ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021
வியாழன், 21 ஜனவரி, 2021
முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை - old Generation - Tamil Generation
Author: Infomas | ஜனவரி 21, 2021 |
தவளை கத்தினால் மழை.
🌝 அந்தி ஈசல் பூத்தால்அடை மழைக்கு அச்சாராம்.
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.
🌝 தை மழை நெய் மழை.
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.
🌝 வெள்ளமே ஆனாலும்
பள்ளத்தே பயிர் செய்.
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.
🌝 களர் கெட பிரண்டையைப் புதை.
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
🌝 நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு.
🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்.
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்.
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை.
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
🌝 உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ.
🌝 அகல உழவதை விட
ஆழ உழுவது மேல் .
🌝 புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு.
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
🌝 ஆடு பயிர் காட்டும்
ஆவாரை கதிர் கட்டும்.
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்.
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.
🌝 தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம்.
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.
🌝 சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்.
🌝 விதை பாதி வேலை பாதி.
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை.
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
🌝 கோப்பு தப்பினால்
குப்பையும் பயிராகாது.
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்.
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்.
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.
#உழவே_தலை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.
கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும்.
இனி பணத்தைச் சாப்பிட
முடியாது என்பது!!
ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.
நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது...
#முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..
அனைவரும் அறிந்துகொள்ளுங்கள்
புதன், 20 ஜனவரி, 2021
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி
Author: Infomas | ஜனவரி 20, 2021 |
செவ்வாய், 19 ஜனவரி, 2021
பா.ஜ.க 4 வருட ஆட்சி. - BJP - Modi
Author: Infomas | ஜனவரி 19, 2021 |
வியாழன், 26 நவம்பர், 2020
சப்ஜா விதை - Subja Seeds
Author: Infomas | நவம்பர் 26, 2020 |
சப்ஜா விதை;
✔️ பயன்கள்:
️ உடல் குளிர்ச்சி.
️ வயிற்றுப்புண் சரியாகும்.
️ பித்தத்தைக் குறைக்கும்.
️ சிறுநீரக எரிச்சல் சரியாகும்.
️ சிறுநீரகத் தொற்று சரியாகும்.
️ சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
️ பெண்களுக்கு ஏற்படக் கூடிய வெள்ளைபடுதல் சரியாகும்.
️ உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் எரிச்சல் சரியாகும்
️ வயிற்று எரிச்சல் சரியாகும்.
✒️ பயன்படுத்தும் முறை;
️இரவில் இதை நீரில் ஊறவைத்து 8 மணி நேரம் கழித்து பார்த்தால் ஜவ்வரிசி போல இருக்கும்.
️ இதை பாலில் அல்லது நன்னாரி சர்பத் மற்றும் நீரில் போட்டு சாப்பிடலாம்.
*தாய்ப்பாலில் எரிந்த பெரு உடையார் கோவில் தீபம்:* *அழியாத வரலாற்று உண்மை*
Author: Infomas | நவம்பர் 26, 2020 |
#அப்பா ஏன் எப்போதும் பின்தங்கி யிருக்கிறார் என்று தெரியவில்லை.....
Author: Infomas | நவம்பர் 26, 2020 |
*🏛அரசியல் சூழ்ச்சி 💪🏻* Political maneuvering
Author: Infomas | நவம்பர் 26, 2020 |
Covid - கொரோனா - தெளிவான விளக்கம்
Author: Infomas | நவம்பர் 26, 2020 |
ஞாயிறு, 22 நவம்பர், 2020
#மீள்_பதிவு - கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்காக கியூபா மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு
Author: Infomas | நவம்பர் 22, 2020 |
கரோணாவை முன்னிட்டு தனிமையில் இருந்தபோது சிந்தித்தது,
Author: Infomas | நவம்பர் 22, 2020 |
ஒரே தலைவலி - The only headache
Author: Infomas | நவம்பர் 22, 2020 |
ஒரே தலைவலி. The only headache.
மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான். உனது ‘ஓனர்’ எங்கேப்பா என்று கேட்டேன்.அவருக்குச் சரியான தலைவலி.
அதோ அந்தக் காப்பிக் கடையில் காப்பி சாப்பிடப் போயிருக்கிறார் என்றான் அவன்!என் கையிலிருந்த தலைவலி மாத்திரை ஸ்டிரிப் என்னைப் பார்த்து ‘ஙே’ என்று விழித்தது!அம்மாவுக்கு பிபியும் (BP) ஷுகரும் ஏறி விட்டது.
ஆகவே அலறி அடித்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க காலையிலேயே அம்மாவுடன் கிளம்பினேன்.டாக்டர் யோகா செய்து கொண்டிருந்தார். முக்கால் மணி நேரம் காத்திருந்தோம்.அம்மாவை செக் பண்ணிப் பார்த்த டாக்டர் மருந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்த வேண்டும் என்றும் வேளாவேளைக்குச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை பகன்றார். அவர் எழுதித் தந்த அதிகப்படியான 5, 6 மாத்திரைகள் கொண்ட சீட்டை வாங்கிக் கொண்டேன்.ஒரு ஆவல் உந்த, “டாக்டர், நீங்கள் யோகா செய்கிறீர்களா?” என்று கேட்டேன்.
15 வருடமாகச் செய்து வருவதாகவும் அதனால் தான் பிபி, ஷுகர் இல்லாத ஆரோக்கிய வாழ்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.பிபி, ஷுகரைக் குறைக்க அவர் எழுதித் தந்த நீண்ட மாத்திரை சீட்டைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று என்னைப் பார்த்து விழித்தது.
மனைவியின் தலைமுடி கோரமாக ஆகிக் கொண்டிருப்பதாக அவளுக்கு ஒரு உணர்வு. "சரி, வா பியூட்டி பார்லர் போவோம்!" என்றேன்.நமது நலனைக் கருதி பல்வேறு பேக்கேஜ்கள் நமக்கு உகந்ததாக இருப்பதாக ரிஸப்ஷனிஸ்ட் அன்புடன் சொன்னாள்.1200 ரூபாயில் ஆரம்பம். 3000 ரூபாய் வரை போகிறது லிஸ்ட்.பேரம் பேசி 3000 ரூபாய் பேக்கேஜை 2400'க்கு முடித்தேன். (அட, என்ன எனது சாமர்த்தியம் பார்த்தீர்களா!)மனைவியின் கேசத்தைக் கோதி விட்டுக் கொண்டிருந்த பெண்மணியின் தலை முடி அழகாக இருந்ததோடு கம கமவென ஒரு நறுமணமும் அதிலிருந்து வந்தது.‘அட, நல்ல வாசனையாக இருக்கிறதே’, என்று அவளைப் பாராட்டினேன்.அவள் நன்றி தெரிவித்ததோடு, காலம் காலமாக அனைவரும் உபயோகித்து வரும் சம்பிரதாயமான எண்ணெயைத் தான் சூடத்தைக் கலந்து உபயோகித்து வருவதாகவும் அதனால் முடி நீண்டு அழகாக இருப்பதாகவும் தெரிவித்தாள்.2400 ரூபாய்க்கு பேரம் பேசிய என்னைப் பார்த்து என் மனைவி விழிக்க அவளைப் பார்த்து நான் விழித்தேன்.
நெருங்கிய உறவினருக்கு பெரிய பண்ணை ஒன்று உண்டு. அதில் அயல்நாட்டு கறவைப் பசுக்கள் 150 ஐ அவர் வளர்த்து வந்தார். அவை தரும் பாலைக் கறந்து எடுத்து மெஷின்களில் வைத்துப் பாதுகாத்து வெளிச் சந்தையில் நல்ல விலைக்கு அவர் விற்று வந்தார். அதே பண்ணையில் தொலைவில் இரண்டு நமது உள்ளூர் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. ‘அது எதற்காக’, என்று கேட்டேன்.அது குடும்பத்தினரின் உபயோகத்திற்குத் தேவைப்படும் நெய், பால் ஆகியவற்றிற்காக வளர்க்கப்படுவதாகவும் அதைத் தவிர வேறு எந்த நெய், பாலையும் தங்கள் குடும்பத்தினர் உபயோகிப்பதில்லை என்றும் அவர் சொன்னார்.
பிராண்டட் மில்க் சாப்பிடுவோரை நினைத்துக் கொண்டே நமது தேசீயப் பசுக்களைக் கையெடுத்துக் கும்பிட்டேன்.ஒருநாள் மதிய உணவிற்குப் புகழ் பெற்ற உணவு விடுதிக்குக் குடும்பத்தோடு சென்றேன்.சாப்பிட்டு முடிந்தவுடன் பில்லை நீட்டிய மானேஜர், “சாப்பாடு எப்படி சார் இருந்தது? பசு நெய், சுத்தமான ஆயில், பாஸ்மதி அரிசி மட்டும் தான் நாங்கள் உபயோகிக்கிறோம். அடிக்கடி வாருங்கள்” என்று சொன்னார்.
அத்துடன் தன் கேபினுக்கு அழைத்து தனது விஸிடிங் கார்டையும் கொடுத்தார்.அங்கிருந்த டிபன் கேரியரை நான் பார்த்தேன். அப்போது ஹோட்டல் பணியாளர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்டதையும் கேட்டேன்.“சுனில், சாரோட டிபன் பாக்ஸை எடுத்து தனியே வை. அவர் சாப்பிட வர இன்னும் பத்து நிமிடமாகும்”அவரைப் பார்த்து நான் கேட்டேன், “ஏன், உங்கள் சார் இந்த ஹோட்டலிலேயே சாப்பிட மாட்டாரா?”“ஊஹூம்! ஒருபோதும் சாப்பிட மாட்டார். அவருக்கு வீட்டு சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்!”என் கையில் இருந்த 1670 ரூபாய் பில்லைப் பார்த்தேன்.அது ‘ஙே’ என்று விழித்தது.அடடா, இது மாதிரி எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன.
சில சமயம் சிரிப்பாய் இருக்கிறது; சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறது!இந்த மல்டி நேஷனல் கம்பெனிகளால் உருவாக்கப்பட்டு வாழ்கையை நடத்துபவர்களாக நாம் ஆகி விட்டோமா என்று தோன்றுகிறது.நம்மை ஏடிஎம் மெஷினாக அவர்கள் ஆக்கி விட்டார்கள். தேவைப்படும் போது நம்மிடமிருந்து பணத்தைப் பெருமளவில் கறக்கிறார்கள்.
இதில் ரகசியம் என்னவென்றால் அவர்கள் விற்கும் பொருள்களை அவர்கள் ஒரு நாளும் நுகர்வதில்லை; அவர்கள் குடும்பத்தினருக்கோ அதைக் காண்பிப்பது கூட இல்லை.நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தோமானால் நமக்கு செலவுக்குச் செலவும் மிச்சம்; ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் அற்புதமாக நிலைத்து நீடித்திருக்கும்!சிந்திப்பீர்களா!!!?????வாட்ஸ் அப்
*உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.* சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.
Author: Infomas | நவம்பர் 22, 2020 |
*இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு*
Author: Infomas | நவம்பர் 22, 2020 |
மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA) - Dr.சிவராமன் அவர்கள் பேச்சின் சுருக்கம்.
Author: Infomas | நவம்பர் 22, 2020 |
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ அல்லது யாரேனும் ஹாக் செய்து விட்டாலோ நம் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை என்றால் நாம் நம் ஈமெயி...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...