளம் பழச்சாறு, தேன், பன்னீர் ரோஸ், கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால், வயிற்று எரிச்சல் குறைவதுடன், ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும். மேலும், வாந்தி வருவது போன்ற உணர்வு குறையும்.
தேனை யாருக்குக் கொடுக்கக் கூடாது
ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்குத் தேன் கொடுக்கக் கூடாது.
சர்க்கரை நோயாளிகள் தேன் அதிக அளவு எடுத்துக்கொள்ளக் கூடாது.
தேனை எப்படிச் சாப்பிடக் கூடாது
தேனை சூடுபடுத்தக் கூடாது.
தேனை நெய் மற்றும் எண்ணெய் உடன் சம அளவு சேர்த்துச் சாப்பிடக் கூடாது.
போலன் அதிகமாக உள்ள தேனைச் சாப்பிடக் கூடாது!!!🙏🙏
சனி, 7 நவம்பர், 2020
நாம், அந்த பங்கிலோ வேறு பங்கிலோ ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும்போது முறையே ஒவ்வொரு லிட்டருக்கு 6 பைசாவும் 4 பைசாவும் கழிவறை பராமரிப்பு செலவுக்காகக் நம் கையிலிருந்து கொடுக்கிறோம். Petrol bunk
Author: Infomas | நவம்பர் 07, 2020 |
இந்தியாவில் ஹோட்டல்கள் மட்டுமல்லாது ஓவ்வொரு பெட்ரோல் பங்க்களும் சரியான பராமரிப்புள்ள குடிநீர் மற்றும் கழிவறை வசதியை பொதுமக்களின் உபயோகத்திற்காக கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது மத்திய அமைச்சகத்தின் விதியாகும்.
நாம், அந்த பங்கிலோ வேறு பங்கிலோ ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும்போது முறையே ஒவ்வொரு லிட்டருக்கு 6 பைசாவும் 4 பைசாவும் கழிவறை பராமரிப்பு செலவுக்காகக் நம் கையிலிருந்து கொடுக்கிறோம்.
அதனால் அடுத்த முறை அவசரம் எனில், உங்கள் கூகிள் மேப்பில் பக்கத்திலுள்ள பெட்ரோல் பங்ககளை கண்டுபிடியுங்கள்.
இந்த இலவசமாக கழிவறை உபயோகப்படுத்தும் வசதி அங்கு இல்லை என்றாலோ, இருந்தும் நம்மை உபயோகப்படுத்த தடுத்தாலோ, பூட்டி வைத்து சாவி ஓனரிடம் உள்ளது என்று சிப்பந்திகள் மறுத்தாலோ, கழிப்பறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லையென்றாலோ, உங்கள் மொபைல் போனில் அந்த பங்க் மற்றும் கழிப்பறையின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, பங்கின் பெயர், முகவரியுடன் தேதி குறிப்பிட்டு கூகிள் பிளே ஸ்டோரில் (Google Play Store) - ல் உள்ள ஸ்வஸ்தா மொபைல் ஆப் (Swachhta@PetroPump App) மூலம் புகார் பதிவு செய்யலாம்.
பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய அரசு (Ministry of Petroleum and Natural Gas, Government of India) மூலம் 3 நாள்களுக்குள் நேரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உங்களுக்கு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும்.
பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் இந்தச் செய்தியை பகிர்ந்திடவும் கேட்டுகொள்கின்றேன்.
திங்கள், 12 அக்டோபர், 2020
பாஜக அரசின்*போக்கை மக்களிடம் கொண்டு செல்வோம்.❗*
Author: Infomas | அக்டோபர் 12, 2020 |
*இந்தப் பதிவை முழுமையாகபடித்து முடிந்தவரை பகிருங்கள்🤝🏼*
👺🌐📌⁉️🇮🇳👿
⚖️
😴
*பாஜக அரசின்*போக்கை மக்களிடம் கொண்டு செல்வோம்.❗*
*அவர்களிடம் #முகநூலில் கருத்து #சன்டை போட #தேவையில்லை.❗*
*சொன்னாலும் அவர்கள் போலி வரலாற்றையே கையிலெடுப்பர்.❗*
*நாம்* 😴 🤔 🥱
*#மக்களிடம் இந்த #கேள்விகளை #வைப்போம்...❗*
*பதிலை அவர்கள் #தேர்தல் வாக்குகள் #மூலம் திருப்பி #தரட்டுமே...❗*.
*இந்த பாஜக அரசு...⁉️*
*#எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பயன்படும்,*
*பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்❓*
*#ரபேல் விமான கோப்புகள் ஏன் மாயமானது❓*
*பாஜக மீது கேள்வி கேட்கும் #நீதிபதிகளின் மீது மட்டுமே #கற்பழிப்பு புகார்களும்*
*#கொலைமிரட்டல்களும் கொலையும் செய்யப்படுவது ஏன்❓*
*#மோடியை பிரமோட் (முன் நிறுத்த) செய்ய பயன்படுத்தப்பட்ட #பத்தாயிரம்கோடி பணம் யாருடையது❓*
*அத்தனை #ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் #பரிசுத்தமாவது எப்படி⁉️*
*#எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டு கூறியவுடன் அவர்கள்மீது மட்டும்,*
*#வருமானவரித்துறை #அமலாக்கத்துறை ரெய்டுகள் நடப்பது ஏன்❓*
*குற்றச்சாட்டுகள் கூறியவர்,*
*#அமைதியானவுடன் அந்த வழக்குகள் #மாயமாவது ஏன்❓*
*#பல லட்சங்கள் கோடி #கருப்புபணம்,*
*வெளிநாடுகளில் பதுக்கியதாக சொல்லப்பட்ட கருப்பு பணத்தில்,*
*இதுவரை ஏன் ஒரு #பைசாகூட #மீட்கப்படவில்லை❓*
*குறைந்தபட்சம் கருப்பு பணம் #பதுக்கியவர் #பட்டியலைக்கூட வெளியிட முடியவில்லை❓*
*#பாஜக ஆட்சிக்கு வரும்வரை,*
*#கருப்புபணமாக இருந்தவை பாஜக ஆட்சிக்கு வந்தவுடன்,*
*#முதலீட்டு பணமாக மாறிய மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்❓*
*#ஏன் நாட்டின் #பாதுகாப்புதுறை உட்பட அத்தனை துறைகளும் #தனியாருக்கு விற்கப்படுகிறது❓*
*#கடந்த தேர்தலில் #கைப்பற்றபட்ட ""2 கண்டெய்னர்"" பணம் யாருடையது என்பதை,*
*ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை❓*
*பத்திரிக்கைகளில்,*
*இவ்வளவு வெட்டவெளிச்சமான*
*கண்டெயினர்களின் கதியே இதுவென்றால்,*
*தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன❓*
*#மோடி பல்லாயிரம் கோடி அரசு பணத்தை செலவழித்து,*
*வெளிநாடுகளுக்கு செல்வது,*
*முதலீடுகளை ஈர்க்கதான் என்றால்,*
*ஏன் இதுவரை ஒரு பைசாகூட வெளிநாட்டு "முதலீடு" இந்தியாவிற்கு வரவில்லை❓*
*#மோடியின் வெளிநாட்டு பயணங்களில் அவரோடு செல்லும்,*
*தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி❓*
*#மோடியின் வெளிநாட்டு பணம் இந்தியாவிற்கு முதலீடுகளை கொண்டு வரவா❓*
*அல்லது அவரது நண்பர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராக செல்கிறாரா❓*
*#இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு*
*தண்டனை அனுபவிக்கும் லாலு பிரஷாத் யாதவின் காலத்தில்,*
*#லாபத்தில் இயங்கிய "ரயில்வே" தனியாருக்கு விற்கும் அளவிற்கு❗*
*#நஷ்டம் அடைந்து ஏன்❓*
*#பெட்ரோல் மீதான 300 சதவீதம் இலாபம் அரசுக்கு மட்டுமே நோக்கம் என்றால்,*
*இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்❓*
*#தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும்,*
*டோல்கட்டணங்கள் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்❓*
*#யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று,*
*பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள்,*
*ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன❓*
*#ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும்,*
*ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள்,*
*பெருநிறுவனங்களுக்கு மட்டும்⁉️*
*பல்லாயிரக்கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன❓*
*#பல்லாயிரங் கோடிகள் உபரிபணம் இருக்கும்*
*எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன❓*
*எல்ஐசியில் எந்தவிதமான நஷ்டம் ஏற்பட்டது?*
*#கொரோனா காரணத்தால் ஊரடங்கு என்ற பெயரில் மக்களை கால்நடைகளாக நடக்கவிட்டு*
*பசி- பட்டினிபோட்டு ஆயிரக்கணக்கான மனிதர்களை கொன்றுவிட்டு-*
*காட்டில் சுதந்திரமாக வாழுகின்ற மயிலை,*
*வீட்டில் அடைத்து உணவளித்து பிராயச்சித்தம் தேடுகிறாரா Mr.மோ (ச) டி ஜீ.....⁉️*A
கொரனாவுக்கு இது தான் கடைசி தீர்வு - Corona Solution
Author: Infomas | அக்டோபர் 12, 2020 |
கொரனாவுக்கு இது தான் கடைசி தீர்வு
கொரோனா வைரஸ் கிருமி பற்றி உயிர்தொழில் நுட்ப துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரின் அருமையான
விளக்க பதிவு!!
*நான் Dr.P.மணி.
நான் உயிர்தொழில் நுட்ப துறை (Biotechnology )ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.
இப்போது கும்பகோணம்அன்னை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறேன்.
என்னிடம் என் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் ஏன் இன்னும் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை? இந்த கொரோனா வைரஸ் கிருமி தொற்றிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது?என விளக்கம் கேட்டனர்.
கொரோனா வைரஸ் கிருமி தொற்று பற்றி எனக்கு தெரிந்த அறிந்த உயிரியல் விளக்கத்தை கீழ்கண்டவாறு பதிவிடுகின்றேன்.
முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ் .
ஒரு ஆர்என்ஏ
(நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA)
அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறைதான் கொரோனா வைரஸ் (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கரைந்து வைரஸ் அவுட்).
அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இது தான் கொரோனா வைரஸ்.
இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்ளவதே.
இந்த முட்களும் புரதத்தால் ஆனவையே.
கொரோனா வைரசில் இந்த முட்கள் பார்ப்பதற்கு கிரீடத்தில் (Crown) இருக்கும் வேலைப்பாடு போல இருப்பதால் இந்த வைரசுக்கு கொரோனா வைரஸ் எனப் பெயர்.
இதை ஏன் அரைகுறை உயிரி என்கிறோம்.
இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது.
இது ஒரு முழுமையான
ஒட்டுண்ணி.
ஏதோ ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த
செல்லில் இருக்கும் திட, திரவப் பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுவது தான் வைரஸ்களின் வேலை.
செல்லுக்கு வெளியே சில மணி நேரமோ அல்லது சில நாட்களோ தான் இதனால் தாக்குப் பிடிக்க முடியும்.
இந்த வைரஸ் மூக்கு, வாய்
அல்லது கண் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில்
தொண்டை பகுதியை தாக்குகிறது.
தொண்டையில் உள்ள திசுக்களின் செல்களில் இது பல்கிப் பெருகியவுடன் தான் தொண்டை வலியும் இருமலும் தொடங்குகிறது.
இந்த வைரஸ்களை எதிர்த்து நம் உடலின் எதிர்ப்பு சக்தி (Immune system)உடனே மோதலை தொடங்குகிறது.
அந்த மோதலின் அறிகுறி தான் காய்ச்சல்.
பெரும்பாலான வைரஸ்கள்
அதிக வெப்ப நிலையை தாங்க முடியாதவை என்பதால், உடலின் வெப்ப நிலையை உயர்த்தி வைரஸ்களை காலி செய்ய நமது உடலின் எதிர்ப்பு சக்தி முயற்சிக்கிறது.
இந்த மோதலின்போதே பெரும்பாலான வைரஸ்களை
நமது உடல் கொன்று விடுகிறது,
கொரோனா வைரஸ் உள்பட.
நமது உடலின் Immune system ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண்.
வைரஸோ, பாக்டீரியாவோ
அல்லது வேறு ஒரு நுண்ணுயிரோ உடலுக்குள் புகுந்தவுடன் அவற்றை நமது உடல் இரு வகையான காரணிகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கிறது.
முதலாவது அந்த நுண்ணுயிர் வெளியிடும் வேதியியல் பொருட்கள், இரண்டாவது அந்த நுண்ணுயிரின் உருவம்.
இது வெளியில் இருந்து வந்த பொருள் என்பதை கண்டுபிடித்த உடனே நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அவற்றை கொல்லும் வேலையில் இறங்குகின்றன.
வைரஸ், பாக்டீரியாவை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் வேலைக்கு Macrophages, Neutrophils போன்ற அடியாட்களை வெள்ளை அணுக்கள் அனுப்புகின்றன.
ஆனால், இதையும் தாண்டி வைரஸோ பாக்டீரியாவோ
உடலை பதம் பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கட்ட அரண்கள் வேலையில் இறங்கும்.
அதில் ஒன்று Innate lymphoid cells.
இதன் ஒரு பிரிவான T- Killer cellகளின் வேலை வைரஸ்களால் பாதிக்கப்பட்ட உடல் செல்களை கொன்று, வெளியேற்றி உடல் திசுக்கள் மேலும் மோசமடையாமல் தடுப்பது.
மேலும் வைரஸ்களுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் செல்களின் எண்ணிக்கையை குறைப்பது.
இது தான் இதன் வேலை.
அதே நேரத்தில் Macrophages, Neutrophils போன்றவற்றால் தடுக்க முடியாத வைரஸ்களை ஒழித்துக் கட்ட நமது உடல் அனுப்பும் பிரம்மாஸ்திரம் தான் B cells எனப்படும் வைரஸ்களை தாக்கும் செல்கள்.
இந்த செல்கள் வைரஸ்களின் உருவத்தை அடையாளம் கண்டு, அதன் மீது ஒட்டிக் கொண்டு, அப்படியே இழுத்துச் சென்று Lumph nodes எனப்படும் நிணநீர் சுரப்பிகளில் வைத்து, அங்கு சுரக்கும் ரசாயனங்கள் உதவியோடு வைரஸ்களை கொல்லும்.
இந்த உடல் எதிர்ப்பு சக்தி
ஒரு பக்கம் இருக்க, தொண்டைப்பகுதியை
அடைந்த கொரோனா
வைரஸ்கள் அடுத்ததாக
நமது உடலை பாதிப்பது நுரையீரலை.
நுரையீரலின் உள் சுவற்றில் இருப்பவை மிக லேசான பில்லியன் கணக்கான எபிதீலியல் செல்கள்.
இந்த செல்களில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு, துளை போட்டு தனது ஆர்என்ஏவை உள்ளே நுழைக்கும்.
இந்த ஆர்என்ஏ செல்லுக்குள் போய் லட்சக்கணக்கில் தனது பிரதிகளை ஜெராக்ஸ் மெசின் மாதிரி காப்பி எடுக்கும்.
இந்த ஒவ்வொரு ஆர்என்ஏவும் ஒரு வைரசாக மாறும்.
அந்த செல் முழுக்கவே வைரஸ்களால் நிறையும்போது, அந்த செல்லே வெடித்து மடியும்.
அந்த வெடிப்பில் இருந்து கிளம்பும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களை இதே போல தாக்கி அழித்து,பல்கிப் பெருகும்.
10 நாட்களில் நுரையீரலின் பெரும்பாலான செல்களை
இந்த வைரஸ் ஆக்கிரமிக்கும்.
இதுவரையும் கூட பிரச்சனை அதிகமில்லை.
ஆனால், இந்த வைரஸ்களை அழிக்க நமது உடலின் Immune cells எனப்படும் எதிர் தாக்குதல் செல்கள் நுரையீரலில் நுழைந்து தாக்க ஆரம்பிக்கும்போது தான் பிரச்சனையே துவங்குகிறது.
மற்ற வைரஸ்களில் இருந்து கொரோனா இங்கே தான் மாறுபடுகிறது. ழ
இந்த கொரோனா வைரஸ்,
நமது உடலின் எதிர் தாக்குதல் செல்களுக்குள்ளேயே நுழைந்து அதையும் சேதப்படுகின்றன.
சேதப்படுத்துவதோடு மட்டுமல்ல, அந்த செல்களின் ஜீன்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.
நமது Immune system செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வது சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் ஒரு வேதிப் பொருள் மூலம் தான்.
ஜீன்கள் பாதிக்கப்பட்ட எதிர் தாக்குதல் செல்கள் குழப்பமான சைட்டோகைன் தகவல்கள் அனுப்ப, நுரையீரலை பாதுகாக்க கிளம்பி வரும் Neutrophils செல்கள், கொரோனா வைரஸ்களுக்கு பதிலாக உடலின் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்க ஆரம்பிக்கும்.
அதே போல பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை தற்கொலை செய்ய வைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வேலைக்காக வரும் T- Killer cellகள் வந்த வேலையை விட்டு விட்டு, நன்றாக இருக்கும் நுரையீரல் செல்களை அழியச் சொல்லி தகவல் தரும்.
இதனால் நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, அடுத்ததாக பாக்டீரியா தாக்குதல், நிமோனியா உள்ளிட்ட தோற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
இந்த இடத்தில் தான் மரணங்கள் நிகழ்கின்றன.
இப்படி உடலின் எதிர்ப்பு சக்தியையே நமது உடலுக்கு
எதிராக திருப்பி விடுவதில் தான் கொரோனா வைரசின் முழு சக்தியும் அடங்கியுள்ளது.
வைரசின் உருவத்தை வைத்து அடையாளம காணும் B- cellகள் கூட கொரோனாவிடம் இதுவரை எளிதில் வெற்றியை ஈட்டவில்லை.
இந்த வைரஸ்கள் அனுப்பும் வேதியல் தகவல்கள் (Cytokines) எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இல்லை.
அவை லட்சக்கணக்கான வகைகளில் மாறிக் கொண்டே இருப்பதால் T-killer cells, B cells ஆகியவற்றால் இவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை.
இது தான் இந்த வைரசுக்கு எதிராக மருந்தோ தடுப்பு ஊசியோ தயாரிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிபது.
நாம் உண்ணும் அல்லது ஊசி மூலம் போட்டுக் கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றவுடன் வேதியியல் தகவல்களாக மாறித்தான் நோயை ஏற்படுத்தும் கிருமிகளோடு நேரடியாக மோதுகின்றன,அல்லது உடலின் Immune system- உடன் பேசி, வேண்டிய எதிர்ப்பு மருந்தை உடலையே தயாரிக்க வைக்கின்றன.
ஆனால், கொரோனா நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடுவது தான் இந்த வைரசுக்கு எதிராக எந்த மருந்தை வைத்து போராடுவது என்ற குழப்பத்தில் மருத்துவ உலகை ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ்களின் கெமிக்கல் தாக்குதல்களால் குழம்பிப்போன T-killer cells,
B cells-களும் ஏற்கனவே
கொரோனா பாதித்த நுரையீரல்களை மேலும்
பாதித்து உலகெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
ஆனால், ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தியில் பிரச்சனை உள்ளவர்களில் தான் இந்த உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.
நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு பிரச்சனை குறைவாகவே உள்ளது.
உடலில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பெரும் குழப்பத்துக்கிடையிலும் பெரும்பாலான நேரங்களில்
நமது உடல் எதிர்ப்பு சக்தி
சிஸ்டம் கொரோனா வைரஸை தோற்கடித்துவிடுகிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையால் உடலின் எதிர்ப்பு சக்தி முடக்குகிறது.
அதே போல இதயக் கோளாறு,
பி.பி உள்ளவர்களின் உடலில் நுண்ணிய ரத்தக் குழாய்கள் போதிய ரத்தத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் வருவதால், உடலின் எல்லா பகுதிக்கும்
போதிய சக்தி கிடைப்பதில்லை,
நோய் எதிர்ப்பு சக்தி உள்பட.
ஆனால், சர்க்கரை அளவும் பிபியும் மருந்துகள், உடற்பயிற்சி மூலம் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை.
இங்கேயும் உடலின் எதிர்ப்பு
சக்தி கொரோனாவை தோற்கடித்துவிடுகிறது என்பது தான் நல்ல செய்தி.
கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடுவார்களா? என்பது தெரியவில்லை.
35 ஆண்டுகளுக்கு முன் வந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.
அந்த எச்ஐவி வைரசும் கொரோனா வைரஸ் ரகத்தை சேர்ந்தது தான்.
அதுவும் நமது உடலின் எதிர்ப்பு சக்தியை கதிகலங்க வைக்கும் வைரஸ் தான்.
ஆனால், கொரோனா மாதிரி
எச்ஐவி வைரஸ் மூலம் இவ்வளவு சாதாராணமாக இருமல், தும்மல் மூலம் எல்லாம் பரவவில்லை.
அந்த வகையில் கொரோனா தான் கொடூரம்.
அதற்குத் தான் வீட்டிலேயே
முடங்க சொல்கிறார்கள்.
இன்னும் மருந்து கண்டுபிடிக்க இயலாத நிலையில், இந்த நோயில்
இருந்து தப்பிப்பதே உசிதம்.
இந்த நோய் தாக்குதலை தவிர்ப்பதே இதற்கான இப்போதையே ஒரே மருந்து!
தனித்திருப்போம்!விழிப்புடன் இருப்போம்!!வீட்டிலேயே இருப்போம்!!!கொரோனாவை ஒழிப்போம்!!!!
(தற்போதைய வாட்ஸ் ஆப் செட்டிங்கில் forward மெஸேஜை ஒரு முறைதான் forward செய்ய முடியும் என்பதாலும்,ஒவ்வொரு தடவையாக பல நண்பர்களுக்கு forward செய்வதில் ஏற்படும் சிரமத்தை குறைப்பதற்காக எனக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த இந்த பயனுள்ள மெஸேஜை காப்பி&பேஸ்ட் செய்து பதிவிட்டுள்ளேன்.
#Corona Solution
சனி, 26 செப்டம்பர், 2020
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான் ஒருவன்.....!!
Author: Infomas | செப்டம்பர் 26, 2020 |
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான் ஒருவன்.....!!
குடிக்க கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது....!!
அவன் போக வேண்டிய தூரமோ அதிகம்......!!
குடிக்கத் தண்ணீர் இல்லாமல்......,
அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான்.....!!
தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.....!!
மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.....!!
அங்கே ஆட்கள் யாரும் இல்லை.....!!
ஒரு கையால் அடித்து இயக்கும்,
"அடி பம்பும் ..... ,
அருகே ஒரு ஜக்கில், தண்ணீரும் இருந்தன.....!!
ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள்....!!
"ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்"....!!
"குடித்து விட்டு "
மறுபடியும் ஜக்கில்,
" தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."...!!!!
அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது.....!!
அந்தத் தண்ணீர் ஊற்றினால்..... ,
அது இயங்குமா...,
தண்ணீர் வருமா....,,
என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது....!!
அது இயங்கா விட்டால்....,
அந்தத் கொஞ்சத் தண்ணீரும் வீணாகி விடும்.....!!
அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால்....... ,
தாகமும் தணியும்......!!
உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.....!!
அந்தப் பயணி யோசித்தான்....!!
தண்ணீரைக் குடித்து விடுவதே .....,
புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது........!!
ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல்......,
அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து,
அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் நான் குடித்து விட்டால் ,
அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது.......!!
இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு,
எந்த பயனும் இல்லாமல் போக....,
தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.....!!
அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை......!!
ஆனது ஆகட்டும் என்று......,
அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு,
அதை அடித்து இயக்க ஆரம்பித்தான்.....!!
தண்ணீர் வர ஆரம்பித்தது....!!
தாகம் தீர,
வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு,
தான் பயணத்திற்காக கொண்டு வந்த குடுவையில் சேகரித்து கொண்டான்.....!!
அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில்....,
அவன் மனம் நிறைந்திருந்தது.....!!
நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை....,
பிறருக்கும்,
அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும்......!!
எந்த ஒரு நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது....!!
"அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன "....,
என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது....!!
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" ....!!
என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால்...,
"இந்த உலகம் என்றும் இன்பமயமாகி விடும்"....!!!
உண்மையில் இன்று நம் நிஜ வாழ்க்கையில் 99.99 சதவீத மக்கள் சுயநலத்திற்காக உள்ளார்கள்... ஆனால் வெறும் 00.01 சதவீத மக்கள் மட்டுமே பொதுநலத்துடன் இருப்பதால் இந்த உலகம் இன்னும் அழிந்து போகாமல் இயங்குகிறது...
🌷🌷
🍄சாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் நோய்கள் வராது !சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?
Author: Infomas | செப்டம்பர் 26, 2020 |
🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன்
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்
மண் வளம் காப்போம்
மனித வளமும்காப்போம்
சுத்தமான காற்றை சுவாசிப்போம்
பிறரை மகிழ்வித்து மகிழ்
இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு
இன்று படித்ததில் பிடித்தது
🍄சாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் நோய்கள் வராது !
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?
🍄தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.
🍄சர்க்கரை நோய் எப்படி வருகிறது ?
🍄இன்று குக்கரில் வேகவைத்த சாதத்தை பலரும் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.
🍄கஞ்சியின் பயன்கள் :
🍄சாதம் வடித்த கஞ்சி சு+டாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாகும்.
🍄ஆனால் கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.
🍄சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.
🍄சாதத்தை எப்பொழுது சாப்பிட வேண்டும்?
🍄கொதிக்கக் கொதிக்க சாதத்தை சாப்பிடக்கூடாது.
🍄சாதத்தை மிதமான சு+ட்டிலேயே சாப்பிட வேண்டும்.
🍄ஆனால் சாதத்தை சில்லென்று, ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.
🍄பழையச் சோறு :
பழையச் சோறு சாப்பிட்டுத்தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள்.
🍄சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவை பாதிக்காமல் பாதுகாக்கிறது.
🍄பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக் கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.
🍄சாதத்தின் பயன்கள் :
🍄சாதம் வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும், பித்தம் உண்டாவதும் நீங்கும்.
🍄பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.
🍄மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.
🍄சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.
🍄வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது.
🍄ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை :
🍄காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிட்டால் தொப்பையைக் கரைக்கும்.
🍄உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள்.
🍄ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயில் மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. இதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்.
🍄மைதாவினால் செய்யப்படும் பரோட்டா போன்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள. இது வாழ்நாளைக் குறைக்கும்.
🍄பிராய்லர் கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். இதற்கு பதில் மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி சாப்பிடுங்கள்.
🍄மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.
🍄உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு திட உணவு சாப்பிடக் கூடாது.
🍄பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம் ஆகியவற்றை நாள்தோறும் சாப்பிடுவது நல்லது.🙏🙏
அழிந்துவரும் பாரம்பரிய தின்பண்டங்களான #கடலைமிட்டாய்_மற்றும்_எள்ளுமிட்டாயின் மருத்துவகுணங்கள்...!!
Author: Infomas | செப்டம்பர் 26, 2020 |
அழிந்துவரும் பாரம்பரிய தின்பண்டங்களான #கடலைமிட்டாய்_மற்றும்_எள்ளுமிட்டாயின் மருத்துவகுணங்கள்...!!
★நிலக்கடலைகடலை மிட்டாயின் மருத்துவ குணங்கள்.
●நிலக்கடலை மிட்டாய் நாள்தோறும் 50 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
●உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிலக்கடலை மிட்டாய் சாப்பிடலாம்.
●இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.
●மன அழுத்தத்தைப் போக்குகிறது.
●இது குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக்.
●இது ஞாபக சக்திக்கும் பெரிதும் உதவும். இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
●நிலக்கடலை நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.
●நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை. நிலக்கடலையில் உள்ள நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.
★எள்ளுமிட்டாய் மருத்து குணங்கள்..!!
●எள் அளவில் வேண்டுமானால் சிறிதாக இருக்கலாம், ஆனால் அதன் நன்மைகள் மிக அதிகம
●எள்ளு மிட்டாய் இதயநோய்களைத் தடுக்க உதவுகிறது. ஆர்த்ரைட்டிஸ் முதலான முடக்குவாத நோய்களைத் தடுக்கும், எலும்புகளைப் பலப்படுத்தும்.
●மது அருந்துவதால் உடலில் சேரும் நச்சுக்கள், கல்லீரலைச் சிதைக்கும். எள் சாப்பிட்டுவந்தால் நச்சுக்கள் வெளியேறி, கல்லீரல் சிதைவு தவிர்க்கப்படும்.
●எள்ளு மிகவும் அதிக கலோரி கொண்டது. நல்ல கொழுப்பு நிறைந்தது. உடல் எடை அதிகம் கொண்டவர்கள், உடல் எடை குறைவாக இருப்பவர்கள் என இரண்டு பிரிவினரும், நாள் ஒன்றுக்கு 50 கிராம் மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும்.
●உடல் ஒல்லியாக இருப்பவர்கள் எள்ளை சாப்பிட்டால் உடல் பருமனை அதிகரிக்கலாம்.
●உடல் மெலிந்து போய் காணப்படுபவர்கள் எள் சாப்பிடுவதால் குண்டாகலாம்
●ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது
●இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் எள்ளை பித்த உடல் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாது.
தீங்கிழைக்காத பாரம்பரிய தின்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுத்து உடல் ஆரோக்கியத்தினை மேலோங்கச்செய்யுங்கள்..
பாரம்பரிய உணவுப்பொருளின் நன்மைகளையும் அதன் அவசியத்தினையும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வூட்டுங்க பெற்றோர்களே..!!
வியாழன், 24 செப்டம்பர், 2020
தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன்கிடைக்கும்?.
Author: Infomas | செப்டம்பர் 24, 2020 |
தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன்
கிடைக்கும்?.
👉பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம்
பெறும்.
👉பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்
நல்ல சக்தி உண்டாகும்.
👉மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும்.
👉எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
👉நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
👉ஆரஞ்சுப்பழத்துடன் தேன்
கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
👉ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.
👉தேங்காய்பாலில் தேன்
கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.
👉இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும்.
👉கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
👉தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம்
குறையும்.
👉இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக
இருந்தால் உங்கள் நண்பர்களுடன்👆
பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள்.
புதன், 23 செப்டம்பர், 2020
மூலிகைப் பொடிகளின் பயன்கள்- Herbal Powder
Author: Infomas | செப்டம்பர் 23, 2020 |
*மூலிகைப் பொடிகளின் பயன்கள்*
*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.
*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது.
*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி*
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.
*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நாவல் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி*
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி*
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி*
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும்.
*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பொடி*
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி*
வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி*
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி*
உடல் உஷ்ணம், உள்-வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி*
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பொடி*
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி*
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி*
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி*
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருங்கைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி*
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர்*
குடல்வால் புழுக்களை அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி*
பேன் உதிரும், முடி உதிர்வதை தடுக்கும்.
*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி*
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி*
சர்க்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி*
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி*
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்!! #அனைத்து வகை *மூலிகை பொடி* கள் வாங்க...வாங்க *(((கீழடி)))* *இயற்கை அங்காடி* *9443172739* 🙏 🙏
செவ்வாய், 22 செப்டம்பர், 2020
தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???
Author: Infomas | செப்டம்பர் 22, 2020 |
#விழிப்புணர்வு_மீள்பதிவு..!!
தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???
1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது
2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்
3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்
4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது
5. ஆயில் புல்லிங்
6. காம்பிளான் குடித்தால் வளரலாம்
7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா
8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா
9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி
10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்
வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன் ????
நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின
அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்.
அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமயம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச்சென்றது.
பின்விளைவு பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளிநாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று.
சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்.
பின்விளைவு , அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து.
உணமையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா?? #மைதா
சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல் டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது.
இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று உணராமல் இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள்..
நாளை நீங்கள் உங்களையே இழந்துவிடுவீர்கள்
இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்
மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல ,
மருத்துவமனைகள் அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..!!
உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்
Author: Infomas | செப்டம்பர் 22, 2020 |
உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்
* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.
* கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
* சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.
* பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.
* எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.
* நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.
* சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.
* நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
.வாழ்க வளமுடன்
எள் தரும் பயன்கள்..
Author: Infomas | செப்டம்பர் 22, 2020 |
#எள்.!!
ஆயிரம் வருடங்களாக
மனிதனுடன் பயணிக்கும் பயிர்...
#எள்.!
மனிதன் முதலில் பயன்படுத்திய எண்ணெய் எள்ளில் இருந்து எடுத்த நல்லெண்ணைய் தான். அப்படிப்பட்ட எள்ளில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கிறது.
எள் தரும் பயன்கள்...
👉 எலும்பை வலுப்படுத்தும்.
👉 இரத்த அழுத்தம் சீராகும்.
👉 இருதயம் பலம் பெரும்.
👉 கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.
👉 மூட்டுவலி பிரச்சனைக்கு சிறந்த நிவாரணி.
👉 முடி உதிர்தல் கட்டுப்படும்.
உடல் சூட்டை தணிக்கும்...!!!
இப்படி பல மருத்துவ குணங்கள் கொண்ட எள் நம் உணவு பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறது.
எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் பயன்பாடு இன்று நமது உடல்நலத்திற்கு இன்றியமையாதது..
முக்கியமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் இதை தினசரி பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
எள்சிறந்தது தான் ஆனால் உணவில் தினசரி பயன்படுத்த வழி என்ன? என்ற கேள்வி நம் எல்லோருக்கும் உண்டு. நமது பாரம்பரிய உணவுமுறையில் இதற்கான வழி இருந்தது. நம் உணவில் எள்ளு உருண்டை, எள்ளு மாவு, எள்ளு சீடை என்று பலவிதமாக பயன்படுத்தி வந்தோம். ஆனால், இன்று இவை அனைத்தும் நாம் மறந்து விட்டோம். அதனால், ஆரோக்கியத்தையும் இழந்துவிட்டோம்.
நமது தினசரி ஸ்நாக்ஸ் பட்டியலில் எள்ளு மிட்டாயையும் சேர்த்துக்கொள்வோம்... ஆரோக்கியத்தை பேணுவோம் !!
'சுவை மட்டும் தருவது உணவல்ல...
சுவையோடு ஆரோக்கியம் தருவதே சிறந்த உணவு"
மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த #மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?
Author: Infomas | செப்டம்பர் 22, 2020 |
♦மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த #மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?♦
பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள் இதோ...!
*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி*
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி*
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி*
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி*
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பொடி*
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி*
வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி*
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி*
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி*
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பொடி*
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி,*
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி*
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது
*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி*
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி*
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர்*
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி*
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி*
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி*
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி*
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி*
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்!!!
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ அல்லது யாரேனும் ஹாக் செய்து விட்டாலோ நம் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை என்றால் நாம் நம் ஈமெயி...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...